தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-6482

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மக்களில் யாருக்காவது தனது உடலில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், வல்லோனும் மாண்புடையோனுமாகிய அல்லாஹ், பாதுகாப்பு வானவர்களுக்கு கட்டளையிடுகிறான்:

எனது அடியான் (ஆரோக்கியமானவனாய் இருக்கும்போது செய்த நற்செயல்களை நோயாளியாக இருக்கும்) இந்த நாளின் பகலிலும், இரவிலும் அவனுக்காக பதிவு செய்யுங்கள். இது அவன் (பாவம் செய்யாமல்) என்னுடன் தொடர்பில் இருக்கும்வரை தான்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 6482)

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ يُوسُفَ الْأَزْرَقُ، حَدَّثَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، عَنِ الْقَاسِمِ يَعْنِي ابْنَ مُخَيْمِرَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

مَا أَحَدٌ مِنَ النَّاسِ يُصَابُ بِبَلَاءٍ فِي جَسَدِهِ إِلَّا أَمَرَ اللَّهُ عَزَّ وَجَلَّ الْمَلَائِكَةَ الَّذِينَ يَحْفَظُونَهُ فَقَالَ: اكْتُبُوا لِعَبْدِي فِي كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ، مَا كَانَ يَعْمَلُ مِنْ خَيْرٍ، مَا كَانَ فِي وِثَاقِي


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-6482.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-34128-அல்காஸிம் பின் முகைமிரா அவர்கள் பற்றி, இவர் கூஃபாவைச் சேர்ந்தவர்; பிறகு ஷாம் சென்றுவிட்டார். இவர் நபித்தோழர்களிடம் ஹதீஸ்களை கேட்டுள்ளதாக நான் கேள்விப்படவில்லை என்று இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள் கூறியதாக அப்பாஸ் அத்தூரீ அறிவித்துள்ளார்.

(நூல்: தாரீகு இப்னு மயீன்-2111, 3/430)

இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
அவர்கள், இவர் நபித்தோழர்களிடம் ஹதீஸைக் கேட்கவில்லை என்பதை உறுதியாகக் கூறவில்லை. தாம் கேள்விப்படவில்லை என்றுதான் கூறியுள்ளார் என்பதாலும், இந்தச் செய்தியை அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடமிருந்து கைஸமா பின் அப்துர்ரஹ்மான் அவர்களும் அறிவித்துள்ளார் என்பதாலும், இந்தக் கருத்தில் வேறுசில செய்திகளும் வந்துள்ளது என்பதாலும் இது குறைந்தபட்சம் ஸஹீஹுன் லிஃகைரிஹீ என்ற தரத்தில் உள்ள செய்தியாகும்.


2 . இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • மஃமர் —> ஆஸிம் பின் பஹ்தலா —> கைஸமா பின் அப்துர்ரஹ்மான் —> அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-21229 , அஹ்மத்-6895 , குப்ரா பைஹகீ-6546 ,

  • வகீஃ —> மிஸ்அர் —> அபூஹஸீன் —> காஸிம் பின் முகைமிரா —> அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

பார்க்க: அஹ்மத்-6826 ,

  • அபூபக்ர் பின் அய்யாஷ் —> அபூஹஸீன், ஆஸிம் பின் பஹ்தலா —> காஸிம் பின் முகைமிரா —> அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

பார்க்க: அஹ்மத்-6916 , முஸ்னத் பஸ்ஸார்-2413 ,

  • ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
    இறப்பு ஹிஜ்ரி 161
    வயது: 64
    —> அல்கமா பின் மர்ஸத் —> காஸிம் பின் முகைமிரா —> அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-10804 , அஹ்மத்-6482 , 6825 ,  தாரிமீ-2812 , அல்அதபுல் முஃப்ரத்-500 , முஸ்னத் பஸ்ஸார்-, அல்முஃஜமுல் கபீர்-, ஹாகிம்-,

மேலும் பார்க்க: புகாரி-2996 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.