Author: Abdul Hakkim

Almujam-Alawsat-4715

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

4715. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு பெண் தனது இறைவனை பயந்து; தனது கற்பைப் பேணிநடந்து; தனது கணவனுக்கு கட்டுப்பட்டு நடந்தால் அவளுக்காக சொர்க்கத்தின் எட்டுவாசல்களும் திறக்கப்பட்டு, “நீ விரும்பிய வாசல் வழியாக நுழைந்துக் கொள்!” என்று அவளிடம் கூறப்படும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«أَيُّمَا امْرَأَةٍ اتَّقَتْ رَبَّهَا، وَحَفِظَتْ فَرْجَهَا، وَأَطَاعَتْ زَوْجَهَا، فُتِحَ لَهَا ثَمَانِيَةُ أَبْوَابٍ مِنَ الْجَنَّةِ، فَقِيلَ لَهَا: ادْخُلِي مِنْ حَيْثُ شِئْتِ»


Almujam-Alawsat-4598

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

4598. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு பெண் ஐந்துவேளை தொழுகைகளைத் தொழுது; ரமலான் மாதம் நோன்பு நோற்று; தனது கற்பைப் பேணிநடந்து; தனது கணவனுக்கு கட்டுப்பட்டு நடந்தால் அவள் சொர்க்கத்தில், தான் விரும்பிய வாசல் வழியாக நுழைவாள். 

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«إِذَا صَلَّتِ الْمَرْأَةُ خَمْسَهَا، وَصَامَتْ شَهْرَهَا، وَحَصَّنَتْ فَرْجَهَا، وَأَطَاعَتْ بَعْلَهَا، دَخَلَتْ مِنْ أَيِّ أَبْوَابِ الْجَنَّةِ شَاءَتْ»


Ibn-Hibban-4163

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

ஒரு பெண் அல்லாஹ்வின் கடமைகளை நிறைவேற்றுவதுடன் கணவனுக்கும் கட்டுப்பட்டு நடந்தால் அவளுக்கு சொர்க்கம் கடமையாகிவிடுகிறது என்பது பற்றி வந்துள்ள செய்திகள்.

4163. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு பெண் ஐந்துவேளை தொழுகைகளைத் தொழுது; ரமலான் மாதம் நோன்பு நோற்று; தனது கற்பைப் பேணிநடந்து; தனது கணவனுக்கு கட்டுப்பட்டு நடந்தால் அவள் சொர்க்கத்தில், தான் விரும்பிய வாசல் வழியாக நுழைவாள். 

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

அபூஹாதிம்-இப்னு ஹிப்பான் இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தியை அபூஸலமாவிடமிருந்து, அப்துல்மலிக் பின் உமைர் மட்டுமே தனித்து அறிவிக்கிறார்.

இவ்வாறே, அப்துல்மலிக் என்பவரிடமிருந்து ஹுத்பா பின் மின்ஹால் மட்டுமே தனித்து அறிவிக்கிறார்.

ஹுத்பா பின் மின்ஹால் அவர்கள், (ஈரான் நாட்டின்) அஹ்வாஸ் என்ற பகுதியை சேர்ந்தவராவார்.


«إِذَا صَلَّتِ الْمَرْأَةُ خُمُسَهَا، وَصَامَتْ شَهْرَهَا، وَحَصَّنَتْ فَرْجَهَا، وَأَطَاعَتْ بَعْلَهَا دَخَلَتْ مِنْ أَيِّ أَبْوَابِ الْجَنَّةِ شَاءَتْ»


Almujam-Alawsat-8805

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

8805. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு பெண் ஐந்துவேளை தொழுகைகளைத் தொழுது; ரமலான் மாதம் நோன்பு நோற்று; தனது கற்பைப் பேணிநடந்து; தனது கணவனுக்கு கட்டுப்பட்டு நடந்தால் அவள் சொர்க்கத்தில், தான் விரும்பிய வாசல் வழியாக நுழைவாள்.

அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி)


«إِذَا صَلَّتِ الْمَرْأَةُ خَمْسَهَا، وَصَامَتْ شَهْرَهَا، وَحَفِظَتْ فَرْجَهَا، وَأَطَاعَتْ بَعْلَهَا فَلْتَدْخُلْ مِنْ أَيِّ أَبْوَابِ الْجَنَّةِ شَاءَتْ»


Musnad-Ahmad-1661

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1661. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு பெண் ஐந்துவேளை தொழுகைகளைத் தொழுது; ரமலான் மாதம் நோன்பு நோற்று; தனது கற்பைப் பேணிநடந்து; தனது கணவனுக்கு கட்டுப்பட்டு நடந்தால், (மறுமையில்) நீ விரும்பிய வாசல் வழியாக சொர்க்கத்திற்குள் செல்! என்று அவளிடம் கூறப்படும்.

அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி)


إِذَا صَلَّتِ الْمَرْأَةُ خَمْسَهَا، وَصَامَتْ شَهْرَهَا، وَحَفِظَتْ فَرْجَهَا، وَأَطَاعَتْ زَوْجَهَا قِيلَ لَهَا: ادْخُلِي الْجَنَّةَ مِنْ أَيِّ أَبْوَابِ الْجَنَّةِ شِئْتِ


Abu-Dawood-5000

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5000.


أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزْوَةِ تَبُوكَ وَهُوَ فِي قُبَّةٍ مِنْ أَدَمٍ، فَسَلَّمْتُ فَرَدَّ وَقَالَ: «ادْخُلْ» فَقُلْتُ: أَكُلِّي يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «كُلُّكَ» فَدَخَلْتُ


Nasaayi-3561

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அத்தியாயம்: 28

குதிரைகள்.

பாடம்: 1

3561. ஸலமா பின் நுஃபைல் அல்கிந்தீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்தேன். அப்போது ஒரு மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! மக்கள் குதிரைகள்மீது ஆர்வம் இழந்து விட்டார்கள். ஆயுதங்களை (கீழே) வைத்துவிட்டார்கள் (இனி) எந்தப் போரும் நிகழாது. போர் தன் ஆயுதங்களை கீழே போட்டு விட்டது என்று கூறுகின்றார்கள்” எனச் சொன்னார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களை முன்னோக்கி, “அவர்கள் பொய் சொல்லிவிட்டார்கள். இப்போதே போர் வந்துவிட்டது.

என் சமுதாயத்தில் ஒரு குழுவினர் உண்மைக்காகப் போராடிக் கொண்டே இருப்பார்கள். அல்லாஹ் அவர்களுக்காகச் சில குழுக்களின் உள்ளங்களைத் (தவறிலிருந்து) திருப்புவான். மறுமைநாள் வரை அவர்களுக்குப் போரில் ஈடுபடுவோர் மூலம் அல்லாஹ் வாழ்வாதாரம் அளிப்பான். இறுதியில் அல்லாஹ்வின் வாக்குறுதி வருகின்ற வரை (இது தொடரும்).

குதிரைகளின் முன்நெற்றி உரோமங்களில், மறுமைநாள் வரை நன்மை பிணைக்கப்பட்டுள்ளது.

மேலும் நான் இறந்துவிடப் போகிறேன். நீண்டநாள் நான் தங்க மாட்டேன்! என்று இறைச்செய்தி (வஹீ) எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்களுக்குள் யாரேனும் மற்றொருவரின் கழுத்தை வெட்டிக் கொண்டே (இருக்கும் நிலையில்) குழுக் குழுவாக (மரணத்தைத்

كُنْتُ جَالِسًا عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ، أَذَالَ النَّاسُ الْخَيْلَ، وَوَضَعُوا السِّلَاحَ، وَقَالُوا: لَا جِهَادَ قَدْ وَضَعَتِ الْحَرْبُ أَوْزَارَهَا، فَأَقْبَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِوَجْهِهِ، وَقَالَ: «كَذَبُوا الْآنَ، الْآنَ جَاءَ الْقِتَالُ، وَلَا يَزَالُ مِنْ أُمَّتِي أُمَّةٌ يُقَاتِلُونَ عَلَى الْحَقِّ، وَيُزِيغُ اللَّهُ لَهُمْ قُلُوبَ أَقْوَامٍ، وَيَرْزُقُهُمْ مِنْهُمْ حَتَّى تَقُومَ السَّاعَةُ، وَحَتَّى يَأْتِيَ وَعْدُ اللَّهِ، وَالْخَيْلُ مَعْقُودٌ فِي نَوَاصِيهَا الْخَيْرُ إِلَى يَوْمِ الْقِيَامَةِ، وَهُوَ يُوحَى إِلَيَّ أَنِّي مَقْبُوضٌ غَيْرَ مُلَبَّثٍ، وَأَنْتُمْ تَتَّبِعُونِي أَفْنَادًا، يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ، وَعُقْرُ دَارِ الْمُؤْمِنِينَ الشَّامُ»


Ibn-Majah-4042

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4042.

