Author: Abdul Hakkim

Ibn-Khuzaymah-604

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

604. ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தங்கள் ருகூஉவில், ‘ஸுப்ஹான ரப்பியல் அளீம்’ (மகத்துவமிக்க என் இரட்சகனைத் துதி செய்கிறேன்) என்று மூன்று முறை கூறுபவர்களாக இருந்தார்கள்.


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ فِي رُكُوعِهِ: «سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ» ثَلَاثًا “


Almujam-Alkabir-3422

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3422. அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு தடவை தொழுகை நடத்தினார்கள். அப்போது அவர்கள் ருகூஉ செய்தபோது, “ஸுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி” என்று மூன்று முறை கூறினார்கள். பிறகு, தலையை உயர்த்தினார்கள்.


أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى، فَلَمَّا رَكَعَ قَالَ: «سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ» ثَلَاثَ مَرَّاتٍ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ


Nasaayi-1135

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1135. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள், உமர் பின் அப்துல்அஸீஸ் (ரஹ்) அவர்களின் தொழுகையைக் குறித்து, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகையை போன்று தொழவைத்த இந்த வாலிபரைப் போன்று வேறு எவரையும் நான் பார்த்ததில்லை” என்று கூறினார்கள்.

அப்போது நாங்கள் அவருடைய ருகூஉவில் பத்து தஸ்பீஹ்களையும், அவருடைய ஸஜ்தாவில் பத்து தஸ்பீஹ்களையும் எண்ணினோம்.

அறிவிப்பவர்: ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்)


مَا رَأَيْتُ أَحَدًا أَشْبَهَ صَلَاةً بِصَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ هَذَا الْفَتَى يَعْنِي عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ فَحَزَرْنَا «فِي رُكُوعِهِ عَشْرَ تَسْبِيحَاتٍ، وَفِي سُجُودِهِ عَشْرَ تَسْبِيحَاتٍ»


Abu-Dawood-886

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

886. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் ருகூஃ செய்தால், ‘ஸுப்ஹான ரப்பியல் அளீம்’ (மகத்தான என் இரட்சகனைத் துதிக்கிறேன்) என்பதை மூன்று முறை கூறட்டும். இதுவே குறைந்தபட்ச அளவாகும்.

மேலும், அவர் ஸஜ்தா செய்தால், ‘ஸுப்ஹான ரப்பியல் அஃலா’ (உயர்ந்த என் இரட்சகனைத் துதிக்கிறேன்) என்பதை மூன்று முறை கூறட்டும். இதுவே குறைந்தபட்ச அளவாகும்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)


அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

இது முர்ஸலான அறிவிப்பாளர்தொடராகும். (ஏனெனில் இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும்) அவ்ன் பின் அப்துல்லாஹ் அவர்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களைச் சந்திக்கவில்லை.


” إِذَا رَكَعَ أَحَدُكُمْ فَلْيَقُلْ ثَلَاثَ مَرَّاتٍ: سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ، وَذَلِكَ أَدْنَاهُ، وَإِذَا سَجَدَ فَلْيَقُلْ: سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَى ثَلَاثًا، وَذَلِكَ أَدْنَاهُ “،


Musnad-Ahmad-27041

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

27041. உம்முத் தர்தா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருநாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைக் கண்டார்கள். அப்போது அவர்கள், “உம்முத் தர்தாவே! எங்கிருந்து வருகிறாய்?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “(பொதுக்) குளிப்பிடத்திலிருந்து” என்று பதிலளித்தேன்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம், “எந்த ஒரு பெண்மணி (பொதுவான இடங்களில்) தன் ஆடைகளைக் கழற்றுகிறாளோ, அந்தப் பெண் தனக்கும் அல்லாஹ்வுக்கும் இடையிலுள்ள திரையை நிச்சயமாக நீக்கிவிட்டவள் ஆவாள்” என்று கூறினார்கள்.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَقِيَهَا يَوْمًا، فَقَالَ: «مِنْ أَيْنَ جِئْتِ يَا أُمَّ الدَّرْدَاءِ؟» فَقَالَتْ: مِنَ الْحَمَّامِ، فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مِنَ امْرَأَةٍ تَنْزِعُ ثِيَابَهَا، إِلَّا هَتَكَتْ مَا بَيْنَهَا وَبَيْنَ اللَّهِ مِنْ سِتْرٍ»


Musnad-Ahmad-27038

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

27038. உம்முத் தர்தா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (பொதுக்) குளிப்பிடத்திலிருந்து (குளித்துவிட்டு) வந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைக் கண்டார்கள். அப்போது அவர்கள், “உம்முத் தர்தாவே! எங்கிருந்து வருகிறாய்?” என்று கேட்டார்கள்.

