Author: Farook

Abu-Dawood-556

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 192

தொழுகைக்கு நடந்து செல்வதின் சிறப்பு.

556. பள்ளிக்கு மிகமிக தூரத்தில் இருப்பவர் மகத்தான கூலி பெறுபவராவார் என்று நபி (ஸல் அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.
இந்த ஹதீஸ் இப்னுமாஜாவில் இடம் பெறுகின்றது.


«الْأَبْعَدُ فَالْأَبْعَدُ مِنَ الْمَسْجِدِ أَعْظَمُ أَجْرًا»


Abu-Dawood-553

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

553. அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக மதீனா நகரம் விஷசந்துகள், கொடிய மிருகங்கள் நிறைந்த நகரமாகும். (நான் வீட்டில் தொழலாமா?) என்று வினவிய போது ஹய்ய அலஸ் ஸலாத், ஹய்ய அலல் ஃபலாஹ் (என்ற வார்த்தைகள்) உன் காதில் விழுகின்றதா? என்று அப்துல்லாஹ் பின் உம்மு மக்தூம் (ரலி) கேட்டார்கள்.

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள்

சுப்யானிடமிருந்து காஸிம் அல்ஜர்மி இவ்வாறு தான் அறிவிக்கின்றார். ஆனால் ஹைய ஹலா (விரைந்து வாருங்கள் என்ற வார்த்தை இடம் பெறவில்லை.

இந்த ஹதீஸ் நஸயீயில் இடம் பெறுகின்றது.


يَا رَسُولَ اللَّهِ، إِنَّ الْمَدِينَةَ كَثِيرَةُ الْهَوَامِّ وَالسِّبَاعِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَتَسْمَعُ حَيَّ عَلَى الصَّلَاةِ، حَيَّ عَلَى الْفَلَاحِ؟ فَحَيَّ هَلًا»


Abu-Dawood-552

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

552. அல்லாஹ்வின் தூதரே! நான் பார்வை குருடானவன்! வீடும் தூரமானவன்! எனக்கு ஒரு வழிகாட்டியும் உண்டு. ஆனால் அவர் எனக்கு ஒத்துழைக்கமாட்டார். எனவே நான் எனது வீட்டில் தொழ அனுமதி உண்டா? என்று அப்துல்லாஹ் பின் உம்மு மக்தூம் (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் கேட்டபோது, பாங்கு சப்தத்தை செவியுறுகின்றாயா? என்று திருப்பிக் கேட்டார்கள். அதற்கு ஆம் என்றதும் அப்படியானால் உனக்கு நான் அனுமதி வழங்க முடியாது என்று பதில் சொன்னார்கள்.


أَنَّهُ سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي رَجُلٌ ضَرِيرُ الْبَصَرِ شَاسِعُ الدَّارِ، وَلِي قَائِدٌ لَا يُلَائِمُنِي فَهَلْ لِي رُخْصَةٌ أَنْ أُصَلِّيَ فِي بَيْتِي؟، قَالَ: «هَلْ تَسْمَعُ النِّدَاءَ»، قَالَ: نَعَمْ، قَالَ: «لَا أَجِدُ لَكَ رُخْصَةً»


Abu-Dawood-551

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

551. முஅத்தினின் அதானை வெவியுற்றுவிட்டு அதன்படி ஒருவர் (பள்ளிக்கு) வெல்வதைவிட்டும் எந்த ஓர் இடையூறும் தடையாக அமையவில்லை எனில் அவரிடமிருந்து அவர் தொழுத எந்த தொழுகையும் ஒப்புக்கொள்ளப்பட்டது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சொன்னார்கள். நபித்தோழர்கள் இடையூறு என்றால் என்ன வென்று கேட்கும் போது அச்சம் அல்லது நோய் என்று பதிலளித்தார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்கள்.

இதைவிட சிறந்த அறிவிப்பாளர் தொடருடன் இந்த ஹதீஸ் இப்னுமாஜாவில் பதிவாகியுள்ளது.

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள் :

இந்த ஹதீஸை அபூமக்ராவிடமிருந்து அபூ இஸ்ஹாக் அறிவிக்கின்றார்.


«مَنْ سَمِعَ الْمُنَادِيَ فَلَمْ يَمْنَعْهُ مِنَ اتِّبَاعِهِ، عُذْرٌ»، قَالُوا: وَمَا الْعُذْرُ؟، قَالَ: «خَوْفٌ أَوْ مَرَضٌ، لَمْ تُقْبَلْ مِنْهُ الصَّلَاةُ الَّتِي صَلَّى»


Abu-Dawood-550

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

550. ஐந்து நேரத் தொழுகைகளுக்காக அழைப்பு விடுக்கப் படும் போது அந்த தொழுகைகளை பேணிக் கொள்ளுங்கள்! ஏனெனில் நிச்சயமாக அவை நேர்வழிகளில் உள்ளவையாகும். நிச்சயமாக கண்ணியமும், மகத்துவமும் நிறைந்த அல்லாஹ் தன்னுடைய நேர்வழிகளையே மார்க்கமாக்கியிருக்கின்றான். தெளிவான நயவஞ்சகக் காரனை தவிர வேறு யாரும் அத்தொழுகைகளை விட்டும் விலகிவிடுவதில்லை என்றே நாங்கள் விளங்கி வைத்திருக்கின்றோம். நிச்சயமாக ஒருவர் இருவர்களுக்கிடையே கைத்தாங்கலாக அழைத்து வரப்பட்டு வரிசையில் கொண்டு வந்து நிறுத்தப் படுவதை நாங்கள் கண்டிருக்கின்றோம். உங்களில் ஒவ்வொருவருக்கும் அவரது வீட்டில் தொழக் கூடிய இடம் இல்லாமல் இருப்பதில்லை. (இதனால்) உங்களுடைய வீடுகளில் தொழுது கொண்டு உங்களுடைய பள்ளிவாசல்களை விட்டு விடுவீர்களானால் நிச்சயமாக உங்களுடைய நபி வழியை விட்டவராவீர்கள்! உங்களுடைய நபி வழியை விட்டு விடுவீர்களெனில் நிச்சயமாக இறை நிராகரிப்பு செய்தவர்களாவீர் என்று அப்துல்லாஹ் பின் மவூத் (ரலி) கூறுகின்றார்கள்.