அவ்ஃப் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்.

தபூக் போரின்போது நபி (ஸல்) அவர்களிடம் நான் சென்றேன். அவர்கள் ஒரு தோல் கூடாரத்தில் இருந்தார்கள். அப்போது அவர்கள், ‘இறுதி நாள் வருவதற்கு முன்பு (அதற்குரிய) ஆறு அடையாளங்கள் நிகழும்.

அவற்றை எண்ணிக் கொள்:

1. என்னுடைய மரணம்.
2. பைத்துல் மக்திஸ் வெற்றி கொள்ளப்படுதல்.
3. ஆடுகளுக்கு வருகிற (ஒரு வகை) நோயைப் போன்று கொள்ளை நோய் ஒன்று வந்து உங்களைப் பீடிக்கும் (அதனால் ஏராளமானவர்கள் இறந்து போய் விடுவார்கள்).
4. பிறகு செல்வம் பெருகிவழியும். எந்த அளவிற்கென்றால் ஒருவருக்கு நூறு தீனார்கள் கொடுக்கப்பட்ட பின்பும் (அதனை அற்பமாகக் கருதி) அவர் அதிருப்தியுடனிருப்பார்.
5. பிறகு தீமையொன்று தோன்றும். அரபுகளின் வீடுகளில் அது நுழையாத வீடு எதுவும் இருக்காது.
6. பிறகு (ரோமர்களுக்கும்) உங்களுக்குமிடையே சமாதான ஒப்பந்தம் ஒன்று ஏற்படும். (அதை மதிக்காமல்) அவர்கள் (உங்களை) மோசடி செய்து விடுவார்கள். பிறகு உங்களை எதிர்த்துப் போரிடுவதற்காக எண்பது கொடிகளின் கீழே (அணி வகுத்து) அவர்கள் வருவார்கள். ஒவ்வொரு கொடிக்கும் கீழே பன்னிரண்டாயிரம் போர் வீரர்கள் இருப்பார்கள்.


أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُوَ فِي غَزْوَةِ تَبُوكَ، وَهُوَ فِي خِبَاءٍ مِنْ أَدَمٍ، فَجَلَسْتُ بِفِنَاءِ الْخِبَاءِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ادْخُلْ يَا عَوْفُ فَقُلْتُ: بِكُلِّي يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «بِكُلِّكَ» ، ثُمَّ قَالَ: «يَا عَوْفُ احْفَظْ خِلَالًا سِتًّا، بَيْنَ يَدَيِ السَّاعَةِ إِحْدَاهُنَّ مَوْتِي» ، قَالَ: فَوَجَمْتُ عِنْدَهَا وَجْمَةً شَدِيدَةً، فَقَالَ: ” قُلْ: إِحْدَى، ثُمَّ فَتْحُ بَيْتِ الْمَقْدِسِ، ثُمَّ دَاءٌ يَظْهَرُ فِيكُمْ يَسْتَشْهِدُ اللَّهُ بِهِ ذَرَارِيَّكُمْ، وَأَنْفُسَكُمْ، وَيُزَكِّي بِهِ أَمْوَالَكُمْ، ثُمَّ تَكُونُ الْأَمْوَالُ فِيكُمْ، حَتَّى يُعْطَى الرَّجُلُ مِائَةَ دِينَارٍ، فَيَظَلَّ سَاخِطًا، وَفِتْنَةٌ تَكُونُ بَيْنَكُمْ لَا يَبْقَى بَيْتُ مُسْلِمٍ إِلَّا دَخَلَتْهُ، ثُمَّ تَكُونُ بَيْنَكُمْ وَبَيْنَ بَنِي الْأَصْفَرِ هُدْنَةٌ، فَيَغْدِرُونَ بِكُمْ، فَيَسِيرُونَ إِلَيْكُمْ فِي ثَمَانِينَ غَايَةٍ، تَحْتَ كُلِّ غَايَةٍ اثْنَا عَشَرَ أَلْفًا


Bazzar-4144

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4144. “நீங்கள் ஆயுதமேந்திய மாறுபட்ட பல படையினராக மாறும் நிலை (பிற்காலத்தில்) ஏற்படும். ஒரு படையினர் ஷாமில் இருப்பார்கள். மற்றொரு படையினர் எகிப்தில் இருப்பார்கள். மற்றொரு படையினர் ஈராக்கில் இருப்பார்கள். மற்றொரு படையினர் யமன் நாட்டில் இருப்பார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது நபித்தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எந்தப் படையில் இருக்கவேண்டும் என்று எங்களுக்கு தேர்வுசெய்யுங்கள் என்று கூறினர்.

