611. மேலுள்ள ஹதீஸ் தான் இங்கு இடம்பெறுகின்றது. என்னுடைய தலையை அல்லது தலைமுடியை பிடித்து என்னை அவர்கள் தனது வலது பக்கமாக நிறுத்தினார்கள் என்று இந்த அறிவிப்பில் இடம் பெற்றுள்ளது.
فَأَخَذَ بِرَأْسِي أَوْ بِذُؤَابَتِي فَأَقَامَنِي عَنْ يَمِينِهِ
Sunan Abu Dawud
611. மேலுள்ள ஹதீஸ் தான் இங்கு இடம்பெறுகின்றது. என்னுடைய தலையை அல்லது தலைமுடியை பிடித்து என்னை அவர்கள் தனது வலது பக்கமாக நிறுத்தினார்கள் என்று இந்த அறிவிப்பில் இடம் பெற்றுள்ளது.
فَأَخَذَ بِرَأْسِي أَوْ بِذُؤَابَتِي فَأَقَامَنِي عَنْ يَمِينِهِ
610. நான் எனது சிறிய தாயார் மைமூ (ரலி) வீட்டில் தங்கினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (படுக்கையிலிருந்து) எழுந்து தோல் துருத்தியை திறந்து உலூச் செய்து விட்டு அதை கட்டி வைத்தார்கள். பிறகு தொழுகைக்கு தயாரானதும் நானும் எழுந்து அவர்கள் உலூச் செய்தது போன்று உலூச் செய்தேன். பிறகு நானும் வந்து அவரது இடது பக்கம் நின்றேன். அவர்கள் என்னை தனது வலது கையால் பிடித்து தனது பின் பக்கமாக சுற்றி கொண்டு வந்து அவர்களது வலது பக்கம் என்னை நிறுத்தினார்கள். நான் அவர்களுடன் தொழுதேன் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்.
குறிப்பு : இந்த ஹதீஸ் முஸ்லிமிலும் இடம் பெறுகின்றது.
بِتُّ فِي بَيْتِ خَالَتِي مَيْمُونَةَ «فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ اللَّيْلِ فَأَطْلَقَ الْقِرْبَةَ فَتَوَضَّأَ، ثُمَّ أَوْكَأَ الْقِرْبَةَ، ثُمَّ قَامَ إِلَى الصَّلَاةِ، فَقُمْتُ فَتَوَضَّأْتُ كَمَا تَوَضَّأَ، ثُمَّ جِئْتُ فَقُمْتُ عَنْ يَسَارِهِ، فَأَخَذَنِي بِيَمِينِهِ فَأَدَارَنِي مِنْ وَرَائِهِ فَأَقَامَنِي عَنْ يَمِينِهِ، فَصَلَّيْتُ مَعَهُ»
609. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தனது தாயாருக்கும் இன்னொரு பெண்ணுக்கும் தொழுவிக்கும் போது என்னை தனது வலது பக்கமாகவும், பெண்களை அதற்கு பின்னாலும் நிறுத்தினார்கள் என்று அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்.
குறிப்பு : இந்த ஹதீஸ் முஸ்லிம், நஸயீ, இப்னுமாஜா ஆகிய நூல்களில் இடம் பெறுகின்றது.
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَمَّهُ وَامْرَأَةً مِنْهُمْ، فَجَعَلَهُ عَنْ يَمِينِهِ وَالْمَرْأَةَ خَلْفَ ذَلِكَ»
பாடம் : 213
இருவரில் ஒருவர் இன்னொருவருக்கு தொழுவிக்கும் போது அவ்விருவரும் எப்படி நிற்க வேண்டும் ?
608. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் (ரலி) யிடம் வந்தபோது நெய், பேரீத்தம்பழம் ஆகியவற்றைக் கொடுத்தனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் பேரீத்தம் பழத்தை அதன் பாத்திரத்தில் வையுங்கள், தேனை அதன் பையிலேயே வையுங்கள். ஏனெனில் நான் நோன்பு நோற்றிருக்கின்றேன் என்று சொன்னார்கள். பிறகு எழுந்து எங்களுக்கு நபிலான தொழுகையின் இரு ரக்அத்களை தொழுவித்தார்கள். உம்மு ஸுலைம், உம்மு ஹராம் ஆகிய இருவரும் எழுந்து எங்கள் பின்னால் நின்று தொழுதார்கள் என அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்.
