Category: தப்ரானி – அல்முஃஜமுல் கபீர்

Al-Mu’jam Al-Kabir

Almujam-Alkabir-11331

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

11331. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

திருமண விருந்தை முதல்நாள் கொடுப்பது (ஸுன்னத்) நபிவழியாகும்; இரண்டுநாள் கொடுப்பது சிறப்பிற்குரியதாகும்; மூன்றுநாள் கொடுப்பது முகஸ்துதியும், விளம்பரமும் ஆகும்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


طَعَامٌ فِي الْعُرْسِ يَوْمٌ: سُنَّةٌ، وَطَعَامُ يَوْمَيْنِ: فَضْلٌ، وَطَعَامُ ثَلَاثَةِ أَيَّامٍ: رِيَاءٌ وَسُمْعَةٌ


Almujam-Alkabir-10332

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

10332. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

விருந்தை முதல்நாள் கொடுப்பது கடமையாகும்; இரண்டு நாள் விருந்து கொடுப்பது (ஸுன்னத்) நபிவழியாகும்; மூன்றாவது நாள் கொடுப்பது விளம்பரமாகும்.

யார் விளம்பரத்திற்காக செய்கிறாரோ (அவர் உள்நோக்கம்) பற்றி அல்லாஹ் (மறுமை நாளில்) விளம்பரப்படுத்துவான்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)


«طَعَامُ يَوْمٍ حَقٌّ، وَطَعَامُ يَوْمَيْنِ سُنَّةٌ، وَطَعَامُ يَوْمِ الثَّالِثِ سُمْعَةٌ، وَمَنْ سَمَّعَ سَمَّعَ اللهُ بِهِ»


Almujam-Alkabir-8967

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

8967. வலீமா விருந்தை முதல்நாள் கொடுப்பது கடமையாகும்; இரண்டாவது நாள் கொடுப்பது சிறப்பானதாகும் (அல்லது-உபரியானதாகும்); மூன்றாவது நாள் கொடுப்பது முகஸ்துதியும், விளம்பரமும் ஆகும்.

யார் விளம்பரத்திற்காக செய்கிறாரோ (அவர் உள்நோக்கம்) பற்றி அல்லாஹ் (மறுமை நாளில்) விளம்பரப்படுத்துவான் என்று இப்னு மஸ்வூது (ரலி) கூறினார்.

அறிவிப்பவர்: அபூஅப்துர்ரஹ்மான்-அப்துல்லாஹ் பின் ஹபீப் (ரஹ்)


«الْوَلِيمَةُ أَوَّلُ يَوْمٍ حَقٌّ، وَالثَّانِي فَضْلٌ، وَالثَّالِثُ رِيَاءٌ وَسُمْعَةٌ، وَمَنْ يُسَمِّعْ يُسَمِّعِ اللهُ بِهِ»


Almujam-Alkabir-230

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

230. உம்மு அய்மன் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் எழுந்து வீட்டின் ஓரத்தில் இருந்த மண் பாத்திரத்தில் சிறுநீர் கழித்தார்கள். எனக்கு தாகம் ஏற்பட்டதால் இரவில் எழுந்து அந்த மண் பாத்திரத்தில் இருந்ததைத் தெரியாமல் பருகிவிட்டேன். விடிந்தவுடன் நபி (ஸல்) அவர்கள், “உம்மு அய்மனே! எழுந்து அந்த மண் பாத்திரத்தில் உள்ளதைக் கீழே கொட்டிவிடு!” என்று கூறினார்கள். “அல்லாஹ்வின் மீதாணையாக! அதில் இருந்ததை நான் பருகி விட்டேனே!” என்று நான் கூறினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடைவாய் பற்கள் தெரிகின்ற அளவுக்குச் சிரித்தார்கள். பிறகு, “இனி உனக்கு வயிற்று வலி ஒருபோதும் ஏற்படாது” என்று கூறினார்கள்.


قَامَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ اللَّيْلِ إِلَى فَخَّارَةٍ فِي جَانِبِ الْبَيْتِ فَبَالَ فِيهَا فَقُمْتُ مِنَ اللَّيْلِ، وَأَنَا عَطْشَانَةُ فَشَرِبْتُ مَا فِيهَا، وَأَنَا لَا أَشْعُرُ فَلَمَّا أَصْبَحَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يَا أُمَّ أَيْمَنَ، قَوْمِي فَأَهْرِيقِي مَا فِي تِلْكَ الْفَخَّارَةِ» قُلْتُ: قَدْ وَاللهِ شَرِبْتُ مَا فِيهَا، قَالَتْ: فَضَحِكَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى بَدَتْ نَوَاجِذُهُ، ثُمَّ قَالَ: «أَمَا إِنَّكِ لَا تَتَّجِعِينَ بَطْنَكِ أَبَدًا»


Almujam-Alkabir-477

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

477.


كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَبُولُ فِي قَدَحِ عِيدَانٍ، ثُمَّ يَرْفَعُ تَحْتَ سَرِيرِهِ، فَبَالَ فِيهِ ثُمَّ جَاءَ فَأَرَادَهُ فَإِذَا الْقَدَحُ لَيْسَ فِيهِ شَيْءٌ، فَقَالَ لِامْرَأَةٍ يُقَالُ لَهَا بَرَكَةُ كَانَتْ تَخْدُمُ أُمَّ حَبِيبَةَ، جَاءَتْ بِهَا مِنْ أَرْضِ الْحَبَشَةِ: «أَيْنَ الْبَوْلُ الَّذِي كَانَ فِي الْقَدَحِ؟» قَالَتْ: شَرِبَتُهُ، فَقَالَ: «لَقَدِ احْتَظَرْتِ مِنَ النَّارِ بِحِظَارٍ»


Almujam-Alkabir-527

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

527. உமைமா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

நபி (ஸல்) அவர்களுக்கு மரத்தால் ஆன பாத்திரம் ஒன்று இருந்தது. அதில் அவர்கள் சிறுநீர் கழித்துவிட்டுத் தமது கட்டிலுக்கு அடியில் வைத்து விடுவார்கள்.

(ஒரு நாள்) அவர்கள் எழுந்து (அந்தப் பாத்திரத்தை) தேடினார்கள். அதை அவர்கள் காணவில்லை. “பாத்திரம் எங்கே?” என்று கேட்டார்கள். “அபீசீனிய நாட்டிலிருந்து உம்மு சலமாவுடன் வந்துள்ள அவர்களின் அடிமை பர்ரா அதைக் குடித்து விட்டார்” என்று (வீட்டிலிருந்தோர்) கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நரகத்திலிருந்து காக்கும் திரையைக் கொண்டு அவர் தன்னைக் காத்துக் கொண்டார்” எனக் கூறினார்கள்.


كَانَ لِلنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدَحٌ مِنْ عِيدَانٍ يَبُولُ فِيهِ، وَيَضَعُهُ تَحْتَ سَرِيرِهِ فَقَامَ فَطَلَبَ فَلَمْ يَجِدُهُ فَسَأَلَ فَقَالَ: «أَيْنَ الْقَدَحُ؟» ، قَالُوا: شَرِبَتْهُ بَرَّةُ خَادِمُ أُمِّ سَلَمَةَ الَّتِي قَدِمَتْ مَعَهَا مِنْ أَرْضِ الْحَبَشَةِ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَقَدِ احْتَظَرَتْ مِنَ النَّارِ بِحِظَارٍ»


Almujam-Alkabir-15

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

15.


قَالَ الْعَدَّاءُ بْنُ خَالِدِ بْنِ هَوْذَةَ: أَلَا أُقْرِئُكُمْ كِتَابًا كَتَبَهُ لِي رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قُلْنَا: بَلَى، فَإِذَا فِيهِ مَكْتُوبٌ: «بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ هَذَا مَا اشْتَرَى الْعَدَّاءُ بْنُ خَالِدِ بْنِ هَوْذَةَ مِنْ مُحَمَّدٍ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، اشْتَرَى مِنْهُ عَبْدًا – أَوْ أَمَةً شَكَّ عُثْمَانُ – بِيَاعَةً أَوْ بَيْعَ الْمُسْلِمِ لَا دَاءَ وَلَا غَائِلَةَ وَلَا خِبْثَةَ» قَالَ الْأَصْمَعِيُّ: سَأَلْتُ سَعِيدَ بْنَ أَبِي عَرُوبَةَ عَنِ الْغَائِلَةِ فَقَالَ: «الْأَبَاقُ وَالسَّرِقَةُ وَالزِّنَا» ، وَسَأَلْتُهُ عَنِ الْخِبْثَةِ، قَالَ: «بَيْعُ أَهْلِ عَهْدِ الْمُسْلِمِينَ»


Almujam-Alkabir-9477

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

9477.


أَنَّهُ: كَانَ يَطْرُدُ النِّسَاءَ مِنَ الْمَسْجِدِ يَوْمَ الْجُمُعَةِ، وَيَقُولُ: «صَلِّينَ فِي بُيُوتِكُنَّ»


Almujam-Alkabir-9475

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

9475.


أَنَّهُ: رَأَى ابْنَ مَسْعُودٍ، يُخْرِجُ النِّسَاءَ مِنَ الْمَسْجِدِ يَوْمَ الْجُمُعَةِ، وَيَقُولُ: «اخْرُجْنَ إِلَى بُيُوتِكُنَّ خَيْرٌ لَكُنَّ»


Next Page » « Previous Page