Category: புஹாரி

Bukhari

Bukhari-6691

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 25

ஒருவர் ஓர் உணவை(த் தமக்குத் தாமே) தடை விதித்துக்கொள்வது.91

அல்லாஹ் கூறுகின்றான்: நபியே! உங்களுடைய துணைவியரின் திருப்தியை எதிர்பார்த்து, அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்துள்ள ஒன்றை நீங்கள் ஏன் விலக்கிக்கொள்கிறீர்கள்? அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும் கருணை மிக்கவனாகவும் இருக்கின்றான். அல்லாஹ் நீங்கள் செய்யும் சத்தியத்தி(ன் கட்டுப்பாட்டி)லிருந்து விடுபடுவதற்கான வழியை உங்களுக்கு நிர்ணயித்துள்ளான். (66:1,2)

மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த நல்லவற்றை நீங்களே தடை செய்துகொள்ளாதீர்கள். (5:87)

6691. ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம் (நீண்ட நேரம்) தங்கியிருந்து அவர் வீட்டில் தேன் அருந்துவது வழக்கம். (இது பிடிக்காமல் நபியவர்களுடைய துணைவியரான) நானும் ஹஃப்ஸாவும் எங்களுக்குள், நபி (ஸல்) அவர்கள் (ஸைனபின் வீட்டிற்குச்

تَزْعُمُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَمْكُثُ عِنْدَ زَيْنَبَ بِنْتِ جَحْشٍ، وَيَشْرَبُ عِنْدَهَا عَسَلًا، فَتَوَاصَيْتُ أَنَا وَحَفْصَةُ: أَنَّ أَيَّتَنَا دَخَلَ عَلَيْهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلْتَقُلْ: إِنِّي أَجِدُ مِنْكَ رِيحَ مَغَافِيرَ، أَكَلْتَ مَغَافِيرَ، فَدَخَلَ عَلَى إِحْدَاهُمَا فَقَالَتْ ذَلِكَ لَهُ، فَقَالَ: «لَا، بَلْ شَرِبْتُ عَسَلًا عِنْدَ زَيْنَبَ بِنْتِ جَحْشٍ وَلَنْ أَعُودَ لَهُ» فَنَزَلَتْ: {يَا أَيُّهَا النَّبِيُّ لِمَ تُحَرِّمُ مَا أَحَلَّ اللَّهُ لَكَ} [التحريم: ١] {إِنْ تَتُوبَا إِلَى اللَّهِ} [التحريم: ٤]. لِعَائِشَةَ وَحَفْصَةَ {وَإِذْ أَسَرَّ النَّبِيُّ إِلَى بَعْضِ أَزْوَاجِهِ حَدِيثًا} [التحريم: ٣]. لِقَوْلِهِ: «بَلْ شَرِبْتُ عَسَلًا»،

وقَالَ لِي إِبْرَاهِيمُ بْنُ مُوسَى: عَنْ هِشَامٍ: «وَلَنْ أَعُودَ لَهُ، وَقَدْ حَلَفْتُ، فَلَا تُخْبِرِي بِذَلِكِ أَحَدًا»


Bukhari-6690

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 24

நேர்த்திக்கடன் மற்றும் பாவமன்னிப்புக்காக ஒருவர் தமது செல்வத்தை அன்பளிப்பாக வழங்கினால் (செல்லுமா?)89

6690. கஅப் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்.

(தபூக் போருக்குச் செல்லாமல் பின் தங்கிவிட்ட மூவரான எங்களைக் குறித்து) அல்லாஹ் ‘போருக்குச் செல்லாமல் பின்தங்கிவிட்ட மூவர்’ என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 09:118 வது) வசனத்தை அருளினான்.

நான் ‘(இறைத்தூதர் அவர்களே!) என்னுடைய பாவம் மன்னிக்கப்பட்டதற்காக என் செல்வமனைத்தையும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் (அவர்கள் விரும்பும் வழியில் செலவிட்டுக் கொள்வதற்காக) தர்மமாகத் தந்துவிடுகிறேன்’ என்று சொன்னேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘உங்கள் செல்வத்தில் ஒரு பகுதியை உங்களுக்காக வைத்துக்கொள்ளுங்கள். அதுவே உங்களுக்கு நல்லது’ என்று கூறினார்கள்.

