Author: Abdul Hakkim

Musnad-Ahmad-8395

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

8395. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு தடவை) நபி (ஸல்) அவர்களிடம் ஒரு கிராமவாசி வந்தார். அப்போது அவரிடம், “உமக்கு காய்ச்சல் வந்ததுண்டா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர், காய்ச்சல் என்றால் என்ன? என்று (திருப்பிக்) கேட்டார். அதற்கவர்கள், “தோலுக்கும் சதைக்கும் இடையில் ஏற்படும் சூடு” என்று கூறினார்கள். அந்த கிராமவாசி இது போன்று எனக்கு ஏற்பட்டதில்லை என்று கூறினார்.

பிறகு நபி (ஸல்) அவர்கள், அவரிடம் “உமக்கு தலைவலி(யாவது) ஏற்பட்டதுண்டா? என்று கேட்டார்கள். அதற்கவர், தலைவலி என்றால் என்ன? என்று (திருப்பிக்) கேட்டார். அதற்கவர்கள், “மனிதனின் தலையில் இருக்கும் நரம்புகள் படபடப்பதால் ஏற்படும் வலி” என்று கூறினார்கள். அதற்கு அந்த கிராமவாசி, “இது போன்று எனக்கு ஏற்பட்டதில்லை” என்று கூறினார். பிறகு அவர் திரும்பிச் சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “நரகவாசிகளில் ஒரு மனிதரைக் காண விருப்பமுள்ளவர்கள் இவரைப் பார்த்துக் கொள்ளட்டும்” என்று கூறினார்கள்.


دَخَلَ أَعْرَابِيٌّ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَخَذَتْكَ أُمُّ مِلْدَمٍ قَطُّ؟» قَالَ: وَمَا أُمُّ مِلْدَمٍ؟ قَالَ: «حَرٌّ يَكُونُ بَيْنَ الْجِلْدِ وَاللَّحْمِ» ، قَالَ: مَا وَجَدْتُ هَذَا قَطُّ، قَالَ: «فَهَلْ أَخَذَكَ الصُّدَاعُ قَطُّ؟» قَالَ: وَمَا الصُّدَاعُ؟ قَالَ: «عُرُوقٌ تَضْرِبُ عَلَى الْإِنْسَانِ فِي رَأْسِهِ» ، قَالَ: مَا وَجَدْتُ هَذَا قَطُّ، قَالَ: فَلَمَّا وَلَّى، قَالَ: «مَنْ أَحَبَّ أَنْ يَنْظُرَ إِلَى رَجُلٍ مِنْ أَهْلِ النَّارِ فَلْيَنْظُرْ إِلَى هَذَا»


Musnad-Ahmad-8794

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

8794. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு தடவை) ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களைக் கடந்து சென்றார். அவரின் (உடல்) ஆரோக்கியத்தையும், பலத்தையும் கண்டு நபி (ஸல்) அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.

எனவே அவரை கூப்பிட்டு அவரிடம், “எப்போதாவது உமக்கு உம்மு மில்தம் ஏற்பட்டுள்ளதா? என்று கேட்டார்கள். அதற்கவர் உம்மு மில்தம் என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் காய்ச்சல் என்று பதிலளித்தார்கள். அதற்கவர், காய்ச்சல் என்றால் என்ன? என்று (திருப்பிக்) கேட்டார். அதற்கவர்கள், “தோலுக்கும் எழும்புக்கும் இடையில் ஏற்படும் சூடு” என்று கூறினார்கள். அந்த கிராமவாசி இது போன்று எனக்கு ஏற்பட்டதில்லை என்று கூறினார். பிறகு நபி (ஸல்) அவர்கள், அவரிடம் “உமக்கு எப்போதாவது தலைவலி(யாவது) ஏற்பட்டதுண்டா? என்று கேட்டார்கள். அதற்கவர், தலைவலி என்றால் என்ன? என்று (திருப்பிக்) கேட்டார். அதற்கவர்கள், “மனிதனின் இரு நெற்றிப்பொட்டிலும், தலையிலும் ஏற்படும் வலி” என்று கூறினார்கள். அதற்கு அந்த கிராமவாசி, “இது போன்று எனக்கு ஏற்பட்டதில்லை” என்று கூறினார். பிறகு அவர் திரும்பிச் சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “நரகவாசிகளில் ஒரு மனிதரைக் காண விருப்பமுள்ளவர்கள் இவரைப் பார்த்துக் கொள்ளட்டும்” என்று கூறினார்கள்.


