Author: Abdul Hakkim

Kubra-Bayhaqi-6762

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

கப்ருகளின் மீது கட்டடம் எழுப்புவதோ, அதை காரையால் பூசுவதோ கூடாது.

6762. ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எவரும் கப்ரின் மீது உட்காருவதையும் அல்லது அதை காரையால் (சுண்ணாம்புக் கலவையால்) பூசுவதையும் அல்லது அதன் மீது கட்டடம் எழுப்புவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.


نَهَى أَنْ يَقْعُدَ الرَّجُلُ عَلَى الْقَبْرِ أَوْ يُقَصَّصَ أَوْ يُبْنَى عَلَيْهِ


Kubra-Bayhaqi-6735

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

கப்ரில் தோண்டி எடுக்கப்பட்ட மண்ணைவிட அதிகப்படுத்தக் கூடாது. இதனால் கப்ர் மிகவும் உயரமாகிவிடும்.

6735. ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கப்ரின் மீது கட்டடம் எழுப்புவதையும் அல்லது அதில் (மண்ணை) அதிகப்படுத்துவதையும் அல்லது அதை காரையால் (சுண்ணாம்புக் கலவையால்) பூசுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

பைஹகீ இமாம் கூறுகிறார்:


نَهَى أَنْ يُبْنَى عَلَى الْقَبْرِ، أَوْ يُزَادَ عَلَيْهِ، أَوْ يُجَصَّصَ


Kubra-Nasaayi-2167

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

கப்ரை, காரையால் பூசுவது.

2167. கப்ரை, காரையால் (சுண்ணாம்புக் கலவையால்) பூசுவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)


«نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ تَجْصِيصِ الْقُبُورِ»


Kubra-Nasaayi-2166

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

கப்ரின் மீது கட்டடம் எழுப்புவது (தடை)

2166. கப்ரை, காரையால் (சுண்ணாம்புக் கலவையால்) பூசுவதையும்; அதன் மீது கட்டடம் எழுப்புவதையும்; மற்ற எவரும் அதன் மீது அமர்வதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)


«نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ تَقْصِيصِ الْقُبُورِ أَوْ يُبْنَى عَلَيْهَا أَوْ يَجْلِسُ عَلَيْهَا أَحَدٌ»


Kubra-Nasaayi-2165

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

கப்ரின் மீது (தோண்டிய மண்ணை விட) அதிகப்படுத்துதல்.

2165. கப்ரின் மீது கட்டடம் எழுப்புவதையும் அல்லது அதில் அதிகப்படுத்துவதையும் அல்லது அதை (சுண்ணாம்புக் கலவையால்) பூசப்படுவதையும்; அதன் மீது எழுதுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஸுலைமான் பின் மூஸா, “கப்ரின் மீது எழுதுவதையும்” அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என்று கூடுதலாக அறிவித்துள்ளார்.


«نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُبْنَى عَلَى الْقَبْرِ أَوْ يُزَادَ عَلَيْهِ أَوْ يُجَصَّصَ»

زَادَ سُلَيْمَانُ بْنُ مُوسَى أَوْ يُكْتَبَ عَلَيْهِ


Kubra-Bayhaqi-6763

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6763.


أَخْبَرَنَا أَبُو عَلِيٍّ الرُّوذْبَارِيُّ، أنبأ مُحَمَّدُ بْنُ بَكْرٍ، ثنا أَبُو دَاوُدَ، ثنا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، ثنا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ مُوسَى، وَعَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، بِهَذَا الْحَدِيثِ زَادَ أَوْ يُزَادُ عَلَيْهِ وَزَادَ سُلَيْمَانُ بْنُ مُوسَى أَوْ أَنْ يُكْتَبَ عَلَيْهِ.

وَرُوِّينَا عَنْ أَبِي مُوسَى فِي وَصِيَّتِهِ: وَلَا تَجْعَلُنَّ عَلَى قَبْرِي بِنَاءً

وَعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ وَلَا تَضْرِبُنَّ عَلَيَّ فُسْطَاطًا

وَعَنْ أَبِي هُرَيْرَةَ كَذَلِكَ


Ibn-Hibban-3165

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

(கப்ரில் அடக்கம் செய்யப்பட்டுள்ள முஸ்லிம்களின் கண்ணியத்தைக் காக்க) கப்ரின் மீது உட்காருவது கண்டிக்கத்தக்க செயலாகும்.

3165. ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கப்ருகளை, காரையால் (சுண்ணாம்புக் கலவையால்) பூசுவதையும்; அதன் மீது கட்டடம் எழுப்புவதையும்; அதன் மீது உட்காருவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.


«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ تَقْصِيصِ الْقُبُورِ، وَأَنْ يُبْنَى عَلَيْهَا أَوْ يُجْلَسَ عَلَيْهَا»


Ibn-Hibban-3164

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

கப்ருகளின் மீது எழுதுவது குறித்து வந்துள்ள கண்டனம்.

3164. ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கப்ரை, காரையால் (சுண்ணாம்புக் கலவையால்) பூசுவதையும்; அதன் மீது எழுதுவதையும்; அதன் மீது கட்டடம் எழுப்புவதையும்; அதன் மீது உட்காருவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.


«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ تَجْصِيصِ الْقُبُورِ، وَالْكِتَابِ عَلَيْهَا، وَالْبِنَاءِ عَلَيْهَا، وَالْجُلُوسِ عَلَيْهَا»


Ibn-Hibban-3163

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

கப்ருகளின் மீது கட்டடம் எழுப்புவது குறித்து வந்துள்ள கண்டனம்.

3163. கப்ரின் மீது கட்டடம் எழுப்புவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)


«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنْ يُبْنَى عَلَى الْقَبْرِ»


Ibn-Hibban-3162

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

கப்ருகளை பூசுவது குறித்து வந்துள்ள கண்டனம்.

3162. கப்ருகளை, காரையால் (சுண்ணாம்புக் கலவையால்) பூசுவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார்:..

சுண்ணாம்புக் கலவையால் பூசுவது என்ற பொருள் கொண்ட “அல்ஜஸ்ஸு-ஜஸ்ஸஸ” என்பதற்கு “அல்கஸ்ஸது-கஸ்ஸஸ” என்றும் கூறுவர்.

 


«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تُقَصَّصَ الْقُبُورُ»

قَالَ: «وَكَانُوا يُسَمَّوْنَ الْجِصَّ: الْقَصَّةَ»


Next Page » « Previous Page