Category: தப்ரானி – அல்முஃஜமுல் கபீர்

Al-Mu’jam Al-Kabir

Almujam-Alkabir-415

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

415. அஸ்மா பின்த் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது :

ஒரு தடவை நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தபோது இரு தங்க காப்புகள் அணிந்த ஒரு பெண்ணை நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். அந்தப் பெண்ணைப் பார்த்து, “நெருப்பாலான இரு காப்புகளை நீ அணிந்துக் கொள்வது உனக்கு மகிழ்ச்சியளிக்குமா? என்று கூறினார்கள்.

உடனே அப்பெண்மணி தனது கைகளிலிருந்து அவ்விரண்டு தங்கக் காப்புகளையும் கழற்றி எறிந்து விட்டார்கள். அவ்விரண்டையும் வேறு யார் எடுத்தார்கள் என்பதும் எனக்கு தெரியாது.


كُنَّا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَبْصَرَ امْرَأَةً عَلَيْهَا سِوَارَانِ مِنْ ذَهَبٍ، فَقَالَ: «أَيَسُرُّكِ أَنْ يُسَوِّرَكِ اللهُ بِسُوَارَيْنِ مِنْ نَارٍ؟» فَخَلَعَتْهَا مِنْ يَدِهَا فَطَرَحَتْهَا فَلَا أَدْرِي مَنْ أَخَذَهُمَا


Almujam-Alkabir-5811

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

5811. தனது குழந்தைக்கு நெருப்பால் ஆன இரு காப்பை அணிவிக்க விரும்பினால் அவர் தங்கத்தால் ஆன காப்பை அதற்கு அணிவிக்கட்டும். எனவே வெள்ளியை உபயோகித்து அதன் மூலம் (ஆபரணங்களை செய்து) விளையாடுங்கள் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஸஹ்ல் பின் ஸஃத் (ரலி)


«مَنْ أَحَبَّ أَنْ يُسَوِّرَ وَلَدَهُ بِسُوَارَيْنِ مِنْ نَارٍ، فَلْيُسَوِّرْهُ بِسِوَارٍ مِنْ ذَهَبٍ، وَلَكِنِ الْوَرِقُ وَالْفِضَّةُ الْعَبُوا بِهَا كَيْفَ شِئْتُمْ»


Almujam-Alkabir-1018

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1018. முஆவியா பின் ஹைதா (ரலி) அவர்கள் கூறியதாவது:

இரகசியமாக தர்மம் செய்வது இறைவனின் கோபத்தை தணித்துவிடும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


«إِنَّ صَدَقَةَ السِّرِّ تُطْفِيءُ غَضَبَ الرَّبِّ»


Almujam-Alkabir-1017

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1017. முஆவியா பின் ஹைதா (ரலி) அவர்கள் கூறியதாவது:

லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் என்பது சொர்க்கத்தின் கருவூலங்களில் ஒரு கருவூலமாகும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


«لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ كَنْزٌ مِنْ كُنُوزِ الْجَنَّةِ»


Almujam-Alkabir-82

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

82. வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எவ்வாறு தொழுவார்கள் என்று அவர்களின் தொழுகையைப் பார்க்கப் போகிறேன் என்று (எனக்குள்) நான் சொல்லிக் கொண்டேன். பின்னர், அவர்களை நான் பார்த்தேன். அப்போது அவர்கள், எழுந்து நின்று “தக்பீர்’கூறினார்கள். (அப்போது) தம் காதுகளுக்கு நேராகக் கைகளை உயர்த்தினார்கள். பின்னர் தம் வலக் கையை இடது முன் கை, மணிக்கட்டு, முழங்கை (ஆகிய மூன்றின்) மீதும் வைத்தார்கள். அவர்கள் “ருகூஉ’ செய்ய விரும்பியபோது, முன்பு போன்றே (தம் காதுகளுக்கு நேராகக்) கைகளை உயர்த்தினார்கள். (பின்னர்) தம் கைகளை மூட்டுக் கால்களின் மீது வைத்தார்கள்.

பின்னர் தமது தலையை (“ருகூஉ’விலிருந்து) நிமிர்த்தியபோது, முன்பு போன்றே (தம் காதுகளுக்கு நேராகத்) தம் கைகளை உயர்த்தினார்கள். பின்னர் “சஜ்தா’ செய்தார்கள். அப்போது தம் உள்ளங்கைகளைக் காதுகளுக்கு நேராக (தரையில்) வைத்தார்கள். பின்னர் (சஜ்தாவிலிருந்து எழுந்து) அமர்ந்தார்கள். அப்போது இடக் காலை விரித்து வைத்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இடது முன் கையை இடது தொடை மீதும் மூட்டுக்கால் மீதும் வைத்தார்கள். தமது வலது முழங்கையை வலது தொடை மீது வைத்தார்கள். பின்பு தமது வலது கையின் இரண்டு விரல்களை மடக்கினார்கள். (நடுவிரலையும் கட்டைவிரலையும்

