Author: Abdul Hakkim

Almujam-Alkabir-11

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

11. மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது, வானத்தை நோக்கி பார்த்துவிட்டு, “அல்லாஹும்ம இன்னீ அவூது பி(க்)க அன் அழில்ல அவ் உழல்ல அவ் அஸில்ல அவ் உஸல்ல அவ் அஜ்ஹல அவ் யுஜ்ஹல அலய்ய அவ் அள்ளிம அவ் உள்லம” என்று கூறாமல் செல்லமாட்டார்கள்.

(பொருள்: அல்லாஹ்வே! நான் பிறரை வழிக்கெடுக்காமலும், பிறரால் வழிக்கெடாமலும்; சறுகச் செய்யாமலும், சறுகி விடாமலும்; மூடனாகாமலும், (பிறரை) மூடராக்காமலும்; அநீதி இழைக்காமலும், அநீதி இழைக்கப்படாமலும் இருக்க உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்).


مَا خَرَجَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ بَيْتِي قَطُّ إِلَّا رَفَعَ بَصَرَهُ إِلَى السَّمَاءِ، فَقَالَ: «اللهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أَضِلَّ أَوْ أُضَلَّ، أَوْ أَزِلَّ أَوْ أُزَلَّ، أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلِيَّ، أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ»


Tayalisi-1735

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

1735. மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது, வானத்தை நோக்கி பார்த்துவிட்டு, “அல்லாஹும்ம இன்னீ அவூது பி(க்)க அன் அஸில்ல அவ்அழில்ல அவ் அள்ளிம அவ் உள்லம அவ் அஜ்ஹல அவ் யுஜ்ஹல அலய்ய” என்று கூறும் வழமையுள்ளவர்களாக இருந்தார்கள்.

(பொருள்: அல்லாஹ்வே! நான் பிறரை சறுகச் செய்யாமலும், வழிக்கெடுக்காமலும்; அநீதி இழைக்காமலும், அநீதி இழைக்கப்படாமலும்; மூடனாகாமலும், (பிறரை) மூடராக்காமலும் இருக்க உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்).


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا خَرَجَ مِنْ بَيْتِي رَفَعَ رَأْسَهُ إِلَى السَّمَاءِ، فَقَالَ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أَزِلَّ أَوْ أَضِلَّ أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَيَّ»


Ibn-Majah-3884

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

ஒருவர் வீட்டிலிருந்து வெளியே செல்லும்போது கூறவேண்டிய பிரார்த்தனை.

3884. உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது, “அல்லாஹும்ம இன்னீ அவூது பி(க்)க அன் அழில்ல அவ் அஸில்ல அவ் அள்ளிம அவ் உள்லம அவ் அஜ்ஹல அவ் யுஜ்ஹல அலய்ய” என்று கூறும் வழமையுடையவர்களாக இருந்தார்கள்.

(பொருள்: அல்லாஹ்வே! நான் பிறரை வழிக்கெடுக்காமலும், சறுகி விடச் செய்யாமலும்; நான் அநீதி இழைக்காமலும், அநீதி இழைக்கப்படாமலும்; மூடனாகாமலும், (பிறரை) மூடராக்காமலும் இருக்க உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்).


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا خَرَجَ مِنْ مَنْزِلِهِ قَالَ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أَضِلَّ، أَوْ أَزِلَّ، أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ، أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَيَّ»


Kubra-Bayhaqi-10309

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

10309.


كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا خَرَجَ مِنْ بَيْتِهِ , يَقُولُ: ” بِاسْمِ اللهِ اللهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أَزِلَّ أَوْ أَضِلَّ أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ , أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَيَّ


Hakim-1907

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1907.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا خَرَجَ مِنْ بَيْتِهِ قَالَ: «بِسْمِ اللَّهِ، رَبِّ أَعُوذُ بِكَ أَنْ أَزِلَّ، أَوْ أَضِلَّ، أَوْ أَظْلِمَ، أَوْ أُظْلَمَ، أَوْ أَجْهَلَ، أَوْ يُجْهَلَ عَلَيَّ»


Tirmidhi-3427

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 35

3427. உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தமது வீட்டிலிருந்து வெளியே கிளம்பும்போது, “பிஸ்மில்லாஹி தவக்கல்த்து அலல்லாஹி; அல்லாஹும்ம இன்னா நவூது பிக மின் அன் நஸில்ல, அவ் நழில்ல அவ் நள்லிம அவ் நுள்லம அவ் நஜ்ஹல அவ் யுஜ்ஹல அலைனா” என்று கூறுவார்கள்.

