Author: Farook

Abu-Dawood-469

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 163

பள்ளியில் அமர்ந்திருப்பதின் சிறப்பு.

469. ஹதஸ் ஆகாமல் அல்லது இருந்த இடத்திலிருந்து எழாமல் தான் தொழுத இடத்திலேயே அமர்ந்திருக்கும் வரை உங்களில் ஒருவர் மீது மலக்குகள் துஆ செய்து கொண்டே இருக்கின்றார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்.

குறிப்பு : இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம், நஸயீ ஆகிய நூல்களில் பதிவாகியுள்ளது.)


الْمَلَائِكَةُ تُصَلِّي عَلَى أَحَدِكُمْ مَا دَامَ فِي مُصَلَّاهُ الَّذِي صَلَّى فِيهِ، مَا لَمْ يُحْدِثْ، أَوْ يَقُمْ: اللَّهُمَّ اغْفِرْ لَهُ اللَّهُمَّ ارْحَمْهُ


Abu-Dawood-468

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

468. மேலுள்ள ஹதீஸ்தான் இங்கு இடம் பெறுகின்றது. அவர் விரும்பினால் தொழுத பிறகு உட்கார்ந்து கொள்ளட்டும் அல்லது தனது தேவைக்காக சென்று கொள்ளட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் அதிகமான செய்தி இதில் இடம் பெறுகின்றது.


«ثُمَّ لِيَقْعُدْ بَعْدُ إِنْ شَاءَ أَوْ لِيَذْهَبْ لِحَاجَتِهِ»


Abu-Dawood-467

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 162

பள்ளியில் நுழைந்ததும் இரு ரக்அத்கள் தொழுதல்.

467. உங்களில் ஒருவர் பள்ளிக்கு வந்ததும் உட்கார்வதற்கு முன்பாக இரு ரக்அத்கள் தொழுவாராக! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூகதாதா (ரலி) அறிவிக்கின்றார்.

குறிப்பு : இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா ஆகிய நூல்களில் பதிவாகியுள்ளது.)


«إِذَا جَاءَ أَحَدُكُمُ الْمَسْجِدَ فَلْيُصَلِّ سَجْدَتَيْنِ مِنْ قَبْلِ أَنْ يَجْلِسَ»


Abu-Dawood-462

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 160

ஆண்களுடன் பெண்கள் பள்ளிகளில் ஒன்று சேராதிருத்தல்.

462. இந்த வாசலை பெண்களுக்காக ஒதுக்கிவிட்டால் (நல்லது தானே) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

அந்த வாசல் வழியாக மரணமாகும் வரை இப்னு உமர் (ரலி) பள்ளிக்குள் நுழையவே இல்லை என நாபிஃ (ரஹ்) கூறினார்.

அபூதாவூத் கூறுகிறார்:

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல் வாரிஸ் என்பவரைத் தவிர மற்றவர்கள் உமர் (ரலி) கூறினார் என்று அறிவிக்கின்றனர். இதுதான் மிகச் சரியானதாகும்.


«لَوْ تَرَكْنَا هَذَا الْبَابَ لِلنِّسَاءِ»، قَالَ نَافِعٌ: فَلَمْ يَدْخُلْ مِنْهُ ابْنُ عُمَرَ، حَتَّى مَاتَ،

وَقَالَ غَيْرُ عَبْدِ الْوَارِثِ: قَالَ عُمَرُ: وَهُوَ أَصَحُّ


Abu-Dawood-460

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

460. சரனைக் கற்கள் பள்ளியிலிருந்து வெளியே எடுத்துச் செல்பவரிடம் (தங்களை வெளியே எடுத்துச் செல்ல வேண்டாம் என) முறையிடுகின்றன என அபூஹுரைரா (ரலி) கூறுகின்றார்கள். அபூபத்ர் என்ற இத்தொடரில் உள்ள ஓர் அறிவிப்பாளர் தனக்கு முந்திய அறிவிப்பாளர் இதை நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்று மர்ஃபூ வாக அறிவித்தார் என்றே எனக்கு நினைவு உள்ளது.


«إِنَّ الْحَصَاةَ لَتُنَاشِدُ الَّذِي يُخْرِجُهَا مِنَ الْمَسْجِدِ»


Abu-Dawood-459

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

459. ஒருவர் பள்ளியிலிருந்து சரளைக் கல் எடுத்துச் செல்வாரானால் அவரிடத்தில் அது (என்னை வெளியே எடுத்துச் செல்லாதே என்று) முறையிடுகின்றது என்று கருத்துச் சொல்லப்படுகின்றது.

இவ்வாறு அபூசாலிஹ் கூறுகின்றார்.


