Category: முஸ்னத்-பஸ்ஸார்

Musnad al-Bazzar

Bazzar-8993

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

8993. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் உங்களிடம் எனக்குப் பின் இரண்டை விட்டுச் செல்கிறேன். அதற்குப் பின் நீங்கள் வழிதவற மாட்டீர்கள். 1. அல்லாஹ்வின் வேதம் (திருக்குர்ஆன்). 2 . அவனுடைய நபியின் வழிமுறைகள். நிச்சயமாக இவ்விரண்டும் ஹவ்ளுல் கவுஸரிடம், என்னை வந்தடையும் வரை ஒன்றையொன்று பிரியாது.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)


إني قد خلفت فيكم اثنين لن تضلوا بعدهما أبدا كتاب الله وسنتي ولن يتفرقا حتى يردا على الحوض


Bazzar-4622

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

4622. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நாங்கள் எங்கள் வீடுகளை அழகாகவும், தூய்மையாகவும் வைத்திருப்பதைப் போன்றே அல்லாஹ்வைத் தொழும் பள்ளிகளையும் அல்லாஹ் நாடினால் அழகாகவும், தூய்மையாகவும் வைத்திருக்க வேண்டுமென எங்களுக்கு கட்டளையிட்டுள்ளார்கள்.

அறிவிப்பவர் : ஸமுரா பின் ஜுன்துப் (ரலி)


أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم كَانَ يَأْمُرُنَا أَنْ نَصْنَعَ الْمَسَاجِدَ فِي دُورِنَا وَنُنَظِّفَهَا وَنُطَهِّرَهَا إِنْ شَاءَ اللَّهُ.


Bazzar-864

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

864. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் கைப்பற்றப்பட்டு (மரணித்து) விடுவேன். நான் உங்களிடம் இரண்டு கனமான விசயத்தை விட்டுச் செல்கிறேன். அவற்றில் ஒன்று அல்லாஹ்வின் வேதமான குர்ஆனாகும்.

மற்றொன்று எனது குடும்பம் ஆகும். எனவே அவ்விரண்டிற்கு பின்னால் நீங்கள் வழிதவற மாட்டீர்கள். காணாமல் போன பொருளை தேடப்பட்டு அது கிடைக்காமல் போவதைப் போன்று நபித்தோழர்களையும் தேடப்படும் ஒரு காலம் வராமல் மறுமை நாள் ஏற்படாது…

அறிவிப்பவர் : அலீ (ரலி)


إِنِّي مَقْبُوضٌ وَإِنِّي قَدْ تَرَكْتُ فِيكُمُ الثَّقَلَيْنِ كِتَابَ اللَّهِ وَأَهْلَ بَيْتِي وإِنَّكُمْ لَنْ تَضِلُّوا بَعْدَهُمَا وَأَنَّهُ لَنْ تَقُومَ السَّاعَةُ حَتَّى يُبْتَغَى أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَمَا تُبْتَغَى الضَّالَّةُ فَلَا تُوجَدُ


Bazzar-3374

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3374. “யாருக்காவது அல்லாஹ்விடமோ, அல்லது மனிதர்களில் எவரிடமோ ஏதேனும் தேவை இருந்தால் அவர், “லாயிலாஹ இல்லல்லாஹுல் ஹலீமுல் கரீம். சுப்ஹானல்லாஹி ரப்பில் அர்ஷில் அழீம். அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன். அஸ்அலுக மூஜிபாதி ரஹ்மதிக, வ அஸாயிம மஃபிரதிக. வல்கனீமத மின் குல்லி பிர்ரிவ், வஸ்ஸலாமத்த மின் தம்பிவ் வமின் குல்லி இஸ்ம். லா ததஃலீ தம்பன் இல்லா கஃபர்தஹு, வலா ஹம்மன் இல்லா ஃபர்ரஜ்தஹ், வலா ஹாஜதன் ஹிய லக ரிளன் இல்லா களைதஹா யா அர்ஹமர் ராஹிமீன்’ என்று கூறட்டும்”என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃபா (ரலி)

 

இமாம் பஸ்ஸார் கூறுகிறார்:

இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஃபாயித் பலமானவர் அல்ல என்றிருந்தும் இந்த செய்தியை நாம் கூறும் காரணம் இந்தக்கருத்தில் இவர் வழியாகத் தான் இந்த செய்தி வருகிறது என்பதை குறிப்பிடத்தான் இங்கு கூறியுள்ளோம்.

