8312.
” لَيْسَ الصِّيَامُ مِنَ الْأَكْلِ وَالشُّرْبِ فَقَطْ إِنَّمَا الصِّيَامُ مِنَ اللَّغْوِ وَالرَّفَثِ فَإِنْ سَابَّكَ أَحَدٌ أَوْ جَهِلَ عَلَيْكَ فَقُلْ إِنِّي صَائِمٌ “
8312.
” لَيْسَ الصِّيَامُ مِنَ الْأَكْلِ وَالشُّرْبِ فَقَطْ إِنَّمَا الصِّيَامُ مِنَ اللَّغْوِ وَالرَّفَثِ فَإِنْ سَابَّكَ أَحَدٌ أَوْ جَهِلَ عَلَيْكَ فَقُلْ إِنِّي صَائِمٌ “
1570.
” لَيْسَ الصِّيَامُ مِنَ الْأَكْلِ وَالشُّرْبِ إِنَّمَا الصِّيَامُ مِنَ اللَّغْوِ وَالرَّفَثِ، فَإِنْ سَابَّكَ أَحَدٌ، وَجَهِلَ عَلَيْكَ فَقُلْ: إِنِّي صَائِمٌ
1996.
” لَيْسَ الصِّيَامُ مِنَ الْأَكْلِ وَالشُّرْبِ، إِنَّمَا الصِّيَامُ مِنَ اللَّغْوِ وَالرَّفَثِ، فَإِنْ سَابَّكَ أَحَدٌ أَوْ جَهِلَ عَلَيْكَ فَلْتَقُلْ: إِنِّي صَائِمٌ، إِنِّي صَائِمٌ “
15264. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நிச்சயமாக நோன்பு ஒரு கேடயமாகும். அதைக் கொண்டு அடியான் நரக நெருப்பிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்கிறான்.
(மேலும் அல்லாஹ் கூறுகிறான்:) அந்த நோன்பு எனக்கே உரியது; அதற்கு நானே கூலி வழங்குவேன்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
«إِنَّمَا الصِّيَامُ جُنَّةٌ، يَسْتَجِنُّ بِهَا الْعَبْدُ مِنَ النَّارِ، هُوَ لِي وَأَنَا أَجْزِي بِهِ»
3249. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவர் அல்லாஹ்வின் பாதையில் ஒரு நாள் நோன்பு நோற்கிறாரோ, அவரிடமிருந்து நரக நெருப்பு நூறு ஆண்டு கால பயணத் தொலைவிற்கு அப்பால் விலகிச் சென்று விடுகிறது.
அறிவிப்பவர்: அம்ர் பின் அபஸா (ரலி)
«مَنْ صَامَ يَوْمًا فِي سَبِيلِ اللَّهِ بَعُدَتْ مِنْهُ النَّارُ مَسِيرَةَ مِائَةِ عَامٍ»
பாடம்:
ஒருவர் தனது நோன்பின் போது தவிர்க்க வேண்டியவற்றில் மிகக் குறைந்தது (அடிப்படையானது) உண்பதும் பருகுவதும் தான் என்பதற்கான தெளிவான விளக்கம்.
3479. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நோன்பு என்பது உணவையும் பானத்தையும் தவிர்ப்பது மாத்திரமல்ல; மாறாக நோன்பு என்பது வீணான செயல்கள் மற்றும் ஆபாசமான பேச்சுகளிலிருந்தும் தவிர்ந்து இருப்பதேயாகும். உங்களை எவராவது திட்டினால் அல்லது உங்களிடம் அறியாமையாக நடந்துகொண்டால், ‘நிச்சயமாக நான் நோன்பாளி’ என்று அவரிடம் கூறிவிடுங்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
இப்னு ஹிப்பான்-அபூஹாதிம் இமாம் கூறுகிறார்:
ஹாரிஸ் பின் அப்துர்ரஹ்மான் பின் அபூதுபாப் அவர்களின் தந்தையின் சகோதரர் பெயர் அப்துல்லாஹ் பின் முஃகீரா பின் அபூதுபாப் அத்தவ்ஸீ என்பதாகும்.
ஹாரிஸ் பின் அப்துர்ரஹ்மான் பின் அபூதுபாப் அவர்களின் முழுப்பெயர் ஹாரிஸ் பின் அப்துர்ரஹ்மான் பின் முஃகீரா பின் அபூதுபாப் என்பதாகும்.
«إِنَّ الصِّيَامَ لَيْسَ مِنَ الْأَكْلِ وَالشُّرْبِ فَقَطْ، إِنَّمَا الصِّيَامُ مِنَ اللَّغْوِ وَالرَّفَثِ، فَإِنْ سَابَّكَ أَحَدٌ، أَوْ جَهِلَ عَلَيْكَ، فَقُلْ: إِنِّي صَائِمٌ»
4142. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தரையில்) ஒரு கோட்டை வரைந்தார்கள். பிறகு, “இதுவே அல்லாஹ்வின் வழியாகும்” என்று கூறினார்கள்.
