Author: Abdul Hakkim

Musnad-Ahmad-24381

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

24381.


«إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ وَمَلَائِكَتَهُ عَلَيْهِمُ السَّلَامُ، يُصَلُّونَ عَلَى الَّذِينَ يَصِلُونَ الصُّفُوفَ»


Ibn-Majah-995

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

995.


«إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلِّونَ عَلَى الَّذِينَ يَصِلُونَ الصُّفُوفَ، وَمَنْ سَدَّ فُرْجَةً رَفَعَهُ اللَّهُ بِهَا دَرْجَةً»


Ibn-Majah-39

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

39.


«مَنْ حَدَّثَ عَنِّي حَدِيثًا وَهُوَ يَرَى أَنَّهُ كَذِبٌ، فَهُوَ أَحَدُ الْكَاذِبَيْنِ»


Hakim-40

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

40. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் என்னிடம் இருந்த சமயத்தில், (அவர்களைச் சந்திக்க) ஒரு மூதாட்டி வந்தார். அவரிடம், “நீங்கள் யார்? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர், “நான் ஜஸ்ஸாமதுல் முஸனிய்யா (சடலம்-முஸனீ கிளையை சேர்ந்தவள் என்ற பெயருடைவர்) என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இல்லை (இனி) உங்கள் பெயர் ஹஸ்ஸானதுல் முஸனிய்யா (அழகானவள்-முஸனீ கிளையை சேர்ந்தவள்) என்று இருக்கட்டும் என்று கூறிவிட்டு, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் நிலை எவ்வாறு உள்ளது? எங்களுக்கு பிறகு எப்படி இருந்தீர்கள்? என்று விசாரித்தார்கள். அதற்கு அம்மூதாட்டி, “அல்லாஹ்வின் தூதரே! எனது தந்தையும், தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! நாங்கள் நலமுடன் இருக்கிறோம் என்று  கூறினார்.

அம்மூதாட்டி சென்ற பிறகு, அல்லாஹ்வின் தூதரே! இந்த மூதாட்டியை இந்தளவிற்கு வரவேற்று விசாரித்தீர்களே! (யார் இவர்?) என்று கேட்டேன். அதற்கவர்கள், “இவர், நான் கதீஜா (ரலி) அவர்களுடன் வாழ்ந்த காலத்தில் (கதீஜாவைக் காண) அடிக்கடி வந்து செல்வார்; (பிறரிடம்) நல்ல முறையில் நடந்துக் கொள்வதும் ஈமானில் அடங்கும்” என்று பதிலளித்தார்கள்.

ஹாகிம் இமாம் கூறுகிறார்:

இது புகாரீ, முஸ்லிம் ஆகியோரின் நிபந்தனைக்குட்பட்ட சரியான ஹதீஸாகும். இதில் இடம்பெற்றுள்ள

جَاءَتْ عَجُوزٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ عِنْدِي، فَقَالَ: لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَنْتِ؟» قَالَتْ: أَنَا جَثَّامَةُ الْمُزَنِيَّةُ، فَقَالَ: «بَلْ أَنْتِ حَسَّانَةُ الْمُزَنِيَّةُ، كَيْفَ أَنْتُمْ؟ كَيْفَ حَالُكُمْ؟ كَيْفَ كُنْتُمْ بَعْدَنَا؟» قَالَتْ: بِخَيْرٍ بِأَبِي أَنْتَ وَأُمِّي يَا رَسُولَ اللَّهِ، فَلَمَّا خَرَجَتْ قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، تُقْبِلُ عَلَى هَذِهِ الْعَجُوزِ هَذَا الْإِقْبَالَ؟ فَقَالَ: «إِنَّهَا كَانَتْ تَأْتِينَا زَمَنَ خَدِيجَةَ، وَإِنَّ حُسْنَ الْعَهْدِ مِنَ الْإِيمَانِ»


ஹம்மாத் பின் ஸலமா, அதா பின் ஸாயிப்-2

சுருக்கம் 2 . ஹம்மாத் பின் ஸலமா, அதா பின் ஸாயிப் அதா பின் ஸாயிப் என்ற அறிவிப்பாளர் நம்பகமானவர் என்பதில் ஐயமில்லை. அது போல் அவரிடம் ஹதீஸ்களைக் கேட்ட ஹம்மாத் பின் ஸலமாவும் நம்பகமான அறிவிப்பாளராவார். ஆனால் அதா பின் ஸாயிப் வழியாக ஹம்மாத் அறிவிக்கும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று அல்பானி அவர்கள் கூறி ஏராளமான ஹதீஸ்களை பலவீனமானவை என்று கூறியுள்ளார். அதா பின் ஸாயிப் இறுதிக்காலத்தில் மனக்குழப்பத்துக்கு...

