Category: புஹாரி

Bukhari

Bukhari-6702

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6702. இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.

ஒருவர் (ஒட்டகத்தின்) ‘மூக்கணாங்கயிறை’ அல்லது ‘வேறொரு பொருளைத்’ தம் கையில் கட்டிக்கொண்டு (புனித) கஅபாவைச் சுற்றிக் கொண்டிருந்ததை நபி(ஸல்) அவர்கள் பார்த்தார்கள். உடனே அதைத் துண்டித்துவிட்டார்கள்.102

Book :83


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى رَجُلًا يَطُوفُ بِالكَعْبَةِ بِزِمَامٍ أَوْ غَيْرِهِ فَقَطَعَهُ»


Bukhari-6701

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6701. அனஸ் (ரலி) அறிவித்தார்.

‘இ(ந்த முதிய)வர் தம்மை (இவ்விதம்) வேதனை செய்து கொள்வது அல்லாஹ்வுக்குத் தேவையற்றது’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அ(ந்த முதிய)வர் தம் இரண்டு புதல்வர்களுக்கிடையே (தொங்கியபடி கால்கள் பூமியில் இழுபட) நடந்துவந்ததை நபி (ஸல்) அவர்கள் பார்(த்துவிட்டு, விவரம் கேட்க, ‘நேர்த்திக்கடன்’ என்று மக்கள் கூறியபோது தான் மேற்கண்டவாறு தெரிவி)த்தார்கள்.

மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இதே ஹதீஸ் வந்துள்ளது.

Book :83


«إِنَّ اللَّهَ لَغَنِيٌّ عَنْ تَعْذِيبِ هَذَا نَفْسَهُ» وَرَآهُ يَمْشِي بَيْنَ ابْنَيْهِ


Bukhari-6700

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 31

தமக்கு உடைமையில்லாத ஒன்றிலும் பாவச் செயலிலும் ஒருவர் நேர்ந்துகொள்வது (கூடாது).

6700. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

அல்லாஹ்வுக்கு வழிப்படுவதாக ஒருவர் நேர்ந்துகொண்டால் (அதை நிறைவேற்றும் முகமாக) அவனுக்கு அவர் வழிப்படட்டும்! அல்லாஹ்வுக்கு மாறுசெய்வதாக ஒருவர் நேர்ந்துகொண்டால் (அதை நிறைவேற்றுவதற்காக) அவனுக்கு அவர் மாறு செய்திட வேண்டாம்.

என ஆயிஷா (ரலி) அறிவித்தார்.100

Book : 83


«مَنْ نَذَرَ أَنْ يُطِيعَ اللَّهَ فَلْيُطِعْهُ، وَمَنْ نَذَرَ أَنْ يَعْصِيَهُ فَلَا يَعْصِهِ»


Bukhari-6699

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6699. இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.

(உக்பா இப்னு ஆமிர் என்றழைக்கப்பட்ட) ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, ‘(இறைத்தூதர் அவர்களே!) என் சகோதரி ஹஜ் செய்வதாக நேர்ந்துகொண்டு (அதை நிறைவேற்றாமல் இறந்துவிட்டார்’ என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘உன் சகோதரிக்குக் கடன் இருந்தால் நீ தானே அதை நிறைவேற்றுவாய்?’ என்று கேட்டார்கள். அவர், ‘ஆம் (நானே நிறைவேற்றுவேன்)’ என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் கடனை நிறைவேற்று! கடன்கள் நிறைவேற்றப்பட அவனே அதிக உரிமை படைத்தவன்’ என்றார்கள். 99

Book :83


أَتَى رَجُلٌ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لَهُ: إِنَّ أُخْتِي قَدْ نَذَرَتْ أَنْ تَحُجَّ، وَإِنَّهَا مَاتَتْ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ كَانَ عَلَيْهَا دَيْنٌ أَكُنْتَ قَاضِيَهُ» قَالَ: نَعَمْ، قَالَ: «فَاقْضِ اللَّهَ، فَهُوَ أَحَقُّ بِالقَضَاءِ»


