Category: ஸுனன் அபூதாவூத்

Abu-Dawood-989

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

989.


أَنَّهُ ذَكَرَ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُشِيرُ بِأُصْبُعِهِ إِذَا دَعَا، وَلَا يُحَرِّكُهَا»، قَالَ ابْنُ جُرَيْجٍ: وَزَادَ عَمْرُو بْنُ دِينَارٍ، قَالَ: أَخْبَرَنِي عَامِرٌ، عَنْ أَبِيهِ، أَنَّهُ رَأَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُو كَذَلِكَ، وَيَتَحَامَلُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ الْيُسْرَى عَلَى فَخْذِهِ الْيُسْرَى،


Abu-Dawood-2419

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2419. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

துல்ஹஜ் ஒன்பது (அரஃபா), துல்ஹஜ் பத்து (ஹஜ்ஜுப் பெருநாள்), துல்ஹஜ் பதினொன்று பன்னிரண்டு பதிமூன்று (அய்யாமுத் தஷ்ரீக்) ஆகிய (ஐந்து) நாட்களும் இஸ்லாமியர்களான நம்முடைய பண்டிகை நாட்களாகும். அவை உண்பதற்கும் பருகுவதற்கும் உரிய நாட்களாகும்.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)


«يَوْمُ عَرَفَةَ، وَيَوْمُ النَّحْرِ، وَأَيَّامُ التَّشْرِيقِ عِيدُنَا أَهْلَ الْإِسْلَامِ، وَهِيَ أَيَّامُ أَكْلٍ وَشُرْبٍ»


Abu-Dawood-3417

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3417.


نَحْوَ هَذَا الْخَبَرِ وَالْأَوَّلُ أَتَمُّ، فَقُلْتُ: مَا تَرَى فِيهَا يَا رَسُولَ اللَّهِ، فَقَالَ: «جَمْرَةٌ بَيْنَ كَتِفَيْكَ تَقَلَّدْتَهَا» أَوْ «تَعَلَّقْتَهَا»


Abu-Dawood-3416

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

3416.

உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) கூறினார்கள்:

திண்ணைத் தோழர்களுக்கு குர்ஆனையும் எழுத்தறிவையும் கற்றுக்கொடுத்தேன். அதனால் அவர்களுள் ஒருவர் எனக்கொரு வில்லை அன்பளிப்பாகக் கொடுத்தார். இது (பணம் சார்ந்த) பொருள் இல்லை. மேலும் நான் இதை அல்லாஹ்வின் பாதையில் எய்யப் பயன்படுத்துவேன்; (இருந்தாலும்) நான் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, (இதற்கான விளக்கத்தைக்) கேட்பேன் என்று நான் கூறிக்கொண்டேன்.

எனவே நான் அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எழுத்துப் பயிற்சியையும் குர்ஆனையும் கற்றுக்கொடுத்தவர்களுள் ஒருவர், எனக்கொரு வில்லை அன்பளிப்பாகக் கொடுத்தார். இது (பணம் சார்ந்த) பொருள் இல்லை. நான் இதை அல்லாஹ்வின் பாதையில் எய்ய(ப் பயன்படுத்த)லாமா?” என்று கேட்டேன். அதற்கவர்கள், “அதன் மூலம் (உமக்கு) நெருப்பு மாலை போடப்படுவது உமக்கு மகிழ்ச்சியளித்தால், அதை நீர் ஏற்றுக்கொள்” என்று கூறினார்கள்.


عَلَّمْتُ نَاسًا مِنْ أَهْلِ الصُّفَّةِ الْكِتَابَ، وَالْقُرْآنَ فَأَهْدَى إِلَيَّ رَجُلٌ مِنْهُمْ قَوْسًا فَقُلْتُ: لَيْسَتْ بِمَالٍ وَأَرْمِي عَنْهَا فِي سَبِيلِ اللَّهِ عَزَّ وَجَلَّ، لَآتِيَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَأَسْأَلَنَّهُ فَأَتَيْتُهُ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، رَجُلٌ أَهْدَى إِلَيَّ قَوْسًا مِمَّنْ كُنْتُ أُعَلِّمُهُ الْكِتَابَ وَالْقُرْآنَ، وَلَيْسَتْ بِمَالٍ وَأَرْمِي عَنْهَا فِي سَبِيلِ اللَّهِ، قَالَ: «إِنْ كُنْتَ تُحِبُّ أَنْ تُطَوَّقَ طَوْقًا مِنْ نَارٍ فَاقْبَلْهَا»،


Abu-Dawood-2606

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்:

அதிகாலையில் பயணம் செல்வது.

2606. “அல்லாஹ்வே! என்னுடைய சமுதாயத்துக்கு அதிகாலை நேரத்தில் அருள்வளம் வழங்குவாயாக!” என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.