அதற்கு, “ஷாம் நாட்டுடன் சேர்ந்துக் கொள்ளுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நபித்தோழர்கள் நாங்கள் கால்நடைகளையே வைத்துள்ளோம்…நாங்கள் கால்நடையாக செல்பவர்கள். ஷாமுக்கு செல்லும் அளவுக்கு எங்களிடம் பலமில்லை என்று கூறினர்.

ஷாமுக்கு செல்லமுடியாதவர், யமன் நாட்டின் படையுடன் சேர்ந்துக் கொள்ளட்டும். திண்ணாக அல்லாஹ், எனக்காக ஷாமுக்கு பொறுப்பேற்றுக் கொண்டான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி)

பஸ்ஸார் இமாம் கூறுகிறார்:

இந்தக் கருத்தில் வரும் செய்திகளில் அபுத்தர்தா (ரலி)  வழியாக வரும் செய்தியே மிக அழகானது என்றே நாம் அறிகிறோம். அபுத்தர்தா (ரலி) அல்லாத மற்ற நபித்தோழர்கள் வழியாகவும் இந்த செய்தி வந்துள்ளது.

إِنَّكُمْ سَتُجَنِّدُونَ أَجْنَادًا، جُنْدًا بِالشَّامِ، وَمِصْرَ، وَالْعِرَاقِ، وَالْيَمَنِ، قَالُوا: فَخِرْ لَنَا يَا رَسولَ اللهِ. قَالَ: عَلَيْكُمْ بِالشَّامِ، قَالُوا: إِنَّا أَصْحَابُ مَاشِيَةٍ، ولاَ نُطِيقُ الشَّامَ، قَالَ: فَمَنْ لَمْ يُطِقِ الشَّامَ فَلْيَلْحَقْ بِيَمَنِهِ، فَإِنَّ اللَّهَ قَدْ تَكَفَّلَ لِي بِالشَّامِ.


Hakim-8556

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

8556. “நீங்கள் ஆயுதமேந்திய மூன்று மாறுபட்ட படையினராக மாறும் நிலை (பிற்காலத்தில்) ஏற்படும். ஒரு படையினர் ஷாமில் இருப்பார்கள். மற்றொரு படையினர் ஈராக்கில் இருப்பார்கள். மற்றொரு படையினர் யமன் நாட்டில் இருப்பார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது அப்துல்லாஹ் பின் ஹவாலா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! (அவர்களை நான் அடைந்தால்) நான் எந்தப் படையில் இருக்கவேண்டும் என்று எனக்கு தேர்வு செய்துக் கூறுங்கள்” என்று கூறினார்.

அதற்கு, “ஷாம் நாட்டுடன் சேர்ந்துக் கொள்ளுங்கள். உங்களால் ஷாமுடன் இணைய முடியாவிட்டால் (உங்களுக்கு நெருக்கமான அல்லது உங்கள் அஸல் பகுதியான) யமன் நாட்டின் படையுடன் சேர்ந்துக் கொள்ளுங்கள். உங்களுக்கென்றுள்ள நீர் தடாகத்திலிருந்து தண்ணீர் அருந்துங்கள். (அதாவது மற்ற முஸ்லிம்கள் தாங்கள் இருந்த இடத்திலேயே தங்களை தயார் செய்துக் கொள்ளுங்கள்)…திண்ணமாக அல்லாஹ், எனக்காக ஷாமுக்கும், ஷாம்வாசிகளுக்கும் பொறுப்பேற்றுக் கொண்டான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதை அபூஇத்ரீஸ் அல்கவ்லானீ (ரஹ்) அவர்கள், அப்துல்லாஹ் பின் ஹவாலா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள்.


سَتُجَنَّدُونَ أَجْنَادًا: جُنْدًا بِالشَّامِ، وَجُنْدًا بِالْعِرَاقِ، وَجُنْدًا بِالْيَمَنِ ” قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ اخْتَرْ لِي، قَالَ: «عَلَيْكُمْ بِالشَّامِ، فَمَنْ أَبَى فَلْيَلْحَقْ بِيَمَنِهِ، وَلْيَسْقِ مِنْ غُدُرِهِ، فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ تَكَفَّلَ لِي بِالشَّامِ وَأَهْلِهِ»


Next Page » « Previous Page