Author: Farook

Abu-Dawood-452

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

452. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் நபி (ஸல்) அவர்களின் பள்ளிவாசல் சுவர்கள் பேரீத்த மரக்கட்டைகளால் ஆனவை. அதன் முகடு பேரீத்த மர கீற்றுகளால் வேயப்பட்டிருந்தது. பிறகு அவை அபூபக்கர் (ரலி) ஆட்சி காலத்தில் இற்றுப் போய்விட்டன. அதை அபூபக்கர் (ரலி) பேரீத்தமரக் கட்டைகள், பேரீத்த மரக் கீற்றுகள் ஆகியவற்றை கொண்டு கட்டினார். மீண்டும் உஸ்மான் (ரலி) ஆட்சிக் காலத்தில் அவை இற்றுப் போனதும் அவற்றிற்கு பதிலாக செங்கற்களால் கட்டினார்கள். அவை இன்று வரை அப்படியே உள்ளது என்று இப்னு உமர் (ரலி) அறிவிக்கின்றார்.


«أَنَّ مَسْجِدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَتْ سَوَارِيهِ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ جُذُوعِ النَّخْلِ أَعْلَاهُ مُظَلَّلٌ بِجَرِيدِ النَّخْلِ، ثُمَّ إِنَّهَا نَخِرَتْ فِي خِلَافَةِ أَبِي بَكْرٍ فَبَنَاهَا بِجُذُوعِ النَّخْلِ وَبِجَرِيدِ النَّخْلِ، ثُمَّ إِنَّهَا نَخِرَتْ فِي خِلَافَةِ عُثْمَانَ فَبَنَاهَا بِالْآجُرِّ فَلَمْ تَزَلْ ثَابِتَةً حَتَّى الْآنَ»


Abu-Dawood-451

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

451. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் பள்ளி வாசல் செங்கற்களாலும் பேரீத்தம் கீற்றுகளாலும் கட்டப் பட்டிருந்தது என்று அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அறிவிக்கின்றார். பள்ளி வாசல்களின் தூண்கள் பேரீத்தம் மரக் கட்டைகளால் ஆனவை. இதில் அபூபக்ர் எதையும் அதிகப்படுத்தவில்லை. அதில் உமர் (ரலி) மாற்றம் செய்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இருந்த அதே அமைப்பிலேயே அதைக் கட்டி அந்த தூண்களை அப்படியே மீண்டும் வைத்து விட்டார்கள். உஸ்மான் (ரலி) அதை மாற்றியமைக்கும் போது அதில் அதிகப்படியான வேலைப்பாடுகளை மேற்கொண்டார்கள். வண்ணக் கற்கள், சுண்ணாம்பு ஆகியவற்றை கொண்டு அதன் சுவர்களை அமைத்தார்கள். அதன் தூண்களை வண்ணக் கற்களைக் கொண்டும், அதன் முகட்டை தேக்கினாலும் அமைத்தார்கள் என முஜாஹித் தெரிவிக்கின்றார்.

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார் :

அல் இஸ்ஸா என்று ஹதீஸில் வரும் இந்த வார்த்தைக்கு அல் ஜுஸ்ஸீ என்று பொருளாகும்.


أَنَّ الْمَسْجِدَ كَانَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَبْنِيًّا بِاللَّبِنِ وَالْجَرِيدِ – قَالَ مُجَاهِدٌ: وَعُمُدُهُ مِنْ خَشَبِ النَّخْلِ – فَلَمْ يَزِدْ فِيهِ أَبُو بَكْرٍ شَيْئًا، وَزَادَ فِيهِ عُمَرُ وَبَنَاهُ عَلَى بِنَائِهِ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِاللَّبِنِ وَالْجَرِيدِ وَأَعَادَ عُمُدَهُ – قَالَ مُجَاهِدٌ: عُمُدَهُ خَشَبًا – وَغَيَّرَهُ عُثْمَانُ فَزَادَ فِيهِ زِيَادَةً كَثِيرَةً، وَبَنَى جِدَارَهُ بِالْحِجَارَةِ الْمَنْقُوشَةِ وَالْقَصَّةِ، وَجَعَلَ عُمُدَهُ مِنْ حِجَارَةٍ مَنْقُوشَةٍ وَسَقْفَهُ بِالسَّاجِ – قَالَ مُجَاهِدٌ: وَسَقَّفَهُ السَّاجَ –


Abu-Dawood-450

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

450. (அறியாமைக் காலத்தில் நாங்கள் வணங்கி வந்த எங்கள்) சிலைகள் இருந்த இடத்திலேயே (அவைகளை அகற்றிவிட்டு) தாயிஃப் பள்ளிவாசலை அமைத்துக் கொள்ளுமாறு எனக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர்: உஸ்மான் பின் அபுல்ஆஸ் (ரலி)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَمَرَهُ أَنْ يَجْعَلَ مَسْجِدَ الطَّائِفِ حَيْثُ كَانَ طَوَاغِيتُهُمْ»


Abu-Dawood-448

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 155

பள்ளி வாயில்கள் கட்டுவது.

