4918. எவர் அஸருக்குப் பின் உறங்கி அவரது அறிவு கெட்டுவிட்டதோ அவர் தன்னையே பழித்துக் கொள்ளட்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
«مَنْ نَامَ بَعْدَ الْعَصْرِ فَاخْتُلِسَ عَقْلُهُ فَلَا يَلُومَنَّ إِلَّا نَفْسَهُ»
4918. எவர் அஸருக்குப் பின் உறங்கி அவரது அறிவு கெட்டுவிட்டதோ அவர் தன்னையே பழித்துக் கொள்ளட்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
«مَنْ نَامَ بَعْدَ الْعَصْرِ فَاخْتُلِسَ عَقْلُهُ فَلَا يَلُومَنَّ إِلَّا نَفْسَهُ»
201. உளூ உள்ளவரைத் தவிர மற்றவர்கள் பாங்கு சொல்லக்கூடாது என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்…
அறிவிப்பவர் : முஹம்மது பின் ஷிஹாப் ஸுஹ்ரி (ரஹ்)
திர்மிதீ இமாம் கூறுகிறார் :
இந்த செய்தி இதற்கு முன் உள்ள ஹதீஸ் எண்-200 ஐ விட அறிவிப்பாளர்தொடரில் சரியானது. ஆனால் இதில் வரும் அறிவிப்பாளர் ஸுஹ்ரீ அவர்கள், அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் எதையும் செவியுறவில்லை. (எனவே இதுவும் பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்).
(அதாவது இந்த செய்தி ஹதீஸ் எண் 200 ல் நபி (ஸல்) அவர்களின் கூற்றாக வந்துள்ளது. ஹதீஸ் எண்-201 இல் நபித்தோழரின் கூற்றாக வந்துள்ளது. இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தால் 201 இல் வரும் செய்தி மிக பலவீனமல்ல என்பதையே திர்மிதீ இமாம் கூற விரும்புகிறார்).
……
«لَا يُنَادِي بِالصَّلَاةِ إِلَّا مُتَوَضِّئٌ»
1858. உளூ உள்ளவரைத் தவிர மற்றவர்கள் பாங்கு சொல்லக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
பைஹகீ கூறுகிறார் :
(இதன் அறிவிப்பாளர் தொடரில் முஆவியா பின் யஹ்யா அஸ்ஸதஃபீ ஸுஹ்ரியிடமிருந்தும், ஸுஹ்ரி ஸயீத் பின் அல்முஸய்யப் அவர்களிடமிருந்தும், ஸயீத் பின் அல்முஸய்யப் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தும், அபூஹுரைரா (ரலி) நபி (ஸல்) அவர்களிடமிருந்து கேட்டதாக வந்துள்ளது. ஆனால் இதில் வரும் முஆவியா பின் யஹ்யா அஸ்ஸதஃபீ பலவீனமானவர்.
வேறு அறிவிப்பில் யூனுஸும், மற்ற அறிவிப்பாளர்களும் ஸுஹ்ரியிடமிருந்தும், ஸுஹ்ரி அவர்கள், அபூஹுரைரா (ரலி) கூறினார்கள் என்றும் இந்த செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பாளர்தொடரே உண்மையான அறிவிப்பாளர்தொடர் ஆகும். (அதாவது இந்த செய்தி பலவீனமான, மவ்கூஃபான செய்தியாகும்)
لَا يُؤَذِّنُ إِلَّا مُتَوَضِّئٌ
200. உளூ உள்ளவரைத் தவிர மற்றவர்கள் பாங்கு சொல்லக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
«لَا يُؤَذِّنُ إِلَّا مُتَوَضِّئٌ»
2658. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உமர் (ரலி) அவர்கள், ஸாரியா என்பவரின் தலைமையில் ஒரு படையை போருக்கு அனுப்பினார்கள். (சில நாட்களுக்கு பிறகு) உமர் (ரலி) அவர்கள் ஜுமுஆ தினத்தில் உரையாற்றிக் கொண்டிருக்கையில் தன் உரையின் இடையே, “ஸாரியாவே அந்த மலைக்குள் செல்! ஸாரியாவே அந்த மலைக்குள் செல்!” என்று கூறினார்கள்.
பிறகு, படையின் தூதர் வந்தார். அவர் உமர் (ரலி) அவர்களிடம், இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! நாங்கள் போரில் எதிரிகளிடம் சண்டையிட்டோம். அவர்கள் எங்களை தோற்கடிக்கும் நிலைக்கு சென்று விட்டனர். அப்போது ஒருவர், “ஸாரியாவே! அந்த மலைக்குள் செல்! என்று கத்தினார். எனவே நாங்கள், எங்கள் முதுகுகளை மலையை நோக்கியவர்களாக பின்வாங்கி வந்து சண்டையிட்டோம். அதனால் அல்லாஹ் அவர்களை தோல்வியுறச் செய்தான்” என்று கூறினார். அப்போது நாங்கள், உமர் (ரலி) அவர்களே! நீங்கள் தானே அவ்வாறு கத்தினீர்கள்! என்று கூறினோம்.
