Author: Farook

Abu-Dawood-568

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

568. பெண்களுக்கு இரவில் பள்ளிகளுக்கு வர அனுமதி அளியுங்கள் என இப்னு உமர் (ரலி) அறிவிக்கும்போது அவரது மகன், அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர்களுக்கு நாம் அனுமதியளிக்கக் கூடாது. காரணம் இந்த சலுகையை அவர்கள் தவறாக பயன்படுத்திவிடுவார்கள்! அல்லாஹ்வின் மீது ஆணையாக அவர்களுக்கு நாம் அனுமதியளிக்கக் கூடாது என சொன்னார். இப்னு உமர் (ரலி) அவரை ஏசி, கடிந்துக் கொண்டார். பெண்களுக்கு (தொழவர) அனுமதியளியுங்கள் என ரசூல் (ஸல்) அவர்கள் கூறியதாக சொல்கின்றேன். நீ அவர்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று சொல்கின்றாய் என்று சொன்னார்கள். 

இவ்வாறு முஜாஹித் அறிக்கின்றார்.


«ائْذَنُوا لِلنِّسَاءِ إِلَى الْمَسَاجِدِ بِاللَّيْلِ»، فَقَالَ ابْنٌ لَهُ: وَاللَّهِ لَا نَأْذَنُ لَهُنَّ فَيَتَّخِذْنَهُ دَغَلًا، وَاللَّهِ لَا نَأْذَنُ لَهُنَّ، قَالَ: فَسَبَّهُ وَغَضِبَ، وَقَالَ: أَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ائْذَنُوا لَهُنَّ» وَتَقُولُ لَا نَأْذَنُ لَهُنَّ؟


Abu-Dawood-566

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

566. அல்லாஹ்வின் அடிமைகளான பெண்கள் அல்லாஹ்வுடைய பள்ளிகளுக்கு வராமல் தடுக்காதீர்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னுஉமர் (ரலி) அறிவிக்கின்றார்கள்.


«لَا تَمْنَعُوا إِمَاءَ اللَّهِ مَسَاجِدَ اللَّهِ»


Abu-Dawood-565

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 196

பெண்கள் பள்ளிக்கு வருவது தொடர்பான பாடம்.

565. அல்லாஹ்வின் அடிமைகளான பெண்களை அல்லாஹ்வின் பள்ளிகளுக்கு வரவிடாது தடுக்காதீர்கள், எனினும் அவர்கள் நறுமண திரவியம் பூசாது வருவார்களாக! என்று அல்லாவின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.

இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்களில் இடம் பெறுகின்றது.


«لَا تَمْنَعُوا إِمَاءَ اللَّهِ مَسَاجِدَ اللَّهِ، وَلَكِنْ لِيَخْرُجْنَ وَهُنَّ تَفِلَاتٌ»


Abu-Dawood-563

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

563. அன்சாரிகளில் ஒருவருக்கு மரண வேணை நெருங்கியதும் உங்களுக்கு ஒரு ஹதீஸை அறிவிக்கப் போகின்றேன். நன்மையை கருதியே அந்த ஹதீஸை உங்களுக்கு அழகுறச் செய்து, பின்பள்ளியை நோக்கி புறப்படும்போது அவர் தனது காலை உயர்த்தும் போது மகத்துவமும் கண்ணியமும் நிறைந்த அல்லாஹ் ஒரு நன்மையை பதியாமல் விடுவதில்லை. அவர் தனது இடது காலை (தரையில்) வைக்கும் போது மகத்துவமும் கண்ணியமும் நிறைந்த அல்லாஹ் ஒரு தீமையை அழிக்காமல் விடுவதில்லை. எனவே, உங்களில் ஒருவர் பள்ளிக்கு அருகில் இருக்கட்டும் அல்லது தூரத்தில் இருக்கட்டும். எனினும் அவர் பள்ளிக்கு வந்து ஜமாஅத்தில் சேர்ந்து தொபம்போது அவரது பாவம் மன்னிக்கப்பட்டு விடுகின்றது. மக்கள் சில ரக்அத்துக்களை தொழுது முடித்து சில ரக்அத்துக்கள் மீதமிருக்கும் போது அவர் பள்ளிக்கு வந்தால் கிடைத்ததில் (சேர்ந்து) தொழுது மீதமுள்ள ரக்அத்துக்களை அவர் நிறைவேற்றும் போதும் அவருக்கு அதே மாதிரியான பாவம் மன்னிக்கப்பட்டு விடுகின்றது. அவர்கள் தொழுது முடித்ததும் வந்து தொழுகையை நிறைவேற்றினால் அது மாதிரியே அவர் பாவம் மன்னிக்கப்படுகின்றது என அல்லாவின்தூதர் (ஸல்) அவர்கள் அறிவிக்க நான் வெவியுற்றேன்.


