Category: ஸுனன் அபூதாவூத்

Abu-Dawood-2805

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2805. பாதி அல்லது பாதிக்குமேல் காது இல்லாத, கொம்பு உடைந்த ஆட்டை குர்பானி கொடுப்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைச் செய்தார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)

(குறிப்பு: அழ்பா என்பதற்கு அகராதியில் கொம்பு உடைந்த ஆடு, காது பிளக்கப்பட்ட  ஆடு என்பதற்கும் கூறப்படும். உட்பகுதியில் கொம்பு உடைந்த ஆடு என்பதற்கும் கூறப்படும். சிலர் இந்த செய்தியை இரண்டாவது பொருளிலும் கூறுகின்றனர்)

 


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «نَهَى أَنْ يُضَحَّى بِعَضْبَاءِ الْأُذُنِ وَالْقَرْنِ»


Abu-Dawood-4174

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

4174.

…ஒரு பெண் நறுமணம் பூசி பள்ளிவாசலுக்கு சென்றால், அவள் (வீட்டிற்கு) திரும்பிச் சென்று பெருந்தொடக்குக்காக குளிப்பது போன்று குளிக்கும் வரை அவளின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது…


لَقِيَتْهُ امْرَأَةٌ وَجَدَ مِنْهَا رِيحَ الطِّيبِ يَنْفَحُ، وَلِذَيْلِهَا إِعْصَارٌ، فَقَالَ: يَا أَمَةَ الْجَبَّارِ، جِئْتِ مِنَ الْمَسْجِدِ؟ قَالَتْ: نَعَمْ، قَالَ: وَلَهُ تَطَيَّبْتِ؟ قَالَتْ: نَعَمْ، قَالَ: إِنِّي سَمِعْتُ حِبِّي أَبَا الْقَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا تُقْبَلُ صَلَاةٌ لِامْرَأَةٍ تَطَيَّبَتْ لِهَذَا الْمَسْجِدِ، حَتَّى تَرْجِعَ فَتَغْتَسِلَ غُسْلَهَا مِنَ الجَنَابَةِ»


Abu-Dawood-2516

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2516. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் உலகின் ஏதேனும் ஒரு பொருளை எதிர்ப்பார்த்து அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்ய விரும்புகிறார். (அவர் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவருக்கு கூலி இல்லை” என்று பதிலளித்தார்கள்.

இது மக்களுக்கு பெரும் சிரமமாக ஆனது. எனவே அவர்கள், அந்த மனிதரிடம், “நபி (ஸல்) அவர்களிடம் நீ விளக்கமாக கேட்கவில்லை போலும்! மீண்டும் அவர்களிடம் விளக்கமாக கேட்பீராக!” என்று கூறினர். எனவே அவர் மீண்டும், “அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் உலகின் ஏதேனும் ஒரு பொருளை எதிர்ப்பார்த்து அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்ய விரும்புகிறார். (அவர் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? என்று கேட்டார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், “அவருக்கு கூலி இல்லை” என்று பதிலளித்தார்கள். மக்கள் மீண்டும் அவரிடம் விளக்கமாக கேட்குமாறு கூற மூன்றாவது தடவையும் அவர் கேட்டார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், “அவருக்கு கூலி இல்லை” என்று பதிலளித்தார்கள்.


أَنَّ رَجُلًا قَالَ: يَا رَسُولَ اللَّهِ، رَجُلٌ يُرِيدُ الْجِهَادَ فِي سَبِيلِ اللَّهِ، وَهُوَ يَبْتَغِي عَرَضًا مِنْ عَرَضِ الدُّنْيَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا أَجْرَ لَهُ». فَأَعْظَمَ ذَلِكَ النَّاسُ، وَقَالُوا لِلرَّجُلِ: عُدْ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَعَلَّكَ لَمْ تُفَهِّمْهُ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، رَجُلٌ يُرِيدُ الْجِهَادَ فِي سَبِيلِ اللَّهِ، وَهُوَ يَبْتَغِي عَرَضًا مِنْ عَرَضِ الدُّنْيَا، فَقَالَ: «لَا أَجْرَ لَهُ». فَقَالُوا: لِلرَّجُلِ عُدْ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ لَهُ: الثَّالِثَةَ. فَقَالَ لَهُ: «لَا أَجْرَ لَهُ»


