Author: Farook

Abu-Dawood-530

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 182

மக்ரிப் அதான் போது சொல்ல வேண்டியவை.

530. யாஅல்லாஹ்! இது உனது இரவு தோன்ற உன்னுடைய பகல் மறைந்து உனது அழைப்பாளர்களின் குரல்கள் ஒலிக்கும் நேரமாகும்! என்னை மன்னிப்பாயாக! என்று மக்ரிபின் போது நான் ஓதும் படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு கற்றுத் தந்தார்கள் என உம்முஸலமா (ரலி) அறிவிக்கின்றார்கள்.

(குறிப்பு : இந்த ஹதீஸ் திர்மிதீயில் இடம் பெறுகின்றது.)


عَلَّمَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ أَقُولَ عِنْدَ أَذَانِ الْمَغْرِبِ: «اللَّهُمَّ إِنَّ هَذَا إِقْبَالُ لَيْلِكَ، وَإِدْبَارُ نَهَارِكَ، وَأَصْوَاتُ دُعَاتِكَ، فَاغْفِرْ لِي»


Abu-Dawood-529

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 181

அதான் முடியும் போது ஓத வேண்டிய துஆ.

529. நிறைவான இந்த அழைப்பிற்கும், நிரந்தமான இந்த தொழுகைக்கும் உரிய ரட்சகனே! இறைவனே! முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு வஸீலாவையும் சிறப்பையும் அளிப்பாயாக! நீ அவர்களுக்கு வாக்களித்த புகழுக்குரிய இடத்தில் அவர்களை எழுப்புவாயாக! என்று அதானை செவியுறும் போது (அதற்கான பதில்களைக் கூறி கடைசியாக) சொல்பவருக்கு இறுதி நாளில் எனது ஷபாஅத் உறுதியாகி விட்டது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கின்றார்.

(குறிப்பு : இந்த ஹதீஸ் புகாரி, திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா ஆகிய நூல்களில் இடம் பெறுகின்றது.)


مَنْ قَالَ: حِينَ يَسْمَعُ النِّدَاءَ اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلَاةِ الْقَائِمَةِ، آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ، إِلَّا حَلَّتْ لَهُ الشَّفَاعَةُ يَوْمَ الْقِيَامَةِ


Abu-Dawood-528

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 180

இகாமத்தை செவியுறும் போது சொல்ல வேண்டிய பதில்.

528. பிலால் இகாமத் சொல்லத் துவங்கி கத் காமத்திஸ் ஸலாத் (தொழுகை துவங்கி விட்டது) என்று சொல்லும் போது அகாமஹல்லாஹு (அல்லாஹ் தொழுகையை என்றென்றும் நிலை நாட்டுவானாக!) என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். இகாமத்தின் மற்ற வார்த்தைகளுக்கு அதான் சம்பந்தமாக உமர் (ரலி) அவர்களின் ஹதீஸில் உள்ளது போலவே பதிலளித்தார்கள் என அபூ உமாமா (ரலி) அல்லது நபித் தோழர்களில் ஒருவர் அறிவிக்கின்றார்.


أَنَّ بِلَالًا أَخَذَ فِي الْإِقَامَةِ، فَلَمَّا أَنْ قَالَ: قَدْ قَامَتِ الصَّلَاةُ، قَالَ: النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَقَامَهَا اللَّهُ وَأَدَامَهَا» وَقَالَ: فِي سَائِرِ الْإِقَامَةِ كَنَحْوِ حَدِيثِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ فِي الْأَذَانِ


Abu-Dawood-527

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

527. அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என்று முஅத்தின் சொல்லும் போது உங்களில் ஒருவர் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என்றும், முஅத்தின் அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு, அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு என்று சொல்லும் போது, அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு என்றும் அவர் அஷ்ஹது அன் முஹம்மதர் ரசூலுல்லா, அஷ்ஹது அன்ன முஹம்மதர் – ரசூலுல்லாஹ் என்று சொன்னதும் அஷ்ஹது அன்ன முஹம்மதர் – ரசூலுல்லாஹ் என்றும் பிறகு முஅத்தின் ஹய்ய அலஸ் ஸலாத் என்று சொன்னதும் லாஹவ்ல வலாகுவ்வத்த இல்லாபில்லாஹ் என்றும் பிறகு முஅத்தின் ஹய்ய அலல் பலாஹ் என்று சொல்லும் போது லாஹவ்ல வலாகுவ்வத்த இல்லாபில்லாஹ் என்றும் பிறகு முஅத்தின் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என்று சொல்லும் போது அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என்றும் மனப்பூர்வமாக சொல்வாரேயானல் அவர் நிச்சயமாக சொர்க்கம் சென்று விட்டார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இவ்வாறு உமர் பின் கத்தாப் (ரலி) அறிவிக்கின்றார்கள்.

