Author: Abdul Hakkim

Bazzar-2718

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2718.


«لَيْسَ مِنَّا مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا وَيُجِلَّ كَبِيرَنَا وَيَفِ لِعَالِمِنَا»


Hakim-421

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

421.


«لَيْسَ مِنَّا مَنْ لَمْ يُجِلَّ كَبِيرَنَا، وَيَرْحَمْ صَغِيرَنَا، وَيَعْرِفْ لِعَالِمِنَا»


Almujam-Alkabir-7703

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

7703. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நம்மில் பெரியவருக்கு மரியாதை செய்யாதோரும்; சிறியவருக்கு இரக்கம் காட்டாதோரும் நம்மைச் சார்ந்தவர்கள் இல்லை.

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)


«لَيْسَ مِنَّا مَنْ لَمْ يَجِلَّ كَبِيرَنَا، وَيَرْحَمْ صَغِيرَنَا»


Almujam-Alkabir-7895

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

7895. அபூஉமாமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள், தனது தோழர்களுடன் (சபையில்) இருந்தார்கள். அவர்களில் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) ஆகியோரும் இருந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு குவளை பானம் (அன்பளிப்பாக) வந்தது. நபி (ஸல்) அவர்கள் அதை அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களிடம் கொடுத்தார்கள். அதற்கு அபூஉபைதா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! இதை அருந்துவதற்கு நீங்களே மிகவும் தகுதிமிக்கவர் என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (குவளையை பிடியுங்கள்) என்று கூறினார்கள். எனவே அபூஉபைதா (ரலி) அவர்கள் அதை வாங்கிகொண்டார். என்றாலும் அதை குடிப்பதற்கு முன் மீண்டும் அல்லாஹ்வின் தூதரே! இதை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீங்களே இதைக் குடியுங்கள். பரக்கத் என்பது நம்மில் பெரியவர்களிடம் உள்ளது. நம்மில் சிறியவருக்கு இரக்கம் காட்டாதோரும் பெரியவருக்கு மரியாதை செய்யாதோரும்  நம்மைச் சார்ந்தவர்கள் இல்லை” என்று கூறினார்கள்.


بَيْنَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَعَهُ أَبُو بَكْرٍ وَعُمَرُ، وَأَبُو عُبَيْدَةَ بْنُ الْجَرَّاحِ رَضِيَ اللهُ عَنْهُمْ فِي نَفَرٍ مِنْ أَصْحَابِهِ إِذْ أُتِيَ بِقَدَحٍ فِيهِ شَرَابٌ، فَنَاوَلَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبَا عُبَيْدَةَ، فَقَالَ أَبُو عُبَيْدَةَ: أَنْتَ أَوْلَى بِهِ يَا نَبِيَّ اللهِ. قَالَ: خُذْ فَأَخَذَ أَبُو عُبَيْدَةَ الْقَدَحَ، ثُمَّ قَالَ لَهُ قَبْلَ أَنْ: يَشْرَبَ خُذْ يَا نَبِيَّ اللهِ، قَالَ نَبِيُّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اشْرَبْ، فَإِنَّ الْبَرَكَةَ فِي أَكَابِرِنَا، فَمَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا، وَيُجِلَّ كَبِيرَنَا فَلَيْسَ مِنَّا»


Almujam-Alkabir-7922

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

7922. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நம்மில் பெரியவருக்கு மரியாதை செய்யாதோரும்; சிறியவருக்கு இரக்கம் காட்டாதோரும் நம்மைச் சார்ந்தவர்கள் இல்லை.

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)


«مَنْ لَمْ يُجِلَّ كَبِيرَنَا، وَيَرْحَمْ صَغِيرَنَا فَلَيْسَ مِنَّا»


Al-Adabul-Mufrad-356

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

356. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நம்மில் சிறியவருக்கு இரக்கம் காட்டாதோரும்; பெரியவருக்கு மரியாதை செய்யாதோரும் நம்மைச் சார்ந்தவர்கள் இல்லை.

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)


«مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا، وَيُجِلَّ كَبِيرَنَا، فَلَيْسَ مِنَّا»


Shuabul-Iman-10473

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

10473. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நம்மில் சிறியவருக்கு இரக்கம் காட்டாதோரும், பெரியவருக்கு செய்ய வேண்டிய மரியாதையை அறியாதோரும் நம்மைச் சார்ந்தவர்கள் இல்லை.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا وَيَعْرِفْ حَقَّ كَبِيرِنَا، فَلَيْسَ مِنَّا


Hakim-7353

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7353. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நம்மில் சிறியவருக்கு இரக்கம் காட்டாதோரும், பெரியவருக்கு செய்ய வேண்டிய மரியாதையை அறியாதோரும் நம்மைச் சார்ந்தவர்கள் இல்லை.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا وَيَعْرِفْ حَقَّ كَبِيرِنَا فَلَيْسَ مِنَّا»


Al-Adabul-Mufrad-353

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

பெரியோரின் சிறப்பு.

353. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நம்மில் சிறியவருக்கு இரக்கம் காட்டாதோரும், பெரியவருக்கு செய்ய வேண்டிய மரியாதையை அறியாதோரும் நம்மைச் சார்ந்தவர்கள் இல்லை.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا، وَيَعْرِفْ حَقَّ كَبِيرِنَا، فَلَيْسَ مِنَّا»


Next Page » « Previous Page