أَنَّ عُمَرَ بَعَثَ جَيْشًا وَأَمَّرَ عَلَيْهِمْ رَجُلًا يُدْعَى سَارِيَةَ فَبَيْنَمَا عُمَرُ رَضِيَ اللهُ عَنْهُ يَخْطُبُ فَجَعَلَ يَصِيحُ: يَا سَارِيَ , الْجَبَلَ، فَقَدِمَ رَسُولٌ مِنَ الْجَيْشِ فَقَالَ: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ , لَقِينَا عَدُوَّنَا فَهَزَمُونَا , فَإِذَا صَائِحٌ يَصِيحُ: يَا سَارِيَ , الْجَبَلَ , فَأَسْنَدْنَا ظُهُورَنَا إِلَى الْجَبَلِ فَهَزَمَهُمُ اللهُ , فَقُلْنَا لِعُمَرَ: كُنْتَ تَصِيحُ بِذَلِكَ.
قَالَ ابْنُ عَجْلَانَ وَحَدَّثَنَا إِيَاسُ بْنُ مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ بِذَلِكَ , وَاللهُ تَعَالَى أَعْلَمُ
6460. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
1. அல்லாஹ்வுடைய பாதையில் (போர்க்களத்தில்) அணி வகுத்து (எதிரிகளை) சந்திக்கும் போது.
2. மழை பொழியும் போது.
3. தொழுகைக்கு இகாமத் சொல்லும் போது
4. கஅபாவைக் காணும் போது போன்ற நான்கு இடங்களில் வானத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன. துஆ ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
அறிவிப்பவர் : அபூஉமாமா (ரலி)
تُفْتَحُ أَبْوَابُ السَّمَاءِ، وَيُسْتَجَابُ الدُّعَاءُ فِي أَرْبَعَةِ مَوَاطِنَ: عِنْدَ الْتِقَاءِ الصُّفُوفِ، وَعِنْدَ نُزُولِ الْغَيْثِ، وَعِنْدَ إِقَامَةِ الصَّلَاةِ، وَعِنْدَ رُؤْيَةِ الْكَعْبَةِ
7719. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
1. தொழுகைக்கு இகாமத் சொல்லும் போது
2. மழை பொழியும் போது.
3. அல்லாஹ்வுடைய பாதையில் (போர்க்களத்தில்) அணி வகுத்து (எதிரிகளை) சந்திக்கும் போது.
4. கஅபாவைக் காணும் போது (போன்ற நான்கு இடங்களில்) வானத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன. துஆ ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
அறிவிப்பவர் : அபூஉமாமா (ரலி)
«تُفْتَحُ أَبْوَابُ السَّمَاءِ، وَيُسْتَجَابُ دُعَاءُ الْمُسْلِمِ عِنْدَ إِقَامَةِ الصَّلَاةِ، وَعِنْدَ نُزُولِ الْغَيْثِ، وَعِنْدَ زَحْفِ الصُّفُوفِ، وَعِنْدَ رُؤْيَةِ الْكَعْبَةِ»
7713. நான்கு இடங்களில் வானத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன. துஆ ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
1. அல்லாஹ்வுடைய பாதையில் (போர்க்களத்தில்) அணி வகுத்து (எதிரிகளை) சந்திக்கும் போது.
2. மழை பொழியும் போது.
3. தொழுகைக்கு இகாமத் சொல்லும் போது
4. கஅபாவைக் காணும் போது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஉமாமா (ரலி)
تُفْتَحُ أَبْوَابُ السَّمَاءِ، وَيُسْتَجَابُ الدُّعَاءُ فِي أَرْبَعَةِ مَوَاطِنَ: عِنْدَ الْتِقَاءِ الصُّفُوفِ فِي سَبِيلِ اللهِ، وَعِنْدَ نُزُولِ الْغَيْثِ، وَعِنْدَ إِقَامَةِ الصَّلَاةِ، وَعِنْدَ رُؤْيَةِ الْكَعْبَةِ
1752. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூன்று பேரின் பிரார்த்தனைகள் மறுக்கப்படாதவைகளாகும்.
1 . நீதமான அரசனின் பிரார்த்தனை.
2 . நோன்பாளி (நோன்புத் துறக்கும் வரை உள்ள நேரங்களில்) செய்யும் பிரார்த்தனை.
3 . அநீதமிழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை.
அநீதிக்கு உள்ளானவரின் பிரார்த்தனை மேகங்களுக்கு மேலே உயர்த்தப்படுகிறது. அதற்காக வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. மேலும், அல்லாஹ் கூறுகிறான்: என் மாண்பின் மீதாணையாக! உனக்கு நிச்சயமாக உதவி செய்வேன்; அது சிறிது காலம் தாமதித்தாலும் கூட!
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
ثَلَاثَةٌ لَا تُرَدُّ دَعْوَتُهُمْ، الْإِمَامُ الْعَادِلُ، وَالصَّائِمُ، حَتَّى يُفْطِرَ، وَدَعْوَةُ الْمَظْلُومِ، يَرْفَعُهَا اللَّهُ دُونَ الْغَمَامِ يَوْمَ الْقِيَامَةِ، وَتُفْتَحُ لَهَا أَبْوَابُ السَّمَاءِ، وَيَقُولُ: بِعِزَّتِي لَأَنْصُرَنَّكِ وَلَوْ بَعْدَ حِينٍ
4053. பாங்குக்கும், இகாமத்திற்கும் இடையில் செய்யப்படும் பிரார்த்தனை மறுக்கப்படாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
«لَا يُرَدُّ الدُّعَاءُ بَيْنَ الْإِقَامَةِ وَالنِّدَاءِ»
சமீப விமர்சனங்கள்