قُلْتُ: «لَأَنْظُرَنَّ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَيْفَ يُصَلِّي، فَنَظَرْتُ إِلَيْهِ، فَكَبَّرَ وَرَفَعَ يَدَيْهِ حَتَّى حَاذَتَا بِأُذُنَيْهِ، ثُمَّ وَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى ظَهْرِ كَفَّهِ الْيُسْرَى بَيْنَ الرُّسْغِ وَالسَّاعِدِ، ثُمَّ لَمَّا أَرَادَ أَنْ يَرْكَعَ رَفَعَ يَدَيْهِ مِثْلَهَا، وَوَضَعَ يَدَيْهِ عَلَى رُكْبَتَيْهِ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ فَرَفَعَ يَدَيْهِ مِثْلَهَا، ثُمَّ سَجَدَ فَجَعَلَ كَفَّيْهِ حِذَاءَ أُذُنَيْهِ، ثُمَّ قَعَدَ وَافْتَرَشَ رِجْلَهُ الْيُسْرَى وَوَضَعَ كَفَّهُ الْيُسْرَى، وَجَعَلَ حَدَّ مِرْفَقِهِ الْأَيْمَنِ عَلَى فَخِذِهِ الْيُمْنَى، ثُمَّ قَبَضَ ثِنْتَيْنِ مِنْ أَصَابِعِهِ، وَحَلَّقَ حَلْقَةً، ثُمَّ رَفَعَ أُصْبُعَهُ، وَرَأَيْتُهُ يُحَرِّكُهَا يَدْعُو بِهَا، ثُمَّ جِئْتُ بَعْدَ ذَلِكَ فِي زَمَانٍ فِيهِ بُرْدٌ فَرَأَيْتُ النَّاسَ عَلَيْهِمْ جُلُّ الثِّيَابِ يُحَرِّكُ أَيْدِيهِمْ مِنْ تَحْتِ الثِّيَابِ»


Almujam-Alkabir-12256

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

12256. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து , அல்லாஹ்வின் தூதரே, நான் என் மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது அவளுடன் உடலுறவு கொண்டுவிட்டேன். அதற்கு பரிகாரம் என்ன என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர் ஒரு அடிமையை உரிமை விடவேண்டும் என்று அவருக்கு கட்டளையிட்டார்கள்.

 

அன்றைய தினத்தில் ஒரு அடிமையின் விலை ஒரு தீனாராக இருந்தது.


جَاءَ رَجُلٌ فَقَالَ: يَا رَسُولَ اللهِ أَصَبْتُ امْرَأَتِي وَهِيَ حَائِضٌ «فَأَمَرَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُعْتِقَ نَسَمَةً»

وَقِيمَةُ النَّسَمَةِ يَوْمَئِذٍ دِينَارٌ


Almujam-Alkabir-12135

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

12135. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

தன் மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது அவளுடன் உடலுறவு கொண்டவர், அந்த நேரத்தில் இரத்தம் சிகப்பு நிறத்தில் வந்திருந்தால் ஒரு தீனாரும், மஞ்சள் நிறத்தில் வந்திருந்தால் அரை தீனாரும் தர்மம் செய்ய வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்…


فِي رَجُلٍ جَامِعَ امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ قَالَ: «إِنْ كَانَ دَمًا عَبِيطًا فَلْيَتَصَدَّقْ بِدِينَارٍ، وَإِنْ كَانَ صُفْرَةً فَبِنِصْفِ دِينَارٍ»


Almujam-Alkabir-12134

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

12134. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தன் மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது அவளுடன் உடலுறவு கொண்டவர் ஒரு தீனாரும், இரத்தம் வருவது நின்று குளிப்பதற்கு முன் உடலுறவு கொண்டவர் அரை தீனாரும் தர்மம் செய்ய வேண்டும்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)


«مَنْ أَتَى امْرَأَتَهُ فِي حَيْضِهَا فَلْيَتَصَدَّقْ بِدِينَارٍ، وَمَنْ أَتَاهَا وَقَدْ أَدْبَرَ الدَّمُ عَنْهَا وَلَمْ تَغْتَسِلْ فَبِنِصْفِ دِينَارٍ»


Almujam-Alkabir-12133

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

12133. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

தன் மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது அவளுடன் உடலுறவு கொண்டவர் ஒரு தீனார் அல்லது அரை தீனார் தர்மம் செய்ய வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي رَجُلٍ غَشِي امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ قَالَ: «يَتَصَدَّقُ بِدِينَارٍ أَوْ بِنِصْفِ دِينَارٍ»


Almujam-Alkabir-12132

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

12132. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

தன் மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது அவளுடன் உடலுறவு கொண்டவர் ஒரு தீனார் அல்லது அரை தீனார் தர்மம் செய்ய வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


فِي الَّذِي يَقَعُ عَلَى امْرَأَتِهِ وَهِيَ حَائِضٌ: «يَتَصَدَّقُ بِدِينَارٍ أَوْ نِصْفِ دِينَارٍ»


Next Page » « Previous Page