Author: Abdul Hakkim
Tirmidhi-63
பாடம்:
பெண் உளூச் செய்து மீதம் வைத்த தண்ணீரை பயன்படுத்துவது வெறுப்புக்குரியது.
63. பெண் உளூச் செய்து மீதம் வைத்த தண்ணீரை (பயன்படுத்துவதை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள்.
அறிவிப்பவர்: பனூ ஃகிஃபார் கிளையைச் சேர்ந்த ஒரு மனிதர்.
«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ فَضْلِ طَهُورِ المَرْأَةِ».
Tirmidhi-62
பாடம்:
ஆணும், பெண்ணும் ஒரே பாத்திரத்தில் உளூச் செய்தல்.
62. மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நானும் நபி (ஸல்) அவர்களும் பெருந்துடக்கினால் ஒரே பாத்திரத்தில் குளிப்போம்.
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
…
«كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ إِنَاءٍ وَاحِدٍ مِنَ الْجَنَابَةِ»
Tirmidhi-61
பாடம்:
நபி (ஸல்) அவர்கள் ஒரே உளூவில் பல(நேரத்)தொழுகைகளை தொழுதது குறித்து வந்துள்ளவை.
61. நபி (ஸல்) அவர்கள் ஆரம்பத்தில் ஒவ்வொரு தொழுகைக்கும் உளூச் செய்பவர்களாக இருந்தார்கள். மக்கா வெற்றியின் போது ஒரே உளூவில் ஐந்து நேரத்தொழுகைகளை தொழுதார்கள். தனது காலுறைகளுக்கு மஸஹ் செய்து கொண்டார்கள். அப்போது அவர்களை நோக்கி உமர் (ரலி) அவர்கள், நீங்கள் இது வரை செய்திராத ஒன்றை இன்று செய்தீர்களே (ஏன்) என்று கேட்க, “நான் வேண்டுமென்று தான் செய்தேன்” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: புரைதா பின் ஹுஸைப் (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
…
«كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ لِكُلِّ صَلَاةٍ، فَلَمَّا كَانَ عَامُ الفَتْحِ صَلَّى الصَّلَوَاتِ كُلَّهَا بِوُضُوءٍ وَاحِدٍ وَمَسَحَ عَلَى خُفَّيْهِ»، فَقَالَ عُمَرُ: إِنَّكَ فَعَلْتَ شَيْئًا لَمْ تَكُنْ فَعَلْتَهُ، قَالَ: «عَمْدًا فَعَلْتُهُ».
Nasaayi-73
பாடம்:
ஒருவருக்கு உளூச் செய்ய போதுமான தண்ணீரின் அளவு.
73. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு முத்து அளவுத் தண்ணீரில் அங்கத் தூய்மை (உளூ) செய்வார்கள்; ஐந்து முத்து அளவுத் தண்ணீரில் குளிப்பார்கள்.
كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يَتَوَضَّأُ بِمَكُّوكٍ وَيَغْتَسِلُ بِخَمْسِ مَكَاكِيَّ»
Nasaayi-72
பாடம்:
குளிப்புக் கடமையானவரின் சிறப்பு.
72. நான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரே பாத்திரத்தில் (சேர்ந்து) குளிப்பேன் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
أَنَّهَا كَانَتْ تَغْتَسِلُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْإِنَاءِ الْوَاحِدِ
Nasaayi-71
71. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் ஆண்களும் பெண்களும் சேர்ந்து (ஓரிடத்தில்) உளூச் செய்வார்கள்.
كَانَ الرِّجَالُ وَالنِّسَاءُ يَتَوَضَّئُونَ فِي زَمَانِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَمِيعًا
Nasaayi-70
பாடம்:
மாதவிடாய்ப் பெண் வாய் வைத்து, மீதம்வைத்த தண்ணீர்.
70. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
மாதவிடாய் எற்பட்டிருந்த நான் இறைச்சியுள்ள எலும்புத் துண்டைக் கடித்துவிட்டு அதை நபி (ஸல்) அவர்களிடம் கொடுப்பேன். நான் வாய் வைத்த இடத்தில் அவர்கள் தமது வாயை வை(த்துப் புசி)ப்பார்கள்.
எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது நான் (ஏதேனும் பானத்தைப்) பருகிவிட்டு அதை நபி (ஸல்) அவர்களிடம் கொடுப்பேன். அப்போது அவர்கள் நான் வாய் வைத்த இடத்தில் தமது வாயை வைத்து அருந்துவார்கள்.
كُنْتُ أَتَعَرَّقُ الْعَرْقَ «فَيَضَعُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاهُ حَيْثُ وَضَعْتُ وَأَنَا حَائِضٌ، وَكُنْتُ أَشْرَبُ مِنَ الْإِنَاءِ فَيَضَعُ فَاهُ حَيْثُ وَضَعْتُ وَأَنَا حَائِضٌ»
Nasaayi-69
பாடம்:
கழுதை வாய் வைத்து மீதமுள்ள தண்ணீர்.
69. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் பொது அறிவிப்புச் செய்பவர் எங்களிடம் வந்து, “அல்லாஹ்வும் அவனுடைய தூதரும், உங்களை நாட்டுக்கழுதைகளின் இறைச்சியை உண்ண வேண்டாமெனத் தடை செய்கிறார்கள். ஏனெனில், அவை அசுத்தமானவையாகும்” என்று பொதுஅறிப்பு செய்தார்.
أَتَانَا مُنَادِي رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «إِنَّ اللَّهَ وَرَسُولَهُ يَنْهَاكُمْ عَنْ لُحُومِ الْحُمُرِ؛ فَإِنَّهَا رِجْسٌ»
Nasaayi-67
பாடம்:
நாய் வாய் வைத்த பாத்திரத்தை மண்ணிட்டுக் கழுவுதல்.
67. அப்துல்லாஹ் பின் அல்முகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஆரம்பத்தில்) நாய்களைக் கொல்லுமாறு உத்தரவிட்டார்கள். பின்னர் வேட்டை நாய்களுக்கும் கால்நடைகளின் பாதுகாப்பிற்காக வைத்திருக்கும் நாய்களுக்கும் அனுமதியளித்தார்கள். மேலும் பாத்திரத்தில் நாய் வாய் வைத்துவிட்டால் ஏழு தடவை (தண்ணீரால்) கழுவிக் கொள்ளுங்கள். எட்டாவது தடவை மண்ணிட்டுக் கழுவுங்கள் என்று கூறினார்கள்.
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ بِقَتْلِ الْكِلَابِ، وَرَخَّصَ فِي كَلْبِ الصَّيْدِ وَالْغَنَمِ وَقَالَ: إِذَا وَلَغَ الْكَلْبُ فِي الْإِنَاءِ فَاغْسِلُوهُ سَبْعَ مَرَّاتٍ، وَعَفِّرُوهُ الثَّامِنَةَ بِالتُّرَابِ
சமீப விமர்சனங்கள்