பாடம்: 134
ஊரிலிருக்கும் போது ஒருவர் செய்து வந்த நற்செயல்களுக்குக் கிடைத்தது போன்ற (அதே) நற்பலன், அவர் பிரயாணத்தில் இருக்கும் போதும் (பாவம் எதுவும் செய்யவில்லையென்றால்) அவருக்கு எழுதப்படும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அடியான் ஆரோக்கியமானவனாய், ஊரிலிருக்கும்போது செய்யும் நற்செயல்களுக்குக் கிடைப்பது போன்ற (அதே) நற்பலன் அவன் நோயுற்று விடும்போது அல்லது பயணத்தில் இருக்கும்போது (அவன் பாவம் எதுவும் செய்யாமலிருக்கும் வரை) அவனுக்கு எழுதப்படும்.
இதை அறிவித்த அபூபுர்தா (ரஹ்), ‘இதைப் பலமுறை (என் தந்தை) அபூமூஸா அஷ்அரீ (ரலி) சொல்ல நான் செவியுற்றிருக்கிறேன்’ என்று தம்முடன் பயணத்தில் நோன்பு நோற்றுக் கொண்டு வந்த யஸீத் பின் அபூகப்ஷா (ரஹ்) அவர்களிடம் கூறினார்கள்.
அத்தியாயம்: 56
(புகாரி: 2996)بَابُ يُكْتَبُ لِلْمُسَافِرِ مِثْلُ مَا كَانَ يَعْمَلُ فِي الإِقَامَةِ
حَدَّثَنَا مَطَرُ بْنُ الفَضْلِ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، حَدَّثَنَا العَوَّامُ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ أَبُو إِسْمَاعِيلَ السَّكْسَكِيُّ، قَالَ:
سَمِعْتُ أَبَا بُرْدَةَ، وَاصْطَحَبَ هُوَ وَيَزِيدُ بْنُ أَبِي كَبْشَةَ فِي سَفَرٍ، فَكَانَ يَزِيدُ يَصُومُ فِي السَّفَرِ، فَقَالَ لَهُ أَبُو بُرْدَةَ: سَمِعْتُ أَبَا مُوسَى مِرَارًا يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا مَرِضَ العَبْدُ، أَوْ سَافَرَ، كُتِبَ لَهُ مِثْلُ مَا كَانَ يَعْمَلُ مُقِيمًا صَحِيحًا»
Bukhari-Tamil-2996.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-2996.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள், விமர்சித்துள்ள புகாரியின் 110 ஹதீஸ்களில் இதுவும் ஒன்றாகும்.
இந்தச் செய்தியைப் பற்றி தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்களின் விமர்சனம்:
1 . இப்ராஹீம் பின் இஸ்மாயீல் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அவ்வாம் பின் ஹவ்ஷப் இந்த செய்தியை இப்ராஹீம் பின் இஸ்மாயீல் —> அபூபுர்தா —> அபூமூஸா (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் நபியின் சொல்லாக அறிவித்துள்ளார்.
2 . இப்ராஹீம் பின் இஸ்மாயீல் அவர்களிடமிருந்து அறிவிக்கும் மிஸ்அர் பின் கிதாம் இந்த செய்தியை இப்ராஹீம் பின் இஸ்மாயீல் —> அபூபுர்தா என்ற அறிவிப்பாளர்தொடரில் அபூபுர்தாவின் சொல்லாக அறிவித்துள்ளார். அபூமூஸா (ரலி) அவர்களையும், நபி (ஸல்) அவர்களையும் அறிவிப்பாளர்தொடரில் கூறவில்லை.
அவ்வாமை விட மிஸ்அர் தான் மிகவும் நினைவாற்றல் உள்ளவர் என்பதால் அவரின் அறிவிப்பின்படியே இதை அபூபுர்தா (ரஹ்) அவர்களின் கூற்று என முடிவு செய்யவேண்டும் என்று தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
கூறியுள்ளார்.
இந்த விமர்சனத்திற்கு இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் கூறியுள்ள பதில்:
1 . மிஸ்அர் தான் மிகவும் நினைவாற்றல் உள்ளவர் என்றாலும், இந்தச் செய்தி, சுயமாக ஆய்வு செய்து கூறும் செய்தி அல்ல என்பதால் அபூபுர்தா அவர்கள் இதை சுயமாக ஆய்வு செய்து கூறியிருக்க மாட்டார் என்பதால் இதுவும் மர்ஃபூவான-நபியின் கூற்று போன்ற செய்தி தான்.
2 . மேலும் இந்தச் செய்தியில் சம்பவமும் கூறப்படுகிறது. அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம் அவர்கள், ஒரு ஹதீஸில் சம்பவம் இடம்பெற்றால் அதன் அறிவிப்பாளர் அதை நன்கு மனனமிட்டுள்ளார் என்பதற்கு ஆதாரமாகும் என்று கூறியுள்ளார் என்பதால் இதை அவ்வாம் சரியாக மனனமிட்டுள்ளார் என்று தெரிகிறது.
(நூல்: ஃபத்ஹுல் பாரீ-1/363)
சிலர் வேறு இரண்டு பதிலைக் கூறியுள்ளனர்.
3 . இந்தச் செய்தி வேறுசில அறிவிப்பாளர்தொடரில் நபியின் சொல்லாக வந்துள்ளது என்பதால் அவ்வாம் தவறு செய்யவில்லை என்று தெரிகிறது.