(குறிப்பு : இந்த ஹதீஸ் முஸ்லிம், நஸயீ ஆகிய நூல்களில் பதிவாகியுள்ளது.)


إِذَا قَالَ الْمُؤَذِّنُ: اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ، فَقَالَ: أَحَدُكُمْ: اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ، فَإِذَا قَالَ: أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، قَالَ: أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، فَإِذَا قَالَ: أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ قَالَ: أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، ثُمَّ قَالَ: حَيَّ عَلَى الصَّلَاةِ قَالَ: لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ، ثُمَّ قَالَ: حَيَّ عَلَى الْفَلَاحِ، قَالَ: لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ، ثُمَّ قَالَ: اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ، قَالَ: اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ، ثُمَّ قَالَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ قَالَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ مِنْ قَلْبِهِ دَخَلَ الْجَنَّةَ


Abu-Dawood-526

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

526. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செவியுறும் போது நானும் (சாட்சி சொல்கின்றேன்) நானும் (சாட்சி சொல்கின்றேன்) என்று சொல்வார்கள் என ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள்.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا سَمِعَ الْمُؤَذِّنَ يَتَشَهَّدُ، قَالَ: «وَأَنَا، وَأَنَا»


Abu-Dawood-525

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

525. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுகை அறிவிப்பாளரின் அறிவிப்பைக் கேட்கக்கூடியவர், வ அன அஷ்ஹது அல் லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரசூலுஹு, ரளீத்து பில்லாஹி ரப்பா, வபி முஹம்மதிர் ரஸூலா, வபில் இஸ்லாமி தீனா, என்று சொன்னால் அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும்.

(பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையேதுமில்லை. முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் தூதருமாவார்கள் என்று நானும் உறுதிமொழிகிறேன். அல்லாஹ்வை இறைவனாகவும்; முஹம்மத் (ஸல்) அவர்களை (அவனுடைய) தூதராகவும்; இஸ்லாத்தை மார்க்கமாகவும் நான் மனநிறைவுடன் ஏற்றுக்கொண்டன்.)

அறிவிப்பவர்: ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி)


مَنْ قَالَ: حِينَ يَسْمَعُ الْمُؤَذِّنَ وَأَنَا أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، رَضِيتُ بِاللَّهِ رَبًّا وَبِمُحَمَّدٍ رَسُولًا وَبِالْإِسْلَامِ دِينًا غُفِرَ لَهُ


Abu-Dawood-524

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

524. அல்லாஹ்வின் தூதரே! அதான் சொல்பவர்கள் (சிறப்பில்) எங்களை விட மிஞ்சி விடுகின்றார்களே என்று ஒருவர் அல்லாஹ்வின் தூதரிடம் கேட்டபோது, அவர்கள் சொல்வது போல் நீயும் சொல்! நீ பதில் சொல்லி முடிந்ததும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்! உனக்கும் வழங்கப்படும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

இவ்வாறு அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) கூறினார்கள்.

(குறிப்பு : இந்த ஹதீஸ் நஸயீ-ல் பதிவாகியுள்ளது.)


أَنَّ رَجُلًا، قَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ الْمُؤَذِّنِينَ يَفْضُلُونَنَا، فَقَالَ: رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قُلْ كَمَا يَقُولُونَ فَإِذَا انْتَهَيْتَ فَسَلْ تُعْطَهْ»


Abu-Dawood-523

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

523. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுகை அறிவிப்பாளரின் அறிவிப்பை நீங்கள் செவியுற்றால் அவர் கூறுவதைப் போன்றே நீங்களும் கூறுங்கள்.

பின்பு என்மீது ஸலவாத் சொல்லுங்கள். ஏனெனில், என்மீது யார் ஒருமுறை ஸலவாத் சொல்கிறாரோ அதன் காரணத்தால் அவருக்குப் பத்து முறை அல்லாஹ் அருள்புரிகின்றான்.

