Category: ஸுனன் அபூதாவூத்

Abu-Dawood-764

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

764. (ஒரு சமயம்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுவதை ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், அல்லாஹு அக்பர் கபீரா! அல்லாஹு அக்பர் கபீரா! அல்லாஹு அக்பர் கபீரா! வல்ஹம்துலில்லாஹி கஸீரா! வல்ஹம்துலில்லாஹி கஸீரா! வல்ஹம்துலில்லாஹி கஸீரா! வ ஸுப்ஹானல்லாஹி புக்ரதவ் வ அஸீலா! (மூன்றுதடவை). அவூது பில்லாஹி மினஷ்ஷைத்தானி மின் நஃப்கிஹீ, வ நஃப்ஸிஹீ, வ ஹம்ஸிஹீ…என்று கூறினார்கள்.

(துஆவின் பொருள்: அல்லாஹ் மிகப்பெரியவன்! (மூன்றுதடவை). அதிகமதிகமான புகழ் அல்லாஹ்வுக்கே உரியது! (மூன்றுதடவை). காலையிலும் மாலையிலும் நான் அல்லாஹ்வைத் தூய்மைப்படுத்துகிறேன். (மூன்றுதடவை). ஷைத்தானை விட்டும் அவனுடைய துப்புதல், ஊதுதல், தீய தூண்டுதல் போன்றவற்றை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுகிறேன்.)

அறிவிப்பவர்: நாஃபிஉ பின் ஜுபைர் பின் முத்இம் (ரஹ்)

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர் பின் முர்ரா அவர்கள் கூறினார்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுத அந்த தொழுகை எந்த தொழுகை என்று எனக்குத் தெரியாது. ஷைத்தானின் ஊதுதல் என்றால் கவிதை; அவனுடைய துப்புதல் என்றால் பெருமை; அவனுடைய தீய தூண்டுதல் என்றால் பைத்தியம் என்று பொருளாகும்.


أَنَّهُ رَأَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي صَلَاةً – قَالَ عَمْرٌو: لَا أَدْرِي أَيَّ صَلَاةٍ هِيَ – فَقَالَ: «اللَّهُ أَكْبَرُ كَبِيرًا، اللَّهُ أَكْبَرُ كَبِيرًا، اللَّهُ أَكْبَرُ كَبِيرًا، وَالْحَمْدُ لِلَّهِ كَثِيرًا، وَالْحَمْدُ لِلَّهِ كَثِيرًا، وَالْحَمْدُ لِلَّهِ كَثِيرًا، وَسُبْحَانَ اللَّهِ بُكْرَةً وَأَصِيلًا ثَلَاثًا، أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ مِنْ نَفْخِهِ وَنَفْثِهِ وَهَمْزِهِ»،

قَالَ: نَفْثُهُ الشِّعْرُ، وَنَفْخُهُ الْكِبْرُ، وَهَمْزُهُ الْمُوتَةُ،


Abu-Dawood-4667

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4667. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

முஸ்லிம்களிடையே பிரிவினை ஏற்படும் வேளையில் (கிளர்ச்சியாளர்கள்) கூட்டம் ஒன்று தோன்றும். இரு பிரிவினரில் சத்தியத்திற்கு மிக நெருக்கத்திலிருக்கும் பிரிவினர் அவர்களைக் கொன்றொழிப்பார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)


«تَمْرُقُ مَارِقَةٌ عِنْدَ فُرْقَةٍ مِنَ الْمُسْلِمِينَ، يَقْتُلُهَا أَوْلَى الطَّائِفَتَيْنِ بِالْحَقِّ»


Abu-Dawood-4334

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4334. பெரும் பொய்யர்களான ‘தஜ்ஜால்கள்’ ஏறத்தாழ முப்பது பேர் (உலகில்) தோன்றாத வரை இறுதி நாள் வராது. அவர்களில் ஒவ்வொருவனும் அல்லாஹ்வின் மீதும், அவனது தூதரின் மீதும் பொய் கூறுவான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَخْرُجَ ثَلَاثُونَ كَذَّابًا دَجَّالًا، كُلُّهُمْ يَكْذِبُ عَلَى اللَّهِ، وَعَلَى رَسُولِهِ»


Abu-Dawood-4333

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4333. பெரும் பொய்யர்களான ‘தஜ்ஜால்கள்’ ஏறத்தாழ முப்பது பேர் (உலகில்) தோன்றாத வரை இறுதி நாள் வராது. அவர்களில் ஒவ்வொருவனும் தன்னை இறைத்தூதர் என்று வாதிடுவான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَخْرُجَ ثَلَاثُونَ دَجَّالُونَ، كُلُّهُمْ يَزْعُمُ أَنَّهُ رَسُولُ اللَّهِ»


Abu-Dawood-2373

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2373.


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ احْتَجَمَ وَهُوَ صَائِمٌ مُحْرِمٌ»


Abu-Dawood-2368

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2368.


أَنَّ شَدَّادَ بْنَ أَوْسٍ، بَيْنَمَا هُوَ يَمْشِي مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ نَحْوَهُ


Next Page » « Previous Page