பின்னர் அதற்கு வலது புறத்திலும் இடது புறத்திலும் பல கோடுகளை வரைந்தார்கள். பிறகு, “இவை சிதறிக்கிடக்கும் (பல) வழிகள். இந்த ஒவ்வொரு வழியிலும் ஒரு சைத்தான் இருந்து கொண்டு அதன் பக்கம் (மக்களை) அழைக்கிறான்” என்று கூறிவிட்டு, பின்வரும் குர்ஆன் வசனத்தை ஓதினார்கள்:
“இதுவே எனது நேரான வழி. எனவே இதனையே பின்பற்றுங்கள்! பல வழிகளைப் பின்பற்றாதீர்கள்! அவை, அவனது (ஒரே) வழியை விட்டும் உங்களைப் பிரித்து விடும். நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சுவதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான்.” (அல்குர்ஆன் 6:153)
(இவை, “சிதறிக்கிடக்கும் பல வழிகள்” என்ற வார்த்தைகளில் “சிதறிக்கிடக்கும்” என்று வார்த்தையை யஸீத் பின் ஹாரூன் அவர்கள் அறிவித்துள்ளார்.)
خَطَّ لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطًّا ، ثُمَّ قَالَ: «هَذَا سَبِيلُ اللَّهِ» ، ثُمَّ خَطَّ خُطُوطًا عَنْ يَمِينِهِ وَعَنْ شِمَالِهِ، ثُمَّ قَالَ: ” هَذِهِ سُبُلٌ – قَالَ يَزِيدُ: مُتَفَرِّقَةٌ – عَلَى كُلِّ سَبِيلٍ مِنْهَا شَيْطَانٌ يَدْعُو إِلَيْهِ “، ثُمَّ قَرَأَ: (وَإِنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ، فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِيلِهِ)
3317.
… இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“அல்லாஹ்வின் தூதர்களான வானவர்கள் லூத் (அலை) அவர்களிடம் வந்தபோது, அவர்களைத் தம் விருந்தினர்கள் என்றே அவர் நினைத்தார். அவர்களைச் சந்தித்து, தமக்கு அருகிலேயே அமர வைத்தார். தனது மூன்று மகள்களையும் அழைத்து வந்து, அவர்களைத் தனது விருந்தினர்களுக்கும் தனது குடும்பத்தார்களுக்கும் அருகில் அமர வைத்தார். அப்போது அவருடைய கூட்டத்தினர் அவரிடம் விரைந்து வந்தனர்.
அவர்களைக் கண்ட லூத் (அலை), ‘இவர்கள் என் புதல்விகள்; இவர்கள் உங்களுக்குத் தூய்மையானவர்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள், என் விருந்தினர்கள் விஷயத்தில் என்னை இழிவுபடுத்தி விடாதீர்கள்’ (ஹூத்: 78) எனக் கூறினார். அதற்கு அவர்கள், ‘உம்முடைய புதல்விகளில் எங்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்பதை நீர் அறிவீர்; நாங்கள் எதை நாடுகிறோம் என்பதையும் நீர் நிச்சயமாக அறிவீர்’ (ஹூத்: 79) என்றனர்.
லூத் (அலை), ‘உங்களை எதிர்க்க எனக்குப் பலம் இருக்கக் கூடாதா? அல்லது ஏதேனும் பலமான ஆதரவை நான் பெறக்கூடாதா?’ (ஹூத்: 80) என்று வருந்திக் கூறினார். அப்போது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் லூத் (அலை) பக்கம் திரும்பி, ‘நிச்சயமாக நாங்கள் உமது இறைவனின் தூதர்கள்; அவர்கள் உம்மை நெருங்கவே முடியாது’ (ஹூத்: 81) எனக் கூறினார்.
