11449. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யாரேனும் ஒரு நோன்பாளியை நோன்பு திறக்கச் செய்தால் நோன்பு திறக்கச் செய்தவருக்கும் நோன்பாளியின் கூலி போன்றது கிடைக்கும்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
مَنْ فَطَّرَ صَائِمًا فَلَهُ مِثْلُ أَجْرِهِ
Al-Mu’jam Al-Kabir
11449. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யாரேனும் ஒரு நோன்பாளியை நோன்பு திறக்கச் செய்தால் நோன்பு திறக்கச் செய்தவருக்கும் நோன்பாளியின் கூலி போன்றது கிடைக்கும்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
مَنْ فَطَّرَ صَائِمًا فَلَهُ مِثْلُ أَجْرِهِ
14097. மர்வான் பின் ஸாலிம் அல்முகஃப்பஉ கூறியதாவது:
இப்னு உமர் (ரலி) அவர்கள் தனது தாடியை பிடித்து ஒரு பிடிக்கு அதிகமாக உள்ளதை வெட்டியதைப் பார்த்தேன்.
மேலும், நோன்பு துறக்கும் போது, தஹபல் ளமவு வப்தல்லத்தில் உரூக்கு வஸபத்தல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ். (பொருள்: தாகம் தணிந்தது, நரம்புகள் நனைந்தன, அல்லாஹ் நாடினால் கூலியும் கிடைத்துவிடும்) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவார்கள் என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
رأيت ابن عمر قبض على لحيته فقطع ما زاد على الكف وقال : كان رسول الله صلى الله عليه وسلم إذا أفطر قال : ” ذهب الظمأ وابتلت العروق وثبت الأجر إن شاء الله
13347. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்காவை நோக்கி) “ பூமியில் இருக்கும் ஊர்களில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான ஊர் மக்கா என்பதை நான் நன்கறிவேன்.என்னுடைய சமுதாயத்தினர் உன்னை விட்டும் என்னை வெளியேற்றாமலிருந்தால் நான் வெளியேறி இருக்க மாட்டேன். (ஆனால், அவர்களோ என்னை வெளியேற்றி விட்டார்கள்.)
அல்லாஹ்வே! எங்கள் உள்ளத்தில் மக்கா ஊரின் மீது பாசத்தை ஏற்படுத்தியது போன்று மதீனா ஊரின் மீதும் பாசத்தை ஏற்படுத்துவாயாக என்று (பிரார்த்தித்துக்) கூறினார்கள்.
அவர்கள் மதீனாவை நெருங்கிவரும்போதெல்லாம் அவர்களின் முகத்தில் சந்தோசமும், மகிழ்ச்சியும் தென்படும்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
«قَدْ عَلِمْتُ أَنَّ أَحَبَّ الْبِلَادِ إِلَى اللهِ عَزَّ وَجَلَّ مَكَّةُ، وَلَوْلَا أَنَّ قَوْمِي أَخْرَجُونِي مَا خَرَجْتُ، اللهُمَّ اجْعَلْ فِي قُلُوبِنَا مِنْ حُبِّ الْمَدِينَةِ مِثْلَ مَا جَعَلْتَ فِي قُلُوبِنَا مِنْ حُبِّ مَكَّةَ» ، وَمَا أَشْرَفَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْمَدِينَةِ قَطُّ إِلَّا عُرِفَ فِي وَجْهِهِ الْبِشْرُ وَالْفَرَحُ
1198. புஸ்ர் பின் அர்தாத் அல்குரஷிய்யி அவர்கள் கூறியதாவது:
யா அல்லாஹ்! எங்களின் எல்லாக் காரியங்களின் முடிவையும் நன்மையாக ஆக்கி வைப்பாயாக! இவ்வுலகின் இழிவை விட்டும் மறுவுலகின் வேதனையை விட்டும் எங்களைப் பாதுகாத்தருள்வாயாக! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்து கூறியதை நான் செவியேற்றேன்.
أَنَّهُ كَانَ يَدْعُو: «اللهُمَّ أَحْسِنْ عَاقِبَتَنَا فِي الْأُمُورِ كُلِّهَا وَأَجِرْنَا مِنْ خِزْيِ الدُّنْيَا وَعَذَابِ الْآخِرَةِ»
1197. புஸ்ர் பின் அர்தாத் அல்குரஷிய்யி அவர்கள் கூறியதாவது:
யா அல்லாஹ்! எங்களின் எல்லாக் காரியங்களின் முடிவையும் நன்மையாக ஆக்கி வைப்பாயாக! இவ்வுலகின் இழிவை விட்டும் மறுவுலகின் வேதனையை விட்டும் எங்களைப் பாதுகாத்தருள்வாயாக! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்து கூறியதை நான் செவியேற்றேன்.