Abu-Dawood-5072

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

5072. அபூஸல்லாம்-மம்தூர் அல்அஸ்வத் அவர்கள் கூறியதாவது:

நான் ஹிம்ஸ் நகர பள்ளிவாசலில் இருக்கும் போது ஒரு மனிதர் என்னைக் கடந்து சென்றார். அப்போது மக்கள், “(இதோ) இவர் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பணியாளராக இருந்தவர் என்று கூறினர். உடனே நான் எழுந்து சென்று அவரிடம், “உங்களுக்கும், நபி (ஸல்) அவர்களுக்கும் இடையில் வேறு அறிவிப்பாளர் இல்லாமல் நீங்கள் நேரடியாக நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட ஹதீஸை எனக்கு அறிவியுங்கள் என்று கூறினேன்.

அப்போது அவர்கள், “ஒருவர் காலையிலும், மாலையிலும், “ரளீனா பில்லாஹி ரப்பா; வபில் இஸ்லாமி தீனா; வபி முஹம்மதிர் ரஸூலா” எனக் கூறினால் அவரைப் பொருந்திக் கொள்வது அல்லாஹ்வின் மீது கடமையாகிவிடுகின்றது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றேன் என்று கூறினார்.

(பொருள்: அல்லாஹ்வை இறைவனாகவும்; இஸ்லாத்தை மார்க்கமாகவும்; முஹம்மத் (ஸல்) அவர்களை (அவனுடைய) தூதராகவும் நான் மனநிறைவுடன் ஏற்றுக்கொண்டேன்.)


أَنَّهُ كَانَ فِي مَسْجِدِ حِمْصَ فَمَرَّ بِهِ رَجُلٌ فَقَالُوا: هَذَا خَدَمَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَامَ إِلَيْهِ فَقَالَ: حَدِّثْنِي بِحَدِيثٍ سَمِعْتَهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَتَدَاوَلْهُ بَيْنَكَ وَبَيْنَهُ الرِّجَالُ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: ” مَنْ قَالَ إِذَا أَصْبَحَ وَإِذَا أَمْسَى: رَضِينَا بِاللَّهِ رَبًّا، وَبِالْإِسْلَامِ دِينًا، وَبِمُحَمَّدٍ رَسُولًا، إِلَّا كَانَ حَقًّا عَلَى اللَّهِ أَنْ يُرْضِيَهُ


Abu-Dawood-1529

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1529. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் “ரளீத்து பில்லாஹி ரப்பா; வபில் இஸ்லாமி தீனா; வபி முஹம்மதிர் ரஸூலா” என்றுக் கூறினால் அவருக்கு சொர்க்கம் உறுதியாகிவிட்டது.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)


مَنْ قَالَ: رَضِيتُ بِاللَّهِ رَبًّا، وَبِالْإِسْلَامِ دِينًا، وَبِمُحَمَّدٍ رَسُولًا، وَجَبَتْ لَهُ الْجَنَّةُ


Abu-Dawood-4202

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

நரை முடியை நீக்குவது.

4202. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் நரைத்த முடியை நீக்க வேண்டாம்! ஏனேனில் இஸ்லாத்தில் இருக்கும் போது எந்த ஒரு முஸ்லிமின் முடி நரைத்து விட்டாலும் மறுமைநாளில் அது அவருக்கு ஒளியாக இருக்கும்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

முஹம்மது பின் அஜ்லான் அவர்களிடமிருந்து ஸுஃப்யான் பின் உயைனா இவ்வாறே அறிவிக்கிறார்.