 


مَنْ كَانَتْ لَهُ حَاجَةٌ إِلَى اللَّهِ تَبَارَكَ وَتَعَالَى أَوْ إِلَى أَحَدٍ، فَلْيَقُلْ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ الْحَلِيمُ الْكَرِيمُ، سُبْحَانَ اللَّهِ رَبِّ الْعَرْشِ الْعَظِيمِ، الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ، أَسْأَلُكَ مُوجِبَاتِ رَحْمَتِكَ وَعَزَائِمَ مَغْفِرَتِكَ وَالْغَنِيمَةَ مِنْ كُلِّ بِرٍّ، وَالسَّلَامَةَ مِنْ كُلِّ ذَنْبٍ وَمِنْ كُلِّ إِثْمٍ، لَا تَدَعْ لِي ذَنْبًا إِلَّا غَفَرْتَهُ، وَلَا هَمًّا إِلَّا فَرَّجْتَهُ، وَلَا حَاجَةً هِيَ لَكَ رِضًا إِلَّا قَضَيْتَهَا يَا أَرْحَمَ الرَّاحِمِينَ


Bazzar-4922

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

4922. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மரத்தின் இலைகள் கீழே விழுந்தாலும் அதைப் பதிவு செய்யும் வானவர்கள் இருக்கின்றனர். இவர்கள் அல்லாத இன்னும் சில வானவர்களும் அல்லாஹ்விற்காக உள்ளனர். எனவே பயணத்தில் உங்களில் ஒருவருக்கு திடுக்கம் ஏற்பட்டால், “அல்லாஹ்வின் அடியார்களே! உதவி செய்யுங்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவான்” என்று அழைக்கட்டும்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)


إِنَّ لِلَّهِ مَلائِكَةً فِي الأَرْضِ سِوَى الْحَفَظَةِ يَكْتُبُونَ مَا سَقَطَ مِنْ وَرَقِ الشَّجَرِ فَإِذَا أَصَابَ أَحَدَكُمْ عَرْجَةٌ بِأَرْضٍ فَلاةٍ فَلْيُنَادِ: أَعِينُوا عِبَادَ اللَّهِ.


Bazzar-2479

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2479. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“யார் இரண்டு நற்குணங்களை வழமையாக கடைப்பிடித்து வருகின்றாரோ அவரை அவை கண்டிப்பாக சுவர்க்கத்தில் நுழையச்செய்யும். அவ்விரண்டு நற்செயல்களும் (கடைப்பிடித்துவர ) எளிதானவை தான். ஆனால் அதன்படி செயல்படுபவர்கள் குறைவானவர்களே!

(அவ்விரண்டில் முதல் நற்செயல்)  நீ ஒவ்வொரு கடமையான தொழுகைக்குப் பின்பும் அல்ஹம்துலில்லாஹ் 10-பத்து தடவையும், அல்லாஹு அக்பர் 10-பத்து தடவையும், ஸுப்ஹானல்லாஹ் 10-பத்து தடவையும் கூறுவதாகும்.

(அவ்விரண்டில் இரண்டாவது  நற்செயல்) நீ படுக்கைக்கு செல்லும் போது ஸுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர் என்று 100 தடவை கூறுவதாகும். இவைகள் (ஐந்து நேர தொழுகையின் மொத்த எண்ணிக்கை நாவில் மொழிவதின்படி 150-நூற்றி ஐம்பதும், படுக்கையில் 100 தடவையும் சேர்த்து 250-நன்மைகளாகும்.

(நன்மை, தீமை நிறுக்கப்படும்) தராசில் 2500-இரண்டாயிரத்தி ஐநூறு நன்மைகளாகும்) என்று கூறிய அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களில் யார் தான்  ஒரு நாளில் இரவிலும், பகலிலும் 2500-இரண்டாயிரத்தி ஐநூறு தீமைகளை செய்வார்? எனக் கேட்டார்கள்.

(அல்லாஹ்வின் தூதரே! இவ்விரண்டு நற்செயல்களை செய்வது எளிதாக இருந்தும்) இதை வழமையாக கடைப்பிடிப்பவர்கள் குறைவானவர்கள் தான் என்று எப்படி நீங்கள் கூறுகின்றீர்கள்?