1-மஜ்ஹூல்-அறியப்படாதவர்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم 1 . மஜ்ஹூல், மஃரூப், ஸிகத் – யாரென அறியப்படாதவர், அறியப்பட்டவர், பலமானவர் என்று எவ்வாறு முடிவு செய்வது? சுருக்கம் 1 . ஒரு அறிவிப்பாளர் அறியப்படாதவர் என்று பலர் கூறியிருக்கிறார்கள். அல்லது யாருமே அவரைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. 2 . அல்லது இஸ்மாயீல் என்று ஒருவர் இருந்தார். அவர் இந்த ஊர்க்காரர்; இந்தக் காலத்தவர் என்பன போன்ற விஷயங்களை மட்டுமே ஒருவர் குறிப்பிட்டால்...

Alilal-Ibn-Abi-Hatim-2211

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2211. இப்னு அபூஹாதிம் அவர்கள் கூறுகிறார்:

நான், எனது தந்தை அபூஹாதிம் அர்ராஸீ அவர்களிடம், இப்னு உயைனா அவர்கள் அப்துல்லாஹ் பின் அபூநஜீஹ் —> அப்துல்லாஹ் பின் ஆமிர் —> அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில்,

“நம்மில் சிறியவருக்கு இரக்கம் காட்டாதோரும், பெரியவருக்கு செய்ய வேண்டிய மரியாதையை அறியாதோரும் நம்மைச் சார்ந்தவர்கள் இல்லை”

என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கும் செய்தி பற்றி கேட்டேன். அதற்கு என் தந்தை அப்துல்லாஹ் பின் அபூநஜீஹ் —> உபைதுல்லாஹ் பின் ஆமிர் —> அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) —> நபி (ஸல்) என்று வந்திருப்பதே சரியானதாகும்-(அப்துல்லாஹ் பின் ஆமிர் என்று கூறியிருப்பது தவறாகும்) என்று கூறினார்.


مَن لَم يَرحَم صَغِيرَنا وَيَعرِف حَقَّ كَبِيرِنا فَلَيسَ مِنّا

قالَ أَبِي : الصَّحِيحُ ابنُ أَبِي نَجِيحٍ ، عَن عُبَيدِ اللهِ بنِ عامِرٍ ، عَن عَبدِ اللهِ بنِ عَمرٍو ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.


Al-Adabul-Mufrad-363

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

(வயதில்) சிறியவருக்கு (அன்பு செலுத்துதல்,) இரக்கம் காட்டுதல்.

363. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நம்மில் சிறியவருக்கு இரக்கம் காட்டாதோரும், பெரியவருக்கு செய்ய வேண்டிய மரியாதையை அறியாதோரும் நம்மைச் சார்ந்தவர்கள் இல்லை.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«لَيْسَ مِنَّا مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا، وَيَعْرِفْ حَقَّ كَبِيرِنَا»


Almujam-Alawsat-5927

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5927. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நம்மில் பெரியவருக்கு மரியாதை செய்யாதோரும்; சிறியவருக்கு இரக்கம் காட்டாதோரும் நம்மைச் சார்ந்தவர்கள் இல்லை.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)


«لَيْسَ مِنَّا مَنْ لَمْ يُوَقِّرْ كَبِيرَنَا، وَيَرْحَمْ صَغِيرَنَا»


Shuabul-Iman-10478

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

10478. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நம்மில் பெரியவருக்கு மரியாதை செய்யாதோரும்; சிறியவருக்கு செய்ய வேண்டிய கடமையை அறியாதோரும் நம்மைச் சார்ந்தவர்கள் இல்லை.

மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நரைமுடி உடைய, முஸ்லிமான (முதிய)வரை கண்ணியப்படுத்துவது அல்லாஹ்வை கண்ணியப்படுத்துவதில் சேர்ந்ததாகும்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)


لَيْسَ مِنَّا مَنْ لَمْ يُوَقِّرْ كَبِيرَنَا وَيَعْرِفْ حَقَّ صَغِيرِنَا

وَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ مِنْ إِجْلَالِ اللهِ إِكْرَامَ ذِي الشَّيْبَةِ الْمُسْلِمِ


Next Page » « Previous Page