Author: Farook

Abu-Dawood-479

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

479. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு தடவை பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் போது, பள்ளியின் கிப்லா திசையில் சளியை பார்த்து மக்கள் மீது கோபம் கொண்டார்கள். பிறகு அதை தேய்த்து விட்டார்கள். மேலும் நிச்சயமாக உயர்ந்த அல்லாஹ் உங்களுடைய ஒருவரின் முகத்திற்கு முன்னால் இருக்கின்றான். எனவே அவர் தொழும் போது, தனக்கு முன்னால் துப்ப வேண்டாம் என்று சொன்னார்கள் என்று இப்னு உமர் (ரலி) அறிவிக்கின்றார்கள்.

அறிவிப்பாளர் தொடர் : 

இப்னு உமர் ——–> நாபிஉ ———> அய்யூப்

ஹம்மாத் ——-> சுலைமான் பின் தாவூத் ———> அபூதாவூத்

குங்குமத்தைக் கொண்டு வரச் செய்து அதை துடைத்தார்கள் என்று அய்யூப் அறிவித்ததாக நான் கருதுகிறேன் என்று ஹம்மாத் இந்த ஹதீஸின் இடையில் தெரிவிக்கின்றார்.

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார் :

நாபிஉ வழியாக அய்யூப் மூலம் இஸ்மாயில், அப்துல் வாரிஸ் ஆகியோரும், நாபிஉ வழியாக மாலிக் உபைத்துல்லா, மூஸா பின் உக்பா ஆகியோரும் இந்த ஹதீஸை அறிவிக்கும்

بَيْنَمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ يَوْمًا إِذْ رَأَى نُخَامَةً فِي قِبْلَةِ الْمَسْجِدِ فَتَغَيَّظَ عَلَى النَّاسِ، ثُمَّ حَكَّهَا، قَالَ: وَأَحْسَبُهُ قَالَ: فَدَعَا بِزَعْفَرَانٍ فَلَطَّخَهُ بِهِ، وَقَالَ: «إِنَّ اللَّهَ قِبَلَ وَجْهِ أَحَدِكُمْ إِذَا صَلَّى، فَلَا يَبْزُقْ بَيْنَ يَدَيْهِ»


Abu-Dawood-478

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

478. ஒருவர் தொழுகைக்கு நிற்கும் போது அல்லது உங்களில் ஒருவர் தொழும்போது தன்னுடைய முன்பக்கத்திலோ அல்லது வலது பக்கத்திலோ துப்ப வேண்டாம். எனினும் இடது பக்கம் காலியாக இருக்கும் போது இடது பக்கமாகவோ அல்லது தனது இடது பாதத்திற்கு கீழ் துப்பி அதை தேய்த்து விடுவாராக! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என தாரிக் பின் அல் மஹாரிபி அறிவிக்கின்றார்.

குறிப்பு : இந்த ஹதீஸ் திர்மிதீ, நஸயீ, இப்னு மாஜா ஆகிய நூல்களில் பதிவாகியுள்ளது.)


«إِذَا قَامَ الرَّجُلُ إِلَى الصَّلَاةِ، أَوْ إِذَا صَلَّى أَحَدُكُمْ، فَلَا يَبْزُقْ أَمَامَهُ، وَلَا عَنْ يَمِينِهِ، وَلَكِنْ عَنْ تِلْقَاءِ يَسَارِهِ، إِنْ كَانَ فَارِغًا أَوْ تَحْتَ قَدَمِهِ الْيُسْرَى ثُمَّ لِيَقُلْ بِهِ»


Abu-Dawood-477

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

477. ஒருவர் பள்ளியில் நுழைந்து எச்சில் அல்லது காரலை துப்பிவிட்டால் மண்ணை தோண்டி புதைத்து விடுவாராக! அவ்வாறு செய்யவில்லை எனில், தனது ஆடையில் துப்பி அந்த ஆடையுடன் வெளியேறி விடுவாராக! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்.


«مَنْ دَخَلَ هَذَا الْمَسْجِدَ فَبَزَقَ فِيهِ، أَوْ تَنَخَّمَ فَلْيَحْفِرْ فَلْيَدْفِنْهُ، فَإِنْ لَمْ يَفْعَلْ فَلْيَبْزُقْ فِي ثَوْبِهِ ثُمَّ لِيَخْرُجْ بِهِ»


Abu-Dawood-476

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

476. காரலை பள்ளியில் துப்பிவிடுவது என்று மேலுள்ள ஹதீஸ் போலவே இதன் அறிவிப்பாளர்கள் அறிவிக்கின்றனர்.


«النُّخَاعَةُ فِي الْمَسْجِدِ» فَذَكَرَ مِثْلَهُ


Abu-Dawood-475

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

475. பள்ளியில் துப்புவது பாவமாகும். அதை மண்ணில் மூடிவிடுவது அதற்குரிய பரிகாரமாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ் மாலிக் (ரலி) அறிவிக்கின்றார்.

