Author: Farook

Abu-Dawood-519

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

பாடம்: 176

மனாராவின் (உயரமான இடத்தின்) மேல் நின்று பாங்கு சொல்லுதல்.

519. பனூ நஜ்ஜார் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண் கூறியதாவது:

பள்ளியை சுற்றி உள்ள வீடுகளில் எனது வீடு மிக உயரமாக அமைந்திருந்தது. பிலால் (ரலி) அவர்கள் அதில் ஏறி பஜ்ருக்கான பாங்கு சொல்வார். ஸஹர் நேரத்தில் வந்து, அமர்ந்து பஜ்ர் நேரத்தை கவனித்துக் கொண்டிருப்பார். பஜ்ர் நேரத்தை அவர் பார்த்ததும் அவர் உடல் சிலிர்த்து எழுந்து, “அல்லாஹும்ம இன்னீ அஹ்மதுக்க வ அஸ்தயீனுக்க அலா குரைஷின் அன் யுகீமூ தீனக்க” (யாஅல்லாஹ்! உன்னைப் புகழ்கின்றேன். குறைஷிகள் உன்னுடைய மார்க்கத்தை நிலை நாட்ட வேண்டுமென உன்னிடமே உதவி தேடுகின்றேன்) என்று சொல்வார். பிறகு பாங்கு சொல்வார். ஒரு இரவு கூட இந்த வார்த்தைகளை (சொல்லாமல்) விட்டதாக நான் காணவில்லை!


كَانَ بَيْتِي مِنْ أَطْوَلِ بَيْتٍ حَوْلَ الْمَسْجِدِ وَكَانَ بِلَالٌ يُؤَذِّنُ عَلَيْهِ الْفَجْرَ فَيَأْتِي بِسَحَرٍ فَيَجْلِسُ عَلَى الْبَيْتِ يَنْظُرُ إِلَى الْفَجْرِ، فَإِذَا رَآهُ تَمَطَّى، ثُمَّ قَالَ: «اللَّهُمَّ إِنِّي أَحْمَدُكَ وَأَسْتَعِينُكَ عَلَى قُرَيْشٍ أَنْ يُقِيمُوا دِينَكَ» قَالَتْ: ثُمَّ يُؤَذِّنُ، قَالَتْ: وَاللَّهِ مَا عَلِمْتُهُ كَانَ تَرَكَهَا لَيْلَةً وَاحِدَةً تَعْنِي هَذِهِ الْكَلِمَاتِ


Abu-Dawood-516

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

516. தொழுகைக்கு பாங்கு சொல்லப்படும் போது ஷைத்தான் பாங்கை செவியுறக் கூடாது என்பதற்காக காற்று விட்டுக் கொண்டே பின்னோக்கி ஓட்டமெடுக்கின்றான். பாங்கு முடிக்கப்பட்டதும் முன்னோக்கி வருகின்றான். தொழுகைக்கு இகாமத் சொல்லப் பட்டதும் பின்னோக்கி ஓடுகின்றான். இகாமத் முடிந்ததும், முன்னோக்கி வந்து (தொழுகின்ற) ஒருவரின் உள்ளத்தில் இதை நினைத்துப் பார்! அதை நினைத்துப்பார்! என்று அவர் அது வரை நினைத்திராத செய்திகளை நினைவுபடுத்துகின்றான். இதனால் தொழுபவர் தான் எத்தனை (ரத்அத்துக்கள்) தொழுதோம் என்று தெரியாது போய்விடுகின்றார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.

இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம், நஸயீ ஆகிய நூல்களில் இடம் பெறுகின்றது.


إِذَا نُودِيَ بِالصَّلَاةِ أَدْبَرَ الشَّيْطَانُ وَلَهُ ضُرَاطٌ حَتَّى لَا يَسْمَعَ التَّأْذِينَ، فَإِذَا قُضِيَ النِّدَاءُ أَقْبَلَ حَتَّى إِذَا ثُوِّبَ بِالصَّلَاةِ أَدْبَرَ، حَتَّى إِذَا قُضِيَ التَّثْوِيبُ أَقْبَلَ حَتَّى يَخْطُرَ بَيْنَ الْمَرْءِ  وَنَفْسِهِ، وَيَقُولُ: اذْكُرْ كَذَا اذْكُرْ كَذَا لِمَا لَمْ يَكُنْ يَذْكُرُ، حَتَّى يَضِلَّ الرَّجُلُ أَنْ يَدْرِيَ كَمْ صَلَّى


Abu-Dawood-515

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 174

சப்தமிட்டு அதான் சொல்லுதல்.