இதை, கஅப் (ரலி) அவர்கள் (தம் இறுதிக் காலத்தில்) கண் பார்வை இழந்துவிட்டபோது அன்னாரைக் கைப்பிடித்து அழைத்துச் செல்பவராயிருந்த அன்னாரின்

وَكَانَ قَائِدَ كَعْبٍ مِنْ بَنِيهِ حِينَ عَمِيَ، قَالَ: سَمِعْتُ كَعْبَ بْنَ مَالِكٍ، فِي حَدِيثِهِ: {وَعَلَى الثَّلَاثَةِ الَّذِينَ خُلِّفُوا} [التوبة: ١١٨] فَقَالَ فِي آخِرِ حَدِيثِهِ: إِنَّ مِنْ تَوْبَتِي أَنِّي أَنْخَلِعُ مِنْ مَالِي صَدَقَةً إِلَى اللَّهِ وَرَسُولِهِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمْسِكْ عَلَيْكَ بَعْضَ مَالِكَ، فَهُوَ خَيْرٌ لَكَ»


Bukhari-6689

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 23

சத்தியங்களில் எண்ணம்(தான் கருத்தில் கொள்ளப்படும்).

6689. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. எனவே, எவருடைய ஹிஜ்ரத் (நாடு துறத்தல்) அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் (திருப்திப்படுத்துவதை) நோக்கமாகக் கொண்டு அமைகிறதோ, அவரின் ஹிஜ்ரத்(தின் பலனும் அவ்வாறே) அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் அமையும்.

எவருடைய ஹிஜ்ரத் அவர் அடைய விரும்பும் உலக (ஆதாய)த்தை, அல்லது அவர் மணக்க விரும்பும் பெண்ணை நோக்கமாகக் கொண்டுள்ளதோ, அவரின் ஹிஜ்ரத்(தின் பலனும்) அதுவாகத்தான் இருக்கும்.

அறிவிப்பவர்: உமர் பின் கத்தாப் (ரலி)

அத்தியாயம்: 83


«إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّةِ، وَإِنَّمَا لِامْرِئٍ مَا نَوَى، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى اللَّهِ وَرَسُولِهِ، فَهِجْرَتُهُ إِلَى اللَّهِ وَرَسُولِهِ، وَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى دُنْيَا يُصِيبُهَا أَوِ امْرَأَةٍ يَتَزَوَّجُهَا، فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ»


Bukhari-6688

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6688. அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்.

அபூ தல்ஹா (ரலி) அவர்கள் (தம் துணைவியார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களிடம், ‘நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் குரலை பலவீனமானதாகக் கேட்டேன். அதில் நான் (அவர்களுக்கிருக்கும்) பசியையைப் புரிந்து கொண்டேன். உன்னிடம் (உணவு) ஏதாவது இருக்கிறதா?’ என்று கேட்டார்கள். அதற்கு உம்மு சுலைம் (ரலி) அவர்கள், ‘ஆம் (இருக்கிறது)’ என்று கூறிவிட்டு, வாற்கோதுமை ரொட்டித் துண்டுகள் சிலவற்றை எடுத்தார்கள். பிறகு அவர்கள் தங்களின் முகத்திரை ஒன்றை எடுத்து அதன் ஒரு பகுதியில் அந்த ரொட்டியைச் சுருட்டி (என்னிடம் கொடுத்து) என்னை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். நான் (அதையெடுத்துக் கொண்டு) சென்றேன். இறைத்தூதர் (ஸல்) அவர்களைப் பள்ளிவாசலில் கண்டேன். அன்னாருடன் மக்களும் இருந்தனர். நான் அவர்களுக்கு முன் நின்றேன். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘உன்னை அபூ தல்ஹா அனுப்பினாரா?’ என்று கேட்டார்கள். அதற்கு நான், ‘ஆம்’ என்றேன். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தம்முடனிருந்தவர்களிடம், ‘எழுந்திருங்கள்!’ என்றார்கள். மக்கள் (எழுந்து) நடந்தார்கள். நான் அவர்களுக்கு முன்னால் நடந்தேன்.