(பொருள்: அல்லாஹ்வின் பெயரால் (புறப்படுகிறேன்) அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்திருக்கிறேன். யாஅல்லாஹ்! நாங்கள் உண்மையிலிருந்து நழுவுதல், அல்லது வழி தவறிப்போதல், அல்லது அநீதம் செய்தல், அல்லது அநீதத்திற்குள்ளாதல் அல்லது அறிவீனமாகச் செயல்படுதல் அல்லது அறிவீனமாக வழி நடத்தப்படுதல் ஆகியவற்றிலிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகிறோம்)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்த ஹதீஸாகும்.


أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا خَرَجَ مِنْ بَيْتِهِ قَالَ: «بِسْمِ اللَّهِ، تَوَكَّلْتُ عَلَى اللَّهِ، اللَّهُمَّ إِنَّا نَعُوذُ بِكَ مِنْ أَنْ نَزِلَّ، أَوْ نَضِلَّ، أَوْ نَظْلِمَ، أَوْ نُظْلَمَ، أَوْ نَجْهَلَ، أَوْ يُجْهَلَ عَلَيْنَا»


Abu-Dawood-5094

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

பாடம்:

ஒருவர் வீட்டிலிருந்து வெளியே செல்லும்போது கூறவேண்டியவை.

5094. உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது, வானத்தை நோக்கி பார்த்துவிட்டு, “அல்லாஹும்ம அவூது பி(க்)க அன் அழில்ல அவ் உழல்ல அவ் அஸில்ல அவ் உஸல்ல அவ் அள்ளிம அவ் உள்லம அவ் அஜ்ஹல அவ் யுஜ்ஹல அலய்ய” என்று கூறாமல் செல்லமாட்டார்கள்.

(பொருள்: அல்லாஹ்வே! நான் பிறரை வழிக்கெடுக்காமலும், பிறரால் வழிக்கெடாமலும்; நான் சறுகி விடாமலும், வழி தவறிவிடாமலும்; அநீதி இழைக்காமலும், அநீதி இழைக்கப்படாமலும்; மூடனாகாமலும், (பிறரை) மூடராக்காமலும் இருக்க உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்).


مَا خَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ بَيْتِي قَطُّ إِلَّا رَفَعَ طَرْفَهُ إِلَى السَّمَاءِ فَقَالَ: «اللَّهُمَّ أَعُوذُ بِكَ أَنْ أَضِلَّ، أَوْ أُضَلَّ، أَوْ أَزِلَّ، أَوْ أُزَلَّ، أَوْ أَظْلِمَ، أَوْ أُظْلَمَ، أَوْ أَجْهَلَ، أَوْ يُجْهَلَ عَلَيَّ»


Abu-Dawood-1048

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்: 208

வெள்ளிக்கிழமையன்று பிரார்த்தனை ஏற்கப்படும் நேரம் எது?

1048. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வெள்ளிக்கிழமையன்று பன்னிரண்டு நாழிகைகள் உள்ளன. (அவற்றில் ஒரு நாழிகையில்) எந்த முஸ்லிம் அல்லாஹ்விடம் எதைக் கேட்கிறாரோ அதை அவருக்கு மாண்பும் வல்லமையுமிக்க அல்லாஹ் கொடுக்காமல் இருப்பதில்லை. அஸருக்குப்பின் கடைசி நேரத்தில் அதைத் தேடிக்கொள்ளுங்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)


«يَوْمُ الْجُمُعَةِ ثِنْتَا عَشْرَةَ – يُرِيدُ – سَاعَةً، لَا يُوجَدُ مُسْلِمٌ يَسْأَلُ اللَّهَ عَزَّ وَجَلَّ شَيْئًا، إِلَّا أَتَاهُ اللَّهُ عَزَّ وَجَلَّ، فَالْتَمِسُوهَا آخِرَ سَاعَةٍ بَعْدَ الْعَصْرِ»


Hakim-2019

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2019.


إِنِّي لَقِيتُ جِبْرِيلَ عَلَيْهِ السَّلَامُ فَبَشَّرَنِي وَقَالَ: إِنَّ رَبَّكَ، يَقُولُ: مَنْ صَلَّى عَلَيْكَ صَلَّيْتُ عَلَيْهِ، وَمَنْ سَلَّمَ عَلَيْكَ سَلَّمْتُ عَلَيْهِ، فَسَجَدْتُ لِلَّهِ شُكْرًا


Kubra-Bayhaqi-3937

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3937.


إِنِّي لَقِيتُ جَبْرَائِيلَ عَلَيْهِ السَّلَامُ فَبَشَّرَنِي وَقَالَ: إِنَّ رَبَّكَ يَقُولُ لَكَ: مَنْ صَلَّى عَلَيْكَ صَلَّيْتُ عَلَيْهِ وَمَنْ سَلَّمَ عَلَيْكَ سَلَّمْتُ عَلَيْهِ فَسَجَدَتُ لِلَّهِ شُكْرًا


Next Page » « Previous Page