Author: Abdul Hakkim

Abu-Dawood-4159

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

அத்தியாயம்: 32

தலை வாருதல்.

4159. அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருநாள் விட்டு ஒருநாள் தலைவாருவதைத் தவிர (அடிக்கடி வரம்புமீறி)  தலைவாருவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.


«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ التَّرَجُّلِ إِلَّا غِبًّا»


Musannaf-Abdur-Razzaq-21440

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 201

முடி (யை பராமரித்தல்)

21440. நீ முடியை வளர்த்தால் (அதை சரியாக பராமரித்து) அதற்கு மதிப்பளி! என்று அபூகதாதா (ரலி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

எனவே அபூகதாதா (ரலி) அவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு தடவை (என்று கருதுகிறேன்) தலைவாரக் கூடியவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் பின் அப்துர்ரஹ்மான் (ரஹ்)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لأَبِي قَتَادَةَ: إِنِ اتَّخَذْتَ شَعَرًا فَأَكْرِمْهُ، قَالَ: وَكَانَ أَبو قَتَادَةَ، حَسِبْتُ، يُرَجِّلُهُ كُلَّ يَوْمٍ مَرَّتَيْنِ.


Shuabul-Iman-6038

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6038. நீ முடியை வளர்த்தால் (அதை சரியாக பராமரித்து) அதற்கு மதிப்பளி! என்று அபூகதாதா (ரலி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

எனவே அபூகதாதா (ரலி) அவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு தடவை (என்று கருதுகிறேன்) தலைவாரக் கூடியவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பவர்: ஸயீத் பின் அப்துர்ரஹ்மான் அவர்களின் ஆசிரியர்கள்.


أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ لِأَبِي قَتَادَةَ: ” إِنِ اتَّخَذَتْ شَعْرًا فَأَكْرِمْهُ ” قَالَ: فَكَانَ أَبُو قَتَادَةَ حَسِبْتُ يُرَجِّلُهُ كُلَّ يَوْمٍ مَرَّتَيْنِ


Akhbar-Asbahan-700

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

700. உங்களில் யார் முடியை வளர்க்கிறாரோ அவர் அதற்கு மதிப்பளிக்கட்டும்! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அப்போது அவர்களிடம்), அல்லாஹ்வின் தூதரே! அதற்கு எவ்வாறு மதிப்பளிக்க வேண்டும் என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், “தினமும் அதற்கு எண்ணெய் தேய்த்து, தலைவாருவது” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


«مَنْ رَبَّى مِنْكُمْ شَعْرًا فَلْيُكْرِمْهُ» ، قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، وَمَا كَرَامَتُهُ؟ قَالَ: «يَدْهُنُهُ، وَيُمَشِّطُهُ كُلَّ يَوْمٍ»


Shuabul-Iman-6041

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6041.


كَانَتْ لِأَبِي قَتَادَةَ جُمَّةٌ فَقَالَ لَهُ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” أَكْرِمْهَا ” فَكَانَ يُرَجِّلُهَا غِبًّا


Almujam-Alawsat-671

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

671.


كَانَ لِأَبِي قَتَادَةَ جُمَّةٌ، فَسَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيهَا؟ فَقَالَ: «أَكْرِمْهَا وادَّهِنْهَا»


Almujam-Alawsat-3933

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3933. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் முடி வளர்க்கிறாரோ அவர், அதை அழகுற வைத்துக்கொள்ளட்டும். அல்லது (அவ்வாறு முடியாவிட்டால்) முடியை சிரைத்து விடட்டும்.

அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார்:

அபூகதாதா (ரலி) அவர்கள், ஒரு நாள்விட்டு ஒருநாள் தலைவாருவார்கள்.


«مَنِ اتَّخَذَ شَعْرًا فَلْيُحْسِنْ إِلَيْهِ أَوْ لِيَحْلِقْهُ»

وَكَانَ أَبُو قَتَادَةَ يُرَجِّلُ شَعْرًا غِبًّا


Kubra-Nasaayi-9262

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

9262. அபூகதாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:

எனக்கு (தோல்பட்டை வரைக்கும்) அடர்த்தியான தலை முடி இருந்து. இது பற்றி நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், முடியை அழகுப்படுத்துமாறும், ஒவ்வொரு நாளும் (தலை வாரி) சீவுமாறும் கட்டளையிட்டார்கள்.


كَانَتْ لَهُ جُمَّةٌ ضَخْمَةٌ فَسَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَمَرَهُ أَنْ يُحْسِنَ إِلَيْهَا، وَأَنْ يَتَرَجَّلَ كُلَّ يَوْمٍ


Muwatta-Malik-2731

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2731.


أَنَّ أَبَا قَتَادَةَ الأَنْصَارِيَّ قَالَ لِرَسُولِ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ: إِنَّ لِي جُمَّةً أَفَأُرَجِّلُهَا؟ فَقَالَ رَسُولُ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ: نَعَمْ، وَأَكْرِمْهَا، فَكَانَ أَبُو قَتَادَةَ رُبَّمَا دَهَنَهَا فِي الْيَوْمِ مَرَّتَيْنِ، لِمَا قَالَ لَهُ رَسُولُ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ: وَأَكْرِمْهَا.


Musannaf-Ibn-Abi-Shaybah-25071

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

25071.


مَازَحَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبَا قَتَادَةَ قَالَ: «احْذَرْ جُمَّتَكَ»، قَالَ: «لَكَ مَكَانَهَا أَسْتُرُ»، فَقَالَ لَهُ بَعْدَ ذَلِكَ: «أَكْرِمْهَا» , فَكَانَ يَتَّخِذُ لَهَا بَعْدَ ذَلِكَ السُّدَّ


Next Page » « Previous Page