Category: முஸ்னத்-பஸ்ஸார்

Musnad al-Bazzar

Bazzar-127

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

127.


غَلَا السِّعْرُ بِالْمَدِينَةِ فَاشْتَدَّ الْجَهْدُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اصْبِرُوا وَأَبْشِرُوا، فَإِنِّي قَدْ بَارَكْتُ عَلَى صَاعِكُمْ وَمُدِّكُمْ، فَكُلُوا وَلَا تَفَرَّقُوا فَإِنَّ طَعَامَ الْوَاحِدِ يَكْفِي الِاثْنَيْنِ، وَطَعَامُ الِاثْنَيْنِ يَكْفِي الْأَرْبَعَةَ، وَطَعَامُ الْأَرْبَعَةِ يَكْفِي الْخَمْسَةَ وَالسِّتَّةَ، وَإِنَّ الْبَرَكَةَ فِي الْجَمَاعَةِ، فَمَنْ صَبَرَ عَلَى لَأْوَائِهَا وَشِدَّتِهَا كُنْتُ لَهُ شَفِيعًا أَوْ شَهِيدًا يَوْمَ الْقِيَامَةِ، وَمَنْ خَرَجَ عَنْهَا رَغْبَةً عَمَّا فِيهَا أَبْدَلَ اللَّهُ بِهِ مَنْ هُوَ خَيْرٌ مِنْهُ فِيهَا، وَمَنْ أَرَادَهَا بِسُوءٍ أَذَابَهُ اللَّهُ كَمَا يَذُوبُ الْمِلْحُ فِي الْمَاءِ»


Bazzar-8066

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

8066. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைநம்பிக்கையுள்ள ஓர் அடிமையை யார் விடுதலை செய்கிறாரோ (விடுதலை செய்யப்பட்ட) அந்த அடிமையின் ஒவ்வோர் உறுப்புக்கும் பகரமாக (விடுதலை செய்தவரின்) உறுப்புக்களில் ஒன்றை நரகத்திலிருந்து அல்லாஹ் விடுதலை செய்வான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


من أعتق رقبة مؤمنة أعتق الله بكل إرب منه بإرب منها من النار.


Bazzar-3755

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3755.


«مَنْ شَابَ شَيْبَةً فِي الْإِسْلَامِ كَانَتْ لَهُ نُورًا يَوْمَ الْقِيَامَةِ» فَقَالَ لَهُ رَجُلٌ عِنْدَ ذَلِكَ: فَإِنَّ رِجَالًا يَنْتِفُونَ الشَّيْبَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ شَاءَ فَلْيَنْتِفْ نُورَهُ»


Bazzar-9369

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

9369. நபி (ஸல்) அவர்களிடம், “மக்களில் அதிகம் சோதனைக்குள்ளானோர் யார்? என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், “நபிமார்கள்; பின்பு நல்லோர்கள்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سئل أي الناس أشد بلاء قال الأنبياء ثم الصالحون.


Bazzar-3099

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3099. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனது சமுதாயம் இரக்கத்திற்குரிய சமுதாயம். மறுமையில் அதற்கு (நிரந்தர) வேதனை இல்லை. உலகிலேயே அதற்கு நிலநடுக்கத்தில் மாட்டிக்கொள்ளுதல்; கொல்லப்படுதல் போன்றவற்றால் வேதனை செய்யப்பட்டுவிடும்.

அறிவிப்பவர்: அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)


«أُمَّتِي أُمَّةٌ مَرْحُومَةٌ، لَيْسَ عَلَيْهَا فِي الْآخِرَةِ عَذَابٌ، إِنَّمَا عَذَابُهَا فِي الدُّنْيَا الزَّلَازِلُ وَالْقَتْلُ»


Bazzar-3090

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3090.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனது சமுதாயம் இரக்கத்திற்குரிய சமுதாயம். மறுமையில் அதற்கு (நிரந்தர) வேதனை இல்லை. உலகிலேயே அதற்கு கொல்லப்படுதல்; குழப்பத்தில்; நிலநடுக்கத்தில் மாட்டிக்கொள்ளுதல் போன்றவற்றால் வேதனை செய்யப்பட்டுவிடும்.

அறிவிப்பவர்: அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)


«إِنَّ هَذِهِ الْأُمَّةَ أُمَّةٌ مَرْحُومَةٌ، لَيْسَ عَلَيْهَا فِي الْآخِرَةِ عَذَابٌ، جُعِلَ عَذَابُهَا فِي الدُّنْيَا الْقَتْلُ وَأَشْبَاهُهُ»


Bazzar-1992

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1992. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் (இஸ்ரா, மிஃராஜ்—ஜெரூசலத்திற்கும் பின்பு விண்ணுலகத்திற்கும் அழைத்துச் செல்லப்பட்ட) விண்ணுலகப் பயணத்தில் ஏழாவது வானத்தில் இப்ராஹீம் (அலை) அவர்களைச் சந்தித்தேன். அப்போது அவர்கள், முஹம்மதே! உமது சமுதாயத்திற்கு என்னுடைய ஸலாமைக் கூறுங்கள். மேலும் “சொர்க்கத்தின் தண்ணீர் இனிப்பானது; பருகுவதற்கு நல்லது; அதன் மேலும் சொர்க்கம் விசாலமான காலியிடமாகும்; அதில் மரம் நடவேண்டுமென்றால் ஸுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்), அல்ஹம்து லில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே), லா இலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை), அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்ற வார்த்தைகளைக் கூறவேண்டும் என்பதையும் உமது சமுதாயத்திற்கு தெரியப்படுத்துங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)


لَمَّا كَانَ لَيْلَةَ أُسْرِيَ بِي لَقِيتُ إِبْرَاهِيمَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي السَّمَاءِ السَّابِعَةِ، فَقَالَ: يَا مُحَمَّدُ، اقْرَأْ عَلَى أُمَّتِكَ السَّلَامَ، وَأَخْبِرْهُمْ أَنَّ الْجَنَّةَ عِذْبٌ مَاؤُهَا، طَيِّبٌ شَرَابُهَا، وَأَنَّ فِيهَا قِيعَانًا، وَأَنَّ غَرْسَ شَجَرِهَا سُبْحَانَ اللَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ


Bazzar-9269

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

9269.


تفتح أبواب الجنان وأبوب السماء في كل عشية خميس فتعرض فيه الأعمال فيغفر الله فيه لكل عبد إلا مشرك أو عبد بينه وبين أخيه شحناء.


Next Page » « Previous Page