Author: Farook

Abu-Dawood-490

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

490. அலி (ரலி) பயணித்துக் கொண்டிருக்கும் போது பாபிலோன் நகரத்தைக் கடந்து சென்றார்கள். முஅத்தின் அவர் முன்னிலையில் பாங்கு சொல்ல வந்தார். அந்நகரத்தைவிட்டு வெளியானதும் முஅத்தினுக்கு உத்தரவிட்டு தொழுவித்தார்கள். தொழுகையை முடித்து விட்டு என்னுடைய தோழர் நபி (ஸல்) அவர்கள் மக்பராவில் (அடக்கவிடங்களில்) நான் தொழுவதை தடுத்தார்கள். பாபிலோன் நகரத்திலும் நான் தொழுவதை தடுத்தார்கள். ஏனெனில் அது சபிக்கப் பட்ட நகரமாகும் என்று அலி (ரலி) கூறினார்கள் என அபூசாலிஹ் அல்கலாரி அறிவிக்கிறார்கள்.


أَنَّ عَلِيًّا رَضِيَ اللَّهُ عَنْهُ، مَرَّ بِبَابِلَ وَهُوَ يَسِيرُ فَجَاءَهُ الْمُؤَذِّنُ يُؤَذِّنُ بِصَلَاةِ الْعَصْرِ، فَلَمَّا بَرَزَ مِنْهَا أَمَرَ الْمُؤَذِّنَ، فَأَقَامَ الصَّلَاةَ، فَلَمَّا فَرَغَ قَالَ: «إِنَّ حَبِيبِي صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَانِي أَنْ أُصَلِّيَ فِي الْمَقْبَرَةِ، وَنَهَانِي أَنْ أُصَلِّيَ فِي أَرْضِ بَابِلَ فَإِنَّهَا مَلْعُونَةٌ»


Abu-Dawood-489

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 167

தொழ அனுமதியில்லாத இடங்கள்.

489. பூமி (அனைத்தும்) தூய்மையானதாகவும், தொழுமிடமாகவும் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூதர் (ரலி) அறிவிக்கின்றார்.

(குறிப்பு : இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம், நஸயீ, இப்னு மாஜாவில் பதிவாகியுள்ளது.)


«جُعِلَتْ لِي الْأَرْضُ طَهُورًا وَمَسْجِدًا»


Abu-Dawood-488

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

488. யூதர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய தோழர்களுடன் உட்கார்ந்திருந்தார்கள். தங்களுடைய சமுதாயத்தில் விபச்சாரம் செய்து விட்ட ஓர் ஆண் பெண் தொடர்பாக அபுல் காஸிமே! (தீர்ப்பு வழங்குங்கள்) என்று கேட்டனர் என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.

(குறிப்பு : இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் முஸைனா இனத்தைச் சார்ந்த ஒருவர் அறிவிக்கின்றார் என்று வருகின்றது. அவர் யார்? என அறியப்படாதவர் இவ்வாறு ஹாபிழ் முன்திரி குறிப்பிடுகின்றார்கள்.)


الْيَهُودُ أَتَوُا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ جَالِسٌ فِي الْمَسْجِدِ فِي أَصْحَابِهِ فَقَالُوا: يَا أَبَا الْقَاسِمِ فِي رَجُلٍ وَامْرَأَةٍ زَنَيَا مِنْهُمْ


Abu-Dawood-487

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

487. சஃத் பின் பக்ர் கிளையார் லமாம் பின் சஃலபாவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தனர். அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து பள்ளியின் வாசலில் தனது ஒட்டகையை படுக்க வைத்து பிறகு அதை கட்டி போட்டார். பிறகு பள்ளிக்குள் சென்றார் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கின்றார் என மேலுள்ள ஹதீஸை போன்று இதன் அறிவிப்பாளர் அறிவிக்கின்றார். உங்களில் அப்துல் முத்தலிபின் பேரன் யார்? என்று வந்தவர் கேட்டதும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நான் தான் அப்துல் முத்தலிபின் பேரன் என்று பதில் சொன்னார்கள் என்று இந்த ஹதீஸை இதன் அறிவிப்பாளர் தொடர்ந்து அறிவிக்கின்றார்.


بَعَثَ بَنُو سَعْدِ بْنِ بَكْرٍ ضِمَامَ بْنَ ثَعْلَبَةَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَدِمَ عَلَيْهِ فَأَنَاخَ بَعِيرَهُ عَلَى بَابِ الْمَسْجِدِ، ثُمَّ عَقَلَهُ، ثُمَّ دَخَلَ الْمَسْجِدَ، فَذَكَرَ نَحْوَهُ، قَالَ: فَقَالَ: أَيُّكُمْ ابْنُ عَبْدِ الْمُطَّلِبِ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنَا ابْنُ عَبْدِ الْمُطَّلِبِ»، قَالَ: يَا ابْنَ عَبْدِ الْمُطَّلِبِ وَسَاقَ الْحَدِيثَ


Abu-Dawood-486

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 166

இணை வைப்பவர் பள்ளிக்குள் பிரவேசிப்பது.