«اللهُمَّ أَحْسِنْ عَاقِبَتِي فِي الْأُمُورِ كُلِّهَا، وَأَجِرْنِي مِنْ خِزْيِ الدُّنْيَا، وَعَذَابِ الْآخِرَةِ» ،
وَقَالَ: «مَنْ كَانَ ذَلِكَ دُعَاءَهُ مَاتَ قَبْلَ أَنْ يُصِيبَهُ الْبَلَاءُ»
1196. புஸ்ர் பின் அர்தாத் அல்குரஷிய்யி அவர்கள் கூறியதாவது:
யா அல்லாஹ்! என்னுடைய எல்லாக் காரியங்களின் முடிவையும் நன்மையாக ஆக்கி வைப்பாயாக! இவ்வுலகின் இழிவை விட்டும் மறுவுலகின் வேதனையை விட்டும் என்னை பாதுகாத்தருள்வாயாக! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்து கூறியதை நான் செவியேற்றேன்.
«اللهُمَّ أَحْسِنْ عاقِبَتِي فِي الْأُمُورِ كُلِّهَا، وَأَجِرْنِي مِنْ خِزْيِ الدُّنْيَا، وَعَذَابِ الْآخِرَةِ»
176. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூவரின் தொழுகைகளை அல்லாஹ் ஏற்றுக்கொள்ளமாட்டான். (அவர்கள் யாரெனில்) மக்கள் வெறுத்தும் அவர்களுக்குத் தலைமை ஏற்க முன்வந்தவர். நேரம் தவறி தொழுபவர். சுதந்திரமான மனிதனை அடிமையாக்கியவர்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
ثَلَاثَةٌ لَا تُقْبَلُ لَهُمْ صَلَاةٌ: مَنْ تَقَدَّمَ قَوْمًا وَهُمْ لَهُ كَارِهُونَ، وَرَجُلٌ أَتَى الصَّلَاةَ دِبَارًا، وَالدِّبَارُ أَنْ يَأْتِيَ بَعْدَ الْوَقْتِ، وَرَجُلٌ اعْتَبَدَ مُحَرَّرَهُ
12275. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூவரின் எந்த தொழுகைகளையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்ளமாட்டான். (அவர்கள் யாரெனில்) மக்கள் வெறுத்தும் அவர்களுக்குத் தலைமை ஏற்பவர்; கணவன் தன் மீது கோபமாக இருக்கும் நிலையில் இரவைக் கழித்த பெண்; தங்களுக்குள் நட்புறவை முறித்துக் கொண்ட இரு சகோதரர்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
ثَلَاثَةٌ لَا يَقْبَلُ اللهُ لَهُمْ صَلَاةً: إِمَامُ قَوْمٍ وَهُمْ لَهُ كَارِهُونَ، وَامْرَأَةٌ بَاتَتْ وَزَوْجُهَا عَلَيْهَا غَضْبَانُ، وَأَخَوَانِ مُتَصَارِمَانِ
8098. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
திருந்தும் வரை மூவரின் தொழுகைகள் அவர்களின் காதுகளைக் கூட கடந்து (உயரே) செல்லாது. (அவர்கள் யாரெனில்) ஓடிப்போன அடிமை; கணவன் கோபமான நிலையில் இரவைக் கழிக்கும் பெண்; மக்கள் வெறுக்கும் தலைவன்.
அறிவிப்பவர் : அபூ உமாமா (ரலி)
ثَلَاثَةٌ لَا تُجَاوِزُ صَلَاتُهُمْ آذَانَهُمْ حَتَّى يَرْجِعُوا: الْعَبْدُ الْآبِقُ، وَامْرَأَةٌ بَاتَتْ وَزَوْجُهَا عَلَيْهَا سَاخِطٌ، وَإِمَامُ قَوْمٍ وَهُمْ لَهُ كَارِهُونَ
8090. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூவரின் தொழுகைகள் அவர்களின் தலைகளைக் கூட கடந்து (உயரே) செல்லாது. (அவர்கள் யாரெனில்) ஓடிப்போன அடிமை; கணவன் கோபமான நிலையில் இரவைக் கழிக்கும் பெண்; மக்கள் வெறுத்தும் அவர்களுக்குத் தலைமை ஏற்பவர்.
அறிவிப்பவர் : அபூ உமாமா (ரலி)
ثَلَاثَةٌ لَا تُجَاوِزُ صَلَاتُهُمْ رُءُوسَهُمِ: الْعَبْدُ الْآبِقُ، وَالْمَرْأَةُ تَبِيتُ وَزَوْجُهَا عَلَيْهَا سَاخِطٌ، وَإِمَامٌ أَمَّ قَوْمًا وَهُمْ لَهُ كَارِهُونَ
சமீப விமர்சனங்கள்