Author: Farook

Abu-Dawood-598

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

598. ஒருவர் அம்மார் பின் யாஸிர் – உடன் மதாயினில் இருந்தார். அப்போது தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டது. அம்மார் முந்திக் கொண்டு ஒரு கடையின் மீது நின்று தொழுவிக்கலானார். அவருக்கு கீழே மக்கள் நின்று தொழுதனர். உடனே ஹுதைபா (ரலி) முந்திக் கொண்டு அம்மார் (ரலி)யின் இரு கைகளையும் பிடித்தார். தன்னை தொடர்ந்துவந்த அம்மாரை ஹுதைபா (ரலி) கீழே இறக்கிவிட்டார். அம்மார் (ரலி) தொழுகையை முடித்ததும் ஹுதைபா (ரலி)யை நோக்கி மக்களுக்கு தொழுவிக்கும் ஒருவர் மக்கள் தொழுகின்ற இடத்தை விட அல்லது அதுமாதிரியான இடத்தைவிட (மிக) உயரமான இடத்தில் நின்று தொழுவிக்ககூடாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நீ செவியுறவில்லையா? என்று வினவினார். அதற்கு அம்மார் (ரலி) அதனால்தான் நீங்கள் என்னுடைய கைகளை பிடித்தவுடன் உங்களை தொடர்ந்து விட்டேன் என்று பதிலளித்தார். 

இவ்வாறு அம்மார் (ரலி)யுடன் இருந்த ஒருவர் அறிவித்ததாக அதீம் பின் சாபித் (ரலி) அறிவிக்கின்றார்.


أَنَّهُ كَانَ مَعَ عَمَّارِ بْنِ يَاسِرٍ بِالْمَدَائِنِ فَأُقِيمَتِ الصَّلَاةُ فَتَقَدَّمَ عَمَّارٌ وَقَامَ عَلَى دُكَّانٍ يُصَلِّي وَالنَّاسُ أَسْفَلَ مِنْهُ، فَتَقَدَّمَ حُذَيْفَةُ فَأَخَذَ عَلَى يَدَيْهِ فَاتَّبَعَهُ عَمَّارٌ، حَتَّى أَنْزَلَهُ حُذَيْفَةُ فَلَمَّا فَرَغَ عَمَّارٌ مِنْ صَلَاتِهِ قَالَ لَهُ حُذَيْفَةُ: أَلَمْ تَسْمَعْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِذَا أَمَّ الرَّجُلُ الْقَوْمَ فَلَا يَقُمْ فِي مَكَانٍ أَرْفَعَ مِنْ مَقَامِهِمْ» أَوْ نَحْوَ ذَلِكَ؟، قَالَ عَمَّارٌ: «لِذَلِكَ اتَّبَعْتُكَ حِينَ أَخَذْتَ عَلَى يَدَيَّ»


Abu-Dawood-597

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 210

இமாம் உயரமான இடத்தில் நின்று தொழுவித்தல்.

597. ஹுதைபா (ரலி) மதாயின் நகரத்தில் ஒரு கடையின் மீது நின்று தொழுவித்தார்கள். உடனே அபூமஸ்வூத் அவருடைய சட்டையை பிடித்து இழுத்தனர். அபூமஸ்வூத் தொழுது முடிந்ததும் இவ்வாறு தொழுவதை நபித்தோழர்கள் தடுத்துள்ளனர் என்ற விபரம் உனக்கு தெரியாதா? என்று ஹுதைபா (ரலி)யை நோக்கி கேட்டபோது, ஆம்! நீர் என்னை இழுக்கும் போதே நான் உணர்ந்து கொண்டேன் என்று ஹுதைபா (ரலி) பதில் சொன்னார் என ஹம்மாம் அறிவிக்கின்றார்.


أَنَّ حُذَيْفَةَ، أَمَّ بِالْمَدَائِنِ عَلَى دُكَّانٍ، فَأَخَذَ أَبُو مَسْعُودٍ، بِقَمِيصِهِ فَجَبَذَهُ، فَلَمَّا فَرَغَ مِنْ صَلَاتِهِ قَالَ: «أَلَمْ تَعْلَمْ أَنَّهُمْ كَانُوا يُنْهَوْنَ عَنْ ذَلِكَ؟» قَالَ: «بَلَى، قَدْ ذَكَرْتُ حِينَ مَدَدْتَنِي»


Abu-Dawood-596

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 209

சந்திக்க வருபவர் தொழுவித்தல்.

596. இந்த எங்களுடைய பள்ளிக்கு மாலிக் பின் ஷுவைரிஸ் வந்தார். தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டதும் அவரிடம் நீங்கள் முன்சென்று தொழுவியுங்கள் என்று சொன்னோம். அதற்கு அவர் உங்களில் ஒருவரை தொழுவிக்க முன்னிருத்துங்கள். உங்களுக்கு நான் ஏன் தொழுவிக்கவில்லை என்பதற்கான விளக்கத்தை தெரிவிக்கின்றேன். அதாவது ஒரு கூட்டத்தை சந்திக்க வந்திருப்பவர் அம்மக்களுக்கு தொழுவிக்க வேண்டாம்! அவர்களில் உள்ள ஒருவரே தொழுவிக்கட்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றிருக்கின்றேன் என்று அவர் அறிவித்தார்.