قَالَ أَبُو طَلْحَةَ لِأُمِّ سُلَيْمٍ لَقَدْ: سَمِعْتُ صَوْتَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ضَعِيفًا، أَعْرِفُ فِيهِ الجُوعَ، فَهَلْ عِنْدَكِ مِنْ شَيْءٍ؟ فَقَالَتْ: نَعَمْ، فَأَخْرَجَتْ أَقْرَاصًا مِنْ شَعِيرٍ، ثُمَّ أَخَذَتْ خِمَارًا لَهَا، فَلَفَّتِ الخُبْزَ بِبَعْضِهِ، ثُمَّ أَرْسَلَتْنِي إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَهَبْتُ فَوَجَدْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي المَسْجِدِ وَمَعَهُ النَّاسُ، فَقُمْتُ عَلَيْهِمْ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَرْسَلَكَ أَبُو طَلْحَةَ» فَقُلْتُ: نَعَمْ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِمَنْ مَعَهُ: «قُومُوا» فَانْطَلَقُوا وَانْطَلَقْتُ بَيْنَ أَيْدِيهِمْ، حَتَّى جِئْتُ أَبَا طَلْحَةَ فَأَخْبَرْتُهُ، فَقَالَ أَبُو طَلْحَةَ: يَا أُمَّ سُلَيْمٍ، قَدْ جَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالنَّاسُ، وَلَيْسَ عِنْدَنَا مِنَ الطَّعَامِ مَا نُطْعِمُهُمْ، فَقَالَتْ: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، فَانْطَلَقَ أَبُو طَلْحَةَ حَتَّى لَقِيَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَقْبَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبُو طَلْحَةَ حَتَّى دَخَلَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلُمِّي يَا أُمَّ سُلَيْمٍ مَا عِنْدَكِ» فَأَتَتْ بِذَلِكَ الخُبْزِ، قَالَ: فَأَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِذَلِكَ الخُبْزِ فَفُتَّ، وَعَصَرَتْ أُمُّ سُلَيْمٍ عُكَّةً لَهَا فَأَدَمَتْهُ، ثُمَّ قَالَ فِيهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا شَاءَ اللَّهُ أَنْ يَقُولَ، ثُمَّ قَالَ: «ائْذَنْ لِعَشَرَةٍ» فَأَذِنَ لَهُمْ فَأَكَلُوا حَتَّى شَبِعُوا، ثُمَّ خَرَجُوا، ثُمَّ قَالَ: «ائْذَنْ لِعَشَرَةٍ» فَأَذِنَ لَهُمْ، فَأَكَلُوا حَتَّى شَبِعُوا، ثُمَّ خَرَجُوا، ثُمَّ قَالَ: «ائْذَنْ لِعَشَرَةٍ» فَأَكَلَ القَوْمُ كُلُّهُمْ وَشَبِعُوا، وَالقَوْمُ سَبْعُونَ أَوْ ثَمَانُونَ رَجُلًا


Bukhari-6687

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 22

தொடுகறியுடன் சாப்பிடமாட்டேன் என்று சத்தியம் செய்த ஒருவர், ரொட்டியுடன் பேரீச்சம் பழத்தைச் சாப்பிட்டால்…? மேலும் எதுவெல்லாம் தொடுகறியாகும்?84

6687. ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் சென்று சேரும் வரை அவர்களின் குடும்பத்தார் மூன்று நாள்கள் தொடர்ச்சியாகக் குழம்புடன் வெள்ளைக் கோதுமை ரொட்டியை வயிறு நிரம்பச் சாப்பிட்டதில்லை.

இதன் அறிவிப்பாளரான ஆபிஸ் இப்னு ரபீஆ (ரஹ்) அவர்களின் மற்றோர் அறிவிப்பில், தாம் ஆயிஷா (ரலி) அவர்களிடம் இது குறித்துக் கேட்டபோது அவர்கள் இதைத் தெரிவித்ததாக இடம் பெற்றுள்ளது.85

Book : 83


«مَا شَبِعَ آلُ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ خُبْزِ بُرٍّ مَأْدُومٍ ثَلَاثَةَ أَيَّامٍ، حَتَّى لَحِقَ بِاللَّهِ»


Bukhari-6686

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6686. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் சவ்தா (ரலி) அறிவித்தார்.

எங்களுக்குரிய ஆடு ஒன்று இறந்துவிட்டது. அதன் தோலை நாங்கள் பதனிட்டோம். பிறகு அதில் நாங்கள் பழரசத்தை ஊற்றி வைத்து வந்தோம். இறுதியில் அது (இற்றுப்போன) துருத்தியாக மாறிவிட்டது.

