Category: ஸுனன் அபூதாவூத்

Abu-Dawood-421

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

421. இஷா தொழுகை நேரத்தில் நபி (ஸல்) அவர்களை எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். அவர்கள் இனி வெளியே வரமாட்டார்கள் என்று ஒருவர் எண்ணுகின்ற அளவுக்கு இஷா தொழுகையை பிற்படுத்தினார்கள். அவர்கள் தொழுதுவிட்டார்கள் என்றும் ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார். இவ்வாறு நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே நபி (ஸல்) அவர்கள் வந்து விட்டார்கள். நாங்கள் பேசிக் கொண்டிருந்தது போன்றே அவர்களிடம், இந்த தொழுகையை நீங்கள் பிற்படுத்துங்கள். ஏனெனில், இந்த தொழுகையின் காரணமாகவே நீங்கள் மற்ற சமுதாயத்தை விட சிறப்பு அளிக்கப் பட்டிருக்கின்றீர்கள். உங்களுக்கு முந்தைய சமுதாயம் இந்த இஷா தொழுகையை தொழவில்லை என்று சொன்னார்கள் என முஆத் பின் ஜபல் (ரலி) அறிவிக்கின்றனர்.


أَبْقَيْنَا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي صَلَاةِ الْعَتَمَةِ فَأَخَّرَ حَتَّى ظَنَّ الظَّانُّ أَنَّهُ لَيْسَ بِخَارِجٍ وَالْقَائِلُ مِنَّا يَقُولُ: صَلَّى، فَإِنَّا لَكَذَلِكَ حَتَّى خَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالُوا لَهُ كَمَا قَالُوا، فَقَالَ لَهُمْ: «أَعْتِمُوا بِهَذِهِ الصَّلَاةِ، فَإِنَّكُمْ قَدْ فُضِّلْتُمْ بِهَا عَلَى سَائِرِ الْأُمَمِ، وَلَمْ تُصَلِّهَا أُمَّةٌ قَبْلَكُمْ»


Abu-Dawood-420

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

420. ஓர் இரவு அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களை இஷா தொழுகைக்காக எதிர்பார்த்து காத்திருந்தோம். இரவில் மூன்றில் ஒரு பகுதி கழிந்த பிறகு அல்லது அதற்கு பிறகு எங்களிடம் புறப்பட்டு வந்தார்கள். ஏதாவது ஒரு வேலையில் ஈடுபாடு கொண்டிருந்தார்களா? அல்லது வேறெதாவது காரணம் உண்டா? என்று எங்களுக்கு தெரியாது. இந்த தொழுகையை இன்னும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றீர்களா? எனது சமுதாயத்திற்கு கடினமாக இல்லாதிருப்பின் அவர்களுக்கு இந்த நேரத்திலேயே தொழுவித்திருப்பேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு அவர்கள் முஅத்தினுக்கு உத்தரவிட்டதும் அவர் தொழுகைக்கு இகாமத் சொன்னார் என்று அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அறிவிக்கின்றார்கள்.

(குறிப்பு : இந்த ஹதீஸ் முஸ்லிம், நஸயீ ஆகிய நூல்களில் இடம் பெற்றிருக்கின்றது.)


مَكَثْنَا ذَاتَ لَيْلَةٍ نَنْتَظِرُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِصَلَاةِ الْعِشَاءِ فَخَرَجَ إِلَيْنَا حِينَ ذَهَبَ ثُلُثُ اللَّيْلِ أَوْ بَعْدَهُ فَلَا نَدْرِي أَشَيْءٌ شَغَلَهُ أَمْ غَيْرُ ذَلِكَ، فَقَالَ: حِينَ خَرَجَ «أَتَنْتَظِرُونَ هَذِهِ الصَّلَاةَ لَوْلَا أَنْ تَثْقُلَ عَلَى أُمَّتِي لَصَلَّيْتُ بِهِمْ هَذِهِ السَّاعَةَ»، ثُمَّ أَمَرَ الْمُؤَذِّنَ فَأَقَامَ الصَّلَاةَ


Abu-Dawood-419

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 150

இஷா தொழுகை நேரம்.

419. இந்த தொழுகையின் அதாவது பிந்தி இஷா தொழுகையின் நேரத்தை மக்களில் நன்கு அறிந்தவன் ஆவேன். இரவின் மூன்றவது பகுதியில் சந்திரன் மறைந்ததும் அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் அந்த தொழுகையை தொழுவார்கள் என்று நுஃமான் அறிவிக்கின்றார்.