அதற்கு நான், “(பொதுக்) குளிப்பிடத்திலிருந்து” என்று பதிலளித்தேன்.

அதற்கு அவர்கள், “எவன் கைவசம் என் உயிர் உள்ளதோ, அவன் மீது சத்தியமாக! எந்த ஒரு பெண்மணியும் தன் தாயின் வீட்டில் தவிர வேறு எந்த இடத்தில் தன் ஆடைகளைக் கழற்றுகிறாளோ, அந்தப் பெண் தனக்கும் பேரருளாளன் அல்லாஹ்வுக்கும் இடையிலுள்ள அனைத்துத் திரைகளையும் கிழித்தவள் ஆவாள்” என்று கூறினார்கள்.


خَرَجْتُ مِنَ الْحَمَّامِ فَلَقِيَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «مِنْ أَيْنَ يَا أُمَّ الدَّرْدَاءِ؟» قَالَتْ: مِنَ الْحَمَّامِ، فَقَالَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، مَا مِنَ امْرَأَةٍ تَضَعُ ثِيَابَهَا فِي غَيْرِ بَيْتِ أَحَدٍ مِنْ أُمَّهَاتِهَا، إِلَّا وَهِيَ هَاتِكَةٌ كُلَّ سِتْرٍ بَيْنَهَا وَبَيْنَ الرَّحْمَنِ»


Nasaayi-401

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

401. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட எவரும் கீழாடையின்றி (பொதுக்) குளிப்பிடங்களில் நுழைய வேண்டாம்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)


«مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلَا يَدْخُلِ الْحَمَّامَ إِلَّا بِمِئْزَرٍ»


Tirmidhi-2801

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

பாடம்:

பொதுக் குளியலறைக்குள் குளிப்பது குறித்து வந்துள்ளவை

2801. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர், கீழாடை அணியாமல் (திறந்தவெளி) பொதுக் குளியலறைக்குள் குளிக்க வேண்டாம்.

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர், தனது மனைவியைக் (திறந்தவெளி) பொதுக் குளியலறைக்குள் அனுப்ப வேண்டாம்.

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர், மதுபானம் பரிமாறப்படும் உணவு மேசையில் அமர வேண்டாம்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது ‘ஹஸன் ஃகரீப்’ எனும் தரத்தில் அமைந்ததாகும். தாவூஸ் அவர்கள் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் இந்தச் செய்தியை இந்த வகை அறிவிப்பாளர்தொடரில் மட்டுமே நாம் அறிகிறோம்.

“லைஸ் பின் அபூஸுலைம் உண்மையாளர் தான்; எனினும் சில நேரங்களில் அவர் தவறாக அறிவிப்பார்” என முஹம்மத் பின் இஸ்மாயீல்-புகாரி அவர்கள் கூறினார்.

“லைஸ் என்பவரின் ஹதீஸ்கள் மகிழ்ச்சி தரும் விதத்தில் (ஆதாரபூர்வமாக) இருப்பதில்லை. காரணம் மற்றவர்கள் ‘மவ்கூஃபாக-நபித்தோழரின் சொல்லாக’ அறிவிப்பதை இவர் ‘மர்பூஃவாக-நபியின் சொல்லாக’ அறிவிப்பார். அதனால் தான் அறிஞர்கள் அவரைப் பலவீனமானவர் எனக் கூறியுள்ளனர்” என்று அஹ்மத் பின் ஹன்பல்

«مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَاليَوْمِ الآخِرِ فَلَا يَدْخُلِ الحَمَّامَ بِغَيْرِ إِزَارٍ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَاليَوْمِ الآخِرِ فَلَا يُدْخِلْ حَلِيلَتَهُ الحَمَّامَ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَاليَوْمِ الآخِرِ فَلَا يَجْلِسْ عَلَى مَائِدَةٍ يُدَارُ عَلَيْهَا بِالخَمْرِ»


Tirmidhi-2803

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2803. அபுல்மலீஹ்-அல்ஹுதலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஹிம்ஸ் அல்லது ஷாம் (எனும் சிரியா) நாட்டைச் சேர்ந்த சில பெண்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்தனர். அப்போது ஆயிஷா (ரலி), “பொதுக் குளிப்பிடங்களுக்கு சென்று பெண்கள் குளிப்பார்களே! அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் தானே நீங்கள்?” என்று கேட்டுவிட்டு கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இவ்வாறு கூற செவியுற்றிருக்கிறேன்:

தனது வீட்டைத் தவிர வேறு இடத்தில் தனது ஆடையைக் களையும் எந்தப் பெண்ணும் அவளுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையிலான திரையைக் கிழித்துவிட்டாள் (அதாவது வெட்கத்தைக் கைவிட்டுவிட்டாள்).


أَنَّ نِسَاءً مِنْ أَهْلِ حِمْصٍ، أَوْ مِنْ أَهْلِ الشَّامِ دَخَلْنَ عَلَى عَائِشَةَ، فَقَالَتْ: أَنْتُنَّ اللَّاتِي يَدْخُلْنَ نِسَاؤُكُنَّ الحَمَّامَاتِ؟ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَا مِنْ امْرَأَةٍ تَضَعُ ثِيَابَهَا فِي غَيْرِ بَيْتِ زَوْجِهَا إِلَّا هَتَكَتِ السِّتْرَ بَيْنَهَا وَبَيْنَ رَبِّهَا»


Abu-Dawood-4010

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4010. அபுல்மலீஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஷாம் (எனும் சிரியா) நாட்டைச் சேர்ந்த சில பெண்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்தனர். அப்போது ஆயிஷா (ரலி), “நீங்கள் யார்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “நாங்கள் ஷாம் நாட்டினர்” என்று பதிலளித்தனர்.

அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், “உங்கள் ஊரில் பெண்கள் பொதுக் குளிப்பிடங்களுக்கு செல்கின்றார்கள் தானே?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “ஆம்” என்று கூறினர். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “அறிந்து கொள்ளுங்கள்! நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இவ்வாறு கூற செவியுற்றிருக்கிறேன்:

தனது வீட்டைத் தவிர வேறு இடத்தில் தனது ஆடையைக் களையும் எந்தப் பெண்ணும் அவளுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையிலான திரையைக் கிழித்துவிட்டாள் (அதாவது வெட்கத்தைக் கைவிட்டுவிட்டாள்).


அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

இது ஜரீர் பின் அப்துல்ஹமீத் அவர்கள் அறிவிக்கும் ஹதீஸாகும். இதுவே முழுமையானது.

ஜரீர் அவர்கள் அபுல்மலீஹ் அவர்களைக் குறிப்பிடவில்லை. (மாறாக மன்ஸூர் —> ஸாலிம் பின் அபுல்ஜஃத் —> ஆயிஷா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில்) “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்றே குறிப்பிட்டுள்ளார்.


دَخَلَ نِسْوَةٌ مِنْ أَهْلِ الشَّامِ عَلَى عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، فَقَالَتْ: مِمَّنْ أَنْتُنَّ قُلْنَ مِنْ أَهْلِ الشَّامِ قَالَتْ: لَعَلَّكُنَّ مِنَ الْكُورَةِ الَّتِي تَدْخُلُ نِسَاؤُهَا الْحَمَّامَاتِ قُلْنَ: نَعَمْ قَالَتْ: أَمَا إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَا مِنَ امْرَأَةٍ تَخْلَعُ ثِيَابَهَا فِي غَيْرِ بَيْتِهَا إِلَّا هَتَكَتْ، مَا بَيْنَهَا وَبَيْنَ اللَّهِ تَعَالَى»


Next Page » « Previous Page