இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களிடமிருந்து அபூஉமாமா (ரலி) அவர்களின் அறிவிப்புகள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வொரு திங்கள், வியாழக் கிழமைகளில் (அல்லாஹ்விடம்) மனிதர்களின் செயல்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன.
அப்போது இரக்கம்காட்டுவோருக்கு அல்லாஹ்வும் இரக்கம் காட்டுகிறான். அப்போது பாவமன்னிப்புக் கேட்போருக்கு அல்லாஹ் பாவமன்னிப்பு வழங்குகிறான். அப்போது விரோதம் கொள்வோருக்கு (எதுவும் வழங்காமல்) விட்டுவிடுகிறான்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
(bazzar-1460: 1460)وَمِمَّا رَوَى أَبُو أُمَامَةَ الْبَاهِلِيُّ، وَاسْمُهُ صُدَيُّ بْنُ عَجْلَانَ، عَنْ عَبْدِ اللَّهِ
حَدَّثَنَا عُمَرُ بْنُ الْخَطَّابِ، قَالَ: نا سَعِيدُ بْنُ الْحَكَمِ، قَالَ: نا يَحْيَى بْنُ أَيُّوبَ، قَالَ: حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ زَحْرٍ، عَنْ عَلِيِّ بْنِ يَزِيدَ، عَنِ الْقَاسِمِ، عَنْ أَبِي أُمَامَةَ، عَنِ ابْنِ مَسْعُودٍ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:
«تُعْرَضُ أَعْمَالُ بَنِي آدَمَ فِي كُلِّ يَوْمِ اثْنَيْنِ وَفِي كُلِّ يَوْمِ خَمِيسٍ، فَيَرْحَمُ الْمُتَرَحِّمِينَ، وَيَغْفِرُ لِلْمُسْتَغْفِرِينَ، وَيَتْرُكُ أَهْلَ الْحِقْدِ بِغِلِّهِمْ»
وَهَذَا الْحَدِيثُ لَا نَعْلَمُهُ يُرْوَى عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا بِهَذَا الْإِسْنَادِ
Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-1460.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-1326.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-30905-அலீ பின் யஸீத் அபூஹிலால் பற்றி இவர் கைவிடப்பட்டவர் என தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
இமாம் கூறியுள்ளார். புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அபூநுஐம் போன்றோர் இவர் முன்கருல் ஹதீஸ்-ஹதீஸில் நிராகரிக்கப்பட்டவர் என்று கூறியுள்ளனர். வேறு சில அறிஞர்கள் இவரை பலவீனமானவர் என்று விமர்சித்துள்ளனர்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/199)
எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
3 . இந்தக் கருத்தில் இப்னு மஸ்வூத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-1460 , அல்முஃஜமுல் கபீர்-9776 ,
மேலும் பார்க்க: திர்மிதீ-747 .
சமீப விமர்சனங்கள்