என்னை நபி (ஸல்) அவர்கள் விரிப்பில் தனது வலது பக்கத்தில் நிறுத்தினார்கள் என்று அனஸ் (ரலி) அறிவித்தார் என்றே எனக்கு நினைவில் உள்ளது என அனஸ் (ரலி) யிடமிருந்து அறிவிக்கும் சாபித் அறிவிக்கின்றார்.
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ” دَخَلَ عَلَى أُمِّ حَرَامٍ فَأَتَوْهُ بِسَمْنٍ وَتَمْرٍ، فَقَالَ: « رُدُّوا هَذَا فِي وِعَائِهِ، وَهَذَا فِي سِقَائِهِ، فَإِنِّي صَائِمٌ»، ثُمَّ قَامَ فَصَلَّى بِنَا رَكْعَتَيْنِ تَطَوُّعًا فَقَامَتْ أُمُّ سُلَيْمٍ وَأُمُّ حَرَامٍ خَلْفَنَا، قَالَ ثَابِتٌ: وَلَا أَعْلَمُهُ إِلَّا قَالَ: أَقَامَنِي عَنْ يَمِينِهِ عَلَى بِسَاطٍ
607. உஸைத் பின் ஹுளைர் (ரலி) மக்களுக்கு தொழுவிக்கும் இமாமாக பணியாற்றிக் கொண்டிருந்தார். (அவர் நோய்வாய்ப்பட்டதும்) அவரை உடல் நலம் விசாரிக்க அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! எங்களுடைய இமாம் நோயாளியாக இருக்கின்றார் என்று சொன்னதும் அவர் உட்கார்ந்து தொழுதால் நீங்களும் உட்கார்ந்து தொழுங்கள் என்று சொன்னார்கள் என உஸைத் பின் ஹுளைர் (ரலி) அவர்களிடமிருந்து சஃத் பின் முஆத் (ரலி) யின் மகன் அறிவிக்கின்றார்.
أَنَّهُ كَانَ يَؤُمُّهُمْ، قَالَ: فَجَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُودُهُ، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ إِمَامَنَا مَرِيضٌ، فَقَالَ: «إِذَا صَلَّى قَاعِدًا فَصَلُّوا قُعُودًا»
606. நபி (ஸல்) அவர்கள் நோய் வாய்ப்பட்டிருந்தார்கள். அவர்கள் உட்கார்ந்திருக்கும் நிலையில் அவர்களுக்கு பின்னால் (நின்று) தொழுதோம். நபி (ஸல்) அவர்களின் தக்பீரை மக்களுக்கு செவியுறச் செய்யும் விதமாக அபூபக்ர் (ரலி) தக்பீர் சொல்லிக் கொண்டிருந்தார்கள் என்று ஜாபிர் (ரலி) அறிவிக்கும் ஹதீஸை இதன் அறிவிப்பாளர் தொடர்ந்து அறிவிக்கின்றார்.
இந்த ஹதீஸ் முஸ்லிம், நஸயீ, இப்னு மாஜா ஆகிய நூல்களில் விரிவாக இடம் பெறுகின்றது.
اشْتَكَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّيْنَا وَرَاءَهُ، وَهُوَ قَاعِدٌ وَأَبُوبَكْرٍ يُكَبِّرُ لِيُسْمِعَ النَّاسَ تَكْبِيرَهُ، ثُمَّ سَاقَ الْحَدِيثَ
605. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தன்னுடைய வீட்டில் உட்கார்ந்து கொண்டே தொழுதார்கள். அவர்களுக்கு பின்னால் மக்கள் நின்று கொண்டு தொழுத போது அவர்களை உட்காரும்படி சைகை செய்தார்கள். தொழுது முடித்ததும், பின்பற்றப்படுவதற்காகத் தான் இமாம் நியமிக்கப்பட்டிருக்கின்றார். அவர் ருகூஃ செய்யும் போது நீங்களும் ருகூஃ செய்யுங்கள். அவர் (ருகூஃவிலிருந்து) எழும்போது நீங்களும் எழுங்கள். அவர் உட்கார்ந்து தொழுதால் நீங்களும் உட்கார்ந்து தொழுங்கள் என்று நபி (ஸல்) அவர்களின் மனைவி அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள்.
குறிப்பு : இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்களில் இடம் பெறுகின்றது.
صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَيْتِهِ وَهُوَ جَالِسٌ فَصَلَّى وَرَاءَهُ قَوْمٌ قِيَامًا، فَأَشَارَ إِلَيْهِمْ أَنِ اجْلِسُوا فَلَمَّا انْصَرَفَ، قَالَ: «إِنَّمَا جُعِلَ الْإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ فَإِذَا رَكَعَ فَارْكَعُوا، وَإِذَا رَفَعَ فَارْفَعُوا، وَإِذَا صَلَّى جَالِسًا فَصَلُّوا جُلُوسًا»
604. ஹதீஸ் எண்-603 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.
“இமாம் நியமிக்கப்பட்டிருப்பது அவர் பின்பற்ற பட வேண்டும் என்பதற்காகவே” என்ற கருத்துடன் இந்த ஹதீஸ் தொடங்குகிறது.
என்றாலும் இதில், “இமாம் ஓதும் போது நீங்கள் வாய் மூடி இருங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்ற வாக்கியம் கூடுதலாக வந்துள்ளது.
அபூதாவூத் இமாம் கூறுகிறார்:
“அவர் ஓதினால் நீங்கள் வாய் மூடி இருங்கள்” என்ற இந்த கூடுதலான அறிவிப்பு மஹ்ஃபூல் எனும் முன்னுரிமை பெற்ற செய்தி அல்ல. இந்த தவறு அபூகாலித் என்பாரிடமிருந்து ஏற்பட்டுள்ளது என்று நாம் கருதுகிறோம்.
«إِنَّمَا جُعِلَ الْإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ» بِهَذَا الْخَبَرِ زَادَ «وَإِذَا قَرَأَ فَأَنْصِتُوا»
603. பின்பற்றப்படுவதற்காக இமாம் நியமிக்கப்பட்டிருக்கின்றார். அவர் தக்பீர் சொன்னால் நீங்கள் தக்பீர் சொல்லுங்கள். அவர் தக்பீர் சொல்கின்ற வரை நீங்கள் தக்பீர் சொல்லாதீர்கள். அவர் ருகூஃ செய்யும் வரை நீங்கள் ருகூஃ செய்யாதீர்கள். அவர் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா (புகழ்பவனின் புகழை அல்லாஹ் செவியுற்று விட்டான்) என்று சொன்னால் யா அல்லாஹ்! இறைவனே! உனக்கே எல்லாப் புகழும்! என்று சொல்லுங்கள். அவர் ஸஜ்தா செய்தால் நீங்களும் “ஸஜ்தா’ செய்யுங்கள். அவர் ஸஜ்தா செய்யும் வரை நீங்கள் சஜ்தா செய்ய வேண்டாம். அவர் நின்று தொழுதால் நீங்கள் நின்று தொழுங்கள். அவர் உட்கார்ந்து தொழுதால் நீங்கள் அனைவரும் உட்கார்ந்து தொழுங்கள் என்று சொன்னார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.
குறிப்பு : இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான “முஸ்லிம்’ உனக்கே எல்லாப் புகழும் (வலக்கல் ஹம்து) என்று அறிவிக்கின்றார்.