(குறிப்பு : இந்த ஹதீஸ் திர்மிதீ, நஸயீ, தாரமீ ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.)


أَنَا أَعْلَمُ النَّاسِ بِوَقْتِ هَذِهِ الصَّلَاةِ «صَلَاةِ الْعِشَاءِ الْآخِرَةِ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّيهَا لِسُقُوطِ الْقَمَرِ لِثَالِثَةٍ»


Abu-Dawood-418

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

418. அபூஅய்யுப் போர் செய்ய போகும் போது எங்களிடம் வருகையளித்தார். அன்றைய தினத்தில் உக்பா பின் ஆமிர் எகிப்தின் ஆளுநராக இருந்தார். அவர் மக்ரிபை பிற்படுத்தினார். அவரிடம் அபூஅய்யூப் சென்று இந்த தொழுகை என்ன தொழுகை? என்று வினவினார். அதற்கு பணியில் ஈடுபட்டு விட்டோம் என்று பதில் சொன்னார். அதற்கு அபூஅய்யூப் நட்சத்திரங்கள் தெரியும் அளவுக்கு மக்ரிபை பிற்படுத்தாத வரை எனது சமுதாயத்தவர் நன்மையிலேயே அல்லது சரியான நடைமுறைலேயே இருக்கின்றார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறியதை நீ செவியுறவில்லையா? என்று கேட்டார்கள் என மிர்சத் பின் அப்துல்லாஹ் அறிவிக்கின்றார்கள்.


لَمَّا قَدِمَ عَلَيْنَا أَبُو أَيُّوبَ غَازِيًا وَعُقْبَةُ بْنُ عَامِر يَوْمَئِذٍ عَلَى مِصْرَ فَأَخَّرَ الْمَغْرِبَ فَقَامَ إِلَيْهِ أَبُو أَيُّوب، فَقَالَ: لَهُ مَا هَذِهِ الصَّلَاةُ يَا عُقْبَةُ، فَقَالَ: شُغِلْنَا، قَالَ: أَمَا سَمِعْتَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ  يَقُولُ: «لَا تَزَالُ أُمَّتِي بِخَيْرٍ» – أَوْ قَالَ: عَلَى الْفِطْرَةِ – مَا لَمْ يُؤَخِّرُوا الْمَغْرِبَ إِلَى أَنْ تَشْتَبِكَ النُّجُومُ


Abu-Dawood-417

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

417. நபி (ஸல்) அவர்கள் சூரியன் மறைகின்ற நேரத்தில் அதனுடைய மேல்விட்டம் மறைந்ததும் மக்ரிப் தொழுவார்கள் என ஸலமா பின் அக்வப் அறிவிக்கின்றார்.

(குறிப்பு : இந்த ஹதீஸ், புகாரி, முஸ்லிம், திர்மிதீ, இப்னுமாஜா ஆகிய நூல்களில் இடம் பெற்றிருக்கின்றது.)


«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي الْمَغْرِبَ سَاعَةَ تَغْرُبُ الشَّمْسُ إِذَا غَابَ حَاجِبُهَا»


Abu-Dawood-416

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 149

மக்ரிப் தொழுகை.

416. நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் மக்ரிப் தொழுவோம். பிறகு நாங்கள் அம்பு எறிவோம். எங்களில் ஒருவர் (அந்நேரத்தில்) தனது அம்பு போய் விழும் இடத்தைக் கண்டு கொள்வார் என்று அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவிக்கின்றார்.

(குறிப்பு : இது போன்ற ஹதீஸ் புகாரி, முஸ்லிம், இப்னுமாஜா, நஸயீ ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.)


«كُنَّا نُصَلِّي الْمَغْرِبَ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ نَرْمِي فَيَرَى أَحَدُنَا مَوْضِعَ نَبْلِهِ»


Abu-Dawood-415

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

415. சூரிய வெளிச்சத்தில் பூமியில் உள்ள பொருட்கள் மஞ்சளாக காட்சியளிக்கும் நேரமே தவறிவிட்ட அஸர் நேரமாகும் என்று அவ்ஸாயீ விளக்கமளிக்கின்றார்.


قَالَ أَبُو عَمْرٍو يَعْنِي الْأَوْزَاعِيَّ: وَذَلِكَ أَنْ تَرَى مَا عَلَى الْأَرْضِ مِنَ الشَّمْسِ صَفْرَاءَ


Abu-Dawood-414

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

414. அஸர் தொழுகையை தவர விடுபவர் தனது குடும்பம், பொருளாதாரம் ஆகியவை பறிக்கப் பட்டவர் போலாவார் என்று அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்.

