Author: Abdul Hakkim

Daraqutni-2975

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2975.


«مَنْ وَهَبَ هِبَةً فَارْتَجَعَ بِهَا فَهُوَ أَحَقُّ بِهَا مَا لَمْ يُثَبْ مِنْهَا , وَلَكِنَّهُ كَالْكَلْبِ يَعُودُ فِي قَيْئِهِ»


Almujam-Alkabir-10692

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

10692. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தன் அன்பளிப்பைத் திரும்பப் பெற்றுக் கொள்பவன் தன் வாந்தியைத் தானே திரும்ப உண்பவனைப் போன்றவன் ஆவான்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹம்மாம் பின் யஹ்யா, வாந்தியை (விழுங்குவது) ஹராம் என்றே நாம் அறிகிறோம் என்று கதாதா அவர்கள் கூறியதாக கூடுதலாக அறிவித்துள்ளார்.


«الْعَائِدُ فِي هِبَتِهِ كَالْعَائِدِ فِي قَيْئِهِ» .

زَادَ هَمَّامٌ: قَالَ قَتَادَةُ: لَا نَعْلَمُ الْقَيْءَ إِلَّا حَرَامًا


Nasaayi-3713

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

3713. உம்ரா, ருக்பா என்ற ஆயுட்கால அன்பளிப்பு செய்வது நல்லதல்ல. அவ்வாறு ஒருவருக்கு ஆயுட்கால அன்பளிப்பு செய்யப்பட்டால் அவர் உயிரோடு இருந்தாலும், இறந்தாலும் அது அவருக்கே சொந்தமானதாகும் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்.

அறிவிப்பவர்: தாவூஸ் பின் கைஸான் (ரஹ்)


«لَا تَصْلُحُ الْعُمْرَى وَلَا الرُّقْبَى، فَمَنْ أَعْمَرَ شَيْئًا أَوْ أَرْقَبَهُ، فَإِنَّهُ لِمَنْ أُعْمِرَهُ وَأُرْقِبَهُ حَيَاتَهُ وَمَوْتَهُ»

أَرْسَلَهُ حَنْظَلَةُ


Nasaayi-3712

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

3712. ருக்பா, உம்ரா என்ற ஆயுட்கால அன்பளிப்பு செய்வது நல்லதல்ல. அவ்வாறு ஒருவருக்கு ஆயுட்கால அன்பளிப்பு செய்யப்பட்டால் அது அவருக்கே சொந்தமானதாகும் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்.

அறிவிப்பவர்: தாவூஸ் பின் கைஸான் (ரஹ்)


«لَا تَحِلُّ الرُّقْبَى وَلَا الْعُمْرَى، فَمَنْ أُعْمِرَ شَيْئًا فَهُوَ لَهُ، وَمَنْ أُرْقِبَ شَيْئًا فَهُوَ لَهُ»


Nasaayi-3709

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

3709. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்கள் பொருட்களை ஆயுட்கால அன்பளிப்பு செய்யாதீர்கள். அப்படி அன்பளிப்பு செய்தாலும் அந்தப்பொருள் அன்பளிப்பு செய்யப்பட்டவருக்கே உரியதாகும்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

 


«لَا تُرْقِبُوا أَمْوَالَكُمْ، فَمَنْ أَرْقَبَ شَيْئًا فَهُوَ لِمَنْ أُرْقِبَهُ»


Nasaayi-3708

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

3708. ருக்பா (என்ற ஆயுட்கால அன்பளிப்பு செய்வது நல்லது) இல்லை. ஏனெனில் எவருக்கு ஆயுட்கால அன்பளிப்பு செய்யப்படுகிறதோ அந்தப்பொருள், (அவர் இறந்துவிட்டால்) அவரது வாரிசுக்குரியதாகும் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்.

அறிவிப்பவர்: தாவூஸ் பின் கைஸான் (ரஹ்)

 


«لَا رُقْبَى، فَمَنْ أُرْقِبَ شَيْئًا فَهُوَ سَبِيلُ الْمِيرَاثِ»


Musnad-Ahmad-3269

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3269. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தான் கொடுத்த தர்மத்தை திரும்பப் பெற்றுக்கொள்பவனின் நிலையானது, நாயின் நிலையை ஒத்திருக்கிறது. வாந்தி எடுத்துவிட்டுப் பின்னர் தான் எடுத்த வாந்தியை நோக்கிச் சென்று அதைத் தின்கிறது நாய்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


«مَثَلُ الَّذِي يَتَصَدَّقُ، ثُمَّ يَرْجِعُ فِي صَدَقَتِهِ، مَثَلُ الْكَلْبِ يَقِيءُ ثُمَّ يَأْكُلُ قَيْئَهُ»


Musnad-Ahmad-3221

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3221. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தன் அன்பளிப்புப் பொருளைத் திரும்பப் பெற்றுக் கொள்பவன், தன் வாந்தியைத் தானே திரும்ப உண்பவனைப் போன்றவன் ஆவான்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


«الْعَائِدُ فِي هِبَتِهِ، كَالْعَائِدِ فِي قَيْئِهِ»


Musnad-Ahmad-3178

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3178. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தன் அன்பளிப்புப் பொருளைத் திரும்பப் பெற்றுக் கொள்பவன், தன் வாந்தியைத் தானே திரும்ப உண்பவனைப் போன்றவன் ஆவான்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


«الْعَائِدُ فِي هِبَتِهِ، كَالْعَائِدِ فِي قَيْئِهِ»


Musnad-Ahmad-3146

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3146. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தன் அன்பளிப்புப் பொருளைத் திரும்பப் பெற்றுக் கொள்பவன், தன் வாந்தியைத் தானே திரும்ப உண்பவனைப் போன்றவன் ஆவான்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


«الْعَائِدُ فِي هِبَتِهِ، كَالْعَائِدِ فِي قَيْئِهِ»


Next Page » « Previous Page