இந்த ஹதீஸ் முஸ்லிம், நஸயீ, இப்னு மாஜா ஆகிய நூல்களில் இடம் பெறுகின்றது.


«حَافِظُوا عَلَى هَؤُلَاءِ الصَّلَوَاتِ الْخَمْسِ، حَيْثُ يُنَادَى بِهِنَّ فَإِنَّهُنَّ مِنْ سُنَنِ الْهُدَى، وَإِنَّ اللَّهَ شَرَعَ لِنَبِيِّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سُنَنَ الْهُدَى، وَلَقَدْ رَأَيْتُنَا وَمَا يَتَخَلَّفُ عَنْهَا إِلَّا مُنَافِقٌ بَيِّنُ النِّفَاقِ، وَلَقَدْ رَأَيْتُنَا وَإِنَّ الرَّجُلَ لَيُهَادَى بَيْنَ الرَّجُلَيْنِ حَتَّى يُقَامَ فِي الصَّفِّ، وَمَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلَّا وَلَهُ مَسْجِدٌ فِي بَيْتِهِ، وَلَوْ صَلَّيْتُمْ فِي بُيُوتِكُمْ وَتَرَكْتُمْ مَسَاجِدَكُمْ تَرَكْتُمْ سُنَّةَ نَبِيِّكُمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَوْ تَرَكْتُمْ سُنَّةَ نَبِيِّكُمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَكَفَرْتُمْ»


Abu-Dawood-545

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

545. இகாமத் சொல்லப்படும் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களை குறைவாகக் கண்டால் தொழாமல் உட்கார்ந்து விடுவார்கள். மக்கள் கூட்டமாக இருந்தால் தொழுவிப்பார்கள் என்று ஸாயிம் அபுன்னார் (ரலி) அறிவிக்கின்றார்.


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «حِينَ تُقَامُ الصَّلَاةُ فِي الْمَسْجِدِ إِذَا رَآهُمْ قَلِيلًا جَلَسَ لَمْ يُصَلِّ، وَإِذَا رَآهُمْ جَمَاعَةً صَلَّى»


Abu-Dawood-544

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

544. தொழுகைக்கு இகாமத் சொல்லப் பட்டது. பள்ளியின் ஓரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரையாடிக் கொண்டிருந்தார்கள். மக்கள் தூங்கும் வரை அவர்கள் தொழுவிக்கவில்லை என அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்.

(இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம், நஸயீ ஆகிய நுல்களில் இடம் பெறுகின்றது.)


«أُقِيمَتِ الصَّلَاةُ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَجِيٌّ فِي جَانِبِ الْمَسْجِدِ، فَمَا قَامَ إِلَى الصَّلَاةِ حَتَّى نَامَ الْقَوْمُ»


Abu-Dawood-542

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

542. தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்ட பிறகு பேசிக் கொண்டிருப்பவர் தொடர்பாக சாபித் அல்பனானி என்பவரிடம் விசாரித்தேன். அப்போது அவர் அனஸ் பின் மாலிக் (ரலி) கூறியதாக அறிவிக்கின்றார்.

தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டு விட்டது. அவ்வாறு இகாமத் சொல்லப் பட்டு விட்டதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒருவர் குறுக்கிட்டு (பேசத் துவங்கினார்) இகாமத் சொல்லப்பட்ட பிறகு நபி (ஸல்) அவர்கள் அவருடன் பேச விடாமல் இருந்து விட்டார்கள்.

(குறிப்பு : இந்த ஹதீஸ் புகாரியிலம் இடம் பெறுகின்றது.)


سَأَلْتُ ثَابِتًا الْبُنَانِيَّ، عَنِ الرَّجُلِ يَتَكَلَّمُ بَعْدَمَا تُقَامُ الصَّلَاةُ فَحَدَّثَنِي، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: «أُقِيمَتِ الصَّلَاةُ فَعَرَضَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ، فَحَبَسَهُ بَعْدَ مَا أُقِيمَتِ الصَّلَاةُ»


Abu-Dawood-541

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

541. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுவிப்பதற்காக தொழுகைக்கான இகாமத் சொல்லப்படும். நபி (ஸல்) அவர்கள் இடம் பிடிப்பதற்கு முன்பே மக்கள் தங்களுடைய இடங்களை பிடித்துக் கொள்வர் என்று அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.

(குறிப்பு : இந்த ஹதீஸ் முஸ்லிம், நஸயீ ஆகிய நூல்களில் இடம் பெறுகின்றது.)


«أَنَّ الصَّلَاةَ كَانَتْ تُقَامُ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَيَأْخُذُ النَّاسُ مَقَامَهُمْ قَبْلَ أَنْ يَأْخُذَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Next Page » « Previous Page