إِنَّ الرَّجُلَ إِذَا أَخْرَجَ الْحَصَى مِنَ الْمَسْجِدِ يُنَاشِدُهُ


Abu-Dawood-458

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 158

பள்ளிவாசலில் சரளக் கற்களை, கொண்டுவருதல்.

458. பள்ளிவாசலில் கிடக்கும் சரளைக்கற்களைப் பற்றி இப்னு உமர் (ரலி) யிடம் கேட்டேன். அதற்கு அவர் ஓர் இரவு மழை பெய்து, தரை நல்லா நனைந்து விட்டது. ஒருவர் தனது ஆடையில் கற்களை கொண்டு வந்து தனக்கு கீழ் பரப்பி வைத்திருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்ததும் இது அழகாக உள்ளதே என்று சொன்னார்கள் என அபுல் வலீத் அறிவி


سَأَلْتُ ابْنَ عُمَرَ، عَنِ الْحَصَى الَّذِي فِي الْمَسْجِدِ؟ فَقَالَ: مُطِرْنَا ذَاتَ لَيْلَةٍ فَأَصْبَحَتِ الْأَرْضُ مُبْتَلَّةً، فَجَعَلَ الرَّجُلُ يَأْتِي بِالْحَصَى فِي ثَوْبِهِ، فَيَبْسُطُهُ تَحْتَهُ، فَلَمَّا قَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الصَّلَاةَ، قَالَ: «مَا أَحْسَنَ هَذَا»


Abu-Dawood-455

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம் : 156

மக்கள் வாழும் பகுதிகளில் பள்ளிகளை அமைத்தல்.

455. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கள் வசிக்கும் பகுதிகளில் பள்ளிகளை கட்ட வேண்டும் என்றும் பள்ளிகள் துப்புரவு செய்யப்பட்டு நறுமணம் நிறைந்ததாக வைத்திருக்க வேண்டும் என்றும் கூறினார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்.

குறிப்பு : இந்த ஹதீஸ் திர்மிதீ, இப்னுமாஜா ஆகிய நூல்களில் இடம் பெறுகின்றது. திர்மிதீயில் முர்ஸலாக இடம் பெறுகின்றது.)


«أَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِبِنَاءِ الْمَسَاجِدِ فِي الدُّورِ وَأَنْ تُنَظَّفَ وَتُطَيَّبَ»


Abu-Dawood-454

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

454. பள்ளியின் இந்த இடம் (முன்பு) நஜ்ஜார் கிளையாருக்குரிய தோட்டமாக இருந்தது. அதில் பயிர் செய்யும் பகுதியும் பேரீத்த மரங்களும் இணை வைப்பவர்களுக்குரிய அடக்கத்தலங்களும் இருந்தன. அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் (நஜ்ஜார் கிளையாரிடம்) இதை எனக்கு விலைக்கு தாருங்கள் என்று கேட்டபோது, இதற்குண்டான கிரயத்தை பெற மாட்டோம் என்று அவர்கள் சொல்லி விட்டனர். எனவே பேரீத்த மரங்கள் வெட்டப்பட்டன. பயிர் செய்யுமிடம் சமப்படுத்தப் பட்டது. இணைவைப்பவர்கள் அடக்கவிடங்கள் தோண்ட பட்டன என்று அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் இதன் அறிவிப்பாளர் (மேலுள்ள ஹதீஸை போன்று) அறிவிக்கின்றார். 

அன்சாரிகளுக்கு உதவி செய் என்பதற்கு பதிலாக அன்சாரிகளை மன்னித்து விடு! என்று அறிவிப்பாளர் அறிவிக்கின்றார்.

இது போன்ற ஹதீஸை அப்துல் வாரிஸ் அறிவிக்கின்றார் என மூஸா தெரிவிக்கின்றார். ஆனால் அப்துல் வாரிஸ் (பயிர்கள் என்பதற்கு பதிலாக) பாழடைந்த பொருட்கள் என்று அறிவிக்கின்றார். இந்த வார்த்தை கொண்டுள்ள ஹதீஸைத்தான், தான் ஹம்மாதுக்கு அறிவித்ததாக அப்துல் வாரிஸ் தெரிவிக்கின்றார்.