515. அதான் சொல்பவரின் சப்தம் எட்டும் எல்லை வரை அவரது பாவம் மன்னிக்கப்படுகின்றது. காய்ந்த மற்றும் ஈரமான அனைத்து பொருட்களும் அவருக்காக சாட்சி சொல்கின்றன. தொழுகையில் கலந்து கொள்பவருக்கு இருபத்தைந்து தொழுகையின் நன்மைகள் எழுதப்பட்டு இரண்டு தொழுகைகளுக்கு இடையிலான தீமைகள் அழிக்கப்படுகின்றன என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்.

(குறிப்பு : இந்த ஹதீஸ் நஸயீ, இப்னு மாஜா விலும் இடம் பெறுகின்றது.)


«الْمُؤَذِّنُ يُغْفَرُ لَهُ مَدَى صَوْتِهِ وَيَشْهَدُ لَهُ كُلُّ رَطْبٍ وَيَابِسٍ وَشَاهِدُ الصَّلَاةِ يُكْتَبُ لَهُ خَمْسٌ وَعِشْرُونَ صَلَاةً وَيُكَفَّرُ عَنْهُ مَا بَيْنَهُمَا»


Abu-Dawood-514

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

514. சுப்ஹு தொழுகையின் முதல் அதானின் போது நபி (ஸல்) அவர்கள் எனக்கு அதான் சொல்லும்படி உத்தரவிட்டார்கள். நான் அதான் சொன்னதும் அல்லாஹ்வின் தூதரே! இகாமத் சொல்லட்டுமா? என்று கேட்டேன். அவர்கள் கிழக்கு பக்கமாக பஜ்ர் நேரம் உதயமாகிவிட்டதா? என்று பார்த்து விட்டு வேண்டாம் என்றார்கள். சுப்ஹு நேரம் உதயமானதும் (வாகனத்திலிருந்து) இறங்கி உலூச் செய்து விட்டு என்னிடம் திரும்ப வந்தார்கள். (பிரிந்து பிரிந்து நின்ற) நபித் தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து சேர்ந்து விட்டார்கள். அப்போது பிலால் (ரலி) இகாமத் சொல்ல விரும்பிய போது அவரிடம் நபி (ஸல்) அவர்கள் சகோதரர் சுதாயி தான் பாங்கு சொன்னார். யார் பாங்கு சொல்கின்றாரோ அவரே இகாமத்தும் சொல்வாராக என்று சொன்னதும் நான் இகாமத் சொன்னேன் என்று சியாத் பின் அல்ஹர்ஸ் சுதாயி அறிவிக்கின்றார்.

இந்த ஹதீஸ் திர்மிதீ, நஸயீ, இப்னு மாஜா ஆகிய நூல்களிலும் இடம் பெறுகின்றது.


لَمَّا كَانَ أَوَّلُ أَذَانِ الصُّبْحِ أَمَرَنِي يَعْنِي النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَذَّنْتُ، فَجَعَلْتُ أَقُولُ: أُقِيمُ يَا رَسُولَ اللَّهِ؟ فَجَعَلَ يَنْظُرُ إِلَى نَاحِيَةِ الْمَشْرِقِ إِلَى الْفَجْرِ، فَيَقُولُ: «لَا» حَتَّى إِذَا طَلَعَ الْفَجْرُ نَزَلَ فَبَرَزَ، ثُمَّ انْصَرَفَ إِلَيَّ وَقَدْ تَلَاحَقَ أَصْحَابُهُ – يَعْنِي فَتَوَضَّأَ – فَأَرَادَ بِلَالٌ أَنْ يُقِيمَ، فَقَالَ لَهُ نَبِيُّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ أَخَا صُدَاءٍ هُوَ أَذَّنَ وَمَنْ أَذَّنَ فَهُوَ يُقِيمُ»، قَالَ: فَأَقَمْتُ


