Author: Abdul Hakkim

Tirmidhi-1906

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

பெற்றோருக்கு செய்யவேண்டிய கடமைகள் பற்றி வந்துள்ளவை.

1906. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தன்னுடைய தந்தை அடிமையாக இருப்பதைக் கண்டு அவரை விலைக்கு வாங்கி விடுதலை செய்கின்ற (காரியத்தைத்) தவிர (வேறு எந்தக் காரியத்தைச்) செய்தாலும் மகன் தன் தந்தைக்கு (அவர் செய்த உபகாரத்திற்கு) ஈடு செய்தவராக ஆகமாட்டார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்த செய்தி ஹஸன்-ஸஹீஹ் என்ற தரத்தில் உள்ளதாகும். மேலும் இந்த செய்தி ஸுஹைல் பின் அபூஸாலிஹ் அவர்களின் வழியாகவே வந்துள்ளதாக அறிகிறோம். இந்த செய்தியை இவரிடமிருந்து ஸுஃப்யான் ஸவ்ரீ அவர்களும், வேறு சிலரும் அறிவித்துள்ளனர்.

«لَا يَجْزِي وَلَدٌ وَالِدًا إِلَّا أَنْ يَجِدَهُ مَمْلُوكًا فَيَشْتَرِيَهُ فَيُعْتِقَهُ»

Musnad-Ahmad-9745

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

9745. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தன்னுடைய தந்தை அடிமையாக இருப்பதைக் கண்டு அவரை விலைக்கு வாங்கி விடுதலை செய்கின்ற (காரியத்தைத்) தவிர (வேறு எந்தக் காரியத்தைச்) செய்தாலும் மகன் தன் தந்தைக்கு (அவர் செய்த உபகாரத்திற்கு) ஈடு செய்தவராக ஆகமாட்டார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

«لَا يَجْزِي وَلَدٌ وَالِدَهُ، إِلَّا أَنْ يَجِدَهُ مَمْلُوكًا فَيَشْتَرِيَهُ فَيُعْتِقَهُ»

Musnad-Ahmad-8893

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

8893. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தன்னுடைய தந்தை அடிமையாக இருப்பதைக் கண்டு அவரை விலைக்கு வாங்கி விடுதலை செய்கின்ற (காரியத்தைத்) தவிர (வேறு எந்தக் காரியத்தைச்) செய்தாலும் மகன் தன் தந்தைக்கு (அவர் செய்த உபகாரத்திற்கு) ஈடு செய்தவராக ஆகமாட்டார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

«لَا يَجْزِي وَلَدٌ وَالِدَهُ، إِلَّا أَنْ يَجِدَهُ مَمْلُوكًا فَيَشْتَرِيَهُ فَيُعْتِقَهُ»

Musnad-Ahmad-7570

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7570. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தன்னுடைய தந்தை அடிமையாக இருப்பதைக் கண்டு அவரை விலைக்கு வாங்கி விடுதலை செய்கின்ற (காரியத்தைத்) தவிர (வேறு எந்தக் காரியத்தைச்) செய்தாலும் மகன் தன் தந்தைக்கு (அவர் செய்த உபகாரத்திற்கு) ஈடு செய்தவராக ஆகமாட்டார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

«لَا يَجْزِي وَلَدٌ وَالِدَهُ، إِلَّا أَنْ يَجِدَهُ مَمْلُوكًا، فَيَشْتَرِيَهُ فَيُعْتِقَهُ»

Musnad-Ahmad-7143

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7143. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தன்னுடைய தந்தை அடிமையாக இருப்பதைக் கண்டு அவரை விலைக்கு வாங்கி விடுதலை செய்கின்ற (காரியத்தைத்) தவிர (வேறு எந்தக் காரியத்தைச்) செய்தாலும் மகன் தன் தந்தைக்கு (அவர் செய்த உபகாரத்திற்கு) ஈடு செய்தவராக ஆகமாட்டார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

«لَا يَجْزِي وَلَدٌ وَالِدَهُ، إِلَّا أَنْ يَجِدَهُ مَمْلُوكًا، فَيَشْتَرِيَهُ فَيُعْتِقَهُ»

Ibn-Hibban-458

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

பாடம்:

முஸ்லிமான பெரியோருக்கு மரியாதை செய்வதையும், சிறியோருக்கு இரக்கம் காட்டுவதையும் விட்டுவிடுவது பற்றி வந்துள்ள கண்டனம்.

458. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

பெரியவருக்கு மரியாதை செய்யாதோரும், சிறியவருக்கு இரக்கம் காட்டாதோரும், நன்மையை ஏவி, தீமையைத் தடுக்காதோரும் நம்மைச் சார்ந்தவர்கள் இல்லை.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

«لَيْسَ مِنَّا مَنْ لَمْ يُوَقِّرِ الْكَبِيرَ، وَيَرْحَمِ الصَّغِيرَ، وَيَأْمُرْ بِالْمَعْرُوفِ، وَيَنْهَ عَنِ الْمُنْكَرِ»

Tirmidhi-1921

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1921. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நம்மில் சிறியவருக்கு இரக்கம் காட்டாதோரும்; பெரியவருக்கு மரியாதை செய்யாதோரும்; நன்மையை ஏவி, தீமையைத் தடுக்காதோரும் நம்மைச் சார்ந்தவர்கள் இல்லை.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

«لَيْسَ مِنَّا مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا، وَيُوَقِّرْ كَبِيرَنَا، وَيَأْمُرْ بِالمَعْرُوفِ وَيَنْهَ عَنِ المُنْكَرِ»

Nasaayi-2562

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

பாடம்:

கொடுத்ததை சொல்லிக் காட்டுபவன்.

2562. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூன்று நபர்களை அல்லாஹ் மறுமை நாளில் (கருணைக் கண்கொண்டு) பார்க்க மாட்டான்.

1. தன்னுடைய பெற்றோருக்கு துன்பம் தருபவன்.
2. ஆண்களைப் போன்று வேடமிடக்கூடிய பெண்.
3. தன்னுடைய மனைவி தவறான நடத்தை கொண்டவளாக இருப்பதை அறிந்தும் ரோஷம் கொள்ளாத கணவன் ஆகியோராவர்.

இன்னும் மூன்று நபர்கள் சுவர்க்கம் புகமாட்டார்கள்.

1. தன்னுடைய பெற்றோருக்கு துன்பம் தருபவன்.
2. நிரந்தரமாக மது அருந்துபவன்.
3. கொடுத்ததை சொல்லிக் காட்டுபவன்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

ثَلَاثَةٌ لَا يَنْظُرُ اللَّهُ عَزَّ وَجَلَّ إِلَيْهِمْ يَوْمَ الْقِيَامَةِ: الْعَاقُّ لِوَالِدَيْهِ، وَالْمَرْأَةُ الْمُتَرَجِّلَةُ، وَالدَّيُّوثُ، وَثَلَاثَةٌ لَا يَدْخُلُونَ الْجَنَّةَ: الْعَاقُّ لِوَالِدَيْهِ، وَالْمُدْمِنُ عَلَى الْخَمْرِ، وَالْمَنَّانُ بِمَا أَعْطَى

Nasaayi-5672

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

5672. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கொடுத்ததை சொல்லிக் காட்டுபவர்; தன்னுடைய பெற்றோருக்கு துன்பம் தருபவர்; நிரந்தரமாக மது அருந்துபவர் ஆகியோர் சுவர்க்கம் புகமாட்டார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

«لَا يَدْخُلُ الْجَنَّةَ مَنَّانٌ، وَلَا عَاقٌّ، وَلَا مُدْمِنُ خَمْرٍ»

Ibn-Majah-3659

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3659. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

தன்னுடைய தந்தையை அடிமையாகப் பெற்று அவரை விலைக்கு வாங்கி விடுதலை செய்கின்ற (காரியத்தை ) தவிர (வேறு எந்தக் காரியத்தைச்) செய்தாலும் மகன் தந்தைக்கு (அவர் செய்த உபகாரத்திற்கு) ஈடு செய்தவராக ஆகமாட்டார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

«لَا يَجْزِي وَلَدٌ وَالِدَهُ، إِلَّا أَنْ يَجِدَهُ مَمْلُوكًا فَيَشْتَرِيَهُ فَيُعْتِقَهُ»

Next Page » « Previous Page