Author: Abdul Hakkim

Tirmidhi-1767

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

புத்தாடை அணியும்போது சொல்ல வேண்டியவை.

1767. அபூஸயீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு புதிய ஆடையை அணிந்தால் —அது தலைப்பாகையாகவோ, சட்டையாகவோ அல்லது மேலாடையாகவோ இருக்கலாம்— அதன் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லிவிட்டு, பிறகு பின்வருமாறு கூறுவார்கள்:

‘அல்லாஹும்ம லகல் ஹம்து அன்த கஸவ்தனீஹி, அஸ்அலுக்க கைரஹு வ கைர மா ஸுனிஅ லஹு, வ அவூது பிக மின் ஷர்ரிஹி வ ஷர்ரி மா ஸுனிஅ லஹு’

(பொருள்: அல்லாஹ்வே! இந்த ஆடையை எனக்கு அணிவித்த உனக்கே புகழ் அனைத்தும்! இந்த ஆடையின் நன்மையும் இது எதற்காக தயாரிக்கப்பட்டதோ அதன் நன்மையையும் உன்னிடம் நான் கேட்கிறேன். இதன் தீமையையும் இது எதற்காகத் தயாரிக்கப்பட்டதோ அதன் தீமையையும் விட்டு உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான செய்திகள் உமர் (ரலி), இப்னு உமர் (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன.

ஹிஷாம் பின் யூனுஸ் அல்கூஃபி அவர்கள், காஸிம் பின் மாலிக் அல்முஸனீ —> அல்ஜுரைரீ என்ற அறிவிப்பாளர்தொடரில் இதே போன்று எங்களுக்கு அறிவித்தார்.

இது ‘ஹஸன்’ எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும்.


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا اسْتَجَدَّ ثَوْبًا سَمَّاهُ بِاسْمِهِ، عِمَامَةً، أَوْ قَمِيصًا، أَوْ رِدَاءً، ثُمَّ يَقُولُ: «اللَّهُمَّ لَكَ الحَمْدُ أَنْتَ كَسَوْتَنِيهِ، أَسْأَلُكَ خَيْرَهُ وَخَيْرَ مَا صُنِعَ لَهُ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهِ وَشَرِّ مَا صُنِعَ لَهُ»


Abu-Dawood-4141

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4141.

…நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் ஆடை அணியும் போதும் உளூச் செய்யும் போதும் வலது புறத்திலிருந்தே ஆரம்பம் செய்யுங்கள்.


«إِذَا لَبِسْتُمْ، وَإِذَا تَوَضَّأْتُمْ، فَابْدَءُوا بِأَيَامِنِكُمْ»


Tirmidhi-1766

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1766.

…நபி (ஸல்) அவர்கள் சட்டை அணிந்தால் வலது புறத்திலிருந்தே ஆரம்பம் செய்வார்கள்.


«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا لَبِسَ قَمِيصًا بَدَأَ بِمَيَامِنِهِ»


Abu-Dawood-4018

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4018.

…ஒரு ஆண் மற்றொரு ஆணுடைய மறை உறுப்பைப் பார்க்க வேண்டாம்; ஒரு பெண் மற்றொரு பெண்ணுடைய மறை உறுப்பைப் பார்க்க வேண்டாம். ஒரு ஆண், மற்றொரு ஆணுடன் ஒரே ஆடைக்குள் படுக்க வேண்டாம்; ஒரு பெண் மற்றொரு பெண்ணோடு ஒரே ஆடைக்குள் படுக்க வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஸயீத் அல் குத்ரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


«لَا يَنْظُرُ الرَّجُلُ إِلَى عُرْيَةِ الرَّجُلِ، وَلَا الْمَرْأَةُ إِلَى عُرْيَةِ الْمَرْأَةِ، وَلَا يُفْضِي الرَّجُلُ إِلَى الرَّجُلِ فِي ثَوْبٍ وَاحِدٍ، وَلَا تُفْضِي الْمَرْأَةُ إِلَى الْمَرْأَةِ فِي ثَوْبٍ»


Tirmidhi-2793

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2793.

…ஒரு ஆண் மற்றொரு ஆணுடைய மறை உறுப்பைப் பார்க்க வேண்டாம்; ஒரு பெண் மற்றொரு பெண்ணுடைய மறை உறுப்பைப் பார்க்க வேண்டாம். ஒரு ஆண், மற்றொரு ஆணுடன் ஒரே ஆடைக்குள் படுக்க வேண்டாம்; ஒரு பெண் மற்றொரு பெண்ணோடு ஒரே ஆடைக்குள் படுக்க வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஸயீத் அல் குத்ரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


«لَا يَنْظُرُ الرَّجُلُ إِلَى عَوْرَةِ الرَّجُلِ، وَلَا تَنْظُرُ المَرْأَةُ إِلَى عَوْرَةِ المَرْأَةِ، وَلَا يُفْضِي الرَّجُلُ إِلَى الرَّجُلِ فِي الثَّوْبِ الوَاحِدِ، وَلَا تُفْضِي المَرْأَةُ إِلَى المَرْأَةِ فِي الثَّوْبِ الوَاحِدِ»


Abu-Dawood-4066

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4066.