Abu-Dawood-510

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

510. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் பாங்கின் வார்த்தைகள் இரண்டு இரண்டு தடவையாகவும், இகாமத் வார்த்தைகள் ஒரு தடவையாகவும் அமைந்து இருந்தன. ஆனால் கத் காமதிஸ் ஸலாஹ், கத் காமதிஸ் ஸலாஹ் என இரு தடவை (தொழுகைஅழைப்பாளர்) சொல்வார்.

இகாமத்தை செவியுற்றதும் நாங்கள் உளூச் செய்து பிறகு பள்ளிக்கு புறப்படுவோம் என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: முஸ்லிம் பின் மிஹ்ரான் (ரஹ்)


இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்:

அபூஜஅஃபர்-முஹம்மத் பின் இப்ராஹீம் பின் முஸ்லிம் அவர்களிடமிருந்து இந்த ஒரு ஹதீஸைத் தவிர வேறெதையும் நான் செவியுறவில்லை.


إِنَّمَا كَانَ الْأَذَانُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّتَيْنِ، مَرَّتَيْنِ وَالْإِقَامَةُ مَرَّةً، مَرَّةً غَيْرَ أَنَّهُ، يَقُولُ: قَدْ قَامَتِ الصَّلَاةُ، قَدْ قَامَتِ الصَّلَاةُ، فَإِذَا سَمِعْنَا الْإِقَامَةَ تَوَضَّأْنَا، ثُمَّ خَرَجْنَا إِلَى الصَّلَاةِ “، قَالَ شُعْبَةُ: لَمْ أَسْمَعْ مِنْ أَبِي جَعْفَرٍ غَيْرَ هَذَا الْحَدِيثِ


Abu-Dawood-509

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

509. ஹதீஸ் எண் : 508-ல் உள்ள ஹதீஸ் போன்றே இங்கு இடம் பெறுகின்றது.


إِلَّا الْإِقَامَةَ


Abu-Dawood-508

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 172

இகாமத் சொல்லுதல்.

508. அதா(னின் வார்த்தைகளை)னை இரண்டிரண்டு தடவைகளும் இகாமத் (தின் வார்த்தைகளை)தை ஒவ்வொரு தடவையும் சொல்ல வேண்டும் என பிலால் (ரலி)க்கு உத்தரவிடப்பட்டது என அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்.

1) அனஸ் ——–> அபூகிலாபா ——–> அய்யூப் ——–> உஹைப் ——–> மூஸா பின் இஸ்மாயீல்

2) அனஸ் ——–> அபூகிலாபா ——–> அய்யூப் ——–> சிமாக் பின் அதிய்யா ——–> ஹம்மாத் ——–> சுலைமான் பின் ஹர்ப், அப்துற் ரஹ்மான் அல்முபாரக் ஆகிய இருவர்.

ஹம்மாத் தனது அறிவிப்பில் கத்காமத்திஸ் ஸலாத் என்ற வார்த்தையை தவிர (ஒவ்வொன்றாக சொல்ல வேண்டும் என்று) கூடுதலாக அறிவிக்கின்றார்.


«أُمِرَ بِلَالٌ أَنْ يَشْفَعَ الْأَذَانَ وَيُوتِرَ الْإِقَامَةَ»، زَادَ حَمَّادٌ فِي حَدِيثِهِ: إِلَّا الْإِقَامَةَ


Abu-Dawood-507

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1 . பூதாவூத் இமாம் —> முஹம்மத் பின் முஸன்னா —>  தயாலிஸீ —> மஸ்வூதீ —> அம்ர் பின் முர்ரா —> இப்னு அபீலைலா —> முஆத் பின் ஜபல் (ரலி) 

2 . அபூதாவூத் இமாம் —> நஸ்ர் பின் முஹாஜிர் —> யஸீத் பின் ஹாரூன் —> மஸ்வூதீ —> அம்ர் பின் முர்ரா —> இப்னு அபூலைலா —> முஆத் பின் ஜபல் (ரலி) 


தொழுகை மூன்று மாற்றங்களை கொண்டிருந்தது. நோன்பும் மூன்று மாற்றங்களை கொண்டிருந்தது என்று நஸீர் தனது நீண்ட ஹதீஸை அறிவிக்கின்றார்.