حَضَرَ رَجُلًا مِنَ الْأَنْصَارِ الْمَوْتُ، فَقَالَ: إِنِّي مُحَدِّثُكُمْ حَدِيثًا مَا أُحَدِّثُكُمُوهُ إِلَّا احْتِسَابًا، سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِذَا تَوَضَّأَ أَحَدُكُمْ فَأَحْسَنَ الْوُضُوءَ، ثُمَّ خَرَجَ إِلَى الصَّلَاةِ لَمْ يَرْفَعْ قَدَمَهُ الْيُمْنَى إِلَّا كَتَبَ اللَّهُ عَزَّ وَجَلَّ لَهُ حَسَنَةً، وَلَمْ يَضَعْ قَدَمَهُ الْيُسْرَى إِلَّا حَطَّ اللَّهُ عَزَّ وَجَلَّ عَنْهُ سَيِّئَةً فَلْيُقَرِّبْ أَحَدُكُمْ أَوْ لِيُبَعِّدْ فَإِنْ أَتَى الْمَسْجِدَ، فَصَلَّى فِي جَمَاعَةٍ غُفِرَ لَهُ، فَإِنْ أَتَى الْمَسْجِدَ وَقَدْ صَلَّوْا بَعْضًا وَبَقِيَ بَعْضٌ صَلَّى مَا أَدْرَكَ وَأَتَمَّ مَا بَقِيَ كَانَ كَذَلِكَ، فَإِنْ أَتَى الْمَسْجِدَ وَقَدْ صَلَّوْا فَأَتَمَّ الصَّلَاةَ كَانَ كَذَلِكَ»


Abu-Dawood-562

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்: 194

தொழுகைக்கு நடந்து செல்லும் வழிமுறை.

562. அபூஸுமாமா அல்ஹன்னாத் என்பவர் கூறியதாவது: 

கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள், நான் பள்ளிவாசலுக்குச் செல்லும் வழியில் என்னை சந்தித்தார்கள். நான் பள்ளிவாசலுக்குச் சென்று கொண்டிருந்தபோது, கைகளை கோர்த்தவாறு இருந்தேன். கஅப் (ரலி) அவர்கள் என்னைக் கண்டதும், அவ்வாறு செய்ய வேண்டாமெனத் தடுத்தார்கள்.

பின்னர், “‘உங்களில் ஒருவர் உளூச் செய்து, அதை அழகுறச் செய்து, பின்னர் பள்ளிவாசலை நாடிச் சென்றால், அவர் தம் இரு கைகளையும் கோர்த்துக்கொள்ள வேண்டாம். ஏனெனில், அவர் தொழுகையில்தான் இருக்கிறார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று சொன்னார்கள்.


أَنَّ كَعْبَ بْنَ عُجْرَةَ، أَدْرَكَهُ وَهُوَ يُرِيدُ الْمَسْجِدَ أَدْرَكَ أَحَدُهُمَا صَاحِبَهُ، قَالَ: فَوَجَدَنِي وَأَنَا مُشَبِّكٌ بِيَدَيَّ، فَنَهَانِي عَنْ ذَلِكَ وَقَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِذَا تَوَضَّأَ أَحَدُكُمْ فَأَحْسَنَ وُضُوءَهُ، ثُمَّ خَرَجَ عَامِدًا إِلَى الْمَسْجِدِ فَلَا يُشَبِّكَنَّ يَدَيْهِ فَإِنَّهُ فِي صَلَاةٍ»


Abu-Dawood-561

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 193

இருளில் தொழுகைக்கு நடந்து வருவதின் நன்மை.

561. இருள்களில் பள்ளிகளுக்கு நடந்து வருவோருக்கு இறுதி நாளில் நிறைவான ஒளி கிடைக்கும் என நற்செய்தி கூறுவாயாக! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என புரைதா (ரலி) அறிவிக்கின்றார்.

(குறிப்பு : இந்த ஹதீஸ் திர்மிதியில் இடம் பெறுகின்றது.)


«بَشِّرِ الْمَشَّائِينَ فِي الظُّلَمِ إِلَى الْمَسَاجِدِ بِالنُّورِ التَّامِّ يَوْمَ الْقِيَامَةِ»


Abu-Dawood-560

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

560. ஜமாஅத்தில் (ஒருவர்) தொழும் தொழுகை இருபத்தைந்து தொழுகைகளுக்கு சமமாகும். ருகூஃஐயும், சுஜுதையும் நிறைவுபடுத்தி அந்த தொழுகையை, பாலைவனத்தில் அவர் தொழும் தொழுகை ஐம்பது தொழுகைகளின் தரத்தை அடைந்து விடுகின்றது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூசயீத் அல்குத்ரி (ரலி) அறிவிக்கின்றார்கள்.