அம்ரு பின் ஷுஐப் தன் பாட்டனார் மூலம் அறிவிக்கிறார்:

நாங்கள் நபி (ஸல்) அவர்களோடு உயரமான இடத்திலிருந்து இறங்கினோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என் மீது மிருதுவான ஆடையில் கடுமையாக குங்குமப்பூ சாயமிடப்பட்டிருப்பதைக் கண்டு, “இது என்ன? மிருதுவான ஆடையில் இவ்வளவு காவி நிறத்தால் சாயமிடப்பட்டு இருக்கிறதே?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் வெறுப்பதை நான் அறிந்து என்னுடைய வீட்டிற்கு வந்தேன். அங்கு அடுப்பு மூட்டிக் கொண்டிருந்தார்கள். அந்த அடுப்பில் தூக்கி எறிந்து விட்டு மறுநாள் காலையில் நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அந்த சாயமிடப்பட்ட ஆடையை என்ன செய்தாய்?” என்று கேட்டார்கள். நான் விஷயத்தைக் கூறினேன் அதற்கு நபியவர்கள், “அதை உன் குடும்பத்தாருக்கு அணிவிக்கக் கொடுத்திருக்க கூடாதா? பெண்கள் அணிவது தவறில்லையே” என்றார்கள்.


هَبَطْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ ثَنِيَّةٍ، فَالْتَفَتَ إِلَيَّ وَعَلَيَّ رَيْطَةٌ مُضَرَّجَةٌ بِالْعُصْفُرِ، فَقَالَ: «مَا هَذِهِ الرَّيْطَةُ عَلَيْكَ؟» فَعَرَفْتُ مَا كَرِهَ، فَأَتَيْتُ أَهْلِي وَهُمْ يَسْجُرُونَ تَنُّورًا لَهُمْ، فَقَذَفْتُهَا فِيهِ، ثُمَّ أَتَيْتُهُ مِنَ الْغَدِ، فَقَالَ: «يَا عَبْدَ اللَّهِ، مَا فَعَلَتِ الرَّيْطَةُ؟» فَأَخْبَرْتُهُ، فَقَالَ: «أَلَا كَسَوْتَهَا بَعْضَ أَهْلِكَ، فَإِنَّهُ لَا بَأْسَ بِهِ لِلنِّسَاءِ»


Nasaayi-5266

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5266. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

சிவப்பு நிற ஆடை அணிவதையும், தங்கம் மோதிரம் அணிவதையும், ருகூவில் குர்ஆன் ஓதுவதை விட்டும் நான் தடுக்கப்பட்டேன்.


«نُهِيتُ عَنِ الثَّوْبِ الْأَحْمَرِ، وَخَاتَمِ الذَّهَبِ، وَأَنْ أَقْرَأَ وَأَنَا رَاكِعٌ»


Musannaf-Abdur-Razzaq-21050

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

21050.


مِنَ السُّنَّةِ أَنْ يُوَقَّرَ أَرْبَعَةٌ: الْعَالِمُ، وَذُو الشَّيْبَةِ، وَالسُّلْطَانُ، وَالْوَالِدُ، قَالَ: وَيُقَالُ: إِنَّ مِنَ الْجَفَاءِ أَنْ يَدْعُوَ الرَّجُلُ وَالِدَهُ بِاسْمِهِ.


Shuabul-Iman-10482

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

10482.


إِنَّ مِنْ تَعْظِيمِ جَلَالِ اللهِ عَزَّ وَجَلَّ إِكْرَامَ ذِي الشَّيْبَةِ فِي الْإِسْلَامِ، وَإِنَّ مِنْ تَعْظِيمِ جَلَالِ اللهِ إِكْرَامَ الْإِمَامِ الْمُقْسِطِ


Shuabul-Iman-2433

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2433.


إِنَّ مِنْ إِكْرَامِ جَلَالِ اللهِ إِكْرَامُ ذِي الشَّيْبَةِ الْمُسْلِمِ، وَالْإِمَامِ الْعَادِلِ وَحَامِلِ الْقُرْآنِ، لَا يَغْلُوا فِيهِ وَلَا يَجْفُوا عَنْهُ


Next Page » « Previous Page