முஹம்மது பின் அல்முஸன்னா மேற்கண்ட அந்த ஹதீஸிலிருந்து பைத்துல் முகத்தஸை நோக்கி நபித் தோழர்கள் தொழும் சம்பவத்தை அறிவிக்கும் போது,

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்து பதிமூன்று மாதங்கள் பைத்துல் முகத்தஸை நோக்கி தொழுதார்கள். அப்போது அல்லாஹ் (நபியே!) நாம் உம்முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம். எனவே நீ விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மை திடமாக திருப்பி விடுகின்றோம். ஆகவே, நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தை திருப்பிக்

أُحِيلَتِ الصَّلَاةُ ثَلَاثَةَ أَحْوَالٍ، وَأُحِيلَ الصِّيَامُ ثَلَاثَةَ أَحْوَالٍ – وَسَاقَ نَصْرٌ الْحَدِيثَ بِطُولِهِ وَاقْتَصَّ ابْنُ الْمُثَنَّى مِنْهُ قِصَّةَ صَلَاتِهِمْ نَحْوَ بَيْتِ الْمَقْدِسِ قَطْ – قَالَ: الْحَالُ الثَّالِثُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدِمَ الْمَدِينَةَ فَصَلَّى – يَعْنِي نَحْوَ بَيْتِ الْمَقْدِسِ – ثَلَاثَةَ عَشَرَ شَهْرًا، فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى هَذِهِ الْآيَةَ: {قَدْ نَرَى تَقَلُّبَ وَجْهِكَ فِي السَّمَاءِ فَلَنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضَاهَا فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ وَحَيْثُ مَا كُنْتُمْ فَوَلُّوا وُجُوهَكُمْ شَطْرَهُ} [البقرة: 144] فَوَجَّهَهُ اللَّهُ تَعَالَى إِلَى الْكَعْبَةِ – وَتَمَّ حَدِيثُهُ – وَسَمَّى نَصْرٌ صَاحِبَ الرُّؤْيَا، قَالَ: فَجَاءَ عَبْدُ اللَّهِ بْنُ زَيْدٍ، رَجُلٌ مِنَ الْأَنْصَارِ، وَقَالَ فِيهِ: فَاسْتَقْبَلَ الْقِبْلَةَ، قَالَ: اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، حَيَّ عَلَى الصَّلَاةِ، مَرَّتَيْنِ، حَيَّ عَلَى الْفَلَاحِ، مَرَّتَيْنِ، اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ، ثُمَّ أَمْهَلَ هُنَيَّةً، ثُمَّ قَامَ، فَقَالَ مِثْلَهَا، إِلَّا أَنَّهُ قَالَ: زَادَ بَعْدَ مَا قَالَ: حَيَّ عَلَى الْفَلَاحِ، قَدْ قَامَتِ الصَّلَاةُ، قَدْ قَامَتِ الصَّلَاةُ، قَالَ: فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَقِّنْهَا بِلَالًا» فَأَذَّنَ بِهَا بِلَالٌ. وَقَالَ فِي الصَّوْمِ: قَالَ: فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ ” يَصُومُ ثَلَاثَةَ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ، وَيَصُومُ يَوْمَ عَاشُورَاءَ، فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى: {كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ} [البقرة: 183] إِلَى قَوْلِهِ {طَعَامُ مِسْكِينٍ} [البقرة: 184] فَمَنْ شَاءَ أَنْ يَصُومَ صَامَ، وَمَنْ شَاءَ أَنْ يُفْطِرَ، وَيُطْعِمَ كُلَّ يَوْمٍ مِسْكِينًا، أَجْزَأَهُ ذَلِكَ، وَهَذَا حَوْلٌ، فَأَنْزَلَ اللَّهُ  تَعَالَى: {شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ} [البقرة: 185] إِلَى {أَيَّامٍ أُخَرَ} [البقرة: 184] فَثَبَتَ الصِّيَامُ عَلَى مَنْ شَهِدَ الشَّهْرَ وَعَلَى الْمُسَافِرِ أَنْ يَقْضِيَ، وَثَبَتَ الطَّعَامُ لِلشَّيْخِ الْكَبِيرِ وَالْعَجُوزِ اللَّذَيْنِ لَا يَسْتَطِيعَانِ الصَّوْمَ “، وَجَاءَ صِرْمَةُ وَقَدْ عَمِلَ يَوْمَهُ وَسَاقَ الْحَدِيثَ


