Author: Abdul Hakkim

Hakim-209

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

209. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நம்மில் சிறியவருக்கு இரக்கம் காட்டாதோரும், பெரியவருக்கு செய்ய வேண்டிய மரியாதையை அறியாதோரும் நம்மைச் சார்ந்தவர்கள் இல்லை.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

ஹாகிம் இமாம் கூறுகிறார்:


«لَيْسَ مِنَّا مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا وَيَعْرِفْ حَقَّ كَبِيرِنَا»


Musnad-Ahmad-6935

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6935. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நம்மில் பெரியவருக்கு செய்ய வேண்டிய மரியாதையை அறியாதோரும்; சிறியவருக்கு இரக்கம் காட்டாதோரும் நம்மைச் சார்ந்தவர்கள் இல்லை.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«لَيْسَ مِنَّا مَنْ لَمْ يَعْرِفْ حَقَّ كَبِيرِنَا، وَيَرْحَمْ صَغِيرَنَا»


Musnad-Ahmad-6733

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6733. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நம்மில் சிறியவருக்கு இரக்கம் காட்டாதோரும், பெரியவருக்கு செய்ய வேண்டிய மரியாதையை அறியாதோரும் நம்மைச் சார்ந்தவர்கள் இல்லை.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«لَيْسَ مِنَّا مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا، وَيَعْرِفْ حَقَّ كَبِيرِنَا»


Tirmidhi-1920

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1920. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நம்மில் சிறியவருக்கு இரக்கம் காட்டாதோரும், பெரியவருக்கு செய்ய வேண்டிய மரியாதையை அறியாதோரும் நம்மைச் சார்ந்தவர்கள் இல்லை.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«لَيْسَ مِنَّا مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا وَيَعْرِفْ شَرَفَ كَبِيرِنَا»

حَدَّثَنَا هَنَّادٌ قَالَ: حَدَّثَنَا عَبْدَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، نَحْوَهُ، إِلَّا أَنَّهُ قَالَ: «وَيَعْرِفْ حَقَّ كَبِيرِنَا»


Shuabul-Iman-10476

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

10476. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நம்மில் சிறியவருக்கு இரக்கம் காட்டாதோரும், பெரியவருக்கு மரியாதை செய்யாதோரும் நம்மைச் சார்ந்தவர்கள் இல்லை.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


لَيْسَ مِنَّا مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا وَيُعَظِّمْ كَبِيرَنَا


Almujam-Alawsat-4812

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4812. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நம்மில் பெரியவருக்கு மரியாதை செய்யாதோரும்; சிறியவருக்கு இரக்கம் காட்டாதோரும்; நம்முடன் சகோதரத்துவ அன்புடன் நடந்துக்கொள்ளாதவரும், நம்மை சந்திக்காதவரும் நம்மைச் சார்ந்தவர்கள் இல்லை.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


«لَيْسَ مِنَّا مَنْ لَمْ يُوَقِّرْ كَبِيرَنَا، وَيَرْحَمْ صَغِيرَنَا، وَيُؤَاخِي فِينَا وَيَزُورُ»


Abi-Yala-4242

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4242. ஒரு முதியவர் ஒரு தேவையின் நிமித்தமாக நபி (ஸல்) அவர்களின் சபைக்கு வந்தார். அவருக்கு இடமளிக்க மக்கள் தாமதித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், நம்மில் சிறியவருக்கு இரக்கம் காட்டாதோரும்; பெரியவருக்கு மரியாதை செய்யாதோரும் நம்மைச் சார்ந்தவர்கள் இல்லை என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


جَاءَ شَيْخٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَاجَتِهِ فَأَبْطَئُوا عَنِ الشَّيْخِ أَنْ يُوَسِّعُوا لَهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسَ مِنَّا مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا، وَيُوَقِّرْ كَبِيرَنَا»


Abi-Yala-4241

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4241. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள், (ஒரு சமயம்) நபி (ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள், தம் தலையை உயர்த்திய போது (தமக்கு முன்) முதியவர் ஒருவர் முன்னோக்கி வருவதை கண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், நம்மில் பெரியவருக்கு மரியாதை செய்யாதோரும்; சிறியவருக்கு இரக்கம் காட்டாதோரும் நம்மைச் சார்ந்தவர்கள் இல்லை என்று கூறினார்கள்.


بَيْنَمَا نَحْنُ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ رَفَعَ رَأْسَهُ فَإِذَا هُوَ شَيْخٌ قَدْ أَقْبَلَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسَ مِنَّا مَنْ لَمْ يُوَقِّرْ كَبِيرَنَا، وَيَرْحَمْ صَغِيرَنَا»


Abi-Yala-3476

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3476. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நம்மில் பெரியவருக்கு மரியாதை செய்யாதோரும்; சிறியவருக்கு இரக்கம் காட்டாதோரும் நம்மைச் சார்ந்தவர்கள் இல்லை.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


«لَيْسَ مِنَّا مَنْ لَمْ يُوَقِّرْ كَبِيرَنَا، وَيَرْحَمْ صَغِيرَنَا»


Next Page » « Previous Page