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள் :

பறிக்கப்பட்டவர் என்பதற்கு அரபியில் உதிர என்று சொல்வதாகும். உபைதுல்லாஹ் பின் அம்ர் என்பார் என்று அறிவிக்கப்படுகின்றார். இந்த தடுமாற்றம் ஐய்யூப் என்ற அறிவிப்பாளரிடம் ஏற்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்களிடமிருந்து தன் தந்தை வாயிலாக அறிவிக்கும் ஸாலிம் மூலம் அறிவிக்கும் ஜுஹ்ரி என்றே அறிவிக்கின்றார்.


«الَّذِي تَفُوتُهُ صَلَاةُ الْعَصْرِ، فَكَأَنَّمَا وُتِرَ أَهْلَهُ وَمَالَهُ»


Abu-Dawood-413

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

413. நாங்கள் அனஸ் பின் மாலிக் (ரலி)யிடம் சென்றோம். அப்போது அவர் அஸர் தொழுகையை தொழலானார். அவர் தொழுது முடித்ததும் தொழுகையை (அதன் நேரத்தை விட்டும் தாமதப் படுத்தி) விரைவாகத் தொழுவதை நாங்கள் குறிப்பிட்டோம் அல்லது அவர் குறிப்பிட்டார். அப்போது, அவர் அது நயவஞ்சகர்களின் தொழுகையாகும், அது நயவஞ்சகர்களின் தொழுகையாகும். அவர்களில் ஒருவர் சூரியன் மஞ்சள் நிறமாகி அது சைத்தானின் இரு கொம்புகளுக்கிடையில் அல்லது இரு கொம்புகளின் மீது (அறிவிப்பாளர் ஐயம்) ஆகிவிடும் வரை உட்கார்ந்து விட்டு பிறகு எழுந்து நான்கு ரக்அத்துக்களை மிக வேகமாக தொழுவார். அவற்றில், மகத்துவமும் கண்ணியமும் பொருந்திய அல்லாஹ்வை கொஞ்சமாகவே தவிர நினைவு கூற மாட்டார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன் என்று அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவிக்கின்றார்கள்.

(குறிப்பு : இந்த ஹதீஸ் முஸ்லிம், திர்மிதீ, நஸயீ ஆகிய நூல்களில் இடம் பெற்றிருக்கின்றது.)


دَخَلْنَا عَلَى أَنَسِ بْنِ مَالِكٍ بَعْدَ الظُّهْرِ، فَقَامَ يُصَلِّي الْعَصْرَ، فَلَمَّا فَرَغَ مِنْ صَلَاتِهِ ذَكَرْنَا تَعْجِيلَ الصَّلَاةِ أَوْ ذَكَرَهَا، فَقَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ «تِلْكَ صَلَاةُ الْمُنَافِقِينَ، تِلْكَ صَلَاةُ الْمُنَافِقِينَ، تِلْكَ صَلَاةُ الْمُنَافِقِينَ يَجْلِسُ أَحَدُهُمْ حَتَّى إِذَا اصْفَرَّتِ الشَّمْسُ فَكَانَتْ بَيْنَ قَرْنَيْ شَيْطَانٍ، أَوْ عَلَى قَرْنَيِ الشَّيْطَانِ قَامَ فَنَقَرَ أَرْبَعًا لَا يَذْكُرُ اللَّهَ فِيهَا إِلَّا قَلِيلًا»


Abu-Dawood-412

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

412. சூரியன் மறைவதற்கு முன்பு அஸர் தொழுகையில் ஒரு ரக்அத்தை அடைந்தவர் அஸர் தொழுகையை அடைந்தவராவார். சூரியன் உதிப்பதற்கு முன்பு பஜ்ர் தொழுகையில் ஒரு ரக்அத்தை அடைந்தவர் பஜ்ர் தொழுகையை அடைந்தவராவார் என்று அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்.

(குறிப்பு : இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ, இப்னு மாஜா ஆகிய நூல்களில் பதிவாகியுள்ளது.)


«مَنْ أَدْرَكَ مِنَ الْعَصْرِ رَكْعَةً قَبْلَ أَنْ تَغْرُبَ الشَّمْسُ فَقَدْ أَدْرَكَ، وَمَنْ أَدْرَكَ مِنَ الْفَجْرِ رَكْعَةً قَبْلَ أَنْ تَطْلُعَ الشَّمْسُ فَقَدْ أَدْرَكَ»


Next Page » « Previous Page