Author: Abdul Hakkim

Musannaf-Ibn-Abi-Shaybah-26281

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

26281. அரபியல்லாதோரின் புரியாத மொழிகளைக் கற்றுக் கொள்ளாதீர்கள். மேலும் இணைவைப்போரின் பண்டிகைகளின் போது அவர்களின் வழிபாட்டுத் தலத்துக்குள் செல்லாதீர்கள். ஏனெனில் (அல்லாஹ்வின்) கோபம் அவர்கள் மீது இறங்குகிறது என்று அதாஉ பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.


«لَا تَعَلَّمُوا رَطَانَةَ الْأَعَاجِمِ، وَلَا تَدْخُلُوا عَلَيْهِمْ كَنَائِسَهُمْ، فَإِنَّ السَّخَطَ يَنْزِلُ عَلَيْهِمْ»


Kubra-Bayhaqi-18865

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலவீனமான செய்தி

18865. முஹம்மத் பின் ஸிரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அலீ (ரலி) அவர்களிடம் நைரூஸ் (எனும் பாரசீகப் புத்தாண்டு தினத்தின்) பரிசுகள் கொண்டுவரப்பட்டன. அதைக் கண்ட அலீ (ரலி) அவர்கள், “இது என்ன?” என்று கேட்டார். அதற்கு மக்கள், “இது நைரூஸ் தினம்” என்று பதிலளித்தனர். அதைக் கேட்ட அலீ (ரலி) அவர்கள், “அப்படியானால் ஒவ்வொரு நாளும் நைரூஸாக இருக்கட்டும்” என்று கூறினார்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூஉஸாமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நைரூஸ் என்று சொல்வதை அலீ (ரலி) அவர்கள் வெறுத்ததால் தான் இவ்வாறு கூறினார்.

பைஹகீ இமாம் கூறுகிறார்:

ஒரு குறிப்பிட்ட நாளை (நைரூஸ் என்று) சிறப்பித்தலுக்கு இஸ்லாம் அனுமதிக்காததால், அதைக் குறிப்பிடுவதில் அலீ (ரலி) அவர்கள் வெறுப்புத் தெரிவித்தார்கள் என்று தெரிகிறது.


أُتِيَ عَلِيٌّ رَضِيَ اللهُ عَنْهُ بِهَدِيَّةِ النَّيْرُوزِ فَقَالَ: مَا هَذِهِ؟ قَالُوا: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ هَذَا يَوْمُ النَّيْرُوزِ , قَالَ: فَاصْنَعُوا كُلَّ يَوْمٍ فَيْرُوزَ.

قَالَ أَبُو أُسَامَةَ: كَرِهَ أَنْ يَقُولَ نَيْرُوزَ.


Shuabul-Iman-8940

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

8940.


اجْتَنِبُوا أَعْدَاءَ اللهِ الْيَهُودَ , وَالنَّصَارَى فِي عِيدِهِمْ يَوْمَ جَمْعِهِمْ , فَإِنَّ السَّخَطُ يَنْزِلُ عَلَيْهِمْ , فَأَخْشَى أَنْ يُصِيبَكُمْ , وَلَا تَعْلَمُوا بِطَانَتَهُمْ فَتَخَلَّقُوا بِخُلُقِهِمْ


Musannaf-Abdur-Razzaq-1609

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1609. அரபியல்லாதோரின் புரியாத மொழிகளைக் கற்றுக் கொள்ளாதீர்கள். மேலும் இணைவைப்போரின் பண்டிகைகளின் போது அவர்களின் வழிபாட்டுத் தலத்துக்குள் செல்லாதீர்கள். ஏனெனில் (அல்லாஹ்வின்) கோபம் அவர்கள் மீது இறங்குகிறது என்று உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அதாஉ பின் தீனார் (ரஹ்)


«لَا تَعَلَّمُوا رَطَانَةَ الْأعَاجِمِ، وَلَا تَدْخُلُوا عَلَيْهِمْ فِي كَنَائِسِهِمْ يَوْمَ عِيدِهِمْ، فَإِنَّ السَّخْطَةَ تَنْزِلُ عَلَيْهِمْ»


Kubra-Bayhaqi-18861

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலவீனமான செய்தி

பாடம்:

(இஸ்லாமிய ஆட்சியில் வாழும்) பிற மதத்தவர்களின் வழிபாட்டுத்தலங்களுக்குள் செல்வதும், அவர்களின் பண்டிகைகளில் அவர்களைப் போன்று நடப்பதும் வெறுப்புக்குரியவையாகும்.

