Author: Abdul Hakkim

Hakim-1370

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1370. ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கப்ரை, காரையால் (சுண்ணாம்புக் கலவையால்) பூசுவதையும்; அதன் மீது எழுதுவதையும்; அதன் மீது கட்டடம் எழுப்புவதையும்; அதன் மீது உட்காருவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.


«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ تَجْصِيصِ الْقُبُورِ، وَالْكِتَابَةِ فِيهَا، وَالْبِنَاءِ عَلَيْهَا، وَالْجُلُوسِ عَلَيْهَا»


Hakim-1369

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1369. ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கப்ரின் மீது கட்டடம் எழுப்புவதையும் அல்லது அதைக் காரையால் (சுண்ணாம்புக் கலவையால்) பூசுவதையும் அல்லது அதன் மீது உட்காருவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

மேலும் அதன் மீது எழுதுவதையும் தடை செய்தார்கள்.


«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُبْنَى عَلَى الْقَبْرِ، أَوْ يُجَصَّصَ، أَوْ يَقْعُدَ عَلَيْهِ، وَنَهَى أَنْ يُكْتَبَ عَلَيْهِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-11779

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

11779. ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கப்ரின் மீது அமர்வதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.


«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُقْعَدَ عَلَيْهَا»


Musannaf-Ibn-Abi-Shaybah-11764

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

11764. ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கப்ரை, காரையால் (சுண்ணாம்புக் கலவையால்) பூசுவதையும்; அதன் மீது உட்காருவதையும்; அதன் மீது கட்டடம் எழுப்புவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.


«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُجَصَّصَ الْقَبْرُ، وَأَنْ يُقْعَدَ عَلَيْهِ، وَأَنْ يُبْنَى عَلَيْهِ»


Musannaf-Abdur-Razzaq-6488

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6488. எவரும் கப்ரின் மீது அமர்வதையும்; அதைக் காரையால் (சுண்ணாம்புக் கலவையால்) பூசுவதையும்; அதன் மீது கட்டடம் எழுப்புவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்ததை நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)


«نَهَى أَنْ يَقْعُدَ الرَّجُلُ عَلَى الْقَبْرِ، وَأَنْ يُقَصَّصَ، وَأَنْ يُبْنَى عَلَيْهِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-11742

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

11742. ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கப்ரின் மீது கட்டடம் எழுப்புவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

இவ்வாறே அபுஸ்ஸுபைர் அவர்கள், ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவித்துள்ளார்.

ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஸுலைமான் பின் மூஸா அவர்கள், (கப்ரின் மீது கட்டடம் எழுப்புவதையும்), அதன் மீது எழுதுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என்று அறிவித்துள்ளார்.


«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُبْنَى عَلَيْهِ»

وَقَالَ: سُلَيْمَانُ بْنُ مُوسَى، عَنْ جَابِرٍ «وَأَنْ يُكْتَبَ عَلَيْهِ»


Ibn-Majah-1563

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1563.  ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கப்ரின் மீது எதையும் எழுதுவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.


«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُكْتَبَ عَلَى الْقَبْرِ شَيْءٌ»


Ibn-Majah-1562

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

கப்ரின் மீது கட்டடம் எழுப்புவதற்கும்; அதைக் காரையால் பூசுவதற்கும்; அதன் மீது எழுதுவதற்கும் வந்துள்ள தடை.

1562. ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கப்ரை, காரையால் (சுண்ணாம்புக் கலவையால்) பூசுவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.


«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ تَجْصِيصِ الْقُبُورِ»


Next Page » « Previous Page