Author: Abdul Hakkim

Shuabul-Iman-1641

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1641. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனக்குப் பின் என் சமுதாயத்தின் விஷயத்தில் நான் மிகவும் அஞ்சுவது அறிவுப்பூர்வமாகப் பேசி அநியாயமாகச் செயல்படும் ஒவ்வொரு நயவஞ்சகர்களையும்தான்.

அறிவிப்பவர்: உமர் பின் அல்கத்தாப் (ரலி)

பைஹகீ இமாம் கூறுகிறார்:

மேற்கண்ட செய்தியை தைலம் பின் கஸ்வான் அவர்களிடமிருந்து யஸீத் பின் ஹாரூன் அவர்கள், “என் சமுதாயத்தார் விஷயத்தில் நான் மிகவும் அஞ்சுவது, நாவன்மை மிக்க ஒவ்வொரு நயவஞ்சகர்களை பற்றித்தான்” என்று அறிவித்துள்ளார்.


إِنَّمَا أَخَافُ عَلَى هَذِهِ الْأُمَّةِ كُلَّ مُنَافِقٍ يَتَكَلَّمُ بِالْحِكْمَةِ، وَيَعْمَلُ بِالْجَوْرِ “

وَرَوَاهُ يَزِيدُ بْنُ هَارُونَ، عَنْ دَيْلَمٍ، وَقَالَ فِي الْحَدِيثِ: ” إِنَّ أَخْوَفَ مَا أَخَافُ عَلَى هَذِهِ الْأُمَّةِ مُنَافِقٌ عَلِيمُ اللِّسَانِ


Shuabul-Iman-1640

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1640. அபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உமர் பின் அல்கத்தாப் (ரலி) உரைமேடையில் இருக்கும் போது அறிஞனான நயவஞ்சகனை விட்டு உங்களை எச்சரிக்கிறேன் என்று கூறியதை நான் செவியேற்றுள்ளேன். அப்போது மக்கள், நயவஞ்சகன் எப்படி அறிஞனாக இருப்பான் என்று கேட்டார்கள். அதற்கவர், அவன் நல்லதை பேசுவான் தீயதை செய்வான் என்று கூறினார்கள்.

 


سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ يَقُولُ عَلَى الْمِنْبَرِ: ” إِيَّاكُمْ وَالْمُنَافِقَ الْعَالِمَ ” قَالُوا: وَكَيْفَ يَكُونُ الْمُنَافِقُ عَليِمًا؟ قَالَ: ” يَتَكَلَّمُ بِالْحَقِّ وَيَعْمَلُ بِالْمُنْكَرِ


Shuabul-Iman-1639

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1639. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனக்கு பிறகு, உங்கள் விஷயத்தில் நான் மிகவும் அஞ்சுவது நாவன்மை மிக்க ஒவ்வொரு நயவஞ்சகர்களை பற்றித்தான்.

அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)


إِنَّ أَخْوَفَ مَا أَخَافُ عَلَيْكُمْ بَعْدِي مُنَافِقٌ عَليِمُ اللِّسَانِ


Almujam-Assaghir-1024

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1024. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் சமுதாயத்தின் விஷயத்தில் இறைநம்பிக்கையாளர் பற்றியோ இணைவைப்பவர் பற்றியோ நான் பயப்படவில்லை. ஏனெனில் இறைநம்பிக்கையாளரின் இறைநம்பிக்கை அவரை (குழப்பம் செய்வதை விட்டு) தடுத்து விடும். இணைவைப்பவரின் நிராகரிப்பு அவரை வீழ்த்திவிடும்.

என்றாலும் நான் மிகவும் அஞ்சுவது, நாவன்மை மிக்க ஒவ்வொரு நயவஞ்சகர்களை பற்றித்தான். அவர்கள் (வெளிப்படையில்) நீங்கள் அறிந்த நல்ல விசயங்களைக் கூறுவார்கள். (அந்தரங்கத்தில்) நீங்கள் வெறுப்பவற்றை செய்வார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)


«إِنِّي لَا أَتَخَوَّفُ عَلَى أُمَّتِي مُؤْمِنًا وَلَا مُشْرِكًا , أَمَّا الْمُؤْمِنُ فَيَحْجِزُهُ إِيمَانُهُ , وَأَمَّا الْمُشْرِكُ فَيَقْمَعُهُ كُفْرُهُ , وَلَكِنْ أَتَخَوَّفُ عَلَيْكُمْ مُنَافِقًا عَالِمُ اللِّسَانِ يَقُولُ مَا تَعْرِفُونَ وَيَعْمَلُ مَا تُنْكِرُونَ»


