ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
4932. தபூக் அல்லது கைபர் யுத்தம் முடிந்து நபியவர்கள் (வீட்டிற்கு) வந்தார்கள். ஆயிஷா (ரலி) அவர்களின் அலமாரியில் திரையொன்று தொங்கிக் கொண்டிருந்தது. அப்போது காற்றடித்து அத்திரையின் ஒரு பகுதி விலகி ஆயிஷா அவர்களின் விளையாட்டுப் பொம்மைகள் (பிள்ளைகள்) வெளியில் தெரிந்தது. அப்போது நபியவர்கள், ‘‘ஆயிஷாவே இது என்ன?’’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘‘எனது பொம்மைகள் (பிள்ளைகள்)’’ என்று கூறினார்.
அவைகளுக்கிடையில் நபியவர்கள் இரண்டு இறக்கையுள்ள குதிரையைக் கண்டார்கள். அப்போது நயிவர்கள், ‘‘நடுவில் இருக்கிற இது என்ன?’’ என்று கேட்டதற்கு, ஆயிஷா (ரலி), குதிரை என்றார்கள். ‘‘அதற்கு மேலிருப்பது என்ன?’’ என்று கேட்டதற்கு, இறக்கை என்று பதிலளித்தார்கள். உடனே நபியவர்கள் ‘‘குதிரைக்கு இறக்கைகள் இருக்குமா?’’ என்று கேட்டதற்கு, ‘‘சுலைமான் நபியவர்கள் வைத்திருந்த குதிரைகளுக்கு இறக்கை இருந்தது என்பதைக் கேள்விப்பட்டதில்லையா?’’ என்று ஆயிஷா (ரலி) அவர்கள் திருப்பிக் கேட்டார்கள். அதனைக் கேட்ட நபியவர்கள், அவர்களது கடைவாய்ப் பற்கள் தெரியும் அளவிற்குச் சிரித்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ غَزْوَةِ تَبُوكَ، أَوْ خَيْبَرَ وَفِي سَهْوَتِهَا سِتْرٌ، فَهَبَّتْ رِيحٌ فَكَشَفَتْ نَاحِيَةَ السِّتْرِ عَنْ بَنَاتٍ لِعَائِشَةَ لُعَبٍ، فَقَالَ: «مَا هَذَا يَا عَائِشَةُ؟» قَالَتْ: بَنَاتِي، وَرَأَى بَيْنَهُنَّ فَرَسًا لَهُ جَنَاحَانِ مِنْ رِقَاعٍ، فَقَالَ: «مَا هَذَا الَّذِي أَرَى وَسْطَهُنَّ؟» قَالَتْ: فَرَسٌ، قَالَ: «وَمَا هَذَا الَّذِي عَلَيْهِ؟» قَالَتْ: جَنَاحَانِ، قَالَ: «فَرَسٌ لَهُ جَنَاحَانِ؟» قَالَتْ: أَمَا سَمِعْتَ أَنَّ لِسُلَيْمَانَ خَيْلًا لَهَا أَجْنِحَةٌ؟ قَالَتْ: فَضَحِكَ حَتَّى رَأَيْتُ نَوَاجِذَهُ
சமீப விமர்சனங்கள்