குறிப்பு : இந்த ஹதீஸ் திர்மிதியிலும் இடம் பெற்றிருக்கின்றது.


كَانَ مَالِكُ بْنُ حُوَيْرِثٍ، يَأْتِينَا إِلَى مُصَلَّانَا هَذَا، فَأُقِيمَتِ الصَّلَاةُ فَقُلْنَا لَهُ: تَقَدَّمْ فَصَلِّهْ، فَقَالَ لَنَا: قَدِّمُوا رَجُلًا مِنْكُمْ يُصَلِّي بِكُمْ،

وَسَأُحَدِّثُكُمْ لِمَ لَا أُصَلِّي بِكُمْ، سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ زَارَ قَوْمًا فَلَا يَؤُمَّهُمْ، وَلْيَؤُمَّهُمْ رَجُلٌ مِنْهُمْ»


Abu-Dawood-595

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 208

குருடர் தொழுவித்தல்.

595. கண் பார்வை தெரியாதவரான அப்துல்லாஹ் பின் உம்மு மக்தூம் (ரலி)யை நபி (ஸல்) அவர்கள் தனக்கு பதிலாக தொழுவிப்பதற்கு நியமித்தார்கள் என அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்.


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «اسْتَخْلَفَ ابْنَ أُمِّ مَكْتُومٍ يَؤُمُّ النَّاسَ وَهُوَ أَعْمَى»


Abu-Dawood-594

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம் : 207

நல்லவரும், கெட்டவரும் தொழுவித்தல்.

594. கடமையான தொழுகையை ஒவ்வொரு முஸ்லிமுக்கு பின்னால் நின்று தொழுவது கடமையாகும். அவர் நல்லவராக இருப்பினும் சரியே! பெரும்பாவம் செய்கின்ற தீயவராக இருப்பினும் சரியே! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«الصَّلَاةُ الْمَكْتُوبَةُ وَاجِبَةٌ خَلْفَ كُلِّ مُسْلِمٍ بَرًّا كَانَ أَوْ فَاجِرًا وَإِنْ عَمِلَ الْكَبَائِرَ»


Abu-Dawood-590

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

590. உங்களில் சிறந்தவர் பாங்கு சொல்வாராக! உங்களில் நன்கு ஓதத் தெரிந்தவர் தொழுவிப்பாராக என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்.

குறிப்பு : இந்த ஹதீஸ் இப்னுமாஜாவிலும் இடம் பெற்றுள்ளது.


«لِيُؤَذِّنْ لَكُمْ خِيَارُكُمْ وَلْيَؤُمَّكُمْ قُرَّاؤُكُمْ»


Abu-Dawood-589

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

589. தொழுகை நேரம் வந்துவிட்டால் நீங்கள் இருவரும் பாங்கு சொல்லுங்கள். பிறகு இகாமத் சொல்லுங்கள். பிறகு உங்களில் பெரியவர் தொழுவிப்பாராக என்று தன்னிடமோ அல்லது தன் நண்பரிடமோ சொன்னார்கள் என மாலிக் பின் அல்ஹுவைரிஸ் அறிவிக்கின்றார்.

அறிவிப்பாளர் வரிசை

(1) மாலிக் பின் அல்ஹுவைரிஸ் – அபூ கிலாபா – காலித் – மஸ்லமா பின் முஹம்மத் – முஸத்தத்

(2) மாலிக் பின் அல்ஹுவைரிஸ் – அபூ கிலாபா – காலித் – இஸ்மாயீல் – முஸத்தத்

அன்றைய தினம் கல்வியில் இருவரும் ஒத்த நிலையில் இருந்தனர் என மஸ்லமா அறிவிக்கும் ஹதீஸில் உள்ளது. 

குர்ஆனை ஓதுவரில் இருவரின் நிலை எப்படி? என நான் அபூகிலாபாவிடம் கேட்டபோது அவ்விருவரும் குர்ஆன் ஓதுவரில் சமநிலையில் இருந்தனர் என பதிலளித்தார் என காலித் சொல்வதாக இஸ்மாயிலுடைய ஹதீஸில் இடம்பெறுகின்றது.

குறிப்பு : இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம், திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா ஆகிய நூல்களில் விரிவாகவும்

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهُ: أَوْ لِصَاحِبٍ لَهُ: «إِذَا حَضَرَتِ الصَّلَاةُ، فَأَذِّنَا، ثُمَّ أَقِيمَا، ثُمَّ لِيَؤُمَّكُمَا أَكْبَرُكُمَا سِنًّا»، وَفِي حَدِيثِ مَسْلَمَةَ، قَالَ: وَكُنَّا يَوْمَئِذٍ مُتَقَارِبَيْنِ فِي الْعِلْمِ، وَقَالَ: فِي حَدِيثِ إِسْمَاعِيلَ: قَالَ خَالِدٌ: قُلْتُ لِأَبِي قِلَابَةَ: فَأَيْنَ الْقُرْآنُ؟، قَالَ: إِنَّهُمَا كَانَا مُتَقَارِبَيْنِ


