ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது
3190. அபூகப்ஷா அவர்கள் கூறியதாவது:
“நல்ல நண்பனின் உதாரணம் கஸ்தூரியை விற்பவனைப் போன்றதாகும். கஸ்தூரியைச் விற்பவன் அதை உனக்கு அன்பளிப்பாக வழங்காவிட்டாலும் அதன் வாசனையை நீ நுகர்வாய். கெட்ட நண்பனின் உதாரணம் (உலைக் களத்தில்) உலை ஊதுகிறவனைப் போன்றதாகும். உலை ஊதுபவன் உன்னுடைய ஆடையை எரித்துக் கரித்து விடாவிட்டாலும் (அவனிடமிருந்து) நீ துர்வாடையையாவது அடைந்தே தீருவாய்.
உள்ளம் மாறிக்கொண்டே இருப்பதால் தான் அதற்கு (மாறக்கூடியது என்ற பொருள் கொண்ட) கல்ப் என்று பெயரிடப்பட்டது. இந்த உள்ளம் மரத்தின் அடியில் தொங்கவிடப்பட்டிருக்கும் (பறவையின்) இறகைப் போன்றதாகும். காற்று அதை தலைகீழாக புரட்டிப்போடுகிறது.
(விரைவில்) இருள் மிகுந்த இரவின் பகுதிகளைப் போன்ற சில குழப்பங்கள் தோன்றும். (அக்குழப்பங்களின்போது) காலையில் இறை நம்பிக்கையாளனாக இருக்கும் ஒரு மனிதன் மாலையில் இறைமறுப்பாளனாக மாறிவிடுவான்.
சில குழப்பங்கள் தோன்றும். அப்போது உட்கார்ந்திருப்பவர் (அவற்றுக்காக) எழுந்து நிற்பவரை விட சிறந்தவர் ஆவார். (அவற்றுக்காக) எழுந்து நிற்பவர் (அவற்றுக்காக) நடப்பவரை விட சிறந்தவர் ஆவார்”
என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ மூஸா (ரலி) அவர்கள் உரை மேடையில் கூறியதை நான் செவியேற்றேன்.
سَمِعْتُ أَبَا مُوسَى الْأَشْعَرِيَّ، رَضِيَ اللَّهُ عَنْهُ عَلَى الْمِنْبَرِ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَثَلُ الْجَلِيسِ الصَّالِحِ مَثَلُ الْعَطَّارِ، إِلَّا يُحْذِكَ مِنْ عِطْرِهِ أَصَابَكَ مِنْ رِيحِهِ، وَمَثَلُ الْجَلِيسِ السُّوءِ مَثَلُ الْقَيْنِ إِنْ لَا يُصِبْ ثِيَابَكَ يَعْبَقْ بِكَ مِنْ رِيحِهِ»
قَالَ: وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا سُمِّيَ الْقَلْبُ مِنْ تَقَلُّبِهِ، وَمَثَلُ الْقَلْبِ كَمَثَلِ الرِّيشَةِ بِضَلَاةٍ تَقَلَّبُ بِأَصْلِ شَجَرَةٍ، يُقَلِّبُهَا الرِّيحُ ظَهْرًا لِبَطْنٍ»
وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَكُونُ فِتَنٌ كَقِطَعِ اللَّيْلِ الْمُظْلِمِ، يُصْبِحُ الرَّجُلُ فِيهَا مُؤْمِنًا وَيُمْسِي كَافِرًا»
وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَكُونُ فِتْنَةٌ الْقَاعِدُ فِيهَا خَيْرٌ مِنَ الْقَائِمِ، وَالْقَائِمُ فِيهَا خَيْرٌ مِنَ الْمَاشِي»
சமீப விமர்சனங்கள்