مَرَّ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْرَابِيٌّ أَعْجَبَهُ صِحَّتُهُ وَجَلَدُهُ، قَالَ: فَدَعَاهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «مَتَى حَسَسْتَ أُمَّ مِلْدَمٍ؟» قَالَ: وَأَيُّ شَيْءٍ أُمُّ مِلْدَمٍ؟ قَالَ: «الْحُمَّى» ، قَالَ: وَأَيُّ شَيْءٍ الْحُمَّى؟ قَالَ: «سَخَنَةٌ تَكُونُ بَيْنَ الْجِلْدِ وَالْعِظَامِ» ، قَالَ: مَا بِذَاكَ لِي عَهْدٌ، قَالَ: «فَمَتَى حَسَسْتَ بِالصُّدَاعِ؟» قَالَ: وَأَيُّ شَيْءٍ الصُّدَاعُ؟ قَالَ: «ضَرَبَانٌ يَكُونُ فِي الصُّدْغَيْنِ، وَالرَّأْسِ» ، قَالَ: مَا لِي بِذَاكَ عَهْدٌ، قَالَ: فَلَمَّا قَفَّى، أَوْ وَلَّى الْأَعْرَابِيُّ، قَالَ: «مَنْ سَرَّهُ أَنْ يَنْظُرَ إِلَى رَجُلٍ مِنْ أَهْلِ النَّارِ، فَلْيَنْظُرْ إِلَيْهِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-34166

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

34166. அந்நாளில் நரகம் கொண்டு வரப்படும். (அல்குர்ஆன்-89:23) என்ற வசனத்திற்கு (விளக்கமாக), அன்றைய நாளில் நரகம் எழுபதாயிரம் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டுக் கொண்டு வரப்படும். ஒவ்வொரு சங்கிலியுடனும் எழுபதாயிரம் வானவர்கள் இருந்து, இழுத்து வருவார்கள் என்று இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்)


{وَجِيءَ يَوْمَئِذٍ بِجَهَنَّمَ} [الفجر: 23] قَالَ: جِيءَ بِهَا تُقَادُ بِسَبْعِينَ أَلْفَ زِمَامٍ , مَعَ كُلِّ زِمَامٍ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ


Musannaf-Ibn-Abi-Shaybah-34117

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

பாடம்:

நரகவாசிகளுக்கு தயார் செய்யப்பட்டுள்ள நரகமும், அதன் பயங்கரமும்.

34117. அந்நாளில் நரகம் கொண்டு வரப்படும். (அல்குர்ஆன்-89:23) என்ற அல்லாஹ்வின் வசனத்திற்கு (விளக்கமாக), அன்றைய நாளில் நரகம் எழுபதாயிரம் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டுக் கொண்டு வரப்படும். ஒவ்வொரு சங்கிலியுடனும் எழுபதாயிரம் வானவர்கள் இருந்து, இழுத்து வருவார்கள் என்று இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூவாயில்-ஷகீக் பின் ஸலமா (ரஹ்)


فِي قَوْلِهِ: {وَجِيءَ يَوْمَئِذٍ بِجَهَنَّمَ} [الفجر: 23]، قَالَ: «جِيءَ بِهَا تُقَادُ بِسَبْعِينَ أَلْفَ زِمَامٍ , مَعَ كُلِّ زِمَامٍ سَبْعُونَ أَلْفِ مَلَكٍ يَجُرُّونَهَا»


Almujam-Alkabir-10428

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

10428. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(மறுமைநாளில்) நரகம் எழுபதாயிரம் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டுக் கொண்டு வரப்படும். ஒவ்வொரு சங்கிலியுடனும் எழுபதாயிரம் வானவர்கள் இருந்து, அதை இழுத்து வருவார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)


«يُجَاءُ بِجَهَنَّمَ تُقَادُ بِسَبْعِينَ أَلْفَ زِمَامٍ، مَعَ كُلِّ زِمَامٍ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ يَجُرُّونَهَا»


Hakim-8758

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

8758. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(மறுமைநாளில்) நரகம் எழுபதாயிரம் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டுக் கொண்டு வரப்படும். ஒவ்வொரு சங்கிலியுடனும் எழுபதாயிரம் வானவர்கள் இருந்து, அதை இழுத்து வருவார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)


«يُؤْتَى بِجَهَنَّمَ يَوْمَئِذٍ وَلَهَا سَبْعُونَ أَلْفَ زِمَامٍ مَعَ كُلِّ زِمَامٍ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ يَجُرُّونَهَا»


Tirmidhi-2573

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிய நரகத்தின் நிலைகளைப் பற்றிய பாடங்கள்.

பாடம்:

நரகத்தைப் பற்றிய வர்ணனை.

