Author: Farook

Abu-Dawood-585

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

585. மக்கள் எங்களை கடந்து செல்லும் பகுதியில் குடியமர்ந்திருந்தோம். அவர்கள் திரும்பும்போது எங்களைத் தாண்டி செல்வர். அப்போது அவர்கள் எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இன்னின்னதைச் சொன்னார்கள் என எங்களிடம் அறிவிப்பார்கள். நான் அது சமயம் (குர்ஆனை) மனனம் செய்யும் சிறுவனாக இருந்ததால் குர்ஆனை அதிகமாக மனனம் செய்திருந்தேன். என்னுடைய தந்தை தனது சமூகத்தார் சிலருடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றார். நபி (ஸல்) அவர்கள் அவர்களுக்கு தொழக் கற்றுக்கொடுத்து உங்களில் குர்ஆனை நன்கு ஓதத்தெரிந்தவர் தொழுவிக்கட்டும்! என்றும் சொன்னார்கள். நான் குர்ஆனை நன்கு மனனம் செய்திருந்ததால் குர்ஆனை நன்கு ஓதுபவனாக இருந்தேன். எனவே மக்கள் என்னை முற்படுத்தியதும் நான் அவர்களுக்கு தொழுவித்தேன். ஒரு மஞ்சள் நி சிறிய சால்வை மட்டும் நான் அணிந்திருந்ததால் நான் சஜ்தா செய்யும்போது என்னை விட்டும் அது விலகி விடும். அப்போது உங்களுடைய இமாமின் மானத்தை மறைக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று ஒரு பெண்மணி சொன்னதும் அம்மான் நாட்டு சட்டையை எனக்காக வாங்கினர். இஸ்லாத்தை தழுவிய பின்பு இந்த ஆடையினால் அடைந்த மகிழ்ச்சியைப் போன்று வேறெதனாலும் நான் மகிழிச்சி அடைந்ததில்லை.


كُنَّا بِحَاضِرٍ يَمُرُّ بِنَا النَّاسُ إِذَا أَتَوُا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَكَانُوا إِذَا رَجَعُوا مَرُّوا بِنَا، فَأَخْبَرُونَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: كَذَا وَكَذَا وَكُنْتُ غُلَامًا حَافِظًا فَحَفِظْتُ مِنْ ذَلِكَ قُرْآنًا كَثِيرًا فَانْطَلَقَ أَبِي وَافِدًا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي نَفَرٍ مِنْ قَوْمِهِ فَعَلَّمَهُمُ الصَّلَاةَ، فَقَالَ: «يَؤُمُّكُمْ أَقْرَؤُكُمْ» وَكُنْتُ أَقْرَأَهُمْ لِمَا كُنْتُ أَحْفَظُ فَقَدَّمُونِي فَكُنْتُ أَؤُمُّهُمْ وَعَلَيَّ بُرْدَةٌ لِي صَغِيرَةٌ صَفْرَاءُ، فَكُنْتُ إِذَا سَجَدْتُ تَكَشَّفَتْ عَنِّي، فَقَالَتْ: امْرَأَةٌ مِنَ النِّسَاءِ: وَارُوا عَنَّا عَوْرَةَ قَارِئِكُمْ، فَاشْتَرَوْا لِي قَمِيصًا عُمَانِيًّا، فَمَا فَرِحْتُ بِشَيْءٍ بَعْدَ الْإِسْلَامِ فَرَحِي بِهِ، فَكُنْتُ أَؤُمُّهُمْ وَأَنَا ابْنُ سَبْعِ سِنِينَ أَوْ ثَمَانِ سِنِينَ


Abu-Dawood-584

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

584. குர்ஆனை ஓதுவரில் முந்தியவர் என்ற வாசகமில்லாமல் குர்ஆனை ஓதுவதில் அவர்கள் சமநிலையில் இருந்தால் “சுன்னத்தை’ (நபிவழியை) நன்கு தெரிந்தவர் தொழுவிக்க வேண்டும் நபிவழியை தெரிந்திருப்பதில் அவர்கள் சமநிலையில் இருந்தால் நாடுதுறந்து சென்றதில் முந்தியவர் தொழுவிக்க வேண்டும் என அபூமஸ்வூத் அல்பத்ரி அறிவித்தார் என்று இங்கு இந்த ஹதீஸ் இடம் பெறுகின்றது.

யாருடைய இருக்கையிலும் அவருடைய அனுமதியின்றி நீ உட்கார வேண்டாம் என்ற வாசக அமைப்பு கொண்டதாக இந்த ஹதீஸை இஸ்மாயில் வழியாக ஹஜ்ஜாஜ் பின் அர்தாத் அறிவிக்கின்றார்.