பின்பு எனக்காக அல்லாஹ்விடம் வஸீலாவைக் கேளுங்கள். வஸீலா என்பது சொர்க்கத்திலுள்ள (உயர்) பதவியாகும்; அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்குத்தான் அது கிடைக்கும். அந்த ஒருவர் நானாகவே இருக்க விரும்புகிறேன். எனவே, எனக்காக அந்தப் பதவியை (அல்லாஹ்விடம்) கேட்பவருக்கு (மறுமை நாளில்) எனது பரிந்துரை அவசியம் கிடைக்கும்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)


«إِذَا سَمِعْتُمُ الْمُؤَذِّنَ فَقُولُوا مِثْلَ مَا يَقُولُ ثُمَّ صَلُّواعَلَيَّ، فَإِنَّهُ مَنْ صَلَّى عَلَيَّ صَلَاةً، صَلَّى اللَّهُ عَلَيْهِ بِهَا عَشْرًا، ثُمَّ سَلُوا اللَّهَ عَزَّ وَجَلَّ لِي الْوَسِيلَةَ، فَإِنَّهَا مَنْزِلَةٌ فِي الْجَنَّةِ لَا تَنْبَغِي إِلَّا لِعَبْدٍ مِنْ عِبَادِ اللَّهِ تَعَالَى، وَأَرْجُو أَنْ أَكُونَ أَنَا هُوَ، فَمَنْ سَأَلَ اللَّهَ لِي الْوَسِيلَةَ، حَلَّتْ عَلَيْهِ الشَّفَاعَةُ»


Abu-Dawood-522

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 179

அதானை செவிமடுப்பவர் சொல்ல வேண்டிய பதில்.

522. (தொழுகைக்கான) அழைப்பை நீங்கள் செவியுற்றால் முஅத்தின் சொல்வது போல் நீங்கள் சொல்லுங்கள் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.


«إِذَا سَمِعْتُمُ النِّدَاءَ فَقُولُوا مِثْلَ مَا يَقُولُ الْمُؤَذِّنُ»


Abu-Dawood-520

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 177

பாங்கு சொல்லும் போது வலப்புறம் இடப்புறம் திரும்புதல்.

520. அவ்ன் பின் அபீஜஹ்பா தன் தந்தை வழியாக அறிவிக்கின்றார்கள் :

மக்காவில் நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். அப்போது அவர்கள் தோலினால் ஆன சிவப்புக் கூடாரத்தில் அமர்ந்திருந்தார்கள். பிலால் (ரலி) வெளியே வந்து அதான் சொன்னார். நான் இந்த பக்கமாகவும் அந்த பக்கமாகவும் பிலாலுடைய வாயைக் கவனித்துக் கொண்டிருந்தேன். பிறகு யமன் நாட்டின் கித்ர் என்ற ரகத்தைச் சார்ந்த சிவப்பு ஆடை அணிந்தவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொழுவதற்காக) புறப்பட்டு வந்தார்கள். இது மூஸா பின் சுலைமான் அல் அன்பாரி அறிவிப்பாகும் மூஸா தனது அறிவிப்பில், பிலால் (ரலி) அப்தஹ் என்ற இடத்திற்கு சென்று அதான் சொல்லக் கண்டேன். அவர் அதான் சொல்லும் போது, ஹய்ய அலஸ் ஸலா, ஹய்ய அலல் ஃபலாஹ் என்பதை அடைந்ததும் (தனது உடல் முழுவதையும்) திரும்பாமல் தனது கழுத்தை வலது, இடது பக்கமாக திருப்பினார்கள். பிறகு பள்ளிக்குள் சென்று கைத்தடியை கொண்டு வந்தார் என்று தொடர்ந்து அறிவிக்கின்றார்.

(குறிப்பு : இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா

أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَكَّةَ وَهُوَ فِي قُبَّةٍ حَمْرَاءَ مِنْ أَدَمٍ فَخَرَج بِلَالٌ فَأَذَّنَ فَكُنْتُ أَتَتَبَّعُ فَمَهُ هَاهُنَا وَهَاهُنَا، قَالَ: «ثُمَّ خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَيْهِ حُلَّةٌ حَمْرَاءُ بُرُودٌ يَمَانِيَةٌ  قِطْرِيٌّ» – وَقَالَ مُوسَى – قَالَ: رَأَيْتُ بِلَالًا خَرَجَ إِلَى الْأَبْطَحِ فَأَذَّنَ فَلَمَّا بَلَغَ حَيَّ عَلَى الصَّلَاةِ، حَيَّ عَلَى الْفَلَاحِ، لَوَى عُنُقَهُ يَمِينًا وَشِمَالًا، وَلَمْ يَسْتَدِرْ ثُمَّ دَخَلَ فَأَخْرَجَ الْعَنَزَةَ وَسَاقَ حَدِيثَهُ


Next Page » « Previous Page