خَصْلَتَانِ مَنْ حَافَظَ عَلَيْهِمَا أَدْخَلَتَاهُ الْجَنَّةَ وَهُمَا يَسِيرٌ، وَمَنْ يَعْمَلْ بِهِمَا قَلِيلٌ: تَحْمَدِ اللَّهَ وَتُكَبِّرُهُ وَتُسَبِّحُهُ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ مَكْتُوبَةٍ عَشْرًا عَشْرًا، وَإِذَا آوَيْتَ إِلَى مَضْجَعِكَ تُسَبِّحُ اللَّهَ وَتَحْمَدُهُ وَتُكَبِّرُهُ مِائَةً فَتِلْكَ خَمْسُونَ وَمِائَتَانِ بِاللِّسَانِ وَأَلْفَانِ وَخَمْسُمِائَةٍ فِي الْمِيزَانِ، فَأَيُّكُمْ يَعْمَلُ فِي الْيَوْمِ وَاللَّيْلَةِ أَلْفَيْنِ وَخَمْسَ مِائَةِ سَيِّئَةٍ؟ ” قَالُوا: وَكَيْفَ مَنْ يَعْمَلُ بِهِمَا قَلِيلٌ؟، قَالَ: «يَأْتِي أَحَدَكُمُ الشَّيْطَانُ فِي صَلَاتِهِ فَيُذَكِّرُهُ حَاجَةَ كَذَا وَكَذَا فَلَا يَقُولُهَا، وَيَأْتِيهِ عِنْدَ مَنَامِهِ فَيُنَوِّمُهُ وَلَا يَقُولُهَا»


Bazzar-2405

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2405. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அதிக நன்மைகள் தரும்) நற்செயல்கள் அதிகம் உள்ளன. அதை செய்பவர்கள் குறைவானவர்களே, என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


«الْخَيْرُ كَثِيرٌ وَمَنْ يَعْمَلْ بِهِ قَلِيلٌ»


Bazzar-2404

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2404. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதரே! இவ்விரண்டு நற்செயல்களை செய்வது எளிதாக இருந்தும், இதை அதிகமானோர் வழமையாக கடைப்பிடிக்க மாட்டார்கள் என்று எப்படி நீங்கள் கூறுகின்றீர்கள்? என்று அவர்களிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவரிடம் ஷைத்தான் வந்து, உனக்கு இன்னின்ன தேவைகள் உள்ளன அதை நினைத்துப்பார், இதை நினைத்துப்பார் என்று கூறுவான். எனவே அவர் தஸ்பீஹ்களை ஓதாமல் திரும்பிச் சென்று விடுவார்.


قِيلَ: وَكَيْفَ لَا يُحْصِيهَا يَا رَسُولَ اللَّهِ، قَالَ: ” يَأْتِي أَحَدَكُمُ الشَّيْطَانُ فَيَقُولُ لَهُ: اذْكُرْ حَاجَةَ كَذَا اذْكُرْ حَاجَةَ كَذَا حَتَّى يَنْصَرِفَ


Bazzar-2403

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2403. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“இரண்டு நற்செயல்களை வழமையாக கடைப்பிடித்து வரும் எவரும் கண்டிப்பாக சுவர்க்கத்தில் நுழைவார். அவ்விரண்டு நற்செயல்களும் (கடைப்பிடித்துவர ) எளிதானவை தான். ஆனால் அதைக் கடைப்பிடிப்பவர்கள் குறைவானவர்களே!

அவை ஒவ்வொரு கடமையான தொழுகைக்குப் பின்பும் ஸுப்ஹானல்லாஹ், அல்லாஹு அக்பர் , லாஇலாஹ இல்லல்லாஹ் என்று 100 தடவை கூறுவதாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


«خَصْلَتَانِ لَا يُحْصِيهِمَا أَحَدٌ إِلَّا دَخَلَ الْجَنَّةَ، هُمَا يَسِيرٌ وَمَنْ يَعْمَلْ بِهِمَا قَلِيلٌ، يُسَبِّحُ الرَّجُلُ فِي دُبُرِ صَلَاتِهِ مِائَةَ تَسْبِيحَةٍ وَيُكَبِّرُ وَيُهَلِّلُ»


Bazzar-2406

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2406. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தஹ்பீஹ் செய்யும் போது (அல்லாஹ்வைத் துதிக்கும் போது அதை கை விரல்களால்) எண்ணுவதை பார்த்தேன்.


«رَأَيْتُ النَّبِيَّ يَعْقِدُ التَّسْبِيحَ»


Next Page » « Previous Page