தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bazzar-4590

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌

4590. ஒருவருடைய உணவு இருவருக்குப் போதுமானதாகும்; இருவரின் உணவு நால்வருக்குப் போதுமானதாகும்; பாக்கியமிக்க, உயர்ந்தவனான அல்லாஹ்வின் கை (உதவி), ஜமாஅத்திற்கு இருக்கிறது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: (ரலி)

ஸமுரா (ரலி)

سمرة بن جندب

இறப்பு: ஹிஜ்ரி 59, பஸரா அல்லது கூஃபா

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: ஸமுரா பின் ஜுன்துப்

தந்தை பெயர்: ஜுன்துப் பின் ஹிலால் பின் ஹுரைஜ்

வம்சம்: ஃபஸாரா, அன்ஸாரிகளின் கூட்டாளி

புனைப்பெயர்: அபூ ஸயீத், அபூ அப்துல்லாஹ், அபூ அப்துர்ரஹ்மான், அபூ முஹம்மத், அபூ ஸுலைமான்

பயணித்த ஊர்கள்: மதீனா, பஸரா, கூஃபா

பிறப்பு: மதீனா

இறப்பு: ஹிஜ்ரி 59, பஸரா அல்லது கூஃபா

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

ஸமுரா பின் ஜுன்துப் (ரலி) ஒரு நபித்தோழர் ஆவார். இவர் மதீனாவில் பிறந்தார். பஸரா மற்றும் கூஃபா நகரங்களில் வசித்தார்.

ஹிஜ்ரி 59 ஆம் ஆண்டு பஸரா அல்லது கூஃபாவில் மரணமடைந்தார். இவர் மிகுந்த நம்பகத்தன்மை கொண்டவராகவும், உண்மையே பேசுபவராகவும் இருந்தார். இப்னு ஸீரீன் மற்றும் அல்ஹஸன் அல்பஸரீ போன்றோர் இவரைப் புகழ்ந்துள்ளனர்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): நபி (ஸல்), அபூ உபைதா பின் அல்ஜர்ராஹ்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அஸ்ஃகா பின் அல்அஸ்லஃ, தஃலபா பின் அப்பாத், அல்ஹஸன் அல்பஸரீ, ஹுஸைன் பின் அபில் ஹர் அல்அன்பரீ, அர்ரபீஉ பின் அம்லா அல்ஃபஸாரீ, ஸைத் பின் உக்பா அல்ஃபஸாரீ, ஸஃத் பின் ஸமுரா பின் ஜுன்துப், ஸுலைமான் பின் ஸமுரா பின் ஜுன்துப், ஸம்ஆன் பின் முஷன்னிஜ், ஸுவாதா பின் ஹன்ழலா அல்குஷைரீ, ஆமிர் அஷ்ஷஅபீ, அப்துல்லாஹ் பின் புரைதா

வேறு பெயர்கள்: ஸமுரா பின் ஜுன்துப்


ஆதாரம்: muslimscholars.info (394) · Should verify


حَدَّثنا عَبد اللَّهِ بْنُ إِسْحَاقَ الْعَطَّارُ، قَال: حَدَّثنا صَفْوَانُ بْنُ هُبَيْرَةَ، عَن ابْنِ جُرَيج، قَالَ أَخْبَرَنِي أَبُو بَكْرٍ الْهُذَلِيُّ عَنِ الْحَسَنِ عَنْ سَمُرة، رَضِي اللَّهُ عَنْهُ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم قَالَ:

طَعَامُ الْوَاحِدِ يَكْفِي الاثْنَيْنِ وَطَعَامُ الاثْنَيْنِ يَكْفِي الأَرْبَعَةَ وَيَدُ اللَّهِ تَبَارَكَ وَتَعَالَى عَلَى الْجَمَاعَةِ.

وَهَذَا الْحَدِيثُ لا نَعْلَمُ رَوَاهُ، عَن ابْنِ جُرَيج إلاَّ صَفْوَانُ بْنُ هُبَيْرَةَ


Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-4590.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-453.



  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-18087-அபூபக்ர் அல்ஹுதலீ-ஸுல்மா பின் அப்துல்லாஹ் மிக பலவீனமானவர்; கைவிடப்பட்டவர் என ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறியுள்ளனர்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-4/498)

எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

5 . இந்தக் கருத்தில் ஸமுரா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஹஸன் —> ஸமுரா (ரலி)

பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-4590 , அல்முஃஜமுல் கபீர்-6958 , 6963 , அல்முஃஜமுல் அவ்ஸத்-2336 ,

  • ஜஃபர் பின் ஸஃத் பின் ஸமுரா —> குபைப் பின் ஸுலைமான் பின் ஸமுரா —> ஸுலைமான் —> ஸமுரா (ரலி)

பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்- 4621 , அல்முஃஜமுல் கபீர்-7044 ,

சரியான ஹதீஸ் பார்க்க: புகாரி-5392 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.