«فَإِنْ كَانُوا فِي الْقِرَاءَةِ سَوَاءً فَأَعْلَمُهُمْ بِالسُّنَّةِ، فَإِنْ كَانُوا فِي السُّنَّةِ سَوَاءً فَأَقْدَمُهُمْ هِجْرَةً» وَلَمْ يَقُلْ: «فَأَقْدَمُهُمْ قِرَاءَةً»


Abu-Dawood-583

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

583. ஒருவர் இன்னொருவரின் அதிகாரத்திற்குரிய பகுதியில் தொழுவிக்க வேண்டாம் என்று இந்த ஹதீஸின் வாசகத்துடன் மேலுள்ள ஹதீஸ் இடம் பெறுகின்றது.

“குர்ஆனை ஓதுவதில் முந்தியவர்’ என்ற வாசத்துடனேயே ஷுந்பா வழியாக யஹ்யா பின் கத்தானும் அறிவிக்கின்றார்.


«وَلَا يَؤُمُّ الرَّجُلُ الرَّجُلَ فِي سُلْطَانِهِ»


Abu-Dawood-581

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 203

தொழுவிக்க தட்டி கழிக்க கூடாது.

581. தொழுவிக்க தங்களுக்கு ஓர் இமாம் இல்லாமல் பள்ளியில் ஜமாஅத்தினர் தொழுவிப்பதை ஆளுக்குஆள் தட்டிக்கழிப்பது இறுதிநாளின் அடையாளமாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றிருக்கின்றேன் என சலமா பின்த் ஹுரிஅறிவிக்கின்றார்.

குறிப்பு : இந்த ஹதீஸ் இப்னுமாஜாவிலும் இடம் பெறுகின்றது.


«إِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ أَنْ يَتَدَافَعَ أَهْلُ الْمَسْجِدِ لَا يَجِدُونَ إِمَامًا يُصَلِّي بِهِمْ»


Abu-Dawood-580

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

பாடம்: 202

மக்களுக்கு தொழுகை நடத்துவதின் சிறப்பு.

580. “மக்களுக்கு தொழுவிப்பவர் சரியான நேரத்தில் தொழுகை நடத்தினால் அவருக்கும் நன்மையாகும்! மக்களுக்கும் நன்மையாகும்! இதில் எதையேனும் அவர் குறைவைத்தால் அவருக்கே அது தீமையாகும். மக்கள் மீது அது தீமையாகாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)


«مَنْ أَمَّ النَّاسَ فَأَصَابَ الْوَقْتَ فَلَهُ وَلَهُمْ، وَمَنِ انْتَقَصَ مِنْ ذَلِكَ شَيْئًا فَعَلَيْهِ وَلَا عَلَيْهِمْ»


Abu-Dawood-579

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 201

ஜமாஅத்துடன் தொழுதவர் இன்னொரு ஜமாஅத் நடக்கும் இடத்திற்கு சென்றால் திரும்ப தொழவேண்டுமா ?

579. “பலாத்’ என்ற இடத்தில் மக்கள் தொழுது கொண்டிருக்கும் போது நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் வந்தேன். அப்போது நீங்கள் அவர்களுடன் சேர்ந்து தொழவில்லையா? என்று கேட்டதற்கு, நான் தொழுதுவிட்டேன். ஒரு தொழுகையை ஒரே நாளில் இரண்டு தடவைகள் நீங்கள் தொழ வேண்டாம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றுள்ளேன் என்று இப்னுஉமர் (ரலி) பதிலளித்தார் என மைமூனாவின் விடுதலை பெற்ற அடிமை தெரிவிக்கின்றார்.

குறிப்பு : இந்த ஹதீஸ் நஸயீயில் இடம் பெறுகின்றது.


أَتَيْتُ ابْنَ عُمَرَ عَلَى الْبَلَاطِ وَهُمْ يُصَلُّونَ، فَقُلْتُ: أَلَا تُصَلِّي مَعَهُمْ، قَالَ: قَدْ صَلَّيْتُ، إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «لَا تُصَلُّوا صَلَاةً فِي يَوْمٍ مَرَّتَيْنِ»


Abu-Dawood-578

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

578. (என்னைப் போல்) எங்களில் ஒருவர் தனது வீட்டில் தொழுகையை தொழுது விட்டு பள்ளிக்கு வந்ததும் இகாமத் சொல்லப்படுகின்றது. அப்போது நானும், அவர்களுடன் சேர்ந்து தொழுகின்றேன். ஆனால் இது என்னுடைய உள்ளத்தில் ஒரு விதமான சந்தேகம் தோற்றுவிக்கின்றது என (இப்படி ஒரு சந்தேகத்தை) பனுஅஸத் பின் குஸாமாவைச் சார்ந்த ஒருவர் அபூஅய்யூப் அல்அன்சாரியிடம் கேட்டபோது நாங்கள் இதைப்பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டோம். அதற்கு நபி (ஸஸ்) அவர்கள் இது அவருக்கு கூட்டாக கிடைக்கும் பங்காகும் என்று சொன்னார்கள். 

