Author: Abdul Hakkim

Tirmidhi-604

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

பாடம்: 72

மஃக்ரிப் தொழுகைக்குப்பின் தொழும் (கூடுதல்) தொழுகையை வீட்டில் தொழுவதே சிறந்தது என்பது தொடர்பாகக் கூறப்பட்டுள்ளவை.

604. கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பனூ அப்தில் அஷ்ஹல் குலத்தாரின் பள்ளிவாசலில் ‘மஃக்ரிப்’ தொழுகையைத் தொழுதார்கள். பிறகு மக்கள் கூடுதலான (நஃபில்) தொழுகையைத் தொழ எழுந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இந்தத் தொழுகையை (உங்கள்) வீடுகளில் தொழுங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இஸ்ஹாக் பின் கஅப்

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்த ஹதீஸ் கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்களிடமிருந்து இந்த அறிவிப்பாளர்தொடரில் தவிர வேறு தொடர்களில் வந்திருப்பதாக நாம் அறியவில்லை. எனவே இது ‘ஃகரீப்’ வகை ஹதீஸ் ஆகும்.

நபி (ஸல்) அவர்கள் ‘மஃக்ரிப்’ தொழுகைக்குப்பின் தமது வீட்டில் இரண்டு ரக்அத்கள் தொழுதுவந்தார்கள்” என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் வழியாக அறிவிக்கப்படும் ஹதீஸே ஆதாரபூர்வமானதாகும்.

நபி (ஸல்) அவர்கள் ‘மஃக்ரிப்’ தொழுகையைத் தொழுதுவிட்டு இஷா தொழுகைவரை பள்ளிவாசலில் தொழுதுகொண்டேயிருந்தார்கள்”
என ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள், ‘மஃக்ரிப்’ தொழுகைக்குப் பின் பள்ளிவாசலில் இரண்டு

صَلَّى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَسْجِدِ بَنِي عَبْدِ الأَشْهَلِ المَغْرِبَ، فَقَامَ نَاسٌ يَتَنَفَّلُونَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَلَيْكُمْ بِهَذِهِ الصَّلَاةِ فِي البُيُوتِ»


Abu-Dawood-1300

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1300.

கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பனூ அப்தில் அஷ்ஹல் குலத்தாரின் பள்ளிவாசலில் ‘மஃக்ரிப்’ தொழுகையைத் தொழுதார்கள். பிறகு மக்கள் கூடுதலான (நஃபில்) தொழுகையைத் தொழ எழுந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இந்தத் தொழுகையை (உங்கள்) வீடுகளில் தொழுங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இஸ்ஹாக் பின் கஅப் (ரஹ்)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَى مَسْجِدَ بَنِي عَبْدِ الْأَشْهَلِ، فَصَلَّى فِيهِ الْمَغْرِبَ، فَلَمَّا قَضَوْا صَلَاتَهُمْ رَآهُمْ يُسَبِّحُونَ بَعْدَهَا، فَقَالَ: «هَذِهِ صَلَاةُ الْبُيُوت»


Musnad-Ahmad-17030

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

17030. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்கள் இல்லங்களை (தொழுகை, ஓதல் நடைபெறாத) சவக்குழிகளாக ஆக்கிவிடாதீர்கள். அதில் (சில தொழுகைகளை) தொழுங்கள்.

அறிவிப்பவர்: ஸைத் பின் காலித் (ரலி)


«لَا تَتَّخِذُوا بُيُوتَكُمْ قُبُورًا، صَلُّوا فِيهَا»


Nasaayi-1598

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அத்தியாயம்: 20

இரவிலும், பகலிலும் உபரியானத் தொழுகையைத் தொழுதல்.

பாடம்:

இல்லங்களில் (சிலதொழுகைகளைத்) தொழுவதற்கு வந்துள்ள தூண்டலும், அதன்  சிறப்பும்.

1598. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களுடைய இல்லங்களிலும் (உங்கள் தொழுகைகளில் சிலவற்றைத்) தொழுங்கள். இல்லங்களை (தொழுகை நடைபெறாத) சவக்குழிகளாக ஆக்கிவிடாதீர்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


«صَلُّوا فِي بُيُوتِكُمْ وَلَا تَتَّخِذُوهَا قُبُورًا»


Tirmidhi-451

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

451. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்கள் இல்லங்களிலும் (சில தொழுகைகளைத்) தொழுங்கள்!; அவற்றை அடக்கத்தலங்களாக ஆக்கி விடாதீர்கள்!

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் உள்ள செய்தியாகும்.


«صَلُّوا فِي بُيُوتِكُمْ وَلَا تَتَّخِذُوهَا قُبُورًا»


Abu-Dawood-1448

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1448. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களுடைய இல்லங்களிலும் உங்கள் தொழுகைகளில் சிலவற்றைத் தொழுங்கள். இல்லங்களை (தொழுகை நடைபெறாத) சவக்குழிகளாக ஆக்கிவிடாதீர்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


«اجْعَلُوا فِي بُيُوتِكُمْ مِنْ صَلَاتِكُمْ، وَلَا تَتَّخِذُوهَا قُبُورًا»


Abu-Dawood-1043

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

ஒருவர் (கடமையல்லாத)  உபரியானத் தொழுகைகளை தனது வீட்டில் தொழுதல்.

1043. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களுடைய இல்லங்களிலும் உங்கள் தொழுகைகளில் சிலவற்றைத் தொழுங்கள். இல்லங்களை (தொழுகை நடைபெறாத) சவக்குழிகளாக ஆக்கிவிடாதீர்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


«اجْعَلُوا فِي بُيُوتِكُمْ مِنْ صَلَاتِكُمْ، وَلَا تَتَّخِذُوهَا قُبُورًا»


Ibn-Majah-1377

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1377. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்கள் இல்லங்களை (தொழுகை நடைபெறாத) அடக்கத் தலங்களாக ஆக்கிவிடாதீர்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


«لَا تَتَّخِذُوا بُيُوتَكُمْ قُبُورًا»


Ibn-Hibban-783

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

783.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்கள் இல்லங்களை (தொழுகை, ஓதல் நடைபெறாத) சவக்குழிகளாக ஆக்கிவிடாதீர்கள். அதில் (சில தொழுகைகளை) தொழுங்கள்.

“அல்பகரா” எனும் (இரண்டாவது) அத்தியாயம் ஒதப்படுவதைக் கேட்டவுடனே (அந்த) இல்லத்திலிருந்து ஷைத்தான் வெருண்டோடிவிடுகிறான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«لَا تَتَّخِذُوا بُيُوتَكُمْ مَقَابِرَ، صَلُّوا فِيهَا، فَإِنَّ الشَّيْطَانَ لِيَفِرُّ مِنَ الْبَيْتِ يَسْمَعُ سُورَةَ الْبَقَرَةِ تُقْرَأُ فِيهِ»


Tirmidhi-2877

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2877.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்கள் இல்லங்களை (தொழுகை, ஓதல் நடைபெறாத) சவக்குழிகளாக ஆக்கிவிடாதீர்கள்.

“அல்பகரா” எனும் (இரண்டாவது) அத்தியாயம் ஒதப்படும் இல்லத்திலிருந்து ஷைத்தான் வெருண்டோடிவிடுகிறான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«لَا تَجْعَلُوا بُيُوتَكُمْ مَقَابِرَ، وَإِنَّ البَيْتَ الَّذِي تُقْرَأُ فِيهِ البَقَرَةُ لَا يَدْخُلُهُ الشَّيْطَانُ»


Next Page » « Previous Page