2573. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(மறுமைநாளில்) நரகம் எழுபதாயிரம் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டுக் கொண்டு வரப்படும். ஒவ்வொரு சங்கிலியுடனும் எழுபதாயிரம் வானவர்கள் இருந்து, அதை இழுத்து வருவார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

(அல்அலாஉ பின் காலித் அல்காஹிலீ அவர்களிடமிருந்து அறிவிக்கும்) ஸுஃப்யான் ஸவ்ரீ அவர்கள், இந்த செய்தியை நபியின் கூற்றாக அறிவிக்கவில்லை என்று (எனது ஆசிரியர்) அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் கூறினார்.

இவ்வாறே (எனது ஆசிரியர்) அப்து பின் ஹுமைத் என்பவரும் ஸவ்ரீ வழியாக (நபித்தோழரின் கூற்றாக அறிவித்தார்). நபியின் கூற்றாக அறிவிக்கவில்லை.


«يُؤْتَى بِجَهَنَّمَ يَوْمَئِذٍ لَهَا سَبْعُونَ أَلْفَ زِمَامٍ، مَعَ كُلِّ زِمَامٍ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ يَجُرُّونَهَا»

قَالَ عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ: «وَالثَّوْرِيُّ لَا يَرْفَعُهُ»

حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ المَلِكِ بْنُ عَمْرٍو أَبُو عَامِرٍ العَقَدِيُّ، عَنْ سُفْيَانَ، عَنِ العَلَاءِ بْنِ خَالِدٍ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ «وَلَمْ يَرْفَعْهُ»


Musnad-Ahmad-10705

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

10705. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் எதை (செய்யுங்கள் என்றோ, செய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல்) உங்களு(டைய முடிவு)க்குவிட்டுவிட்டேனோ அதை(ப் பற்றி எதுவும் கேட்காமல்) நீங்களும் விட்டுவிடுங்கள். உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் அவர்கள் தங்கள் இறைத்தூதர்களிடம் (அதிகமாகக்) கேள்வி கேட்டதும் அவர்களுடன் கருத்து வேறுபட்டதும் தான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«ذَرُونِي مَا تَرَكْتُكُمْ، فَإِنَّمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ بِسُؤَالِهِمْ وَاخْتِلَافِهِمْ عَلَى أَنْبِيَائِهِمْ»


Musnad-Ahmad-9523

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

9523. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் எதை (செய்யுங்கள் என்றோ, செய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல்) உங்களு(டைய முடிவு)க்குவிட்டுவிட்டேனோ அதை(ப் பற்றி எதுவும் கேட்காமல்) நீங்களும் விட்டுவிடுங்கள். உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் அவர்கள் தங்கள் இறைத்தூதர்களிடம் (அதிகமாகக்) கேள்வி கேட்டதும் அவர்களுடன் கருத்து வேறுபட்டதும் தான். ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதிலிருந்து நீங்கள் தவிர்ந்து கொள்ளுங்கள். ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால் அதை உங்களால் முடிந்த அளவிற்குச் செய்யுங்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«ذَرُونِي مَا تَرَكْتُكُمْ، فَإِنَّمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ بِكَثْرَةِ سُؤَالِهِمْ أَنْبِيَاءَهُمْ، وَاخْتِلَافِهِمْ عَلَيْهِمْ، وَإِذَا نَهَيْتُكُمْ عَنْ شَيْءٍ فَانْتَهُوا، وَإِذَا أَمَرْتُكُمْ بِأَمْرٍ فَأْتُوا مِنْهُ مَا اسْتَطَعْتُمْ»


Musnad-Ahmad-7367

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7367. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் எதை (செய்யுங்கள் என்றோ, செய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல்) உங்களு(டைய முடிவு)க்குவிட்டுவிட்டேனோ அதை(ப் பற்றி எதுவும் கேட்காமல்) நீங்களும் விட்டுவிடுங்கள். உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் அவர்கள் தங்கள் இறைத்தூதர்களிடம் (அதிகமாகக்) கேள்வி கேட்டதும் அவர்களுடன் கருத்து வேறுபட்டதும் தான். ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதிலிருந்து நீங்கள் தவிர்ந்து கொள்ளுங்கள். ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால் அதை உங்களால் முடிந்த அளவிற்குச் செய்யுங்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«ذَرُونِي مَا تَرَكْتُكُمْ، فَإِنَّمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ بِكَثْرَةِ سُؤَالِهِمْ وَاخْتِلَافِهِمْ عَلَى أَنْبِيَائِهِمْ، مَا نَهَيْتُكُمْ عَنْهُ فَانْتَهُوا، وَمَا أَمَرْتُكُمْ فَأْتُوا مِنْهُ مَا اسْتَطَعْتُمْ»


Next Page » « Previous Page