முஹம்மது பின் அஜ்லான் அவர்களிடமிருந்து யஹ்யா பின் ஸயீத் அல்கத்தான் அவர்கள், “நீங்கள் நரைத்த முடியை நீக்க வேண்டாம்! ஏனேனில் இஸ்லாத்தில் இருக்கும் போது எந்த ஒரு முஸ்லிமின் முடி நரைத்து விட்டாலும் அதற்காக அல்லாஹ் அவருக்கு ஒரு நன்மையை எழுதுகிறான்; அவரை விட்டு ஒரு பாவத்தை மன்னிக்கிறான்” என்று அறிவிக்கிறார்.


لَا تَنْتِفُوا الشَّيْبَ، مَا مِنْ مُسْلِمٍ يَشِيبُ شَيْبَةً فِي الْإِسْلَامِ – قَالَ عَنْ سُفْيَانَ: «إِلَّا كَانَتْ لَهُ نُورًا يَوْمَ الْقِيَامَةِ»، وَقَالَ فِي حَدِيثِ يَحْيَى – إِلَّا كَتَبَ اللَّهُ لَهُ بِهَا حَسَنَةً، وَحَطَّ عَنْهُ بِهَا خَطِيئَةً


Abu-Dawood-4278

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

4278. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனது இந்த சமுதாயம் (அல்லாஹ்வின்) அருளுக்குரிய-இரக்கத்திற்குரிய சமுதாயம். மறுமையில் அதற்கு (நிரந்தர) வேதனை இல்லை. உலகிலேயே அதற்கு குழப்பத்தில்; நிலநடுக்கத்தில் மாட்டிக்கொள்ளுதல்; கொல்லப்படுதல் போன்றவற்றால் வேதனை செய்யப்பட்டுவிடும்.

அறிவிப்பவர்: அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)


«أُمَّتِي هَذِهِ أُمَّةٌ مَرْحُومَةٌ، لَيْسَ عَلَيْهَا عَذَابٌ فِي الْآخِرَةِ، عَذَابُهَا فِي الدُّنْيَا الْفِتَنُ، وَالزَّلَازِلُ، وَالْقَتْلُ»


Abu-Dawood-721

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

தொழுகையில் இருகைகளையும் உயர்த்துதல்.

721. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை ஆரம்பிக்கும் போதும், ருகூவுக்கு செல்லும் போதும், ருகூவிலிருந்து தலையை உயர்த்தும் போதும் தம் இருகைகளையும் தம் இருதோள்களுக்கு நேராக உயர்த்துவதையும், இரு ஸஜ்தாக்களுக்கிடையில் இவ்வாறு கைகளை உயர்த்தாமலிருப்பதையும் நான் பார்த்துள்ளேன்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஸுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள், (இந்த செய்தியை அறிவிக்கும் போது) ஒரு தடவை “ருகூவிலிருந்து தலையை உயர்த்தும் போது” என்று அறிவித்தார். அவர் அதிகமாக “ருகூவிலிருந்து தலையை உயர்த்தியப் பின்” என்றே அறிவித்துள்ளார்.


رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ” إِذَا اسْتَفْتَحَ الصَّلَاةَ رَفَعَ يَدَيْهِ حَتَّى يُحَاذِيَ مَنْكِبَيْهِ، وَإِذَا أَرَادَ أَنْ يَرْكَعَ وَبَعْدَمَا يَرْفَعُ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ –

وَقَال سُفْيَانُ مَرَّةً: وَإِذَا رَفَعَ رَأْسَهُ وَأَكْثَرُ مَا كَانَ يَقُولُ: وَبَعْدَ مَا يَرْفَعُ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ –

وَلَا يَرْفَعُ بَيْنَ السَّجْدَتَيْنِ


Abu-Dawood-752

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

752.


«رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَفَعَ يَدَيْهِ حِينَ افْتَتَحَ الصَّلَاةَ، ثُمَّ لَمْ يَرْفَعْهُمَا حَتَّى انْصَرَفَ»


Next Page » « Previous Page