486. ஒருவர் ஒட்டகையில் (பள்ளிக்கருகே) வந்து அதை பள்ளியில் படுக்க வைத்து, கட்டி போட்டார். பிறகு, உங்களில் முஹம்மது யார்? என்று வினவினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தோழர்களுக்கு மத்தியில் சாய்ந்து கொண்டு அமர்ந்திருந்தார்கள். இதோ சாய்ந்து கொண்டிருக்கும் இந்த வெண்மையானவர் தான் என்று நாங்கள் பதில் சொன்னோம். அதற்கு அம்மனிதர் அப்துல் முத்தலிபின் பேரனே! என்றார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள் உங்களுக்கு பதில் சொல்ல காத்திருக்கின்றேன் என்று சொன்னார்கள். அம்மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், முஹம்மதே! உங்களிடம் (விளக்கம்) கேட்கின்றேன் என்று அனஸ் (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸை தொடர்ந்து இதன் அறிவிப்பாளர் தொடர்ந்து அறிவிக்கின்றார்.


دَخَلَ رَجُلٌ عَلَى جَمَلٍ فَأَنَاخَهُ فِي الْمَسْجِدِ، ثُمَّ عَقَلَهُ، ثُمَّ قَالَ: أَيُّكُمْ مُحَمَّدٌ؟ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُتَّكِئٌ بَيْنَ ظَهْرَانَيْهِمْ، فَقُلْنَا لَهُ: هَذَا الْأَبْيَضُ الْمُتَّكِئُ، فَقَالَ لَهُ الرَّجُلُ: يَا ابْنَ عَبْدِ الْمُطَّلِبِ فَقَالَ لَهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قَدْ أَجَبْتُكَ» فَقَالَ لَهُ الرَّجُلُ: يَا مُحَمَّدُ إِنِّي سَائِلُكَ وَسَاقَ الْحَدِيثَ


Abu-Dawood-484

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

484. டமாஸ்கஸ் பள்ளியில் வாஸிலா பின் அஸ்கஃ அவர்கள் துப்பிய பிறகு தேய்த்து விடக் கண்டேன். அவரிடத்தில் நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள் என கேட்கப் பட்டதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இது போல் செய்யக் கண்டிருக்கின்றேன் என்று பதில் சொன்னார்கள் என அபூசயீத் அறிவிக்கின்றார்.

(குறிப்பு : இந்த தொடரில் பர்ஜ் பின் புலாலா இடம் பெறுகின்றார். அவர் பலவீமானவர் என்று ஹாபிழ் முன்திரி கூறுகின்றார்.)


رَأَيْتُ وَاثِلَةَ بْنَ الْأَسْقَعِ، ” فِي مَسْجِدِ دِمَشْقَ بَصَقَ عَلَى الْبُورِيِّ، ثُمَّ مَسَحَهُ بِرِجْلِهِ ، فَقِيلَ لَهُ: لِمَ فَعَلْتَ هَذَا؟ قَالَ: لِأَنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْعَلُهُ


Abu-Dawood-483

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

483. பிறகு தனது செருப்பால் தேய்த்து விட்டார்கள் என்று கூடுதலாக மேலுள்ள ஹதீஸின் கருத்தே இங்கு இடம் பெறுகின்றது. 

குறிப்பு : இது போன்ற ஹதீஸ் முஸ்லிமிலும் பதிவாகியுள்ளது.)


بِمَعْنَاهُ زَادَ ثُمَّ دَلَكَهُ بِنَعْلِهِ


Abu-Dawood-482

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

482. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது நான் அவர்களிடம் வந்தேன். அவர்கள் தனது இடது பாதத்திற்கு கீழ் துப்பினார்கள் என்று தனது தந்தை வழியாக முதர்ரிப் அறிவிக்கின்றார்.


«أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يُصَلِّي فَبَزَقَ تَحْتَ قَدَمِهِ الْيُسْرَى»


Abu-Dawood-481

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

481. ஒருவர் மக்களுக்கு தொழுவித்தார். அவர் அப்போது கிப்லா திசையில் துப்பினார். இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கவனித்துக் கொண்டிருந்தார்கள். அவர் தொழுகையை முடித்ததும் இனி இவர் உங்களுக்கு தொழுவிக்க வேண்டாம் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதற்கு பிறகு அவர் தொழுவிக்க விரும்பிய போது, அவரை மக்கள் தொழுவிக்க வேண்டாம் என தடுத்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதையும் அவரிடம் தெரிவித்தனர். அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முறையிட்ட போது ஆம் (நான் அவ்வாறு சொன்னேன்) என்று அவர்கள் சொன்னார்கள் என அபூஸஹ்லா அஸ்ஸாயிப் பின் கல்லாத் (ரலி) அறிவிக்கின்றார்.