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள் :

அப்துல் வாஹித் பின் ஜியாத் இந்த ஹதீஸை அறிவிக்கும் போது ஜமாஅத்தில் சேர்ந்து ஒருவர் தொழும் தொழுகையைவிட பாலைவனத்தில் அவர் தொழுகைக்கு இருமடங்கு நன்மைகள் அதிகரிக்கப்படுகின்றன என்று அறிவித்துதனத அறிவிப்பை தொடர்கின்றார்.

(குறிப்பு : இந்த ஹதீஸ் இப்னுமாஜாவிலும் சுருக்கமாக இடம் பெறுகின்றது.)


«الصَّلَاةُ فِي جَمَاعَةٍ تَعْدِلُ خَمْسًا وَعِشْرِينَ صَلَاةً، فَإِذَا صَلَّاهَا فِي فَلَاةٍ فَأَتَمَّ رُكُوعَهَا وَسُجُودَهَا بَلَغَتْ خَمْسِينَ صَلَاةً»


Abu-Dawood-559

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

559. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

ஒருவர் தன்னுடைய வீட்டிலும், கடைத்தெருவிலும் தொழும் தொழுகைகளைவிட ஜமாஅத்துடன் சேர்ந்து தொழும் தொழுகை இருபத்தைந்து நன்மைகளை அதிகரித்து விடுகின்றது. இதற்கு காரணம், உங்களில் ஒருவர் அழகுற உளூச்செய்து, தொழுயைத் தவிர வேறெதையும் நாடாது தொழுகைக்காகவே தவிர வேறெதற்காகவும் கிளம்பாமல் பள்ளிக்காக (கிளம்பி) வரும்போது பள்ளியில் நுழைகின்ற வரை அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் ஒரு அந்தஸ்து உயர்த்தப்பட்டு ஒரு தீமை அழிக்கப்பட்டே தீரும். தொழுகைக்காக அவர் பள்ளிக்குள் நுழைந்து விட்டால் தொழுகைக்காக அவர் (பள்ளியில் காத்திருக்கும் வரை தொழுகையிலேயே ஈடுபட்டவர் போலாவார்.

யாருக்கும் இடையூறு அளிக்காமல் அல்லது (ஹதஸ் ஏற்பட்டு) உளூமுறியாத வரை உங்களில் ஒருவர் தான் தொழுத இடத்தில் அமர்ந்திருக்கும் வரை, யாஅல்லாஹ்! இவருக்கு மன்னிப்பு வழங்குவாயாக! யாஅல்லாஹ்! இவருக்கு அருள்புரிவாயாக! யாஅல்லாஹ் இவரது பாவமன்னிப்பை ஏற்றுக் கொள்வாயாக! என்று மலக்குகள் சொல்லியவாறு அவருக்கு பிரார்த்தனை புரிகின்றனர்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா

صَلَاةُ الرَّجُلِ فِي جَمَاعَةٍ تَزِيدُ عَلَى صَلَاتِهِ فِي بَيْتِهِ، وَصَلَاتِهِ فِي سُوقِهِ خَمْسًا وَعِشْرِينَ دَرَجَةً، وَذَلِكَ بِأَنَّ أَحَدَكُمْ إِذَا تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ وَأَتَى الْمَسْجِدَ لَا يُرِيدُ إِلَّا الصَّلَاةَ، وَلَا يَنْهَزُهُ إِلَّا الصَّلَاةُ لَمْ يَخْطُ خُطْوَةً إِلَّا رُفِعَ لَهُ بِهَا دَرَجَةٌ وَحُطَّ عَنْهُ بِهَا خَطِيئَةٌ، حَتَّى يَدْخُلَ الْمَسْجِدَ فَإِذَا دَخَلَ الْمَسْجِدَ كَانَ فِي صَلَاةٍ، مَا كَانَتِ الصَّلَاةُ هِيَ تَحْبِسُهُ، وَالْمَلَائِكَةُ يُصَلُّونَ عَلَى أَحَدِكُمْ مَا دَامَ فِي مَجْلِسِهِ الَّذِي صَلَّى فِيهِ، وَيَقُولُونَ: اللَّهُمَّ اغْفِرْ لَهُ، اللَّهُمَّ ارْحَمْهُ اللَّهُمَّ تُبْ عَلَيْهِ، مَا لَمْ يُؤْذِ فِيهِ أَوْ يُحْدِثْ فِيهِ


Abu-Dawood-558

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

558. கடமையான தொழுகைக்காக தன்னுடைய வீட்டிலிருந்து உலூச் செய்து செல்பவரின் கூலி இஹ்ராம் ஆகி ஹஜ் செய்பவரின் கூலியை போன்றதாகும். வேறு எந்த நோக்கதிற்காகவும் இல்லாமல் லுஹா தொழுகைக்காகவே சிரமப்பட்டு லுஹா தொழுபவரின் கூலி, உம்ரா செய்பவரின் கூலியைப் போன்றதாகும்.