Bukhari-6698

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 30

நேர்த்திக்கடன் உள்ள நிலையில் ஒருவர் இறந்துவிட்டால் (அவருக்காக மற்றவர்கள் அதை நிறைவேற்ற வேண்டுமா?) (மதீனாவிற்கு அருகிலுள்ள) குபா பள்ளி வாசலில் தொழுவதாக நேர்ந்து கொண்(டு விட்டு, அதை நிறைவேற்றுவதற்கு முன்பே இறந்துவிட்)ட தாய்க்காகத் தொழுதிடுமாறு அவருடைய புதல்விக்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் கட்டளையிட்டார்கள். இதைப் போன்றே இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் கூறியுள்ளார்கள்.

6698. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.

ஸஅத் இப்னு உபாதா அல் அன்சாரி (ரலி) அவர்கள், நேர்ந்துகொண்டு அதை நிறைவேற்றுவதற்கு முன்பே இறந்துவிட்ட தம் தாயின் நேர்த்திக்கடன் குறித்து நபி(ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அவர் தம் தாயாருக்காக நேர்த்திக்கடனை நிறைவேற்றிடுமாறு தீர்ப்பளித்தார்கள். அதுவே பின்னர் வழிமுறையாக ஆகிவிட்டது.98

Book : 83


أَنَّ سَعْدَ بْنَ عُبَادَةَ الأَنْصَارِيَّ، اسْتَفْتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي نَذْرٍ كَانَ عَلَى أُمِّهِ، فَتُوُفِّيَتْ قَبْلَ أَنْ تَقْضِيَهُ، «فَأَفْتَاهُ أَنْ يَقْضِيَهُ عَنْهَا»، فَكَانَتْ سُنَّةً بَعْدُ


Bukhari-6697

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 29

அறியாமைக் காலத்தில் ஒருவர் நான் எந்த மனிதனிடத்திலும் பேசமாட்டேன்’ என்று நேர்ந்து கொண்டார்;அல்லது சத்தியம் செய்தார். பிறகு அவர் முஸ்லிமாகிவிட்டால் (அவற்றை நிறைவேற்றுவது அவர் மீது கடமையா?)

6697. இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.

(என் தந்தை) உமர் (ரலி) அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! மஸ்ஜிதுல் ஹராம் (புனிதப்) பள்ளிவாசலில் ஓர் இரவு ‘இஃதிகாஃப்’ இருப்பதாக அறியாமைக் காலத்தில் நேர்ந்துகொண்டேன். (இப்போது அதை நிறைவேற்ற வேண்டுமா?)’ என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘உங்களின் நேர்த்திக்கடனை நிறைவேற்றுங்கள்’ என்றார்கள்.97

Book : 83


أَنَّ عُمَرَ، قَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي نَذَرْتُ فِي الجَاهِلِيَّةِ أَنْ أَعْتَكِفَ لَيْلَةً فِي المَسْجِدِ الحَرَامِ، قَالَ: «أَوْفِ بِنَذْرِكَ»


Bukhari-6696

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 28

இறைவனுக்கு வழிப்படுவதில்தான் நேர்த்திக்கடன். நீங்கள் எந்த வகையில் செலவு செய்தாலும், அல்லது எந்த வகை நேர்த்திக்கடன் செய்தாலும் நிச்சயமாக அதனை அல்லாஹ் அறிவான். அநீதி இழைப்போருக்கு உதவியாளர் எவரும் இலர். (2:270)

6696. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

அல்லாஹ்வுக்கு வழிப்படுவதாக ஒருவர் நேர்ந்து கொண்டால் (அதை நிறைவேற்றும் (முகமாக) அவனுக்கு அவர் வழிப்படட்டும்! அல்லாஹ்வுக்கு மாறு செய்வதாக ஒருவர் நேர்ந்துகொண்டால் (அதை நிறைவேற்றுவதற்காக) அவனுக்கு அவர் மாறு செய்திட வேண்டாம்.

என ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

Book : 83


«مَنْ نَذَرَ أَنْ يُطِيعَ اللَّهَ فَلْيُطِعْهُ، وَمَنْ نَذَرَ أَنْ يَعْصِيَهُ فَلَا يَعْصِهِ»


Bukhari-6695

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 27

நேர்த்திக்கடனை நிறைவேற்றாதவர் பாவியாவார்.

6695. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

உங்களில் சிறந்தவர்கள் என் தலை முறையினர் ஆவர். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். -இதன் அறிவிப்பாளரான இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அவர்கள் ‘நபி(ஸல்) அவர்கள் தங்களின் தலைமுறையினரைக் குறிப்பிட்ட பின்னர் இரண்டு தலைமுறையினரைக் கூறினார்களா? மூன்று தலைமுறையினரைக் கூறினார்களா? என்று எனக்குத் தெரியாது. என்று கூறினார்கள்.

(தொடர்ந்து இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:)

பிறகு ஒரு சமுதாயத்தார் வருவார்கள். அவர்கள் நேர்ந்து கொள்வார்கள். ஆனால் அதை நிறைவேற்றமாட்டார்கள்; நம்பிக்கை மோசடி செய்வார்கள். அவர்களை நம்பி எதையும் ஒப்படைக்கப்படாது. அவர்கள் தாமாகவே சாட்சியமளிக்க முன்வருவார்கள். ஆனால், சாட்சியம் அளிக்கும்படி அவர்களை யாரும் கேட்கமாட்டார்கள். அவர்களிடையே பருமனாயிருக்கும் (தொந்தி விழும்) நிலை

خَيْرُكُمْ قَرْنِي، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ – قَالَ عِمْرَانُ: لَا أَدْرِي: ذَكَرَ ثِنْتَيْنِ أَوْ ثَلَاثًا بَعْدَ قَرْنِهِ – ثُمَّ يَجِيءُ قَوْمٌ، يَنْذِرُونَ وَلَا يَفُونَ، وَيَخُونُونَ وَلَا يُؤْتَمَنُونَ، وَيَشْهَدُونَ وَلَا يُسْتَشْهَدُونَ، وَيَظْهَرُ فِيهِمُ السِّمَنُ


Bukhari-6694

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6694. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

நேர்த்திக்கடனானது, விதியில் எழுதப்படாத எந்தவொன்றையும் மனிதனிடம் கொண்டு வந்துவிடாது. மாறாக, அவனுக்கு எழுதப்பட்ட விதியின் பக்கமே நேர்த்திக்கடன் அவனைக் கொண்டு செல்கிறது. நேர்த்திக்கடன் மூலம் கஞ்சனிடமிருந்து இறைவன் (செல்வத்தை) வெளிக்கொணர்கிறான். இதற்கு முன் எந்தக் காரணத்திற்காக (ஏழைக்கு) அவன் வழங்காமல் இருந்தானோ அதே காரணத்திற்காக (இப்போது) வழங்கத் தொடங்கிவிடுகிறான்.

என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.95

Book :83


نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ النَّذْرِ، وَقَالَ: «إِنَّهُ لَا يَرُدُّ شَيْئًا، وَلَكِنَّهُ يُسْتَخْرَجُ بِهِ مِنَ البَخِيلِ»


Bukhari-6693

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6693. இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் நேர்த்திக்கடன் செய்ய வேண்டாமெனத் தடை விதித்தார்கள். மேலும், ‘நேர்த்திக்கடன் (விதியில்) எதையும் மாற்றிவிடாது. நேர்த்திக்கடன் மூலம் கஞ்சனிடமிருந்து (செல்வம்) வெளிக் கொணரப்படுகிறது (அவ்வளவுதான்)’ என்றார்கள். 94

Book :83


أَوَلَمْ يُنْهَوْا عَنِ النَّذْرِ، إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ النَّذْرَ لَا يُقَدِّمُ شَيْئًا وَلَا يُؤَخِّرُ، وَإِنَّمَا يُسْتَخْرَجُ بِالنَّذْرِ مِنَ البَخِيلِ»


Next Page » « Previous Page