ஆம் என்ற இடத்தில் நீ அல்லாஹ்வையும் அவனது தூதரையும் வேதனைப் படுத்திவிட்டாய் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என நினைக்கின்றேன் என்று இதன் அறிவிப்பாளர் தெரிவிக்கின்றார்.


أَنَّ رَجُلًا أَمَّ قَوْمًا، فَبَصَقَ فِي الْقِبْلَةِ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْظُرُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ فَرَغَ: «لَا يُصَلِّي لَكُمْ»، فَأَرَادَ بَعْدَ ذَلِكَ أَنْ يُصَلِّيَ لَهُمْ فَمَنَعُوهُ وَأَخْبَرُوهُ بِقَوْلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرَ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «نَعَمْ»، وَحَسِبْتُ أَنَّهُ قَالَ: «إِنَّكَ آذَيْتَ اللَّهَ وَرَسُولَهُ»


Abu-Dawood-480

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

480. நபி (ஸல்) அவர்கள் பேரீத்தமரக் குச்சிகளை விரும்புபவர்களாக இருந்தனர். அக்குச்சிகளில் ஏதாவது ஒன்று அவர்களது கையில் இருந்து கொண்டேயிருக்கும். அந்நிலையில் பள்ளியில் நுழைந்ததும் பள்ளியின் கிப்லா திசையில் காரலை கண்டு அந்தக் குச்சியால் தேய்த்து விட்டார்கள். பிறகு கோபமாக மக்களை முன்னோக்கி உங்களில் ஒருவர் தனது முகத்தில் துப்பவிரும்புவாரா? நிச்சயமாக உங்களில் ஒருவர் கிப்லாவை முன்னோக்கும் போது அவர் மகத்துவமும் கண்ணியமும் நிறைந்த தன்னுடைய இறைவனைத் தான் முன்னோக்குகின்றார். மலக்கு அவரது வலது பக்கத்தில் இருக்கின்றார். அவர் தனது வலது பக்கத்திலும் தன்னுடைய கிப்லா திசையிலும் அவர் துப்ப வேண்டாம். அவர் தனது இடது பக்கத்தில் அல்லது தன்னுடைய இடது காலுக்கு கீழே துப்புவாராக! அவர் அவசரமாக துப்பியாக வேண்டுமெனில், இவ்வாறு துப்பிவிடுவாராக! என்று சொன்னார்கள் என்று அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.

இவ்வாறு துப்பிவிடுவாராக! என்பதற்கு ஒருவர் தனது ஆடையில் துப்பி அதன் ஒரு பகுதியை இன்னொரு பகுதியுடன் தேய்த்து விடுவதாகும் என இப்னு அஜ்லான் விளக்கமளிக்கின்றார்.


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُحِبُّ الْعَرَاجِينَ وَلَا يَزَالُ فِي يَدِهِ مِنْهَا، فَدَخَلَ الْمَسْجِدَ فَرَأَى نُخَامَةً فِي قِبْلَةِ الْمَسْجِدِ فَحَكَّهَا، ثُمَّ أَقْبَلَ عَلَى النَّاسِ مُغْضَبًا، فَقَالَ: «أَيَسُرُّ أَحَدَكُمْ أَنْ يُبْصَقَ فِي وَجْهِهِ؟ إِنَّ أَحَدَكُمْ إِذَا اسْتَقْبَلَ الْقِبْلَةَ فَإِنَّمَا يَسْتَقْبِلُ رَبَّهُ عَزَّ وَجَلَّ، وَالْمَلَكُ عَنْ يَمِينِهِ، فَلَا يَتْفُلْ عَنْ يَمِينِهِ، وَلَا فِي قِبْلَتِهِ، وَلْيَبْصُقْ عَنْ يَسَارِهِ، أَوْ تَحْتَ قَدَمِهِ، فَإِنْ عَجِلَ بِهِ أَمْرٌ فَلْيَقُلْ هَكَذَا» وَوَصَفَ لَنَا ابْنُ عَجْلَانَ ذَلِكَ أَنْ يَتْفُلَ فِي ثَوْبِهِ، ثُمَّ يَرُدَّ بَعْضَهُ عَلَى بَعْضٍ


Next Page » « Previous Page