இமாம் அபூதாவீத் குறிப்பிடுகின்றார்கள் :
“அல்லாஹும்ம ரப்பனா வலக்கல் ஹம்து” என்று தான் (வேறு வார்த்தையல்ல) என சுலைமானிடமிருந்து அறிவிக்கும் إِنَّمَا جُعِلَ الْإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ فَإِذَا كَبَّرَ فَكَبِّرُوا، وَلَا تُكَبِّرُوا حَتَّى يُكَبِّرَ، وَإِذَا رَكَعَ فَارْكَعُوا وَلَا تَرْكَعُوا حَتَّى يَرْكَعَ، وَإِذَا قَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، فَقُولُوا: اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ – قَالَ مُسْلِمٌ: وَلَكَ الْحَمْدُ – وَإِذَا سَجَدَ فَاسْجُدُوا وَلَا تَسْجُدُوا حَتَّى يَسْجُدَ، وَإِذَا صَلَّى قَائِمًا فَصَلُّوا قِيَامًا، وَإِذَا صَلَّى قَاعِدًا فَصَلُّوا قُعُودًا أَجْمَعُونَ
602. ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் (இருக்கும்போது ஒரு சமயம்) ஒரு குதிரை மீது ஏறினார்கள். அப்போது அது அவர்களை பேரீத்த மரத்திற்கு அடியில் தள்ளிவிட்டது. இதனால் அவர்களுடைய கால் பிசகி விட்டது. அவர்களை நாங்கள் உடல் நலம் விசாரிக்க வந்தோம். அப்போது அவர்களை ஆயிஷா (ரலி) அவர்களுக்குரிய அறையில் உட்கார்ந்து தொழக் கண்டோம். நாங்கள் அவர்களுக்குப் பின் நின்று தொழுதோம். அவர்கள் எங்களிடம் (ஆட்சேபம் தெரிவிக்காமல்) அமைதியாக இருந்து விட்டார்கள்.
பிறகு மீண்டும் ஒருமுறை அவர்களிடம் நாங்கள் உடல் நலம் விசாரிக்க வந்தோம். அப்போது கடமையான தொழுகையை அவர்கள் தொழுதுக் கொண்டிருந்தார்கள். நாங்கள் அவர்களுக்கு பின்னால் நின்று தொழுதோம். அப்போது அவர்கள் எங்களிடம் சமிக்ஞை செய்ததும் நாங்கள் உட்கார்ந்து விட்டோம்.
தொழுகையை முடித்ததும் நபி (ஸல்) அவர்கள், “இமாம் உட்கார்ந்து தொழுதால் நீங்களும் உட்கார்ந்து தொழுங்கள். அவர்கள் நின்று தொழுதால் நீங்களும் நின்று தொழுங்கள். பாரசீக மக்கள் தங்கள் தலைவர்களிடம் நடந்து கொள்வதுபோல் நீங்கள் رَكِبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَسًا بِالْمَدِينَةِ فَصَرَعَهُ عَلَى جِذْمِ نَخْلَةٍ فَانْفَكَّتْ قَدَمُهُ، فَأَتَيْنَاهُ نَعُودُهُ، فَوَجَدْنَاهُ فِي مَشْرُبَةٍ لِعَائِشَةَ يُسَبِّحُ جَالِسًا، قَالَ: فَقُمْنَا خَلْفَهُ فَسَكَتَ عَنَّا، ثُمَّ أَتَيْنَاهُ مَرَّةً أُخْرَى، نَعُودُهُ فَصَلَّى الْمَكْتُوبَةَ جَالِسًا، فَقُمْنَا خَلْفَهُ فَأَشَارَ إِلَيْنَا، فَقَعَدْنَا، قَالَ: فَلَمَّا قَضَى الصَّلَاةَ، قَالَ: «إِذَا صَلَّى الْإِمَامُ جَالِسًا فَصَلُّوا جُلُوسًا، وَإِذَا صَلَّى الْإِمَامُ قَائِمًا فَصَلُّوا قِيَامًا، وَلَا تَفْعَلُوا كَمَا يَفْعَلُ أَهْلُ فَارِسَ بِعُظَمَائِهَا»
சமீப விமர்சனங்கள்