394. உமர் பின் அப்துல் அஜீஸ் மிம்பரில் உட்கார்த்திருந்தார். அவர் அஸர் தொழுகையை கொஞ்சம் கால தாமதப்படுத்தினார். அறிந்து கொள்ளுங்கள்! ஜிப்ரயீல் (அலை) முஹம்மது (ஸல்) அவர்களுக்கு தொழுகை நேரத்தை அறிவித்துக் கொடுத்தார்கள் என்று உமரிடம் உர்வா அறிவிக்கத் தொடங்கியதும் நீங்கள் என்ன அறிவிக்கப் போகின்றீர்கள் என்பதை கவனித்துக் கொள்க! என்று உர்வாவிடம் உமர் சொன்னார். அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றிருக்கின்றேன் என்று அபூமஸ்வூத் அன்சாரி இவரிடமிருந்து நான் செவியுற்றேன் என்று பமர் பின் அபூமஸ்வூத் இவரிடமிருந்து நான் செவியுற்றேன் என்று உர்வா அறிவிக்கின்றார். என்னிடம் ஜிப்ரியீல் (அலை) இறங்கி வந்தார்கள். எனக்கு தொழுகை நேரத்தை அறிவித்தார்கள். எனவே நான் அவர்களுடன் தொழுதேன். மீண்டும் நான் அவர்களுடன் தொழுதேன். மீண்டும் நான் அவர்களுடன் தொழுதேன். மீண்டும் நான் அவர்களுடன் தொழுதேன். மீண்டும் நான் அவர்களுடன் தொழுதேன் என்று ஐந்து நேரத் தொழுகைகளை தன் விரல்களால் எண்ணியவாறு நபி (ஸல்) அவர்கள் கூற நான் (அபூமஸ்வூத் அல் அன்சாரி) செவியுற்றேன். சூரியன் உச்சி சாய்கின்ற நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களை லுஹர் தொழக் கண்டேன். சில வேளை சூடு அதிகமாகும் நேரத்தில் லுஹரை பிற்படுத்தவும் செய்வார்கள்.
أَنّ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ كَانَ قَاعِدًا عَلَى الْمِنْبَرِ فَأَخَّرَ الْعَصْرَ شَيْئًا، فَقَالَ لَهُ: عُرْوَةُ بْنُ الزُّبَيْر أَمَا إِنَّ جِبْرِيلَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ أَخْبَرَ مُحَمَّدًا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِوَقْتِ الصَّلَاةِ، فَقَالَ لَهُ عُمَر: اعْلَمْ مَا تَقُولُ: فَقَالَ: عُرْوَةُ سَمِعْتُ بَشِيرَ بْنَ أَبِي مَسْعُودٍ يَقُولُ: سَمِعْتُ أَبَا مَسْعُودٍ الْأَنْصَارِيَّ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «نَزَلَ جِبْرِيلُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرَنِي بِوَقْتِ الصَّلَاةِ فَصَلَّيْتُ مَعَهُ، ثُمَّ صَلَّيْتُ مَعَهُ، ثُمَّ صَلَّيْتُ مَعَهُ، ثُمَّ صَلَّيْتُ مَعَهُ، ثُمَّ صَلَّيْتُ مَعَهُ» يَحْسُبُ بِأَصَابِعِهِ خَمْسَ صَلَوَاتٍ. «فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى الظُّهْرَ حِينَ تَزُولُ الشَّمْسُ، وَرُبَّمَا أَخَّرَهَا حِينَ يَشْتَدُّ الْحَرُّ، وَرَأَيْتُهُ يُصَلِّي الْعَصْرَ وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ بَيْضَاءُ قَبْلَ أَنْ تَدْخُلَهَا الصُّفْرَةُ، فَيَنْصَرِفُ الرَّجُلُ مِنَ الصَّلَاةِ، فَيَأْتِي ذَا الْحُلَيْفَةِ قَبْلَ غُرُوبِ الشَّمْسِ، وَيُصَلِّي الْمَغْرِبَ حِينَ تَسْقُطُ الشَّمْسُ، وَيُصَلِّي الْعِشَاءَ حِينَ يَسْوَدُّ الْأُفُقُ، وَرُبَّمَا أَخَّرَهَا حَتَّى يَجْتَمِعَ النَّاسُ، وَصَلَّى الصُّبْحَ مَرَّةً بِغَلَسٍ، ثُمَّ صَلَّى مَرَّةً أُخْرَى فَأَسْفَرَ بِهَا، ثُمَّ كَانَتْ صَلَاتُهُ بَعْدَ ذَلِكَ التَّغْلِيسَ حَتَّى مَاتَ، وَلَمْ يَعُدْ إِلَى أَنْ يُسْفِرَ»
சமீப விமர்சனங்கள்