Abu-Dawood-506

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

506. தொழுகையில் மூன்று மாற்றங்கள் ஏற்பட்டன என்று சொல்லி நமக்கு நம்முடைய நபித் தோழர்கள் அறிவித்தார்கள் என்று பின் வரும் ஹதீஸை இப்னு அபீலைலா அறிவிக்கலானார்.

முஸ்லிம்களின் தொழுகை ஒரே கட்டுக் கோப்பில் அமைய வேண்டும் என்று என் மனம் விரும்பியது. அதனால் தொழுகை நேரத்தை மக்களுக்கு அறிவிக்கும் ஆட்களை வீடுகளுக்கு அனுப்பலாம் என்று எண்ணியிருந்தேன். கோட்டைகள் மீது நின்று கொட்டடித்து தொழுகை நேரத்தை முஸ்லிம்களுக்கு அறிவிக்கும் ஆட்களை நியமிக்கலாம் என்றும் எண்ணியிருந்தேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர் வந்து, அல்லாஹ்வின் தூதரே! தொழுகையின் (அழைப்பைப் பற்றி) நீங்கள் கொண்டிருந்த கவலையை எண்ணிக் கொண்டே நான் (வீட்டிற்கு) திரும்பியதும் இரண்டு பச்சை ஆடைகள் அணிந்த தோற்றத்தில் ஒருவரைக் கண்டேன். அவர் பள்ளியில் நின்று கொண்டு அதான் சொன்னார். பிறகு கொஞ்ச நேரம் உட்கார்ந்து விட்டு, எழுந்து நின்று அதே போன்று சொன்னார். ஆனால் இதில் கத்காமத்திஸ் ஸலாத் என்று (கூடுதலாக) சொன்னார். மக்கள் குறை சொல்லமாட்டார்கள் என்றிருப்பின் நான் விழித்துக் கொண்டிருக்கும்