மேலும் நபி (ஸல்) அவர்கள், சிறிய படை அல்லது பெரும்படையை (எங்கேனும்) அனுப்பிவைப்பதாக இருந்தால் அவர்களை அதிகாலை நேரத்தில் அனுப்பிவைப்பார்கள்.

அறிவிப்பவர்: ஸக்ர் பின் வதாஆ அல்ஃகாமிதிய்யி (ரலி)

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார்:

ஸக்ர் (ரலி) அவர்கள் வியாபாரியாக இருந்தார்கள். அவர்கள் தமது வியாபாரப் பொருட்களைக் காலைப் பொழுதில், (தன் வேலையாட்கள் மூலம் விற்பனைக்கு) அனுப்பி வைப்பார்கள். அதனால் அவர்களின் செல்வம் பெருகி அவர்கள் செல்வந்தரானார்கள்.


«اللَّهُمَّ بَارِكْ لِأُمَّتِي فِي بُكُورِهَا». وَكَانَ إِذَا بَعَثَ سَرِيَّةً أَوْ جَيْشًا بَعَثَهُمْ مِنْ أَوَّلِ النَّهَارِ

«وَكَانَ صَخْرٌ رَجُلًا تَاجِرًا، وَكَانَ يَبْعَثُ تِجَارَتَهُ مِنْ أَوَّلِ النَّهَارِ فَأَثْرَى وَكَثُرَ مَالُهُ» 


Abu-Dawood-2605

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2605.


«قَلَّمَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْرُجُ فِي سَفَرٍ إِلَّا يَوْمَ الْخَمِيسِ»


Abu-Dawood-2151

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2151.


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى امْرَأَةً فَدَخَلَ عَلَى زَيْنَبَ بِنْتِ جَحْشٍ فَقَضَى حَاجَتَهُ مِنْهَا، ثُمَّ خَرَجَ إِلَى أَصْحَابِهِ فَقَالَ لَهُمْ: «إِنَّ الْمَرْأَةَ تُقْبِلُ فِي صُورَةِ شَيْطَانٍ، فَمَنْ وَجَدَ مِنْ ذَلِكَ شَيْئًا فَلْيَأْتِ أَهْلَهُ فَإِنَّهُ يُضْمِرُ مَا فِي نَفْسِهِ»


Abu-Dawood-1412

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1412. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரம்பணிதல் வசனத்தை எங்களுக்கு ஓதிக்காட்டும்போது அவர்கள் சிரம்பணிவார்கள். உடனே நாங்களும் சிரம்பணிவோம். அப்போது எங்களிடையே நெரிசல் ஏற்பட்டு, எங்களில் சிலருக்கு (சிரம்பணிவதில்) நெற்றி வைப்பதற்குக்கூட (போதுமான) இடம் கிடைக்காது.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

இதன் அறிவிப்பாளர் தொடரில் உபைதுல்லாஹ் (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் இப்னு நுமைர் (ரஹ்) அவர்கள், இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் குர்ஆனை ஓதியது “தொழுகைக்கு வெளியில்” என்று அறிவித்துள்ளார்.


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ عَلَيْنَا السُّورَةَ -، قَالَ ابْنُ نُمَيْرٍ: فِي غَيْرِ الصَّلَاةِ، ثُمَّ اتَّفَقَا: – فَيَسْجُدُ وَنَسْجُدُ مَعَهُ، حَتَّى لَا يَجِدَ أَحَدُنَا مَكَانًا لِمَوْضِعِ جَبْهَتِهِ


Abu-Dawood-4980

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4980. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வும், இன்னாரும் நாடினார்கள் என்று கூறாதீர்கள்!அல்லாஹ் நாடினான். பிறகு இன்னார் நாடினார் என்று கூறுங்கள்.

அறிவிப்பவர்: ஹுதைஃபா பின் யமான் (ரலி)


«لَا تَقُولُوا مَا شَاءَ اللَّهُ، وَشَاءَ فُلَانٌ، وَلَكِنْ قُولُوا مَا شَاءَ اللَّهُ ثُمَّ شَاءَ فُلَانٌ»


Abu-Dawood-3091

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3091.


 سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غَيْرَ مَرَّةٍ، وَلَا مَرَّتَيْنِ يَقُولُ «إِذَا كَانَ الْعَبْدُ يَعْمَلُ عَمَلًا صَالِحًا، فَشَغَلَهُ عَنْهُ مَرَضٌ، أَوْ سَفَرٌ، كُتِبَ لَهُ كَصَالِحِ مَا كَانَ يَعْمَلُ، وَهُوَ صَحِيحٌ مُقِيمٌ»


Next Page » « Previous Page