18861. அரபியல்லாதோரின் புரியாத மொழிகளைக் கற்றுக் கொள்ளாதீர்கள். மேலும் இணைவைப்போரின் பண்டிகைகளின் போது அவர்களின் வழிபாட்டுத் தலத்துக்குள் செல்லாதீர்கள். ஏனெனில் (அல்லாஹ்வின்) கோபம் அவர்கள் மீது இறங்குகிறது என்று உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அதாஉ பின் தீனார் (ரஹ்)


لَا تَعَلَّمُوا رَطَانَةَ الْأَعَاجِمِ وَلَا تَدْخُلُوا عَلَى الْمُشْرِكِينَ فِي كَنَائِسِهِمْ يَوْمَ عِيدِهِمْ , فَإِنَّ السَّخْطَةَ تَنْزِلُ عَلَيْهِمْ


Kubra-Bayhaqi-18864

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

18864. யார் இணைவைப்பாளர்கள் இருக்கும் பகுதியில் குடியேறி அவர்களுடைய விழாக்கள், பண்டிகைகளில் கலந்து சிறப்பித்து மரணிக்கின்ற வரை அவர்களுக்கு ஒப்பாக நடக்கிறாரோ அவர் மறுமைநாளில் அவர்களுடனேயே எழுப்பப்படுவார் என்று அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபுல்முஃகீரா (ரஹ்)


مَنْ بَنَى فِي بِلَادِ الْأَعَاجِمِ فَصَنَعَ نَوْرُوزَهُمْ وَمِهْرَجَانَهُمْ وَتَشَبَّهَ بِهِمْ حَتَّى يَمُوتَ وَهُوَ كَذَلِكَ حُشِرَ مَعَهُمْ يَوْمَ الْقِيَامَةِ


Kubra-Bayhaqi-18863

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

18863. யார் இணைவைப்பாளர்கள் இருக்கும் பகுதியில் குடியேறி அவர்களுடைய விழாக்கள், பண்டிகைகளில் கலந்து சிறப்பித்து மரணிக்கின்ற வரை அவர்களுக்கு ஒப்பாக நடக்கிறாரோ அவர் மறுமைநாளில் அவர்களுடனேயே எழுப்பப்படுவார் என்று அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: வலீத் பின் அபதா (ரஹ்)


مَنْ بَنَى بِبِلَادِ الْأَعَاجِمِ وَصَنَعَ نَيْرُوزَهُمْ وَمِهْرَجَانَهُمْ وَتَشَبَّهَ بِهِمْ حَتَّى يَمُوتَ وَهُوَ كَذَلِكَ حُشِرَ مَعَهُمْ يَوْمَ الْقِيَامَةِ


Sharh-Mushkil-Al-Athar-2102

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2102.


أَنَّهُ رَأَى رَجُلًا يَشْرَبُ قَائِمًا ; فَقَالَ لَهُ: ” قِئْ ” قَالَ: لِمَ؟ قَالَ: ” أَتُحِبُّ أَنْ يَشْرَبَ مَعَكَ الْهِرُّ؟ ” فَقَالَ: لَا , فَقَالَ: ” قَدْ شَرِبَ مَعَكَ شَرٌّ مِنَ الْهِرِّ: الشَّيْطَانُ


Bazzar-8823

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

8823.


رأى رجلاً يشرب قائما فقال: أتحب أن يشرب معك الهر؟ قال لا قال: فقد شرب معك من هو شر منه الشيطان.


Next Page » « Previous Page