இடையில் எந்தவித வீண்பேச்சு இல்லாமல் ஒரு தொழுகைக்குப்பின் தொழுகின்ற இன்னொரு தொழுகை இல்லிய்யீனில் பதியப்படுகின்றது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)


«مَنْ خَرَجَ مِنْ بَيْتِهِ مُتَطَهِّرًا إِلَى صَلَاةٍ مَكْتُوبَةٍ فَأَجْرُهُ كَأَجْرِ الْحَاجِّ الْمُحْرِمِ، وَمَنْ خَرَجَ إِلَى تَسْبِيحِ الضُّحَى لَا يَنْصِبُهُ إِلَّا إِيَّاهُ فَأَجْرُهُ كَأَجْرِ الْمُعْتَمِرِ، وَصَلَاةٌ عَلَى أَثَرِ صَلَاةٍ لَا لَغْوَ بَيْنَهُمَا كِتَابٌ فِي عِلِّيِّينَ»


Abu-Dawood-557

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

557. (மதீனாவில்) ஒருவர் இருந்தார். மதீனாவாசிகளில் இந்த கிப்லாவை நோக்கி தொழக்கூடிய மக்களில் அவரைவிட பள்ளியிலிருந்து வீடு தூரமாக அமைந்த யாரையும் நான் அறிந்திருக்கவில்லை. அவருக்கு எந்த தொழுகைமே தவறுவது கிடையாது! கடுமையான வெப்பத்திலும் இருளிலும் நீ ஏறிவருவதற்கு ஒரு கழுதையை வாங்கினால் நான்றாக இருக்குமல்லவா? என நான் கேட்டதற்கு என்னுடைய வீடு பள்ளிக்கருகில் இருப்பதை நான் விரும்பவில்லை என பதிலளித்தார்.

இந்த செய்தி நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப்பட்டது. உடனே அவர்கள் அவரிடம் அதைப்பற்றி விசாரித்தார்கள். அதற்கு அவர் பள்ளிக்கு நான் வருவதும், (தொழுது விட்டு) திரும்பும் போது நான் வீட்டிற்கு செல்வதும் பதியப்பட வேண்டும் என விரும்புகின்றேன் என்று பதில் சொன்னார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இதை அனைத்தையும் அல்லாஹ் உனக்கு வழங்குவானாக! (அல்லாஹ்வுக்காக) நீ விரும்பிய அனைத்தையும் அல்லாஹ் உனக்கு வழங்குவானாக! என்று சொன்னார்கள்.

இவ்வாறு உபை பின் கஃப் அறிவிக்கின்றார்கள்.

இதே கருத்தில் உள்ள ஹதீஸ் முஸ்லிம், இப்னுமாஜா ஆகிய நூல்களில்

كَانَ رَجُلٌ لَا أَعْلَمُ أَحَدًا مِنَ النَّاسِ مِمَّنْ يُصَلِّي الْقِبْلَةَ مِنْ أَهْلِ الْمَدِينَةِ أَبْعَدَ مَنْزِلًا مِنَ الْمَسْجِدِ مِنْ ذَلِكَ الرَّجُلِ، وَكَانَ لَا تُخْطِئُهُ صَلَاةٌ فِي الْمَسْجِدِ، فَقُلْتُ: لَوِ اشْتَرَيْتَ حِمَارًا تَرْكَبُهُ فِي الرَّمْضَاءِ وَالظُّلْمَةِ، فَقَالَ: مَا أُحِبُّ أَنَّ مَنْزِلِي إِلَى جَنْبِ الْمَسْجِدِ فَنُمِيَ الْحَدِيثُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَهُ عَنْ قَوْلِهِ ذَلِكَ، فَقَالَ: أَرَدْتُ يَا رَسُولَ اللَّهِ أَنْ يُكْتَبَ لِي إِقْبَالِي إِلَى الْمَسْجِدِ وَرُجُوعِي إِلَى أَهْلِي إِذَا رَجَعْتُ، فَقَالَ: «أَعْطَاكَ اللَّهُ ذَلِكَ كُلَّهُ، أَنْطَاكَ اللَّهُ جَلَّ وَعَزَّ مَا احْتَسَبْتَ كُلَّهُ أَجْمَعَ»


Next Page » « Previous Page