ஒருவருடைய உணவு இருவருக்குப் போதுமானதாகும்; இருவரின் உணவு நால்வருக்குப் போதுமானதாகும்; பாக்கியமிக்க, உயர்ந்தவனான அல்லாஹ்வின் கை (உதவி), ஜமாஅத்திற்கு இருக்கிறது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸமுரா (ரலி)
(bazzar-4590: 4590)حَدَّثنا عَبد اللَّهِ بْنُ إِسْحَاقَ الْعَطَّارُ، قَال: حَدَّثنا صَفْوَانُ بْنُ هُبَيْرَةَ، عَن ابْنِ جُرَيج، قَالَ أَخْبَرَنِي أَبُو بَكْرٍ الْهُذَلِيُّ عَنِ الْحَسَنِ عَنْ سَمُرة، رَضِي اللَّهُ عَنْهُ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم قَالَ:
طَعَامُ الْوَاحِدِ يَكْفِي الاثْنَيْنِ وَطَعَامُ الاثْنَيْنِ يَكْفِي الأَرْبَعَةَ وَيَدُ اللَّهِ تَبَارَكَ وَتَعَالَى عَلَى الْجَمَاعَةِ.
وَهَذَا الْحَدِيثُ لا نَعْلَمُ رَوَاهُ، عَن ابْنِ جُرَيج إلاَّ صَفْوَانُ بْنُ هُبَيْرَةَ
Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-4590.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-453.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-18087-அபூபக்ர் அல்ஹுதலீ-ஸுல்மா பின் அப்துல்லாஹ் மிக பலவீனமானவர்; கைவிடப்பட்டவர் என ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறியுள்ளனர்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-4/498)
எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
5 . இந்தக் கருத்தில் ஸமுரா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- ஹஸன் —> ஸமுரா (ரலி)
பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-4590 , அல்முஃஜமுல் கபீர்-6958 , 6963 , அல்முஃஜமுல் அவ்ஸத்-2336 ,
- ஜஃபர் பின் ஸஃத் பின் ஸமுரா —> குபைப் பின் ஸுலைமான் பின் ஸமுரா —> ஸுலைமான் —> ஸமுரா (ரலி)
பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்- 4621 , அல்முஃஜமுல் கபீர்-7044 ,
சரியான ஹதீஸ் பார்க்க: புகாரி-5392 .
சமீப விமர்சனங்கள்