(இவர் யாரென தெரியாதவராவார் என ஹாபிழ் முன்திரி தெரிவிக்கின்றார்கள்)


أَنَّهُ سَأَلَ أَبَا أَيُّوبَ الْأَنْصَارِيَّ، فَقَالَ: يُصَلِّي أَحَدُنَا فِي مَنْزِلِهِ الصَّلَاةَ، ثُمَّ يَأْتِي الْمَسْجِدَ وَتُقَامُ الصَّلَاةُ فَأُصَلِّي مَعَهُمْ فَأَجِدُ فِي نَفْسِي مِنْ ذَلِكَ شَيْئًا، فَقَالَ أَبُو أَيُّوبَ: سَأَلْنَا عَنْ ذَلِكَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «ذَلِكَ لَهُ سَهْمُ جَمْعٍ»


Abu-Dawood-573

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

573. தொழுகைக்கு அமைதியாகவே வாருங்கள். கிடைத்த ரக்அத்களை தொழுது உங்களை முந்திவிட்ட ரக்அத்களை திரும்ப தொழுது கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள். 

(விட்டவர்) திரும்ப தொழுவாராக என்று அபூஹுரைரா (ரலி) வழியாக இவ்வாறு இப்னு சீரின் அறிவிக்கின்றார். இதுபோலவே அபூஹுரைரா (ரலி)யிடமிருந்து அபூராபிஃ அறிவிக்கின்றார்.

ஒரு ஹதீஸில் பூர்த்தி செய்யுங்கள் எனவும் இன்னொரு ஹதீஸில் திரும்ப தொழுங்கள் எனவும் கருத்து மாற்றத்துடன் அபூதர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்படுகின்றது.


«ائْتُوا الصَّلَاةَ وَعَلَيْكُمُ السَّكِينَةُ، فَصَلُّوا مَا أَدْرَكْتُمْ وَاقْضُوا مَا سَبَقَكُمْ»


Abu-Dawood-572

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 198

தொழுகைக்கு விரைதல்.

572. தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டு விட்டால் அதற்காக வேகமாக ஓடிவர வேண்டாம்! தொழுகைக்கு அமைதியாக நிங்கள் நடந்தே வாருங்கள். நீங்கள் அடைந்து கொண்ட ரக்அத்துக்களை தொழுதுக் கொண்டு தவறிவிட்ட ரக்அத்துக்களை பூர்த்தி செய்துக் கொள்ளுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றிருக்கிறேன் என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள்

தவறிவிட்ட ரக்அத்துக்களை பூர்த்தி செய்யுங்கள் என்று தான் ஜுபைதி, இப்னு அபீதிஃப், இப்ராகீம் பின் சஃத், மஃமர், ஹுஐப் பின் அபீஹம்சா ஆகியோர் ஜுஹிரி வழியாக அறிவிக்கின்றார்.

பூர்த்தி செய்யுங்கள் என்று அபூஹுரைரா (ரலி) மூலம் ஜஃபர் பின் ரபீஆஅப அறிவிக்கின்றார். நபி (ஸல்) அவர்களிடமிருந்து பூர்த்தி செய்யுங்கள் என அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அபூகதாதா (ரலி), அனஸ் (ரலி) ஆகியோர் அனைவரும் அறிவிக்கின்றனர்.

ஜுஹ்ரியிடமிருந்து இப்னு உஐனா மட்:டும் திரும்ப நிறைவேற்றுங்கள் என்று

«إِذَا أُقِيمَتِ الصَّلَاةُ فَلَا تَأْتُوهَا تَسْعَوْنَ، وَأْتُوهَا تَمْشُونَ، وَعَلَيْكُمُ السَّكِينَةُ فَمَا أَدْرَكْتُمْ فَصَلُّوا، وَمَا فَاتَكُمْ فَأَتِمُّوا»


Abu-Dawood-569

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 197

பெண்கள் பள்ளிக்கு வருவதை கண்டிக்கும் பாடம்.

569. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இன்று பள்ளிக்கு வரும்) பெண்கள் பெண்கள் செய்யும் செயலை கண்டித்தால் பனூஇஸ்ராயிலின் பெண்கள் தடுக்கப்பட்டது போல் இவர்களையும் பள்ளிக்கு வராமல் தடுத்திருப்பார்கள் என்று நபி (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) அறிவித்தார்கள் என அம்ரா பின்த் அப்துர் ரஹ்மான் அறிவிக்கின்றார்.

பனு இஸ்ராயீலின் பெண்கள் பள்ளிக்கு வராமல் தடுக்கப்பட்டனரா? என்று அம்ராவிடம் கேட்டதற்கு அவர் ஆம் என்ற சொன்னதாக யஹ்யா பின் சயீத் தெரிவிக்கின்றார்.

இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்களில் இடம் பெறுகின்றது.


«لَوْ أَدْرَكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا أَحْدَثَ النِّسَاءُ لَمَنَعَهُنَّ الْمَسْجِدَ كَمَا مُنِعَهُ  نِسَاءُ بَنِي إِسْرَائِيلَ»، قَالَ يَحْيَى: فَقُلْتُ لِعَمْرَةَ: أَمُنِعَهُ نِسَاءُ بَنِي إِسْرَائِيلَ؟ قَالَتْ: نَعَمْ


Next Page » « Previous Page