Author: Abdul Hakkim

Shuabul-Iman-10474

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

10474. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நம்மில் சிறியவருக்கு இரக்கம் காட்டாதோரும்; பெரியவருக்கு மரியாதை செய்யாதோரும்; நன்மையை ஏவி, தீமையைத் தடுக்காதோரும் நம்மைச் சார்ந்தவர்கள் இல்லை.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

பைஹகீ இமாம் கூறுகிறார்:


لَيْسَ مِنَّا مَنْ لَمْ يُوَقِّرْ كَبِيرَنَا وَيَعْرِفْ حَقَّ صَغِيرَنَا وَيَأْمُرْ بِالْمَعْرُوفِ وَيَنْهَ عَنِ الْمُنْكَرِ

عَبْدُ الْمَلِكِ هَذَا هُوَ ابْنُ أَبِي بَشِيرٍ،

وَكَذَلِكَ رَوَاهُ شَرِيكٌ، عَنْ لَيْثٍ، وَرَوَاهُ جَرِيرٌ، عَنْ لَيْثٍ، عَنْ عَبْدِ الْمَلِكِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، وَعِكْرِمَةَ


Almujam-Alkabir-12276

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

12276. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நம்மில் சிறியவருக்கு இரக்கம் காட்டாதோரும்; பெரியவருக்கு மரியாதை செய்யாதோரும்; நமக்கு செய்ய வேண்டிய கடமையை அறியாதோரும் நம்மைச் சார்ந்தவர்கள் இல்லை.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


«لَيْسَ مِنَّا مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا، وَيُوَقِّرْ كَبِيرَنَا، وَيَعْرِفْ لَنَا حَقَّنَا»


Almujam-Alkabir-11083

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

11083. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நம்மில் பெரியவருக்கு மரியாதை செய்யாதோரும்; சிறியவருக்கு இரக்கம் காட்டாதோரும்; நன்மையை ஏவி, தீமையைத் தடுக்காதோரும் நம்மைச் சார்ந்தவர்கள் இல்லை.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


«لَيْسَ مِنَّا مَنْ لَمْ يُوَقِّرِ الْكَبِيرَ، وَيَرْحَمِ الصَّغِيرَ، وَيَأْمُرْ بِالْمَعْرُوفِ، وَيَنْهَ عَنِ الْمُنْكَرِ»


Ibn-Hibban-464

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

முஸ்லிமான பெரியோருக்கு மரியாதை செய்வதையும், சிறியோருக்கு இரக்கம் காட்டுவதையும் விட்டுவிடுவது பற்றி வந்துள்ள கண்டனம்.

464. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

பெரியவருக்கு மரியாதை செய்யாதோரும், சிறியவருக்கு இரக்கம் காட்டாதோரும், நன்மையை ஏவி, தீமையைத் தடுக்காதோரும் நம்மைச் சார்ந்தவர்கள் இல்லை.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


«لَيْسَ مِنَّا مَنْ لَمْ يُوَقِّرِ الْكَبِيرَ، وَيَرْحَمِ الصَّغِيرَ، وَيَأْمُرْ بِالْمَعْرُوفِ، وَيَنْهَ عَنِ الْمُنْكَرِ»


Musnad-Ahmad-2329

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2329. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

பெரியவருக்கு மரியாதை செய்யாதோரும், சிறியவருக்கு இரக்கம் காட்டாதோரும், நன்மையை ஏவி, தீமையைத் தடுக்காதோரும் நம்மைச் சார்ந்தவர்கள் இல்லை.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


«لَيْسَ مِنَّا مَنْ لَمْ يُوَقِّرِ الْكَبِيرَ، وَيَرْحَمِ الصَّغِيرَ وَيَأْمُرْ بِالْمَعْرُوفِ، وَيَنْهَى عَنِ الْمُنْكَرِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-25359

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

25359. நம்மில் சிறியவருக்கு இரக்கம் காட்டாதோரும், பெரியவருக்கு செய்ய வேண்டிய மரியாதையை அறியாதோரும் நம்மைச் சார்ந்தவர்கள் இல்லை (என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்)

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا، وَيَعْرِفْ حَقَّ كَبِيرِنَا , فَلَيْسَ مِنَّا»


Musnad-Ahmad-7073

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7073. நம்மில் சிறியவருக்கு இரக்கம் காட்டாதோரும், பெரியவருக்கு செய்ய வேண்டிய மரியாதையை அறியாதோரும் நம்மைச் சார்ந்தவர்கள் இல்லை.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا وَيَعْرِفْ حَقَّ كَبِيرِنَا فَلَيْسَ مِنَّا»


Abu-Dawood-4943

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4943. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நம்மில் சிறியவருக்கு இரக்கம் காட்டாதோரும், பெரியவருக்கு செய்ய வேண்டிய மரியாதையை அறியாதோரும் நம்மைச் சார்ந்தவர்கள் இல்லை.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا، وَيَعْرِفْ حَقَّ كَبِيرِنَا فَلَيْسَ مِنَّا»


Tirmidhi-1919

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

சிறுவர்கள் மீது இரக்கம் காட்டுவது பற்றி வந்துள்ளவை.

1919. ஒரு முதியவர் நபி (ஸல்) அவர்களின் சபைக்கு வந்தார். அவருக்கு இடமளிக்க மக்கள் தாமதித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், நம்மில் சிறியவருக்கு இரக்கம் காட்டாதோரும், பெரியவருக்கு மரியாதை செய்யாதோரும் நம்மைச் சார்ந்தவர்கள் இல்லை என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருளில் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), அபூஹுரைரா (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி), அபூஉமாமா (ரலி) ஆகியோர் வழியாகவும் ஹதீஸ்கள் வந்துள்ளன. மேற்கண்ட அனஸ் (ரலி) வழியாக வரும் செய்தி அரிதான செய்தியாகும். (காரணம் இதில் வரும் அறிவிப்பாளரான) ஸர்பிய்யு பின் அப்துல்லாஹ் என்பவர் அனஸ் (ரலி) வழியாகவும், மற்றவர்கள் வழியாகவும் சில முன்கரான செய்திகளை அறிவித்துள்ளார்.


جَاءَ شَيْخٌ يُرِيدُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَبْطَأَ القَوْمُ عَنْهُ أَنْ يُوَسِّعُوا لَهُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسَ مِنَّا مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا وَيُوَقِّرْ كَبِيرَنَا»


Abu-Dawood-5137

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

பெற்றோருக்கு உபகாரம் செய்தல்.

5137. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தன்னுடைய தந்தை அடிமையாக இருப்பதைக் கண்டு அவரை விலைக்கு வாங்கி விடுதலை செய்கின்ற (காரியத்தைத்) தவிர (வேறு எந்தக் காரியத்தைச்) செய்தாலும் மகன் தன் தந்தைக்கு (அவர் செய்த உபகாரத்திற்கு) ஈடு செய்தவராக ஆகமாட்டார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«لَا يَجْزِي وَلَدٌ وَالِدَهُ، إِلَّا أَنْ يَجِدَهُ مَمْلُوكًا فَيَشْتَرِيَهُ فَيُعْتِقَهُ»


Next Page » « Previous Page