Almujam-Alawsat-7065

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7065. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் சமுதாயத்தின் விஷயத்தில் இறைநம்பிக்கையாளர் பற்றியோ இணைவைப்பவர் பற்றியோ நான் பயப்படவில்லை. ஏனெனில் இறைநம்பிக்கையாளரின் இறைநம்பிக்கை அவரை (குழப்பம் செய்வதை விட்டு) தடுத்து விடும். இணைவைப்பவரின் நிராகரிப்பு அவரை வீழ்த்திவிடும்.

என்றாலும் நான் மிகவும் அஞ்சுவது, நாவன்மை மிக்க ஒவ்வொரு நயவஞ்சகர்களை பற்றித்தான். அவர்கள் (வெளிப்படையில்) நீங்கள் அறிந்த நல்ல விசயங்களைக் கூறுவார்கள். (அந்தரங்கத்தில்) நீங்கள் வெறுப்பவற்றை செய்வார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)


«إِنِّي لَا أَتَخَوَّفُ عَلَى أُمَّتِي مُؤْمِنًا وَلَا مُشْرِكًا، أَمَّا الْمُؤْمِنُ فَيَحْجِزُهُ إِيمَانُهُ، وَأَمَّا الْمُشْرِكُ فَيَقْمَعُهُ كُفْرُهُ، وَلَكِنِّي أَتَخَوَّفُ عَلَيْهِمْ مُنَافِقًا، عَالِمَ اللِّسَانِ، يَقُولُ مَا يَعْرِفُونَ، وَيَعْمَلُ مَا يُنْكِرُونَ»


Almujam-Alkabir-593-2

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

593-2. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனக்கு பிறகு, உங்கள் விஷயத்தில் நான் மிகவும் அஞ்சுவது நாவன்மை மிக்க ஒவ்வொரு நயவஞ்சகர்களை பற்றித்தான்.

அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)


«إِنَّ أَخْوَفَ مَا أَخَافُ عَلَيْكُمْ بَعْدِي كُلُّ مُنَافِقٍ عَلِيمِ اللِّسَانِ»


Bazzar-3514

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3514. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாவன்மை மிக்க ஒவ்வொரு நயவஞ்சகர்கள் விசயத்திலும் நாங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை எச்சரித்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் புரைதா (ரஹ்)

பஸ்ஸார் இமாம் கூறுகிறார்:

மேற்கண்ட செய்தியை உமர் (ரலி) வழியாகவே நாம் மனனமிட்டுள்ளோம். என்றாலும் அது நபியின் கூற்றா? என்பதில் அறிவிப்பாளர்கள் கருத்துவேறுபாடு கொண்டுள்ளனர் என்பதால் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) வழியாக வரும் செய்தியை கூறியுள்ளோம்.

என்றாலும் உமர் (ரலி) வழியாக வரும் செய்தி ஆதாரத்திற்கேற்ற செய்திதான் என்பதால் அதை நாம் கூறியுள்ளோம். மேலும் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) வழியாக வரும் செய்தி ஹஸன் தரத்தில் உள்ள அறிவிப்பாளர்தொடர் என்பதால் அதையும் கூறியுள்ளோம்.


«حَذَّرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلَّ مُنَافِقٍ عَلِيمِ اللِّسَانِ»


Ibn-Hibban-80

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

80. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:

உங்கள் விஷயத்தில் நான் மிகவும் அஞ்சுவது, நாவன்மை மிக்க ஒவ்வொரு நயவஞ்சகர்களின் வாதத்திறமை பற்றிதான்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் புரைதா (ரஹ்)


«أَخْوَفُ مَا أَخَافُ عَلَيْكُمْ جِدَالُ الْمُنَافِقِ عَلِيمِ اللِّسَانِ»


Bazzar-305

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

உமர் (ரலி) அவர்களிடமிருந்து அஹ்னஃப் பின் கைஸ் என்பவரின் அறிவிப்பு…

305. உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாவன்மை மிக்க ஒவ்வொரு நயவஞ்சகர்கள் விசயத்திலும் நாங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை எச்சரித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்)


حَذَّرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلَّ مُنَافِقٍ عَلِيمِ اللِّسَانِ


Next Page » « Previous Page