4 . பலமானவரின் கூடுதல் தகவல் ஏற்கப்படும் என்ற பொதுவான விதியின்படி ஒரு செய்தி நபியின் சொல்லாகவும், நபித்தோழரின் சொல்லாகவும் வந்திருந்தால் நபியின் சொல்லாக அறிவித்தவர்களுக்கே கூடுதல் தகவல் தெரிந்துள்ளது என்பதின் படி முடிவு செய்யவேண்டும். இவ்வாறே முர்ஸலாகவும், முத்தஸிலாகவும் வரும் செய்திகளிலும் முடிவு செய்ய வேண்டும். இதில் அதிகமானவர்கள் அறிவித்துள்ளார்களா? குறைவானவர்கள் அறிவித்துள்ளார்களா? என்று பார்க்கக் கூடாது என்று சில ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறுகின்றனர்.
(இது தான் ஹதீஸ், உஸூல், ஃபிக்ஹ் அறிஞர்களின் நடைமுறை என்றும், இது தான் சரியானது என்றும் ஸுயூத்தீ கூறியுள்ளார். “பொருப்பாளர் இன்றி திருமணம் செல்லுபடியாகாது” என்ற செய்தியின் விசயத்தில் ஷுஅபா,பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
ஆகியோர் முர்ஸலாக அறிவித்திருந்தாலும் மற்றவர்கள் முத்தஸிலாக அறிவித்திருந்ததால் புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள், முத்தஸிலாக அறிவித்துள்ளவர்களின் செய்திக்கே முன்னுரிமை அளித்துள்ளார் என்று கதீப் பஃக்தாதீ அவர்கள் குறிப்பிட்டுவிட்டு இதுவே சரியான கருத்து என்று கூறியுள்ளார். இராகீ அவர்களும் இதை தனது அல்ஃபிய்யாவில் கூறியுள்ளார்.
(நூல்கள்: அல்ஃபிய்யதுல் இராகீ-147, ஷரஹுத் தப்ஸிரா-1/227-233)
(என்றாலும் பலமானவரின் கூடுதல் தகவல் ஏற்கப்படும் என்ற சட்டவிதியில் விரிவான விளக்கம் உள்ளது. புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள் அந்தச் செய்திக்கு முன்னுரிமை அளித்ததற்கு வேறு காரணங்கள் உள்ளது.)
மேற்கண்ட 4 பதில்களில் 2, 3 இல் கூறப்படும் பதில் சரியாகத் தெரிகிறது.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-611-இப்ராஹீம் பின் அப்துர்ரஹ்மான் பின் இஸ்மாயீல்-அபூஇஸ்மாயீல் என்பவரை அஃமஷ் அவர்கள் விமர்சித்தார்கள் என்று யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.கூறியதாக ஸாஜீ அறிவித்துள்ளார். - இவர் பலவீனமானவர்; இவருக்கு சரியாக பேசத் தெரியாது என்று ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
அவர்கள் கூறியதாக யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.அவர்களிடமிருந்து இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
அறிவித்துள்ளார். - அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
ஆகியோர் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். - ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
அவர்கள், இவரின் செய்திகளை முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம் ஏன் பதிவு செய்யவில்லை என்று தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்களிடம் கேட்டதற்கு யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.இவரை விமர்சித்துள்ளார் என்று தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் பதிலளித்தார். அதற்கு ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
அவர்கள் ஆதாரத்துடனா? என்று கேட்டதற்கு, இவர் பலவீனமானவர் என்று தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
கூறினார். - இப்னு கலஃபூன், இவர் தாபிஈ, ஸாலிஹ்-ஆதாரமாக ஏற்கலாம் என்று தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
கூறியதாக அறிவித்துள்ளார். - நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
அவர்கள், இவர் அந்தளவிற்கு பலமானவர் அல்ல;(இவரின் செய்திகளை எழுதிக் கொள்ளலாம்) என்று கூறியுள்ளார். - உகைலீ,பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 322
இப்னு ஷாஹீன்,பிறப்பு ஹிஜ்ரி 298
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 87
அபுல்அரப் ஆகியோர் இவரை பலவீனமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளனர். - இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
அவர்கள், இவரிடமிருந்து முன்கரான செய்தியை நான் காணவில்லை. நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
இமாம் கூறியது போன்று இவரின் செய்திகளை எழுதிக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார். - இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் இவர் ஸதூக்-நம்பகமானவர்; மனனசக்தி பலவீனமானவர். இவரின் செய்தியை புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள் பதிவு செய்திருப்பதை சிலர் விமர்சித்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
இப்னுல் கத்தான் அல்ஃபாஸீ பிறப்பு ஹிஜ்ரி 562
இறப்பு ஹிஜ்ரி 628
வயது: 66
அவர்கள், இவரை விமர்சித்தவர்கள் ஆதாரத்தைக் கூறவில்லை என்பதால் இவர் பலமானவர் என்று கூறியுள்ளார்.
(நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-2/111, அல்காமில்-1/344, தஹ்தீபுல் கமால்-2/132, அல்இக்மால்-1/238, அல்காஷிஃப்-2/59, தஹ்தீபுத் தஹ்தீப்-1/74, தக்ரீபுத் தஹ்தீப்-1/110)
1 . இந்தக் கருத்தில் அபூமூஸா அஷ்அரீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- இப்ராஹீம் பின் இஸ்மாயீல் —> அபூபுர்தா —> அபூமூஸா (ரலி)
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-10805 , அஹ்மத்-19679 , 19753 , புகாரி-2996 , அபூதாவூத்-3091 , ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-2214 , இப்னு ஹிப்பான்-2929 , அல்முஃஜமுல் அவ்ஸத்-236 , அல்முஃஜமுஸ் ஸகீர்-, ஹாகிம்-1261 , குப்ரா பைஹகீ-6547 ,
2 . அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-6482 .
3 . அனஸ் (ரலி)
4 . இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி)
5 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி)
6 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-10815,
இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.
சமீப விமர்சனங்கள்