குறிப்பு : இந்த ஹதீஸ் புகாரி, திர்மிதீ, நஸயீ ஆகிய நூல்களில் பதிவாகியுள்ளது.)


«الْبُزَاقُ فِي الْمَسْجِدِ خَطِيئَةٌ وَكَفَّارَتُهَا دَفْنُهَا»


Abu-Dawood-474

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 165

பள்ளிக்குள் துப்புவது கூடாது.

474. பள்ளியில் துப்புவது பாவமாகும். துப்பிய அந்த எச்சியை நீ மண்ணில் மறைப்பது அதற்குரிய பரிகாரமாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவிக்கின்றார்.

(குறிப்பு : இந்த ஹதீஸ் முஸ்லிமில் பதிவாகியுள்ளது.)


«التَّفْلُ فِي الْمَسْجِدِ خَطِيئَةٌ وَكَفَّارَتُهُ أَنْ تُوَارِيَهُ»


Abu-Dawood-473

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 164

காணாமல் போன பொருளை அடையாளம் கூறி தேடுதல் கூடாது.

473. காணாமல் போன பொருளை தேடி பள்ளியில் சப்தமிடுவோரின் சப்தத்தை செவியுறும் ஒருவர் (அவரை நோக்கி) உனக்கு அல்லாஹ் அந்த பொருளை தரமாட்டானாக! என்று சொல்வாராக! ஏனெனில், நிச்சயமாக பள்ளிவாசல் இந்த நோக்கத்திற்காக கட்டப்படவில்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன் என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்.

(குறிப்பு : இந்த ஹதீஸ் முஸ்லிம், இப்னு மாஜா ஆகிய நூல்களில் பதிவாகியுள்ளது.)


مَنْ سَمِعَ رَجُلًا يَنْشُدُ ضَالَّةً فِي الْمَسْجِدِ، فَلْيَقُلْ: لَا أَدَّاهَا اللَّهُ إِلَيْكَ فَإِنَّ الْمَسَاجِدَ لَمْ تُبْنَ لِهَذَا


Abu-Dawood-472

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

472. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

ஒருவர் எந்த நோக்கத்திற்காக பள்ளிவாசலுக்கு வந்தாலும் அதற்குரிய பங்கு அவருக்கு கிடைக்கும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«مَنْ أَتَى الْمَسْجِدَ لِشَيْءٍ فَهُوَ حَظُّهُ»


Abu-Dawood-471

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

471. அடுத்த தொழுகையை எதிர்பார்த்தவராகத்தான் தொழுத இடத்திலேயே அமர்ந்திருக்கும் அடியார் தொழுகையிலேயே திரும்பும் வரை அல்லது ஹதஸ் ஆகும் வரை யாஅல்லாஹ்! இவரை மன்னித்து விடுவாயாக! யாஅல்லாஹ்! அவருக்கு நீ அருள் செய்வாயாக! என்று மலக்குகள் பிரார்த்தி:த்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.

எது ஹதஸை ஏற்படுத்துகின்றது என்று வினவப்பட்டதற்கு மெதுவாகவோ அல்லது சப்தமாகவோ காற்று பிரிதல் என்று அபூஹுரைரா(ரலி)) பதில் சொன்னார்.

குறிப்பு : இந்த ஹதீஸ் முஸ்லிமிலும் பதிவாகியுள்ளது.


لَا يَزَالُ الْعَبْدُ فِي صَلَاةٍ مَا كَانَ فِي مُصَلَّاهُ يَنْتَظِرُ الصَّلَاةَ، تَقُولُ الْمَلَائِكَةُ: اللَّهُمَّ اغْفِرْ لَهُ، اللَّهُمَّ ارْحَمْهُ، حَتَّى يَنْصَرِفَ، أَوْ يُحْدِثَ “، فَقِيلَ مَا يُحْدِثُ؟ قَالَ: يَفْسُو، أَوْ يَضْرِطُ


Abu-Dawood-470

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

470. உங்களில் ஒருவர் அடுத்த தொழுகைக்காக காத்திருக்கும் போது தொழுகையிலேயே ஈடுபட்டவர் போலாவர். (ஏனெனில்) தொழுகையைத் தவிர வேறெதுவும் அவர் வீட்டுக்கு திரும்புவதை தடுக்கவில்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இவ்வாறு அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.

குறிப்பு : இந்த ஹதீஸ் முஸ்லிமிலும் பதிவாகியுள்ளது.


«لَا يَزَالُ أَحَدُكُمْ فِي صَلَاةٍ مَا كَانَتِ الصَّلَاةُ تَحْبِسُهُ، لَا يَمْنَعُهُ أَنْ يَنْقَلِبَ إِلَى أَهْلِهِ إِلَّا الصَّلَاةُ»


Next Page » « Previous Page