Abu-Dawood-588

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

588. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்படும் முன்பு நாடு துறந்த முதல் முஹாஜிர்கள் (நாடு துறந்தவர்கள்) “அஸ்பா” என்ற இடத்தில் குடியமர்ந்தார்கள். அபூஹுதைபா (ரலி)யின் விடுதலை பெற்ற அடிமை ஸாலிம் அவர்களுக்கு தொழுவித்தனர். அவரே அம்மக்களில் குர்ஆனை அதிகம் தெரிந்தவராவார் என்று இப்னு உமர் (ரலி) அறிவிக்கின்றார்கள். உமர் பின் அல்கத்தாப், அபூஸலமா பின் அப்துல்அ1த் ஆகியோரும் அந்த முஹாஜிர்களில் இடம்பெற்றிருந்தனர் என்று ஹைதம் கூடுதலாக அறிவிக்கின்றார்.


لَمَّا قَدِمَ الْمُهَاجِرُونَ الْأَوَّلُونَ نَزَلُوا الْعُصْبَةَ، قَبْلَ مَقْدَمِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَكَانَ يَؤُمُّهُمْ سَالِمٌ مَوْلَى أَبِي حُذَيْفَةَ «وَكَانَ أَكْثَرَهُمْ قُرْآنًا»، زَادَ الْهَيْثَمُ: وَفِيهِمْ عُمَرُ بْنُ الْخَطَّابِ، وَأَبُوسَلَمَةَ بْنُ عَبْدِ الْأَسَدِ


Abu-Dawood-587

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

587. தன் சமூகத்தாருடன் எனது தந்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றுவிட்டு திரும்ப எண்ணிய போது, அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்கு யார் தொழுவிக்க வேண்டும்? என்று வினவிய போது, உங்களில் குர்ஆனை அதிகமாக திரட்டியவர் அல்லது குர்ஆனை மனனம் செய்தவர் தொழுவிப்பாராக! என்று சொன்னார்கள். சிறுவனாக இருந்துக் கொண்டு மக்களில் நான் குர்ஆனை திரட்டியது போன்று வேறு யாரும் திரட்டியிருக்கவில்லை! என்னிடம் ஒரே ஒரு சால்வைதான் இருந்தது. ஜரீம் கிளையாரின் எந்த ஒரு கூட்டத்தில் நான் கலந்துக் கொண்டாலும் நான் தான் (அவர்களது) இமாமாக தவறியதில்லை. இன்றைய நாள் வரை அவர்களில் இறந்தவர்களுக்கு நான் தான் ஜனாஸா தொழுவித்துக் கொண்டிருக்கின்றேன் என்று அம்ரு பின் ஸலாமா (ரலி) அறிவிக்கின்றார்கள். தன் தந்தை வழியாக அறிவிக்கின்றார்.

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள் :

“என்னுடைய கூட்டத்தார் நபி (ஸல்) அவர்களிடம் சென்ற போது’ என தன் தந்தையிடமிருந்து அறிவிப்பதாக குறிப்பிடாமல் அம்ர் பின் ஸலமா அறிவிக்கும் ஹதீஸை அம்ர் பின் ஸலமா, மிஸ்அர் பின் ஹபீப் வாயிலாக யசீத் பின் ஹாரூன் அறிவிக்கின்றார்.

أَنَّهُمْ وَفَدُوا إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا أَرَادُوا أَنْ يَنْصَرِفُوا، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ مَنْ يَؤُمُّنَا، قَالَ: «أَكْثَرُكُمْ جَمْعًا لِلْقُرْآنِ» أَوْ «أَخْذًا لِلْقُرْآنِ» قَالَ: فَلَمْ يَكُنْ أَحَدٌ مِنَ الْقَوْمِ جَمَعَ مَا جَمَعْتُهُ، قَالَ: فَقَدَّمُونِي وَأَنَا غُلَامٌ وَعَلَيَّ شَمْلَةٌ لِي، فَمَا شَهِدْتُ مَجْمَعًا مِنْ جَرْمٍ إِلَّا كُنْتُ إِمَامَهُمْ، وَكُنْتُ أُصَلِّي عَلَى جَنَائِزِهِمْ إِلَى يَوْمِي هَذَا


Abu-Dawood-586

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

586. மேலுள்ள ஹதீஸின் கருத்துதான் இங்கே இடம் பெறுகின்றது. ஒட்டுப் போடப்பட்ட ஓட்டை விழுந்த சால்வை அணிந்து கொண்டு மக்களுக்கு தொழுவிப்பேன். நான் சஜ்தா செய்யும்போது எனது பிட்டம் வெளியே தெரியும் என்று அம்ர் பின் சலமா அறிவித்ததாக இந்த அறிவிப்பில் இடம் பெறுகின்றது.


فَكُنْتُ أَؤُمُّهُمْ فِي بُرْدَةٍ مُوَصَّلَةٍ فِيهَا فَتْقٌ فَكُنْتُ إِذَا سَجَدْتُ خَرَجَتْ اسْتِي


Next Page » « Previous Page