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَقَدْ أَعْجَبَنِي أَنْ تَكُونَ صَلَاةُ الْمُسْلِمِينَ – أَوْ قَالَ – الْمُؤْمِنِينَ، وَاحِدَةً، حَتَّى لَقَدْ هَمَمْتُ أَنْ أَبُثَّ رِجَالًا فِي الدُّورِ يُنَادُونَ النَّاسَ بِحِينِ الصَّلَاةِ، وَحَتَّى هَمَمْتُ أَنْ آمُرَ رِجَالًا يَقُومُونَ عَلَى الْآطَامِ يُنَادُونَ الْمُسْلِمِينَ بِحِينِ الصَّلَاةِ حَتَّى نَقَسُوا أَوْ كَادُوا أَنْ يَنْقُسُوا»، قَالَ: فَجَاءَ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي لَمَّا رَجَعْتُ لِمَا رَأَيْتُ مِنَ اهْتِمَامِكَ رَأَيْتُ رَجُلًا كَأَنَّ عَلَيْهِ ثَوْبَيْنِ أَخْضَرَيْنِ، فَقَامَ عَلَى الْمَسْجِدِ فَأَذَّنَ، ثُمَّ قَعَدَ قَعْدَةً، ثُمَّ قَامَ فَقَالَ مِثْلَهَا، إِلَّا أَنَّهُ يَقُولُ: قَدْ قَامَتِ الصَّلَاةُ وَلَوْلَا أَنْ يَقُولَ النَّاسُ – قَالَ ابْنُ الْمُثَنَّى: أَنْ تَقُولُوا – لَقُلْتُ إِنِّي كُنْتُ يَقْظَانَ غَيْرَ نَائِمٍ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: – وَقَالَ ابْنُ الْمُثَنَّى – «لَقَدْ أَرَاكَ اللَّهُ عَزَّ وَجَلَّ خَيْرًا»، – وَلَمْ يَقُلْ عَمْرٌو: «لَقَدْ أَرَاكَ اللَّهُ خَيْرًا» – فَمُر بِلَالًا فَلْيُؤَذِّنْ، قَالَ: فَقَالَ عُمَرُ: أَمَا إِنِّي قَدْ رَأَيْتُ مِثْلَ الَّذِي رَأَى، وَلَكِنِّي لَمَّا سُبِقْتُ اسْتَحْيَيْتُ، قَالَ: وَحَدَّثَنَا أَصْحَابُنَا، قَالَ: وَكَانَ الرَّجُلُ إِذَا جَاءَ يَسْأَلُ فَيُخْبَرُ بِمَا سُبِقَ مِنْ صَلَاتِهِ وَإِنَّهُمْ قَامُوا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ بَيْنِ قَائِمٍ وَرَاكِعٍ وَقَاعِدٍ وَمُصَلٍّ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. قَالَ ابْنُ الْمُثَنَّى: قَالَ عَمْرٌو: وَحَدَّثَنِي بِهَا حُصَيْنٌ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى حَتَّى جَاءَ مُعَاذٌ، قَالَ شُعْبَةُ: وَقَدْ سَمِعْتُهَا مِنْ حُصَيْنٍ، فَقَالَ: لَا أَرَاهُ عَلَى حَالٍ إِلَى قَوْلِهِ كَذَلِكَ فَافْعَلُوا، قَالَ أَبُو دَاوُدَ: ” ثُمَّ رَجَعْتُ إِلَى حَدِيثِ عَمْرِو بْنِ مَرْزُوقٍ، قَالَ: فَجَاءَ مُعَاذٌ، فَأَشَارُوا إِلَيْهِ، قَالَ شُعْبَةُ: وَهَذِهِ سَمِعْتُهَا مِن حُصَيْنٍ، قَالَ: فَقَالَ مُعَاذٌ: لَا أَرَاهُ عَلَى حَالٍ إِلَّا كُنْتُ عَلَيْهَا، قَالَ: فَقَالَ: إِنَّ مُعَاذًا، قَدْ سَنَّ لَكُمْ سُنَّةً، كَذَلِكَ فَافْعَلُوا ” قَالَ: وَحَدَّثَنَا أَصْحَابُنَا، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا قَدِمَ الْمَدِينَةَ ” أَمَرَهُمْ بِصِيَامِ ثَلَاثَةِ أَيَّامٍ، ثُمَّ أُنْزِلَ رَمَضَانُ، وَكَانُوا قَوْمًا لَمْ يَتَعَوَّدُوا الصِّيَامَ، وَكَانَ الصِّيَامُ عَلَيْهِمْ شَدِيدًا فَكَانَ مَنْ لَمْ يَصُمْ أَطْعَمَ مِسْكِينًا، فَنَزَلَتْ هَذِهِ الْآيَةُ: {فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ} [البقرة: 185] فَكَانَتِ الرُّخْصَةُ لِلْمَرِيضِ، وَالْمُسَافِرِ فَأُمِرُوا بِالصِّيَامِ ” قَالَ: وَحَدَّثَنَا أَصْحَابُنَا، قَالَ: وَكَانَ الرَّجُلُ إِذَا أَفْطَرَ فَنَامَ قَبْلَ أَنْ يَأْكُلَ لَمْ يَأْكُلْ حَتَّى يُصْبِحَ، قَالَ: ” فَجَاءَ عُمَرُ بْنُ الْخَطَّابِ، فَأَرَادَ امْرَأَتَهُ، فَقَالَتْ: إِنِّي قَدْ نِمْتُ فَظَنَّ أَنَّهَا تَعْتَلُّ فَأَتَاهَا، فَجَاءَ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ فَأَرَادَ الطَّعَامَ فَقَالُوا: حَتَّى نُسَخِّنَ


Next Page » « Previous Page