448. பள்ளிவாசல்களை உயர்த்திக் கட்டுமாறு நான் ஏவப்படவில்லை என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கின்றார். (இவ்வாறு கட்ட அனுமதிக்கப்பட்டால்) யூத கிறித்தவர்களைப் போல் நிச்சயமாக நீங்களும் பள்ளிகளை அலங்கரித்து விடுவீர்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) விளக்கம் சொன்னார்கள்.


«مَا أُمِرْتُ بِتَشْيِيدِ الْمَسَاجِدِ»،

قَالَ ابْنُ عَبَّاسٍ: لَتُزَخْرِفُنَّهَا كَمَا زَخْرَفَتِ الْيَهُودُ وَالنَّصَارَى


Abu-Dawood-447

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

447. ஹுதைபிய்யா உடன் படிக்கை கட்டத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் வந்து கொண்டிருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஓய்வெடுக்க எண்ணி) நமக்காக இன்று இரவு காவல் காப்பவர் யார்? என்று கேட்டார்கள். பிலால் நான் என்று பதில் சொன்னார். எல்லோரும் சூரியன் உதயமாகும் வரை தூங்கிவிட்டனர். நபி (ஸல்) அவர்கள் கண் விழித்ததும், நீங்கள் வழக்கமாக செய்வது போல் செய்து (தொழுது) கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். அவ்வாறு நாங்கள் செய்தோம். இவ்வாறே தூங்கியவர்களுக்கும் மறந்தவர்களுக்கும் இதையே நடைமுறையாக்கிக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவிக்கின்றார். 

(குறிப்பு : இந்த ஹதீஸ் நஸயீயிலும் பதிவாகியுள்ளது.)


أَقْبَلْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زَمَنَ الْحُدَيْبِيَةِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ يَكْلَؤُنَا» فَقَالَ بِلَالٌ: أَنَا، فَنَامُوا حَتَّى طَلَعَتِ الشَّمْسُ فَاسْتَيْقَظَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «افْعَلُوا كَمَا كُنْتُمْ تَفْعَلُونَ»، قَالَ: فَفَعَلْنَا، قَالَ: «فَكَذَلِكَ فَافْعَلُوا لِمَنْ نَامَ أَوْ نَسِيَ»


Abu-Dawood-446

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

446. அவசரப் படாமல் பிலால் அதான் சொன்னார் என நஜ்ஜாஷியின் சகோதரர் மகன் தூமிக் பார் அறிவித்தார் என இங்கு இடம் பெறுகின்றது.


فَأَذَّنَ وَهُوَ غَيْرُ عَجِلٍ


Abu-Dawood-445

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

445. நபி (ஸல்) அவர்களுக்கு பணிவிடை செய்து கொண்டிருந்த அபீசீனிய நாட்டைச் சார்ந்த தூ மிக்யிர் (ரலி) இது தொடர்பாக அறிவிக்கும் போது, நபி (ஸல்) அவர்கள் உலூச் செய்தனர். அவர் உலூ செய்த தண்ணீர் பட்டு தரை சரியாக நனையவில்லை. பிறகு பிலாலுக்கு அவர்கள் உத்தரவிட்டதும் அவர் அதான் சொன்னார். பிறகு நபி (ஸல்) அவர்கள் தொழ நின்று அவசரப்படாமல் இரண்டு ரக்அத்துக்கள் தொழுதார்கள். பிறகு பிலாலை நோக்கி, தொழுகைக்கு இகாமத் சொல்க! என்றார்கள். பிறகு கடமையான தொழுகையை அவசரப்படாமல் தொழுதார்கள் என்று குறிப்பிடுகின்றார்.

அபீசீனியாவைச் சார்ந்தவரான தூமிக்பார் யசீத் பின் சுலைஹ் வழியாக என்று இப்றாஹீம் பின் அல்ஹசன் அறிவிப்பாளர்களின் பெயரை குறிப்பிடுகின்றார்.