كَانَ مَوْضِعُ الْمَسْجِدِ حَائِطًا لِبَنِي النَّجَّارِ فِيهِ حَرْثٌ وَنَخْلٌ، وَقُبُورُ الْمُشْرِكِينَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «ثَامِنُونِي بِهِ» فَقَالُوا: لَا نَبْغِي بِهِ ثَمَنًا، فَقَطَعَ النَّخْلَ وَسَوَّى الْحَرْثَ وَنَبَشَ قُبُورَ الْمُشْرِكِينَ، وَسَاقَ الْحَدِيثَ، وَقَالَ: «فَاغْفِرْ» مَكَانَ «فَانْصُرْ»، قَالَ مُوسَى: وَحَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، بِنَحْوِهِ، وَكَانَ عَبْدُ الْوَارِثِ، يَقُولُ: خِرَبٌ، وَزَعَمَ عَبْدُ الْوَارِثِ، أَنَّهُ أَفَادَ حَمَّادًا هَذَا الْحَدِيثَ


Abu-Dawood-453

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

453. அனஸ் (ரலி) அறிவிப்பதாவது :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்த போது பனூ அம்ர் பின் அவ்ப் என்றழைக்கப்படும் கூட்டத்தார்கள் வாழும் மதீனாவின் மேட்டுப் பகுதியில் இறங்கி அவர்களிடம் பதினான்கு இரவுகள் தங்கினார்கள். பிறகு நஜ்ஜார் கிளையினரை அழைத்து வர ஆள் அனுப்பினார்கள். நஜ்ஜார் கிளையினர் தோள்களில் வாள்களை தொங்கப் போட்டுக் கொண்டு வந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுக்குப் பின்னால் அபூபக்ர் (ரலி)யும் வாகனத்தில் அமர்ந்திருக்கும் காட்சியை இப்போது நான் பார்ப்பது போல் இருக்கின்றது என்று அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்.

நஜ்ஜார் கிளைத் தலைவர்கள் நபி (ஸல்) அவர்களை சூழ்ந்து விட்டதும் தனது வாகனத்தை விட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு தொழுகை நேரம் ஆனதும் அந்த இடத்திலேயே தொழுபவர்களாகவும், ஆட்டுத் தொழுவங்களில் தொழுபவர்களாகவும் இருந்தனர். அப்போது தான் அவர்கள் பள்ளி கட்டுமாறு உத்தரவிட்டு உடனே (நஜ்ஜார் கிளையாரை நோக்கி) நஜ்ஜார் கிளையாரே! உங்களுடைய இந்த தோட்டத்தை எனக்கு விலைக்கு தாருங்கள் என்று நபி (ஸல்) கேட்டனர். அதற்கு அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக! அதனுடைய விலையை (கூலியை) அல்லாஹ்விடத்திலேயே

قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ فَنَزَلَ فِي عُلُوِّ الْمَدِينَةِ فِي حَيٍّ يُقَالُ: لَهُمْ بَنُو عَمْرِو بْنِ عَوْفٍ فَأَقَامَ فِيهِمْ أَرْبَعَ عَشْرَةَ لَيْلَةً، ثُمَّ أَرْسَلَ إِلَى بَنِي النَّجَّارِ فَجَاءُوا مُتَقَلِّدِينَ سُيُوفَهُمْ، فَقَالَ أَنَسٌ: فَكَأَنِّي أَنْظُرُ إِلَى رَسُولِ اللَّهِ صلّى الله عليه وسلم عَلَى رَاحِلَتِهِ، وَأَبُو بَكْرٍ رِدْفُهُ، وَمَلَأُ بَنِي النَّجَّارِ حَوْلَهُ حَتَّى أَلْقَى بِفِنَاءِ أَبِي أَيُّوبَ، وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي، حَيْثُ أَدْرَكَتْهُ الصَّلَاةُ، وَيُصَلِّي فِي مَرَابِضِ الْغَنَمِ، وَإِنَّهُ أَمَرَ بِبِنَاءِ الْمَسْجِدِ، فَأَرْسَلَ إِلَى بَنِي النَّجَّارِ فَقَالَ: «يَا بَنِي النَّجَّارِ، ثَامِنُونِي بِحَائِطِكُمْ هَذَا» فَقَالُوا: وَاللَّهِ، لَا نَطْلُبُ ثَمَنَهُ إِلَّا إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ، قَالَ أَنَسٌ: وَكَانَ فِيهِ مَا أَقُولُ لَكُمْ، كَانَتْ فِيهِ قُبُورُ الْمُشْرِكِينَ، وَكَانَتْ فِيهِ خِرَبٌ، وَكَانَ فِيهِ نَخْلٌ، فَأَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقُبُورِ الْمُشْرِكِينَ، فَنُبِشَتْ وَبِالْخِرَبِ فَسُوِّيَتْ وَبِالنَّخْلِ فَقُطِعَ فَصَفُّوا النَّخْلَ قِبْلَةَ الْمَسْجِدِ، وَجَعَلُوا عِضَادَتَيْهِ حِجَارَةً، وَجَعَلُوا يَنْقُلُونَ الصَّخْرَ، وَهُمْ يَرْتَجِزُونَ وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَهُمْ، وَهُوَ يَقُولُ: «اللَّهُمَّ لَا خَيْرَ إِلَّا خَيْرُ الْآخِرَهْ فَانْصُرِ الْأَنْصَارَ وَالْمُهَاجِرَهْ»


Next Page » « Previous Page