பிறகு அவர்களின் கண்களை
لَمَّا جَاءَتْ رُسُلُ اللَّهِ لُوطًا ظَنَّ أَنَّهُمْ ضِيفَانٌ لَقَوْهُ فَأَدْنَاهُمْ حَتَّى أَقْعَدَهُمْ قَرِيبًا، وَجَاءَ بِبَنَاتِهِ وَهُنَّ ثَلَاثٌ، فَأَقْعَدَهُنَّ بَيْنَ ضِيفَانِهِ وَبَيْنَ قَوْمِهِ، فَجَاءَ قَوْمُهُ يُهْرَعُونَ إِلَيْهِ، فَلَمَّا رَآهُمْ قَالَ: ” {هَؤُلَاءِ بَنَاتِي هُنَّ أَطْهُرُ لَكُمْ فَاتَّقُوا اللَّهَ وَلَا تُخْزُونِ فِي ضَيْفِي} [هود: 78] قَالُوا {مَا لَنَا فِي بَنَاتِكِ مِنْ حَقٍّ وَإِنَّكَ لَتَعْلَمُ مَا نُرِيدُ} [هود: 79] {قَالَ لَوْ أَنَّ لِيَ بِكُمُ قُوَّةً أَوْ آوِي إِلَى رُكْنٍ شَدِيدٍ} [هود: 80] فَالْتَفَتَ إِلَيْهِ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ فَقَالَ {إِنَّا رُسُلُ رَبِّكَ لَنْ يَصِلُوا إِلَيْكَ} [هود: 81] قَالَ: فَطَمَسَ أَعْيُنَهُمْ فَرَجَعُوا وَرَاءَهُمْ يَرْكَبُ بَعْضُهُمْ بَعْضًا حَتَّى خَرَجُوا إِلَى الَّذِينَ بِالْبَابِ فَقَالُوا: جِئْنَاكُمْ مِنْ عِنْدِ أَسْحَرِ النَّاسِ، قَدْ طَمَسَ أَبْصَارَنَا، فَانْطَلَقُوا يَرْكَبُ بَعْضُهُمْ بَعْضًا، حَتَّى دَخَلُوا الْقَرْيَةَ فَرُفِعَتْ فِي بَعْضِ اللَّيْلِ، حَتَّى كَانَتْ بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ، حَتَّى إِنَّهُمْ لَيَسْمَعُونَ أَصْوَاتَ الطَّيْرِ فِي جَوِّ السَّمَاءِ، ثُمَّ قُلِبَتْ فَخَرَجَتِ الْإِفْكَةُ عَلَيْهِمْ، فَمَنْ أَدْرَكَتْهُ الْإِفْكَةُ، قَتَلَتْهُ وَمَنْ خَرَجَ أَتْبَعَتْهُ، حَيْثُ كَانَ حَجَرًا فَقَتَلَتْهُ، قَالَ: فَارْتَحَلَ بِبَنَاتِهِ وَهُنَّ ثَلَاثٌ حَتَّى إِذَا بَلَغَ مَكَانَ كَذَا وَكَذَا مِنَ الشَّامِ، فَمَاتَتِ ابْنَتُهُ الْكُبْرَى، فَخَرَجَتْ عِنْدَهَا عَيْنٌ، يُقَالَ لَهَا الْوَرِيَّةُ، ثُمَّ انْطَلَقَ حَيْثُ شَاءَ اللَّهُ أَنْ يَبْلُغَ فَمَاتَتِ الصُّغْرَى، فَخَرَجَتْ عِنْدَهَا عَيْنٌ، يُقَالَ لَهَا الرُّعُونَةَ، فَمَا بَقِيَ مِنْهُنَّ إِلَّا الْوُسْطَى
2542. மாலிக் இமாம் கூறுகிறார்:
“(கால்நடைகளை முன்னால் இருந்து) இழுத்துச் செல்பவர், பின்னால் இருந்து ஓட்டிச் செல்பவர், அதன் மீது ஏறிச் செல்பவர் ஆகிய அனைவரும் அந்த விலங்கு (மற்றவர்களுக்கு) ஏற்படுத்தும் சேதங்களுக்குப் பொறுப்பாளிகளாவர். (அதாவது அதற்கான நட்டஈட்டை அவர்கள் வழங்க வேண்டும்).
ஆனால், அந்த விலங்கு தூண்டப்படாத நிலையில், தானாகவே தனது கால்களால் உதைத்து அதனால் சேதம் ஏற்பட்டால் அதற்கு நட்டஈடு கிடையாது.
உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள், குதிரையை வேகமாக ஓட்டிச் சென்ற ஒருவருக்கு ‘அக்ல்-இழப்பீடு, இரத்தப்பணம்) வழங்குமாறு தீர்ப்பளித்துள்ளார்கள்.
மேலும் மாலிக் இமாம் கூறுகிறார்:
“குதிரையை கால்நடையாக நடத்திச் செல்பவரை விட அதை முன்னால் இருந்து வேகமாக இழுத்துச் செல்பவர், அதன் மீது ஏறிச் செல்பவர், அதை பின்னால் இருந்து வேகமாக ஓட்டிச் செல்பவர் ஆகியோர் (அவற்றால் ஏற்படும் சேதங்களுக்கு) அபராதம்-நட்டஈடு செலுத்த அதிகத் தகுதியுடையவர்கள்.
الْقَائِدُ وَالسَّائِقُ وَالرَّاكِبُ كُلُّهُمْ ضَامِنٌ لِمَا أَصَابَتِ الدَّابَّةُ، إِلاَّ أَنْ تَرْمَحَ الدَّابَّةُ مِنْ غَيْرِ أَنْ يُفْعَلَ بِهَا شَيْءٌ تَرْمَحُ لَهُ، وَقَدْ قَضَى عُمَرُ بْنُ الْخَطَّابِ فِي الَّذِي أَجْرَى فَرَسَهُ بِالْعَقْلِ.
قَالَ مَالِكٌ: فَالْقَائِدُ وَالرَّاكِبُ وَالسَّائِقُ أَحْرَى أَنْ يَغْرَمُوا مِنَ الَّذِي أَجْرَى فَرَسَهُ.
சமீப விமர்சனங்கள்