(குறிப்பு : சயீத் பின் சுலைஹ் என்பதற்கு பதிலாக) யசித் பின் சாலிஹ் என உபைத் குறிப்பிடுகின்றார்.)


فَتَوَضَّأَ – يَعْنِي النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – وُضُوءًا لَمْ يَلْثَ مِنْهُ التُّرَابُ، ثُمَّ أَمَرَ بِلَالًا فَأَذَّنَ، ثُمَّ قَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَكَعَ رَكْعَتَيْنِ غَيْرَ عَجِلٍ، ثُمَّ قَالَ لِبِلَالٍ: «أَقِمِ الصَّلَاةَ»، ثُمَّ صَلَّى الْفَرْضَ وَهُوَ غَيْرُ عَجِلٍ


Abu-Dawood-444

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

444. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது பயணங்களில் ஒரு பயணத்தின் போது நாங்கள் அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்கள் சூரியன் உதிக்கும் வரை தூங்கிவிட்டார். நபி (ஸல்) அவர்கள் கண் விழித்ததும் இந்த இடத்தை விட்டும் நகர்ந்து விடுங்கள் என்று சொன்னார்கள். பிறகு பிலாலுக்கு அவர்கள் உத்தரவிட்டதும் அவர் அதான் சொன்னார். பிறகு நபித் தோழர்கள் உலூச் செய்து பஜ்ருடைய சுன்னத்தை தொழுதார்கள். பிறகு பிலாலுக்கு உத்தரவிட்டதும் தொழுகைக்கு அவர் இகாமத் சொன்னார். நபி (ஸல்) அவர்கள் சுப்ஹு தொழுகையை தொழுவித்தனர் என அம்ர் பின் உமய்யா அள்ளம்ரீ (ரலி) அறிவித்தார்.


كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ أَسْفَارِهِ فَنَامَ، عَنِ الصُّبْحِ حَتَّى طَلَعَتِ الشَّمْسُ فَاسْتَيْقَظَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «تَنَحَّوْا عَنْ هَذَا الْمَكَانِ»، قَالَ: «ثُمَّ أَمَر بِلَالًا فَأَذَّنَ، ثُمَّ تَوَضَّئُوا وَصَلَّوْا رَكْعَتَيِ الْفَجْرِ، ثُمَّ أَمَرَ بِلَالًا فَأَقَامَ الصَّلَاةَ فَصَلَّى بِهِمْ صَلَاةَ الصُّبْحِ»


Abu-Dawood-443

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

443. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தனது பயணத்தில் இருந்து கொண்டிருக்கும் போது பஜ்ர் தொழாமல் தூங்கி விட்டார்கள். அனைவரும் வெயில் பட்டு தான் கண் விழித்தார்கள். சூரியன் உயர்கின்றவரை கொஞ்சம் தள்ளி சென்றார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் முஅத்தினுக்கு உத்தரவிட்டார்கள். அவர் அதான் சொன்னதும் பஜ்ருக்கு முன்புள்ள இரண்டு ரக்அத்துக்களை தொழுதார்கள். அவர் இகாமத் சொன்னதும் பஜ்ர் தொழுகையை தொழுதார்கள் என்று இம்ரான் பின் ஹுசைன் (ரலி) அறிவிக்கின்றார்.


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ فِي مَسِيرٍ لَهُ فَنَامُوا عَنْ صَلَاةِ الْفَجْرِ، فَاسْتَيْقَظُوا بِحَرِّ الشَّمْسِ فَارْتَفَعُوا قَلِيلًا حَتَّى اسْتَقَلَّتِ الشَّمْسُ، ثُمَّ أَمَرَ مُؤَذِّنًا فَأَذَّنَ فَصَلَّى رَكْعَتَيْنِ قَبْلَ الْفَجْرِ، ثُمَّ أَقَامَ، ثُمَّ صَلَّى الْفَجْرَ»


Abu-Dawood-442

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

442. யார் தொழுகையை மறந்து விடுகின்றாரோ அது நினைவுக்கு வந்ததும் தொழுது விடுவாராக! இதை தவிர தொழுகையை மறந்ததற்கு வேறு எந்த பரிகாரமும் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவிக்கின்றார்.

(குறிப்பு : இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம், நஸயீ, இப்னு மாஜா ஆகிய நூல்களில் பதிவாகியுள்ளது.)


«مَنْ نَسِيَ صَلَاةً فَلْيُصَلِّهَا إِذَا ذَكَرَهَا، لَا كَفَّارَةَ لَهَا إِلَّا ذَلِكَ»


Next Page » « Previous Page