Book :83


«مَاتَتْ لَنَا شَاةٌ، فَدَبَغْنَا مَسْكَهَا، ثُمَّ مَا زِلْنَا نَنْبِذُ فِيهِ حَتَّى صَارَ شَنًّا»


Bukhari-6685

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 21

ஊறவைக்கப்பட்ட பழச் சாற்றை (நபீத்) அருந்தமாட்டேன் என்று சத்தியம் செய்த ஒருவர், சுண்டக் காய்ச்சப்பட்ட திராட்சை சாற்றையோ, பேரீச்சச் செங்காய் ஊறலையோ, திராட்சைப் பிழிவையோ அருந்திவிட்டால், சிலரது கூற்றுப்படி அவர் சத்தியத்தை முறித்தவராக மாட்டார். (ஏனெனில்,) அவர்களின் கருத்துப்படி இவை நபீதி’ல் சேரா.82

6685. ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி) அறிவித்தார்.

நபித்தோழர் அபூ உசைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் தங்களின் திருமணத்திற்கு நபி (ஸல்) அவர்களை அழைத்தார்கள். அப்போது மணப்பெண்ணே (விருந்துக்கு வந்த) மக்களுக்குப் பணிவிடை செய்பவராக இருந்தார்.

மக்களே! மணப்பெண் நபி (ஸல்) அவர்களுக்கு என்ன புகட்டினார் என்று உங்களுக்குத் தெரியுமா? அவர் கல் (அல்லது மரப்) பாத்திரத்தில் நபி (ஸல்) அவர்களுக்காகப் பேரீச்சம் பழங்களை இரவிலேயே ஊறவைத்திருந்தார். காலையில் நபி அவர்களுக்கு அதை அவர் புகட்டினார்.83

Book : 83


أَنَّ أَبَا أُسَيْدٍ صَاحِبَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْرَسَ، فَدَعَا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِعُرْسِهِ، فَكَانَتِ العَرُوسُ خَادِمَهُمْ، فَقَالَ سَهْلٌ لِلْقَوْمِ: «هَلْ تَدْرُونَ مَا سَقَتْهُ؟» قَالَ: «أَنْقَعَتْ لَهُ تَمْرًا فِي تَوْرٍ مِنَ اللَّيْلِ، حَتَّى أَصْبَحَ عَلَيْهِ، فَسَقَتْهُ إِيَّاهُ»


Bukhari-6684

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 20

ஒருவர், தம் வீட்டாரிடம் ஒரு மாதம் செல்லமாட்டேன் என்று சத்தியம் செய்து அந்த மாதம் இருபத்தொன்பது நாட்களாய் அமைந்துவிட்டால்…?80

6684. அனஸ் (ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியரை (ஒரு மாத காலம்) நெருங்க மாட்டேன் எனச் சத்தியம் செய்திருந்தார்கள். அவர்களின் காலில் சுளுக்கு ஏற்பட்டிருந்தது. அப்போது அவர்கள் மாடியறை ஒன்றில் இருபத்தொன்பது நாள்கள் தங்கியிருந்தார்கள். பின்னர் அவர்கள் இறங்கி வந்தபோது மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! ஒரு மாத காலம் (தங்கள் துணைவியரை) நெருங்க மாட்டேன் எனச் சத்தியம் செய்திருந்தீர்களே? (ஆனால், இருபத்தொன்பதாம் நாளில் வந்துவிட்டீர்களே?)’ என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘மாதம் என்பது இருபத்தொன்பது நாள்களாகவும் இருக்கலாம்’ என்றார்கள்.81

Book : 83


آلَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ نِسَائِهِ، وَكَانَتْ انْفَكَّتْ رِجْلُهُ، فَأَقَامَ فِي مَشْرُبَةٍ تِسْعًا وَعِشْرِينَ لَيْلَةً ثُمَّ نَزَلَ، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، آلَيْتَ شَهْرًا؟ فَقَالَ: «إِنَّ الشَّهْرَ يَكُونُ تِسْعًا وَعِشْرِينَ»


Bukhari-6683

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6683. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு கருத்தை) ஒரு வாக்கியத்தில் சொல்ல, நான் (அதே கருத்தை) வேறொரு வாக்கியத்தில் சொன்னேன்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தவராக மரணிக்கிறவர் நரகத்தில் நுழைவிக்கப்படுவார்’ என்றார்கள். நான் மற்றொரு வார்த்தையில், அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதவராக மரணிக்கிறவர் சொர்க்கத்தில் புகுத்தப்படுவார்’ என்று சொன்னேன். 79

Book :83


«مَنْ مَاتَ يَجْعَلُ لِلَّهِ نِدًّا أُدْخِلَ النَّارَ» وَقُلْتُ أُخْرَى: «مَنْ مَاتَ لَا يَجْعَلُ لِلَّهِ نِدًّا أُدْخِلَ الجَنَّةَ»


Next Page » « Previous Page